கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 31, 2020

மசாலா சாட் - 19

மசாலா சாட் - 19

எப்பொருள் யார்யார் கை பெற்றாலும் 
அப்பொருள் சானிடைஸ் செய்வதறிவு 

மாஸ்க் என்ப சானிடைசரென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப கோவிட் காலத்திற்கு 

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை மாஸ்க் 
அணியாதான் நலம்போல் கெடும் 

என்னது உன் மகனும் மருமகளும் உன்னை வெளியில் தள்ளி கதவை சாத்திட்டாங்களா?
ஆமாம், ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூமில் உட்கார்ந்து, கதவை சாதிக் கொண்டு ஒர்க் ஃப்ரம்
ஹோம் பண்ராங்க , நான் ஹாலில்... :(( 

கீழே இருக்கும் ஓவியங்கள் என் மருமகளின் சித்தி மகள் வரைந்தவை:



பழைய கல்கி ஒன்றில் ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று

60, பஸ்ஸுல்லா ரோட்

தியாகராய நகர்

சென்னை – 17                                                                                      14-12-56

வணக்கம்,

உங்கள் கடிதம் படித்தேன். .வெ.ரா. அவர்கள் கட்டுரை பத்திரிகையில் வந்ததை நான்
படிக்கவில்லை. உங்கள் கடிதத்தில் எடுத்து எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தேன்
என்னுடைய கட்டுரையில் நான் எழுதியிருப்பதில் குழப்பதற்கு இடமில்லை.

நான் சொன்னதாய் பிறர் சொல்வதை வைத்துக் கொண்டு குழப்பம் ஏற்படுத்திக் கொள்வது

சரியல்ல, நான் சொன்ன கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கவும். படிப்புக்கு தமிழ் நாட்டில் தமிழ் வாயில் சொல்லித் தர வேண்டும். விஞ்ஞானப் பெயர்ச் சொற்களும்,பரிபாஷை மட்டும் ஆங்கிலமாக இருக்கலாம். விளக்கமும், பேச்சும் தமிழாக இருக்க வேண்டும். ஆட்சிமொழி, இந்திய மத்திய-நிர்வாகம்,ராஜ்யாந்த்ர

மொழி, இது ஹிந்தி மட்டுமாக இருக்கலாகாது. ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்..

                                                                                                          இராஜகோபாலாச்சாரி


திரு.பி.எஸ்.விஸ்வநாதன்

36 நாராயண விலாஸ்
ரயில்வேஸ்டேஷன் ரோடு
தெப்பக்குளம், திருச்சி

24 comments:

  1. ஓவியங்கள் வெகு அழகாக இருக்கின்றன... சிறப்பு...

    ReplyDelete
  2. புதுக்குறள்கள் ரசனை, புன்னகை!

    ஜோக்...   ரசிரித்தேன்.

    ஓவியம், அதிலும் குறிப்பக முதல் ஓவியம் மிக அருமை.  பெரிய திறமை.

    ராஜாஜி கடிதத்தின் சாராம்சம் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். அந்தப்பெண் சிறு வயதிலிருந்தே நன்றாக வரைவாளாம், இப்போது முறையாக பயிற்சி பெறுகிறாள் என்று அறிந்தேன். சி.ஏ.வும் படித்துக் கொண்டிருக்கிறாள். நன்றி.

      Delete
    2. நன்றி. ராஜாஜியின் கடிதம் ஒரு கோயின்சிடென்ஸ்.

      Delete
  3. மூதறிஞர் அவர்களது கடிதம் பல விஷயங்களைப் புரிய வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. கல்கியின் பழைய தொகுப்பில் இந்தக் கடிதம் கண்ணில் பட்டது.நன்றி

      Delete
  4. ஓவியங்கள் அழகு...

    வாழ்க இந்தியத் திருநாடு...(!)

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பாராட்டுகளை உரியவருக்கு அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  5. கோவிட் குறள்கள் அருமை. ராஜாஜியின் இந்தக் கடிதம் முன்னரே வேறே எதிலோ பார்த்திருக்கேனோ? நினைவில் வரலை. உங்கள் மருமகளின் சித்தி பெண்ணின் கைவண்ணம் அருமை. அழகு. யதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ராஜாஜியின் கடிதத்தை பழைய கல்கியில் படித்திருப்பீர்கள்.

      Delete
  6. கோவிட் குறள்கள் அருமை.
    ஓவியங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அந்த ஓவியம் என் மருமகளுக்கு வாட்ஸாப்பில் வந்தது. இந்த அறிய திறமை எல்லோர் கண்களிலும் பட வேண்டும் என்பதற்காக பகிர்ந்தேன்.

      Delete
  7. கோவிட் குறள்களும் ஓவியங்களும் மிக ரசித்தேன். பாராட்டுகள் வரைந்தவருக்கு.

    துளசிதரன்

    ReplyDelete
  8. இங்க்காலத்திற்கான குறள்கள் புன்னகைக்க வைத்தன்.

    ஓவியம் ஹையோ நோ சான்ஸ். அசாத்திய திறமை உங்கள் மருமகளின் சித்தி பெண்ணுக்கு. வாழ்த்துகள் பாராட்டுகள். அதுவும் அந்த தாத்தா!! வாவ்.

    ராஜாஜி கடிதம்!!! வாசித்த நினைவிருக்கே!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ராஜாஜி கடிதம்!!! வாசித்த நினைவிருக்கே!!!!!// நினைவில்லாமல் போகுமா..?? நன்றி.

      Delete
  9. ஓவியங்கள் ஒரு ப்ரொஃபெஷனல் டச்சுடன் அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. இயல்பிலேயே திறமை வாய்ந்த பெண். இப்போது பயிற்சியும் எடுத்துக் கொள்கிறாள்.

      Delete
  10. ஓவியங்கள் அருமை... ஓவியருக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. ஓவியங்கள் மிகவும் கவர்ந்தன - குறிப்பாக முதல் ஓவியம்.

    மசாலா சாட் -ல் மற்ற பகுதிகளும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட். 

      Delete
  12. வணக்கம் சகோதரி

    மசாலா சாட் அருமையாக வந்துள்ளது. வைரஸ் ஈற்றடிகள் மிக அருமை. பொருத்தமாக அமைந்துள்ளது. படித்து ரசித்தேன்.

    மாமியாரின் புலம்பல் ஜோக் நன்றாக உள்ளது.
    கல்கியில் வெளிவந்த ராஜாஜி கடிதம் இப்போதுதான் படித்தேன். நன்று.

    ஓவியங்கள் இரண்டும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் உள்ளது. உயிருள்ள ஓவியங்களை போல வரைந்தவரின் திறமையை எண்ணி வியக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதை எங்களுக்கு பார்வையாக்கி, பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete