கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, November 8, 2020

திருமண திருத்தங்கள்

 திருமண திருத்தங்கள் 


ரெஸ்டாரெண்டில்  தனக்கு எதிர்  நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆர்த்தியிடம், விஷால் ," நீ உங்க அப்பா,அம்மாவிடம் பேசினாயா?" என்று கேட்டான். 

காபியை ஒரு சிப் அருந்தி விட்டு, "பேசினேன், பட் நோ யூஸ்"  என்றாள்.

எங்க வீட்டிலும் அதே கதைதான் என்ற விஷால் ," "ஸோ, வேற வழியில்லை, நம்ம பிளானை எக்சிகியூட் பண்ண வேண்டியதுதான்" என்றான்.   
 
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆர்த்தி, ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை வெறிக்க, டேபிளை தட்டி, "என்னாச்சு? எனி பிராப்லம்?" 

"ஒண்ணுமில்லை, நம்ம அப்பா,அம்மாவுக்கு இது ரொம்ப ஷாக் ஆக இருக்குமோனு தோண்றது"

"வேற வழியில்ல, நம்ம இஷ்டம் என்னனு கேட்காம அவங்களா  ஒன்றை டிசைட் பண்ணி, அதை நம்ம மேல திணிச்சா வேற என்ன பண்ண முடியும்?"

ஆமாம், அப்போ நீ சொல்ற மாதிரி நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை. அதுக்கான அரேஞ்சு மென்ட்ஸ்..?"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உன் சைடுல நீ ஸ்ட்ராங்கா இரு அது போறும். அம்மா, அப்பா செண்டிமெண்டில் நீ கட்சி மாறிடக் கூடாது" 

"நோ! நோ! " என்று அவள் புன்னகைத்ததும் விஷால்,"அப்பா! வந்ததிலிருந்து இப்போதான் சிரிக்கிற.." என்றதும் அவள் மேலும் தன் புன்னகையை விரிவு படுத்தினாள். அந்த புன்னகைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று விஷாலுக்குத் தோன்றியது.

அடுத்தடுத்து வேலைகளை விஷால் விரைந்து முடித்தான்.  ஆர்த்தி  அம்மாவுடன்  புடவை  வாங்க கடைக்குச் சென்று, இரண்டு புடவைகள் மட்டும் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு  திருமணப் பதிவில் உதவி செய்த ஏஜென்ட் பெண்மணி ஆர்த்தியிடம், "நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ண வரும் பொழுது இப்படி ஜீன்ஸில் வராதம்மா, புடவை கட்டிக்கிட்டு வா"  என்றாள்.  

குறிப்பிட்ட நாளில்," அம்மா இன்னிக்கு விஷாலோட அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க," என்று ஆர்த்தியும், ஆர்த்தியோட அப்பா அம்மா உங்களை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க" என்று விஷாலும் கூறி, அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டினர். எதற்காக தாங்கள் அங்கே கூடியிருக்கிறோம் என்று புரியாத பெரியவர்கள் பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பட்டுப் புடவையில் ஆர்த்தியும்  பட்டு வேஷ்டியில் விஷாலும்  மாலையும் ,கழுத்துமாக வந்திறங்கிய பொழுது அவர்களின் பெற்றோர்கள், ஆச்சர்யமா? அதிர்ச்சியா? என்று சொல்லத் தெரியாத உணர்வில் திகைக்க, 

"நாங்க இன்னிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு விட்டோம். எல்லோரும் சேர்ந்து நில்லுங்கோ, நாங்க நமஸ்காரம் பண்றோம்"  

வாட்?
என்ன நடக்கறது இங்க?
என்னடி கூத்து இது?

