கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 22, 2020

மசாலா சாட் - 20

 மசாலா சாட்  - 20


யார் யாரை எப்படி வணங்க வேண்டும்? 

பெற்றோர்களை நாபிக்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். காரணம் நம்மை தன் வயிற்றிலே சுமந்தவள் தாய் நமக்கு உணவளித்தவர் தந்தை. 

நண்பர்களையும், பெரியவர்களையும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகின்றோம் என்பதை உணர்த்த நெஞ்சிற்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். 

ஆன்மீக வழி காட்டும் குருவுக்கு, அவர் நமது ஞானக் கண்ணை திறப்பதால் நெற்றிக்கு நேரே கரம் குவித்து வணங்க வேண்டும். 

எல்லாவற்றையும் கடந்த இறைவனையோ தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும். 
- அபிராமி அந்தாதி உரையில் சுகி சிவம்.

ஆண்  மூலம் அரசாளும் என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழி. ஆனி மாதத்திலே மூலம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அன்று பிறப்பது சிறப்பான யோகத்தை தரும். ஆனி மூலம் அரசாளும் என்பதை,ஆண் மூலம் அரசாளும் என்று திரித்து விட்டார்கள்.  
- ஜீ தமிழில் ஜோதிட சிம்மம் கண்ணன் பட்டாச்சார்யா 
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, பெண் மூலம் நிர்மூலம் என்று வேறு சேர்த்து விட்டார்களே, அதுதான் கொடுமை!


தனிஷ்க் விளம்பரத்திற்கு மதச்சாயம் பூசி அதை வாபஸ் பெற வைத்து விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரிக்கும் தேநீர் விளம்பரத்திற்கு ஏன் எந்த எதிர்ப்பும் இல்லை? 


நவராத்திரியில் லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்கு சென்ற வீட்டில்  அழகாக இருந்ததால் புகைப்படம் எடுத்தேன். அங்கு கிடைத்த கிஃபிட் இது. என்னவென்று தெரிகிறதா? பாட்டில் வடிவில்   zip lock bag.  குளிர்சாதன பெட்டியில் ஸ்டோரிங் கன்டைனராக பயன்படுத்தலாம் என்று அமேசான் இல் பார்த்தேன்.  


கடைசியாக ஒரு செய்தி. இதை கிச்சன் டிப்ஸ் என்றும் கொள்ளலாம். அமாவாசையன்று என் மகன் தர்ப்பணம் செய்து விட்டு வைக்கும் பாத்திரதில் இருக்கும் எள், தர்ப்பை போன்றவைகளை எடுத்து விட்டு தேய்க்கப் போட்டால் என்னதான் புளி, பீதாம்பரி எல்லாம் போட்டு தேய்த்தாலும், கறை போகாது. அன்றொரு நாள் இரவு மிச்சமிருந்த சாம்பார், ரசம் இவைகளை அதில் கொட்டி வைத்து விட்டு,   மறுநாள் காலை அவைகளை தேய்க்க, கறை போச்சு, இட்ஸ் கான், பாத்திரங்கள் பளிச்! ஸோ,மாறல் ஆஃப் தி ஸ்டோரி: மீந்து போகும் குழம்பு, ரசத்தில் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம். 



அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது யார் என்று உங்களுக்கே தெரியும்.







   

27 comments:

  1. கைகூப்பி வணங்கும் முறைகள் பற்றி முன்னர் படித்திருக்கிறேன்.   சுகிசிவம் என்றதும் சமீபத்தில் அவருக்கு வந்த எதிர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நானும் முன்பு படித்திருக்கிறேன். இப்போது சுகி சிவம் உரையில் அதை நினைவுபடுத்திக் கொண்டேன். நன்றி. 

      Delete
  2. ஆண்மூலம் விளக்கம் தெரிந்துகொண்டேன்.  ஆமாம், பெண்மூலம் நிர்மலம் என்று சொல்லி இருப்பார்களோ...   நிர்மூலம் ஆக்கி விட்டார்களோ!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது போல் பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் சரியாக இருக்கும். நன்றி. 

