கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 20, 2020

வூ ஹான் விளைவுகள்

வூ ஹான் விளைவுகள்


சரித்திரத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் போல உலகத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 


மார்ச் இறுதியிலிருந்து செய்தித்தாள் வரவில்லை. இப்போது வருகிறது. பழைய பேப்பர்களை விலைக்கு எடுத்துக் கொள்பவர்களும் இப்போதுதான் வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால் பழைய பேப்பர்களை விலைக்குப் போட்டோம். அவைகளை எடுத்துக் கொண்டவர்," ரெண்டு மாசமா வியாபாரமே இல்ல சார்" என்றதும் என் மகன் பாதி பணத்தை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டான். 

இப்போது பல தொழில்கள் அடி வாங்கினாலும், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி கணிசமாக லாபம் சம்பாதிக்கும் போலிருக்கிறது. காரணம், பாதுகாப்பு கருதி பலர் பொது போக்குவரத்து  சாதனங்களான பேருந்து, ரயில் போன்றவற்றை தவிர்த்து டூ வீலர், அல்லது கார் வாங்க முடிவெடுத்-திருக்கிறார்களாம்.  செகண்ட் ஹாண்ட் வண்டிகளுக்கும் இப்போது டிமாண்ட் அதிகரித்திருக்கிறதாம். 

அதைப் போல ஆன்லைனில் விளையாடுகிறவர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்திருக்கிறதாம். 

விதம் விதமாக மாஸ்குகள் விற்பனைக்கு வந்து விட்டன. குழந்தைகளுக்காக மொம்மை(கார்ட்டூன் கேரக்டர்ஸ் போட்ட மாஸ்குகள் கிடைக்கின்றன. கிரியேடிவிடி! 

வங்கியில் பணியாற்றும் என் நண்பர் ஒருவர் அனுபவம்: அவர் இருப்பது கடன் வசூலிக்கும் பிரிவு. வாடிக்கையாளர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தவணையை கட்டுவதற்காக கேட்ட பொழுது அந்த வாடிக்கையாளர், "கொரோனாவால் இரண்டு மாதங்களாக எனக்கு வருமானமே இல்லை, என் வீட்டில் ஒருவர் இறந்து விட்டார், நான் கடுமையான மன இறுக்கத்தில் இருக்கிறேன், இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" என்று சத்தம் போட்டாராம். இளையவரான அந்த வங்கி பணியாளர் பயந்து போனை வைத்து விட்டாராம். "கடுமையான டிப்ரெஷனில் இருக்கும் அவர் எங்கேயாவது தற்கொலை செய்து கொண்டு, அவர் கடைசியாக போனில் பேசிய ஆள் நானாக இருந்தால் என் கதி..?" என்று பயத்தோடு வினவினார்.  நியாயம்தான் என்று தோன்றியது. அவருக்கு டிப்ரெஷன் வராமல் இருக்க வேண்டும். 

சிலர் ஏதாவது ஷாப்பிங் செய்ய மாட்டோமா என்றிருக்கிறது என்கிறார்கள்.  சிலர் தங்களின் பட்டுப் புடவைகளைப் பார்த்து,"இதையெல்லாம் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு வருமா? இனிமேல் எல்லோரையும் அழைத்து திருமணங்கள் செய்வார்களா? என்றெல்லாம் ஏங்குகிறார்களாம். இவையெல்லாம் அல்ப ஆசைகள். விரைவில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும், உலகம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் ஆசை. 


   


39 comments:

 1. யாதார்த்த நிலையை சுருக்கமாக எனினும் மிக மிக அருமையாக பதிவு செய்தமைக்கு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. பானுக்கா ஆமாம் நிறையப் பேர் வங்கிக் கடன் கட்ட இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

  பலருக்கும் ஊதியத்தில் கட் வேறு. இங்கும் தான்.

  வூஹான் விளைவிகள் ரொம்பவே பாதித்திருக்கிறது. ஒரு புறம் இதைக் கண்டு பயம் வேண்டாம் என்று சொல்லப்பட்டாலும் ஒவ்வொருவரது உடல் நிலை பொறுத்து அதன் தாக்கம் இருப்பதால் நாம் நம்மைத் தற்காத்துக் கொள்வது நலமே.