என்று விதம் விதமாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

கோபமாக எழுந்த விஷாலின் தந்தை வெளியிடம் என்பதால் தன் கோபத்தை காட்ட முடியாமல் விருட்டென்று எழுந்து வெளிப் பக்கம் நடக்கத் துவங்க, அவருக்கு முன்னாள் ஓடி வாசல் கதவை தாளிட்ட ஆர்த்தி, "அங்கிள் ப்ளீஸ் ,ஒரு நிமிஷம்.. நாங்க சொல்றத கேளுங்க.." என்றதும் திரும்பி வந்து சோபாவில் கோபமாக அமர்ந்தார். 

"ஆர்த்தி, வாட்ஸ் ஹாப்பனிங்?" என்ற ஆர்த்தியின் தகப்பனாரிடம் "அங்கிள், நான் சொல்றேன். கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ" என்ற விஷால் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி டீப்பாயின் மேல் வைத்தான். 

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி, அடுத்த மாசம் தேதி குறிச்சிருக்கு, அதுக்குள்ள இப்போ என்ன அவசரம்? 

விஷாலின் அம்மா முதல் முறையாக வாய் திறந்தாள்.

கரெக்ட்! எங்களுக்கு கல்யாணம் நீங்க நிச்சயம் பண்ணி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி பண்ணப் போறேள்? ஒரே ஆடம்பரம்.,லட்சக்கணக்கா செலவு, அதெல்லாம் எதுக்கு? எங்க ரெண்டு பேருக்குமே அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நாங்க எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கறதா இல்ல, அதனால்தான் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தோம். 

இன்னிக்கு நல்ல நாளானு பார்க்க வேண்டாமா? 

"இன்னிக்கு நல்ல முகூர்த்த நாள்தான். கிருஷ்ணமூர்த்தி ஜோசியர் கிட்ட கன்சல்ட் பண்ணிதான் இந்த தேதியை பிக்ஸ்  பண்ணினோம்."

"வேற என்ன பாக்கி? தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?"

"சே! சே! அப்படியெல்லாம் கிடையாதுப்பா..  இந்த ஆடம்பர கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சோம். "

"என்னடி ஆடம்பரம்? எங்களுக்கு இருக்கறது நீ ஒரு பொண்ணு, உன்னோட கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று ஆர்த்தியின் அம்மாவும்,

"லைஃபில் ஒரு தடவ நடக்கப்போற விஷயம், நம்மால் அஃபோர்ட் பண்ணவும் முடியும், அப்படியிருக்க எதுக்காக சிம்பிளா பண்ணனும்?"  என்று விஷாலின் அம்மாவும் கேட்க,

"இதுதான் பிரச்னை. லைஃபில் ஒரு தடவைத்தானே வரப்போறதுனு ஒரு பேச்சு, அடுத்தது அஃபோர்ட்டபிலிட்டி... நம்மால்  முடியும்னு நினைக்கிறவங்க ஆடம்பரமா செய்வதால் அவர்களை பார்த்து மற்றவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது. ஒரு பியர் பிரஷரை நாம் கிரியேட் பண்ணிவிடுகிறோம். கல்யாணத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையே இல்லை. இதுக்கு யார் முடிவு கட்டுவது? நாங்க ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சோம். ."  பட்டிமன்ற பேச்சாளர் போல் விஷால் பேசி முடித்தான். 

"நீ ஒருத்தன் இதையெல்லாம் நிறுத்தினா, எல்லாரும் நிறுத்திடுவாளா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, எங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம்.  தவிர எல்லா நல்ல விஷயங்களையும் யாரோ ஒருத்தர்தான் ஆரம்பித்திருக்கிறார்". 

"இப்படி நீண்ட விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைந்து, ஆர்த்தி,விஷால் சொல்வதின் நியாயம் புரிந்து பெரியவர்கள் தங்கள் பிடியைத் தளர விட்டார்கள். " சரி, நடந்தது நடந்து விட்டது. வாங்கோ ரெண்டு பேரும் சுவாமிக்கு முதலில் நமஸ்காரம் பண்ணுங்கோ,  நான் ஒரு பாயசமாவது பண்றேன்.." என்று ஆர்த்தியின் அம்மா எழுந்திருக்க, 

"இல்ல மாமி, நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நாங்க கேடரிங்கில் சாப்பாடு சொல்லி விட்டோம்."

