கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 11, 2020

கோகுலாஷ்டமி நினைவுகள்.

கோகுலாஷ்டமி நினைவுகள். 



எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 


அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

எங்கள் வீட்டில் இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் ஒரு கிருஷ்ணன் பொம்மை இருந்தது. அம்மா தினமும் ரோஜாப்பூ வாங்கி அந்த கிருஷ்ணனுக்கு சூட்டி, 
"இந்த ரோஜாப்பூ கிருஷ்ணனுக்கு எத்தனை அழகாக இருக்கு பார்" என்று ரசிப்பாள். அதே போல் கீரை மசியல் செய்தாலும், வடு மாங்காய் ஊறுகாய் போட்டாலும்  தயிர் சாதத்தோடு அதை கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். அம்மாவை பொறுத்த வரை குருவாயூரப்பன் ஒரு குழந்தை. தினசரி குளித்து விட்டு ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருக்க மாட்டாள். 

ஒரு முறை அம்மா ஊருக்கு சென்றிருந்த பொழுது நான் சமைத்தேன். என்னுடைய சோம்பேறி தனத்தில் குளிக்காமல் சமைத்து விட்டேன். அதனால் ஸ்வாமிக்கு நோ நைவேத்தியம். 

முதல் நாள் ஓடி விட்டது. இரண்டாம் நாள் வேலைகளை முடித்து விட்டு, ஸ்வாமி விளக்கு ஏற்றும் பொழுது, அந்த கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று சோர்வாக இருப்பது  போல் தோன்றியது. மூன்றாம் நாள் கிருஷ்ணன் முகம் இன்னும் அதிகமாக சோர்வாக, குறிப்பாக பசியால் வாடியிருப்பது போல் தோன்றியது. எனக்கு சுரீரென்றது. அம்மா ஊருக்குச் சென்றது முதல்  நாம் சுவாமி நைவேத்தியம் செய்யவே இல்லை, அதனால்தான் குழந்தை(கிருஷ்ணன்) முகம் வாடியிருக்கிறதோ? என்று தோன்றவே, அன்று குளித்து விட்டு சமைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்தேன். என்ன ஆச்சர்யம்! சற்று நேரத்தில் அந்த கிருஷ்ணன் (இனிமேல் எப்படி அதை பொம்மை என்று செய்வது?) முகம் சட்டென்று மலர்ந்து விட்டது. அதன் பிறகு, அம்மா வீட்டில் இருந்தவரை குளிக்காமல் சமைத்ததில்லை, ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருந்ததும் இல்லை. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


32 comments:

  1. மலரும் நினைவு அற்புதம்...

    ஸ்ரீகிருஷ்ண... கிருஷ்ண...

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் ஶ்ரீகிருஷ்ணனுக்கே. நன்றி.

      Delete
  2. ஆச்சர்யம்.  நம் மனதில்தான் என்னென்ன தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்ரீராம். நாம் பெருமாள் (எந்த தெய்வம்னாலும்) என்று ஒரு சிறிய ஓவியம்/படத்தின்மீது நம்பிக்கை வைத்தால் அதில் இறைவன் வந்து அமர்கிறான் என்பது ஐதீகம். இதை நானும் அனுபவித்திருக்கேன். ஆனால் நிஜமான நம்பிக்கை இருக்கணும். இதுக்கு ஒரு காரணம் இருக்கு. இறக்கும்போது அல்லது அதீத துயரத்தில் நம் மனதில் ஒரு உருவம்/இறைவன் நினைப்பு வரணும் இல்லையா. பல இறை உருவங்களைக் கும்பிடும்போது நமக்கு மனது அலைபாய்ந்துவிடும்.

      Delete
    2. இது கற்பனையல்ல ஶ்ரீராம் நிஜம். நன்றி.

      Delete
  3. இதே போல நிற்கும் கிருஷ்ணன் என் நண்பர் வீட்டிலும் உண்டு.  பார்த்திருக்கிறேன்.  பட்டு வேஷ்டி எல்லாம் கட்டி விட்டு அலங்கரிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்று முகநூலில் வல்லி அக்கா பகிர்ந்திருக்கும் படத்தில் உள்ளது போன்ற கிருஷ்ணர்தான் எங்கள் வீட்டாலும் இருந்தது.

      Delete
  4. எனக்கும் என் பெரிய பையனுக்கும் கிருஷ்ணன் என்றால் இஷ்ட ம் .பெரியவன் கல்யாணம் குருவாயூரில்தான் நடந்தது

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? குருவாயூர் கோவிலில் திருமணம் என்றால் மிகவும் எளிமையாக இருந்திருக்குமே? கருத்துக்கு நன்றி.

      Delete
  5. சிறப்புப்பதிவு அருமை...கண்ணிலே அன்பிருந்தால்....கல்லிலே தெய்வம் நிச்சயம் வரும்தானே...

    ReplyDelete
  6. புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. கண்டிப்பாக, அதில் என்ன சந்தேகம்? நன்றி.