      Delete
  3. தர்ப்பை என்று சொல்லலாம்.   அந்தத் தாம்பாளத்தில் அப்பழைய குழம்பு ரசம் கொட்டினால் என் பாஸ் மறுத்து விடுவார்.  அதெல்லாம் தப்பு என்பார்! 

    ReplyDelete
    Replies
    1. புளி அதில் இருப்பதால் பளிச் என்று ஆகிறது. மோர்க்குழம்பு, புளிசேரிலாம் போட்டால் எஃபக்ட் நஹி. ஆனால் தர்ப்பணம் பண்ணும் தாம்பாளத்தில் இதெல்லாம் விட மாட்டோம்.

      Delete
    2. தர்ப்பை, தவறை  திருத்தி விட்டேன். நன்றி. 

      Delete
  4. //மீந்து போகும் குழம்பு, ரசத்தில் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம்//

    கண்டுபிடிப்பு ஸூப்பர்.
    சுவாரஸ்யமான விடயங்கள்.

    ReplyDelete
  5. சுகி சிவம் அவர்கள் அரங்கிற்கு வரும் முன்னரே - வணக்கம் செய்யும் முறைகள் பற்றி இலக்கிய விரிவுரைகளில் கேட்டிருக்கிறேன்...

    அபிராமி அந்தாதியை வாசித்தாலே போதும்.. மனம் அடங்கி விடும்.. இவர் விரிவுரை எல்லாம் செய்திருக்கிறார்..

    ஆனாலும்,
    நமது ஞானிகளையும் மகான்களையும் குறைத்துப் பேசி இறையன்பர்களின் மனதை நோகடித்தவர்..

    அபிராமவல்லியே
    எல்லாமும் என்றிருக்கையில் -
    அவளே அனைத்தும் காட்டுவாள்.. கூட்டுவாள்.. ஓட்டுவாள்..

    கற்பன காட்டுவாள்..
    நல்லன கூட்டுவாள்..
    அல்லாதன ஓட்டுவாள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், சுகி சிவம் நன்றாகவும் பேசுவார், கொஞ்சம் அதிகமாகவும் பேசுவார். 

      Delete
  6. நட்சத்திர விளக்கம் புதிது.. அருமை..

    நம்மவர்கள் விளங்காமல் பேசி கெடுத்து வைத்தவைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. நம்மவர்கள் புரியாமல் செய்த குழப்படிகளுள் இதுவும் ஒன்று.என்ன வேடிக்கை என்றால் விஷயம் தெரிந்தவர்களும் அதற்கு இரையாவதுதான். 

      Delete
  7. அந்த Zip lock bag அழகாக இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தவர்களிடம் தெரிவித்து விடுகிறேன். கருத்துகளுக்கு நன்றி. 

      Delete
  8. மசாலா சாட் தொகுப்பு சிறப்பு!
    யார் யாரை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அருமை! மனதில் அன்பும் மரியாதையுமாய் வணங்கினால் எந்த முறையுமே சிறந்தது தான்!
    பெண் மூலத்திற்கு சகோதரர் ஸ்ரீராம் கொடுத்த சிறப்பு வார்த்தை மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. பெண் மூலம் நிர்"மலம்" தான் சரியானது.

      Delete
    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மனோஜி. 