"மை காட்!.. எங்களுக்கு எதுவுமே விட்டு வைக்கலையா?"

"சாப்பிட்டு விட்டு, ரிசப்ஷன் எங்க வெச்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம், ஹனிமூன் எந்த ஊருக்கு போகச் சொல்கிறீர்களோ அந்த ஊருக்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே விஷால் கூற,

"ஹனிமூனா? நத்திங் டூயிங். முதலில் குல தெய்வம் கோவில், அப்புறம், திருப்பதி, குருவாயூர்னு ஷேத்ராடனம் எல்லாம் முடி, அப்புறம் யோசிக்கலாம்" என்று அவன் அப்பா அவனை சீண்ட, "பெருமாளே!" என்று அவன் அதிர்ச்சியடைய, "அதையேதான் நானும் சொல்றேன்" என்றார் அவன் தந்தை.   

பி.கு.:
என்னதான் ஆர்த்தியும், விஷாலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எளிமையாக ஒரு வைதீக திருமணமும் செய்து கொண்டதாக கேள்வி. 

43 comments:

  1. வித்தியாசமான சிந்தனை..அருமையான சிந்தனையும் கூட....

    ReplyDelete
  2. அதான் சரி..
    தேன் நிலவும் கிடையாது..
    பால் நிலவும் கிடையாது!..

    ReplyDelete
  3. ஆர்த்தியும் விஷாலும் நினைத்தது சரிதான்... ஆனாலும் -

    இதற்காகவா சீராட்டிப் பாராட்டி வளர்ப்பது?..

    அதுகள் ரெண்டும் கிழடானதுக்கு அப்புறம் தான் புரியும்...

    ReplyDelete
    Replies
    1. இப்போது திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்கள் ஒரு எல்லையில்லாமல் விரிந்து கொண்டே செல்கின்றன. அந்த ஆதங்கத்தில் எழுதப்பட்டது இது. கருத்துக்கு நன்றி.

      Delete
  4. இந்த மாற்றம் இனி வரட்டும்.  வரவேற்கத்தக்க மாற்றம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் வரதட்சணை வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்று அந்தக்கால இளைஞர்கள் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இப்போது ஆடம்பர திருமணத்தை தவிர்ப்போம் என்று இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

      Delete
    2. வாராவாரம் குமுதத்தில் வாங்கமாட்டோம் வரதட்சணை என்று ஒரு பகுதி வரும்!

      Delete
  5. நான் வேறு மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்.  ஏமாந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? கதை ஏமாற்றவில்லையே? நன்றி.

      Delete
    2. என்ன மாதிரி என்றும் எழுதுங்களேன்.