    ReplyDelete
  8. மனதை தொட்டுவிட்டீர்கள் பானு.
    எங்கள் அகத்தில் நாங்கள் சாப்பிடும் எல்லாவற்றையும் எங்கள் பெருமாள் சாப்பிடுவார். அவர் சாப்பிட்ட பிறகு தான் நாங்கள் சாப்பிடுவோம். காலையில் பால். இதற்காகவே எழுநதவுடன் பல் தேய்த்துக் குளித்து விடுவேன். பிறகு டிபன் பிறகு சாப்பாடு சாயங்காலம் புதிதாக டிபன் செய்தால் அதுவும் அவருக்குக் கண்டருளப் பண்ணிவிடுவேன்.

    நமக்கு அவர் செய்யும் உபகாரங்களுக்கு இதெல்லாம் எந்த மூலைக்கு?

    ReplyDelete
  9. நம்பினோருக்கு நாராயணன். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. உங்கள் தாயாரா? உங்களை நான் நேரில் சந்தித்தது இல்லை. வீடியோவில் தான் பார்க்கிறேன். படத்தைப் பார்த்ததும் உங்களின் இளவயது ஃபோட்டோ என்று நினைத்துவிட்டேன்.

    நினைவுகள் அருமை

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,என் அம்மாதான். சிறு வயதில் நான் என் அம்மாவைப் போலவே இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.
      கருத்துக்கு நன்றி.

      Delete
  11. நம் மனம் தான் என்னென்ன எண்ண வைக்கிறது இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது பானுக்கா.

    என் தங்கையின் மகள் தங்கை எல்லோருமே குருவாயூரப்ப/கிருஷ்ணப் பிரியைகள். தங்கை பாகவதம், நாராயணீயம் எல்லாம் கற்றுக் கொள்கிறாள். என் தங்கை பெண் தான் சாப்பிடும் முன் கிருஷ்ணனின் வாயில் வைத்து ஊட்டிவிட்டுத்தான் சாப்பிடுவாள். அவள் சமைப்பதையும் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலக் கொஞ்சி ஊட்டி விடுவாள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராமைப் போலவே நீங்களும் கூறியிருக்கிறீர்கள். ஆனால் நான் கற்பனை செய்து கொள்ளவில்லை. நன்றி கீதா.

      Delete
  12. அக்கா நீங்க அம்மாவின் சாயலில் இருக்கீங்க. டக்கென்று பார்க்க.

    கீதா

    ReplyDelete
  13. நல்ல நினைவலைகள். நான் எப்போவும் காலைக் காஃபிக்குக் காய்ச்சும் பாலில் இருந்து எங்க வீட்டு ராமருக்குக் கொடுத்துடுவேன். காஃபி கூட! அதனாலேயே என்னமோ அவர் கொஞ்சம் குண்டாகவும் இருப்பார்! :))))) ஊருக்கு எங்காவது போனால் கூட அங்கே குடிக்கும் காலை முதல் காஃபியின்போது வீட்டு ராமரை நினைச்சுப்பேன். எல்லாமும் அவருக்கும் மற்ற கடவுளருக்கும் உண்டு.

    ReplyDelete
  14. வீடியோவில் சமையல்/கோலம் சொல்லிக் கொடுக்கும் அக்காவைப் போல் உங்க அம்மா இருக்காங்க! உங்க ஜாடையும் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வீடியோவில் வரும் சகோதரியும், என் பெரிய அக்காவும் ஒரே மாதிரி இருப்பார்கள்.இப்போது என் பெரிய அக்கா எங்கள் அம்மா மாதிரியே இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனவே நீங்கள் சொல்வது சரிதான். :))

      Delete
  15. வணக்கம் சகோதரி

    மலரும் நினைவுகளை உண்டாக்கிய பதிவு அருமை. தெய்வம் என்றும் நம்முடன்தான் உள்ளது என்பதற்கு தங்கள் பதிவு ஒரு அத்தாட்சி. தங்கள் தயாரை பார்க்கும் போது தங்கள் சகோதரியின் நினைவு வருகிறது. குருவாயூரப்பனை பற்றிய சம்பவத்தை கூறும் போது சிலிர்ப்புடன் தங்கள் அனுபவங்களை உணர்ந்தேன். 🙏. 🙏. குருவாயூரப்பன் என் கணவருக்கு இஷ்ட தெய்வம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. //தங்கள் தயாரை பார்க்கும் போது தங்கள் சகோதரியின் நினைவு வருகிறது// கீதா அக்காவும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. உங்கள் அம்மா மாதிரி தான் இருக்கிறார்கள் அக்கா.
    பண்டிகைகள் வரும் போது நமக்கு அம்மா நினைவு வராமல் இருக்காது.
    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே! என்பார்கள்.
    அம்மா குழந்தைக்கு உணவு அளிப்பது போல் நேரம் தவறாமல் அளித்து வந்து இருக்கிறார்கள்.

    நீங்களும் குழந்தை முகம் வாடி இருப்பதை கண்டு அமுது படைத்தவுடன் கிருஷ்ணன் முகம் மலர்ந்து விட்டது.
    அருமையான நினைவுகள்.

    ReplyDelete