  டிப்ரஷன் சிலது கேள்விப்பட்டேன். இன்னும் பல.

  அல்ப ஆசை எல்லாம் இல்லை. ஷாப்பிங்க் கூட ஆசை இல்லை. வேண்டாத பயணம் மேற்கொள்ளவும் ஆசை இல்லை. ஆனால் சில இடங்கள் பார்க்கும் ஆவல் உண்டு. உறவினர் நட்புகள் வீட்டிற்குச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை. இதையும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

  நிலைமை விரைவில் சீரடைய வேண்டும். மருந்து/வேக்சின் விரைவில் கண்டுபிடிக்கப்படவேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும் முதலில் அதுவே பெரிய விஷயம் தான் அக்கா.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் சில இடங்கள் பார்க்கும் ஆவல் உண்டு. உறவினர் நட்புகள் வீட்டிற்குச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை.// உண்மைதான். கட்டிப்போடப்பட்டுது போல் இருக்கிறது. நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறேன். நன்றி கீதா.

   Delete
 3. உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
  நினைத்து பார்த்து நிம்மதி நாடு...

  ReplyDelete
  Replies
  1. இப்பபோது இருக்கும் நிலையில் மேலே,கீழே என்று எதுவும் இல்லை. எல்லோரும் ஒரே நிலை.

   Delete
 4. கொரோனா - நிச்சயம் இதன் தாக்கம் (நாம செலவழிப்பதுல, பிறருடன் பழகுவதில்) ரொம்ப வருடங்களுக்கு இருக்கும்னு தோணுது.

  //செகண்ட் ஹாண்ட் வண்டிகளுக்கும் இப்போது டிமாண்ட் அதிகரித்திருக்கிறதாம். // - எலெக்ட்ரிக் பைக் என்பதைத்தான் மத்திய அரசு ப்ரொமோட் பண்ணும். அதற்கு ஒரு கெடுவும் வைத்திருக்காங்க. இப்போ பெட்ரோல்/டீசல் வண்டிகள் வாங்குவது அவ்வளவு சரியாக வராது.

  பொருளாதாரம், வேலை இவற்றில் இன்னும் கடுமையான விளைவுகளை ஒரு வருடத்துக்கு மேல் நாம் காண்போம் என்றே நினைக்கிறேன். விமானப் போக்குவரத்து சரியான பிறகுதான் எத்தனை வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரந்தரமா இந்தியாவுக்கு வர்றாங்க (வேலை இழப்பினால்) என்பது தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. //இப்போ பெட்ரோல்/டீசல் வண்டிகள் வாங்குவது அவ்வளவு சரியாக வராது.// நல்ல பாயிண்ட்! இது மட்டுமல்ல நீங்கள் சொல்லியிருக்கும் மற்ற விஷயங்களும் உண்மையே!

   Delete
 5. வங்கி மற்றும் பொது மக்கள் தொடர்புடைய பணியில் இருப்பவர்கள் நிலைமை கொஞ்சம் கஷ்டமே .
  வாடிக்கையாளர் தரப்பிலும் பல கஷ்டம் . எனக்கே வங்கியில் சில வேலைகள் உள்ளன போகவே பயமாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. வங்கிப் பணியாளர்களின் நிலை பரிதாபதிற்குரியது. அவர்களை பாராட்டவோ, புரிந்து கொள்ளவோ யாரும் இல்லை. நன்றி அபயாஅருணா.

   Delete
 6. நிறைய பிரச்சனைகள் இருக்கிறது தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை - இதிலிருந்து விடுபட்டு நலம் விளையும் என்ற நம்பிக்கை ஒரு இழையாக இருக்கிறது. சூழல் சரியாகவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் குரலாக ஒலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. //இதிலிருந்து விடுபட்டு நலம் விளையும் என்ற நம்பிக்கை ஒரு இழையாக இருக்கிறது.// அதை விட்டு விடாமல் கெட்டியாக பிடிதுக் கொள்ள வேண்டும். நன்றி வெங்கட்.