      Delete
  9. ஏற்கெனவே இதைப் பற்றி எழுதின நினைவு. நக்ஷத்திரங்கள் உள்பட! இதே போல் பல பழமொழிகளும் மாற்றிப் புரிந்து கொள்ளப்பட்டது பற்றிய ஓர் பதிவு எழுதின மாதிரி இருக்கு. இந்தக் குழம்பு, ரசத்தைப் பித்தளைப் பாத்திரங்களில் விடுவது! நாங்க எப்போதுமே இதைச் செய்து வந்திருக்கோம்/கிறோம்/வோம். ஆனால் வெண்கல உருளி, காப்பர் பாட்டம் பாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டும். தர்ப்பணப் பாத்திரத்தில் எல்லாம் விடுவதில்லை. இதே போல் மாவடு ஜலம் விட்டாலும் பாத்திரங்கள் "பளிச்" நான் பாத்திரங்களிலும் மாவடு ஜலம் விடுவேன் சுண்டைக்காய், மிதுக்கவத்தல், மணத்தக்காளி ஆகிய வற்றல்களையும் மாவடு ஜலத்தில் ஊற வைப்பேன். இந்த வருஷம் இங்கே நவராத்திரி கலெக்ஷன் ஏதும் இல்லை. ஒன்றிரண்டு ப்ளவுஸ் பிட், ஒரு ஸ்டீல் டப்பா தவிர்த்து! :))))) எங்கேயும் போகலை! :)))))

    ReplyDelete
    Replies
    1. /தர்ப்பணப் பாத்திரத்தில் எல்லாம் விடுவதில்லை.// நீங்களும் சொல்கிறீர்கள், ஸ்ரீராம், நெல்லை இவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி செய்யக்கூடாதா?  மீந்து போன  குழம்பு, ரசம் இவைகளைத்தானே விடுகிறோம்? எச்சில் பண்ணியது இல்லையே? 

      Delete
    2. //இந்த வருஷம் இங்கே நவராத்திரி கலெக்ஷன் ஏதும் இல்லை. ஒன்றிரண்டு ப்ளவுஸ் பிட், ஒரு ஸ்டீல் டப்பா தவிர்த்து! :))))) எங்கேயும் போகலை! :)))))// :))இது நெல்லையார் கண்களில் படவில்லையோ?

      Delete
  10. வணக்கம் சகோதரி

    வழக்கம் போல் கதம்பம் அருமை. யார் யாரை எப்படி வணங்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

    லலிதா சகஸரநாமம் பாராயணம் செய்வதற்கு சென்ற வீட்டின் அம்மன் கொலு அழகாக உள்ளது. அத்துடன் வந்த கிஃப்ட்டும் அழகுடன் அருமை.

    திருமணத்தில் மூலம் நட்சத்திரம் இன்னமும் குறை எனப் பார்த்துக் கொண்டேதான் உள்ளோம். "மூலத்து மாமியார் மூலையிலே" "ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே.."என்ற பழமொழிகள் எப்படி உருவானதோ ? மூலம் ஆஞ்சநேயர் நட்சத்திரம் என சிலர் இந்த குறைகளை பெரிதாக பார்ப்பதில்லை. ஆனால், அவர்களையும் உறவுகள், நட்புகள் மனதை கலைத்து விடுகின்றனர். ஜாதகம், ஜோசியம் என்ற நம்பிக்கை உள்ளவரை இந்த நட்சத்திரங்கள் இங்கு பந்தாடப்படும்.

    பித்தளை பாத்திரம் என்றுமே எலுமிச்சை. புளித் தடவி ஊறவைத்தால், பளிச்சென்று ஆகிவிடும்..! உங்களுக்கு தெரியாததா? இருப்பினும் கூடவே சேர்ந்த பலசரக்கு சாமான்களின் மகிமையில்,எந்த கஸடமுமின்றி எளிதாக கறையகற்றி இருக்கிறது போலும்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மஹா சரஸ்வதியை ஒவ்வொரு வருஷமும் மூல நக்ஷத்திரத்தில் தான் ஆவாஹனம் பண்ணுகிறோம், சரஸ்வதிக்கு உகந்த நக்ஷத்திரம் மூலம். "கேட்டை" நக்ஷத்திரத்தையும் கன்னாபின்னாவெனப் பேசுவோர் உண்டு. எங்க வீட்டிலேயே என் கடைசி நாத்தனார் கேட்டை நக்ஷத்திரப் பெண்களைக் கல்யாணம் செய்துக்கக்கூடாது என்பார். ஆனால் மஹாலக்ஷ்மி, "ஜேஷ்டா"தேவிக்குப் பின்னர் தோன்றியது அதே ஜேஷ்டா எனப்படும் கேட்டை நக்ஷத்திரத்தில் தான். பெருமாளுக்கு ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் தான் எல்லாக் கோயில்களிலும் ஜேஷ்டாபிஷேஹம் எனப் பண்ணுவார்கள். பெருமாளுக்கு உகந்ததாகக் கேட்டை நக்ஷத்திரம் சொல்லப்படுகிறது. ஆயில்யம், உத்திரம் இரண்டுமே அம்பிகைக்கு உகந்த நக்ஷத்திரங்கள். எந்த நக்ஷத்திரத்தில் நாம் பிறப்போம் என்பது நம் கைகளில் இல்லை. என்ன தான் நாள் குறித்து சிசேரியன் பண்ணினாலும் குறிப்பிட்ட காலத்தில் அது நடைபெறுவதும் இறைவன் கையில் தான்.