      Delete
  6. இந்தக் காலத்துக்குப் பதிவுத் திருமணமும் தேவைப்படுகிறது. ஆகவே வைதிகத் திருமணத்தைச் செலவு செய்யாமல் எளிமையாக நடத்தினால் தான் ஒத்துப்போம்னு சொல்லி அதையும் முடிச்சிருக்கலாம். அதோடு சேர்த்து அன்றே பதிவும் பண்ணிக் கொண்டிருக்கலாம். எப்படியோ நல்லபடியாகத் திருமணச் செலவுகள் இப்படியானும் குறைந்தால் சரி. ஆனால் இப்போதெல்லாம் மிக எளிமையாக நூறு விருந்தினர்களை வைத்துக் கொண்டே திருமணத்தை முடிக்கின்றனர். எல்லாம் கொரோனாவின் தாக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அக்கா. நீங்கள் பி.கு.வை படிக்கவில்லையா? வெளிநாடுகளில் வசிக்கும் பலர் விசா வாங்குவதற்கு ஏதுவாக நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே திருமணத்தை பதிவு செய்து விடுகிறார்கள்.
      கொரோனா தீவிரமாக இருந்த பொழுது நடந்த திருமணங்கள் மட்டுமே எளிமையாக நடந்தன. காண்டிட் ஃபோட்டோகிராஃபி போன்ற அலப்பறைகள் குறையவே இல்லை. சென்ற வாரம் என் மகனும், மருமகளும் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு வந்தார்கள். பெங்களூரில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடந்த அந்த திருமணத்தைப் பற்றி அவர்கள் விவரித்ததை கேட்டதும்தான் இந்த கதைக்கான கரு உதித்தது. கருத்துக்கு நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    நல்ல கதை. சுருக்கமான உங்கள் எழுத்துத் திறமையில் கதை நன்றாக மிளிர்கிறது. திருமணத்திற்கு படாடோபமாக ஆகும் பணத்தை அவர்கள் பேரில்,வங்கியில் போட்டால் கூட பிற்காலத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நானும் யோசித்திருக்கிறேன். ஆனால் சுற்றம் சூழ வந்திருந்து திருமணத்தை சிறப்பாக நடத்துவதுதானே ஆதி காலத்திலிருந்து நம் பண்பாடு. தற்சமயம் சகோதரி கீதா சாம்பசிவம் சொல்வது போல் கொரோனா தாக்கத்தில் நூறு, ஐம்பது பேர்களுடன் சத்தமின்றி திருமணங்கள் நடக்கின்றன.

    கதையில் விஷாலும், ஆர்த்தியும் யோசித்து எடுத்த முடிவும், அதற்கு பெற்றவர்கள் சட்டென எடுத்த ஒப்புதல் முடிவும் மன நிறைவாக உள்ளது. அருமை. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. வாங்க கமலா சுற்றம் சூழ திருமணத்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை ஆனால் காண்டிட் ஃபோட்டோக்ராஃபி, நம் சம்பிரதாயத்தில் இல்லாத மெகந்தி, சங்கீத், தீமடிக் என்றெல்லாம் ஆடம்பர செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. திருமணத்தில் 90 சதவிகிதம் ஆடம்பரமாகிவிட்டது. எனக்குமே இது பிடிப்பதில்லை.

    முதல்ல இந்த ஸ்டால், அந்த ஸ்டால்னு ஆரம்பித்து இப்போ அளவே இல்லாமல் ஆடம்பரமாகிட்டுவருது (95லேயே ஹோட்டலில் முதலிரவு என்ற கான்சப்ட் வந்துவிட்டது). இதுல அன்பளிப்பு என்ற கான்சப்ட். இதெல்லாம் நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது.

    அந்த பாயிண்டை எடுத்துக்கொண்டு எழுதிய கதை நன்று.

    ReplyDelete
    Replies
    1. விரிவான விமர்சனத்திற்கு நன்றி.

      Delete
  10. ஆனால் ரெஜிஸ்டர் மேரேஜ் என்பது அதற்குத் தீர்வல்ல. மிகக் குறைந்த உறுப்பினர்களுடன் வைதீகத் திருமணம் (அப்படி ஒன்றில் எண்ணம் இருப்பதால்). பிறகு ரெஜிஸ்டர் மேரேஜ். என்ன சொல்றீங்க.

    ReplyDelete
  11. மணமக்களுக்கு ரிசல்ட் : நெகட்டிவ் எனும் பாசிட்டிவா...? அல்லது பாசிடிவ் எனும் நெகட்டிவ்வா...?

    எப்படியோ இந்த தொற்றுக் காலத்திற்கேற்ப சிறப்பான தரமான சம்பவம்...

    ReplyDelete
    Replies
    1. பாசிட்டிவ்தான் நன்றி.