   Delete
 7. நம்பிக்கையுடன் வாழ்வோம். எங்க வீட்டில் மருமகளும், குட்டிக்குஞ்சுலுவும் அம்பேரிக்கா போக வழி இல்லாமல் தவிக்கின்றனர் என்றால் சில உறவினர்கள் வீடுகளில் பெரிய எதிர்பார்ப்புடன் நிச்சயிக்கப்பட்ட பெண்/பிள்ளை திருமணங்கள் ஒத்திப் போடப்பட்டுள்ளன. எத்தனை மாதங்கள் என்று தெரியவில்லை. சில திருமணங்களில் பெண்/பிள்ளை இருவருமே வெளிநாட்டில் இருந்து வரவேண்டி இருக்கு. இவற்றில் எல்லாத் திருமணங்களுக்கும் நாங்க போகும்படியான சூழ்நிலை உருவாகுமானு தெரியலை. என்றாலும் மனம் நல்லனவற்றையே விரும்புகிறது. அதுவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ?????????????????????????????????

   Delete
  2. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
  3. கீதா அக்காவுக்கு கொடுத்திருந்த பதில்கள் மட்டும் பப்ளிஷ் ஆகாத மாயம் என்ன? அன்னிய நாட்டு சதியா?

   Delete
  4. இப்போது எல்லோரும் இருக்கும் மன நிலையில், நிலமை சீரானதும் வரும் திருமணங்களுக்கு அழைத்த அத்தனை பேர்களும் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

   Delete
 8. சுருக்கமாகச் சொன்னாலும் அழகாய்ச் சொல்லி உள்ளீர்கள். வீட்டுக்குள்ளேயே இருப்பது என் பாஸ் உட்பட அனைவருக்கும் மன இறுக்கத்தை உருவாக்கி இருக்கிறது. பத்து நாட்களுக்கு முன் ஒரே தரம் பிள்ளையார் கோவில் சென்று வந்தாலும் மறுபடி போக மனம் துணியவில்லை.

  ReplyDelete
 9. நானே டூ வீலர் வாங்குவது பற்றி யோசிக்கும்போது துணிந்த மற்றவர்களுக்குக் கேட்பானேன்?!!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் வாங்கி விடுங்கள். வருகைக்கு நன்றி.

   Delete
  2. ஸ்ரீராம் - என் ஆலோசனை... நல்ல செகண்ட் ஹாண்ட் டூ வீலர் வாங்கிடுங்க. புதிது வாங்குவதைவிட பெட்டர்.

   இந்திய டிரைவிங் லைசன்ஸ் இன்னும் நான் வாங்கலை. கத்துக்க போவதற்கு பயமாக இருக்கு. என்னுடைய வெளிநாட்டு லைசன்ஸ் கொடுக்கவும் மனதில்லை.

   Delete
  3. அதற்கு ஆகும் செலவுக்கு புதுசே பெட்டர்னு நண்பர்கள் சொன்னாங்க...

   Delete
 10. நான் பழைய பேப்பர், புத்தகங்களை அப்படியே கொனுத்துவிட்டேன்.

  ReplyDelete
 11. *கொடுத்து விட்டேன் ்

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை திருத்தினீர்கள். இல்லாவிட்டால் நான் கொளுத்தி விட்டேன் என்று புரிந்து கொண்டிருப்பேன். ஹாஹா!

   Delete
 12. வணக்கம் சகோதரி

  நன்றாக விளைவுகளை பற்றி அலசியுள்ளீர்கள்.

  நான் அவ்வளவாக வெளியில் போகும் பழக்கமுடையவள் இல்லையென்றாலும், நான்கு மாதங்களாக வீட்டிலேயே இருப்பது, ஒரு மாதிரி கட்டிப் போட்டதாகத்தான் உணர்கிறேன்.