      Delete
    2. நீங்கள் கூறுவதனைத்தும் உண்மைதான் சகோதரி. அந்த காலத்தில் "மழைப் பேறும், பிள்ளைப் பேறும் மஹாதேவனுக்கே தெரியாது" என்று விதியின் வசம் வரும் நட்சத்திரங்களை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். அந்த குழந்தைகளின் திருமண காலத்தில் எதையும் ஏற்க இயலாமல், தாங்களும் வருந்தி... சம்பந்தபட்டவர்களையும் வருத்தி.. என்னவோ போங்கள்.! ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இப்போது முக்கால்வாசி அவர்களுக்கு பிடித்த நட்சத்திரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தையை எடுக்கும் வசதி செளகரியமாக உள்ளது. இனி வரும் காலங்களில், குழந்தைகளை ஜாதகம் பார்த்து திருமணங்கள் செய்வித்தால், நட்சத்திரங்களினால் அவ்வளவாக தொந்தரவு இருக்காதென நினைக்கறேன். நன்றி.

      Delete
    3. நட்சத்திரங்களுக்கு தோஷம் கிடையாது என்றும், செவ்வாய் தோஷம் குறித்து அத்தனை கவலைப்பட வேண்டாம் என்றும் ஜோதிடர்கள் எத்தனையோ எடுத்துக் கூறினாலும் அதை விட, ரைமிங்காக வருகிறதே என்று எதையோ  சொன்னதைத்தான்  பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது? திருமணத்திற்கு கூட காலண்டரில் முகூர்த்த நாள் என்று போடப்பட்டிருக்கும் நாள்தான் உகந்தது என்று இல்லை, கரி நாளாக இல்லாமல், யோகம் நன்றாக இருந்தால் போதும் என்றும் சொல்லி வருகிறார்கள்.கேட்கத்தான் ஆள் இல்லை. வருகைக்கு நன்றி கமலா. 

      Delete
    4. கேட்டை நட்சத்திர பெண்கள் மூத்த பிள்ளையைத்தான் திருமணம் செய்த கொள்ள வேண்டும் என்பார்கள். விசாகம் அதற்கு எதிர். கடைசி பிள்ளையைத்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பார்கள். எங்கள் வீட்டில் என் பாட்டி, என் பெரிய அத்தை, கடைசி அத்தையின்  பெண்  எல்லோரும் விசாகம், எல்லோருமே மூத்த பிள்ளையைத்தான் மணந்தார்கள். 
      கேட்டை நட்சித்திரக்காரர்கள் கோட்டை போல் வீடு கட்டி வாழ்வார்கள் என்பார்கள்(மீண்டும் ரைமிங்!)
      மஹாலக்ஷ்மியின் நட்சத்திரம் பூரட்டாதி அல்லவா? கருத்துக்களுக்கு நன்றி கீதா அக்கா.

      Delete
    5. ஜேஷ்டாதேவியின் உடன் பிறந்தவள், உடனே தோன்றியவள் மஹாலக்ஷ்மி! கேட்டை தான் அவளுக்கு உகந்த நக்ஷத்திரம். மஹாசரஸ்வதிக்கு மூலம், அம்பிகைக்கு ஆயில்யம் என்பார்கள்.

      Delete