  /விரைவில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும், உலகம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் ஆசை./

  உண்மைதான்..! இதில் ஒவ்வொருவரின் ஒரு சுயநலமும் அடங்கியுள்ளது. "கடவுளை நம்பினர் கை விடப்படார் " எனக் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போலத்தான் நானும். வெளியில் அதிகம் போக மாட்டேன். ஆனால், சென்னைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். சென்னையில் இருந்த பொழுது நிறைய வெளியில் செல்வேன். இப்போது கட்டிப்பட்டத்தை போல இருக்கிறது.

   Delete
 13. //கடுமையான டிப்ரெஷனில் இருக்கும் அவர் எங்கேயாவது தற்கொலை செய்து கொண்டு, அவர் கடைசியாக போனில் பேசிய ஆள் நானாக இருந்தால் என் கதி..?" என்று பயத்தோடு வினவினார். நியாயம்தான் என்று தோன்றியது. அவருக்கு டிப்ரெஷன் வராமல் இருக்க வேண்டும்.//

  வங்கி பணி கஷ்டம் தான். வங்கியில் பணிபுரியும் தம்பி சொல்கிறான், தினம் நகையை மீட்டு மீண்டும் வைக்க வரும் கூட்டம்தான் இப்போது அதிகம் . மக்கள் மிகவும் கஷ்டநிலையில் இருக்கிறார்கள்.

  எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. எகானமி மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். கருத்துக்கு நன்றி.

   Delete
 14. இன்று நிலவும் யதார்த்தமான ஆனால் குழப்பமான சூழலை மிகச் சிறப்பாக வெளி கொணர்ந்திருக்கின்றீர்கள் பானு. எல்லா கேள்விகளுக்கும் நல்ல பதிலை ஆண்டவன் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா. முதல் முறையாக எங்கள் தளத்திற்கு வருகை புரிந்திருக்கிறீர்கள். நன்றி.

   Delete
 15. என்னதான் நடந்தாலும் நம்பிக்கை பெருகி இருக்கிற்து

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைதான் விளக்கு. நன்றி.

   Delete
 16. 55 ஏக்கர் பரப்புள்ள பெரிய கதவு மூடிய சமூகத்தில் நான் குடியிருப்பதால் சுற்றிலும் நல்ல காற்றோட்டமும் நல்ல தண்ணீரும் இருக்கிறது. சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. சம வயதுக்காரர்களின் உடல் நலனை உடனே அறிந்துகொள்ளமுடிகிறது.

  ஆனால், இளைஞர்களில் பலருக்கு - முக்கியமாக ஐ.ட்டி. பணியில் இருப்பவர்களுக்கு ஒன்று, வேலை போய்விட்டது, அல்லது வேலை போகாமல்-ஆனால்-சம்பளம் கிடையாது
  என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 2007-8இல் அமெரிக்காவில் நேர்ந்த நிலை இங்கும் உண்டாகியிருக்கிறது.

  ஆந்திராவில் அரசு ஊழியர்களின் பென்ஷனை நிறுத்திவைக்க அவசரச் சட்டம் வந்துள்ளது.

  நிலைமை மோசமாகத்தான் உள்ளது. இதையெல்லாம் மறந்து வலைப்பதிவை எழுதத்தான் வேண்டுமா என்ற ஆற்றாமை உண்டாகாமல் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சரியாகி விடும் என்று நம்பலாம் சார். வேறு வழி இல்லை. வருகைக்கு நன்றி. சற்று தாமதமாகத்தான் சொல்கிறேன், மன்னிக்கவும். 

   Delete
 17. காலம் சீக்கிரம் மாறவேண்டுமென வேண்டுவோம்.

  வங்கி கடன் வசூல் செய்ய தொடர்புகொண்ட உங்கள் நண்பர்,அடுத்தவரின் நிலைகண்டு மனமிறங்காமல், தான் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொள்வோமா என நினைத்ததாக சொன்னது ஏனோ நெருடலாக இருக்கிறது

  ReplyDelete
 18. அந்த நண்பர் கடன் வாங்கியவரிடம் வற்புறுத்தாமல் இருந்தது இரக்கம்தான். நன்றி. 

  ReplyDelete