      Delete
  12. 100% ஆதரிக்கிறேன். சப்தபதியோடு திருமணம் முடிகிறது.
    இங்க் சில திருமணங்கள் 25 நபர்களோடு முடிக்கப் படுகின்றன.
    எல்லாம் தொற்று குறித்த பயம் தான்.
    நல்ல கதை பானுமா.

    ReplyDelete
  13. பானுக்கா அட்டகாசமான கதைக்கரு!! நல்லாருக்கு நான் முழு ஆதரவு!!

    எங்கள் வீட்டில் என் மகன் நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதுதான்...நீங்க தொடங்கி வைச்சுருக்கீங்க. ஹா ஹா ஹா ஹா.

    கதையில் வருவது போல ரிசெப்ஷன் யெஸ் எல்லாருக்கும் சொல்லணுமில்லையா அதுக்காக ஒரு கெட்டுகெதர் போல அதுவும் ஆடம்பரம் இல்லாமல்...என்றுதான்

    பைசா இருக்கு என்று சொல்பவர்கள் கல்யாணச் செலவை வேறு நல்ல விஷயங்களுக்குச் செலவு செய்யலாம் இல்லை என்றால் குழந்தைகள் பேரிலேயே போட்டு வைக்கலாம். இப்படியான பேண்டமிக் சமயத்தில் எத்தனைபேர் வேலை இழந்துள்ளனர் அவர்களுக்கு இப்படி டெப்பசிட் செய்யும் பணம் உதவுமே.

    கீதா

    ReplyDelete
  14. பானுக்கா ஸ்ரீராம் எழுதின கதையையும் இப்ப நீங்க எழுதியிருப்பதையும் கலந்து கட்டினால் சூப்பரா இருக்கும்...நீங்கள் இருவருமே சேர்ந்து எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம் என்ன கதையை எப்போ, எங்கே எழுதினார்? எதிலே வெளியிட்டார். சுட்டி கொடுங்க. :)))))

      Delete
    2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், பையனும் எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விடுவதை வைத்து சொல்கிறீர்களா கீதா?

      Delete
    3. என்ன கீதா அக்கா அதற்குள் மறந்து விட்டீர்களா? சமீபத்தில்தானே ஸ்ரீராம் வியாழன் பதிவுகளில் ஒரு தொடர் எழுதினார். திருமணம் செய்து கொள்ள மறுக்கும் பையனோடு வாதாடி தோற்கும் தந்தை ஒரு ஹோட்டலுக்குச் செல்ல, அங்கு வரும் வரும் மகனின் காதலி முன்னாலேயே செய்த ஏற்பாட்டின்படி தங்கள் காதலியும், இரண்டாவது மகனின் காதலையும் அவிழ்ப்பதாக கதை செல்லும்.  கதையின் தலைப்பு மறந்து விட்டது. 

      Delete
  15. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நல்ல கதை.

    எங்கள் பக்கங்களில் கல்யாணம் பொதுவாக மிக எளிமையாகத்தான் இருக்கும். ஆனால் சொத்துப்பரிமாற்றம் கண்டிப்பாகப் பெரும்பாலான குடும்பங்களில் இருக்கும்.

    துளசிதரன்

    ReplyDelete
  16. காலத்துக்கு ஏற்ற திருமணம்.

    ReplyDelete
  17. இப்படி நடந்தால் நன்றாக இருக்கும். வுருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மாதேவி.

    ReplyDelete
  18. அப்ப reception மட்டும் எதற்கு?!...அதிலும் நிறைய பேர் ஆடம்பரமாக கொண்டாடுவதும் உண்டல்லவா?!.....

    நிச்சயதார்தமே சிலர் இப்போது ஆடம்பரமாக கொண்டாடும் காலமும் கூட....

    மக்கள் திருந்தினால் சரி ஆடம்பர செலவுகளை விட்டு....

    அருமை தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. ரிஸப்ஷன் மட்டும் என்பதில் ஆடம்பரம் குறைவாகத்தான் இருக்கும். கருத்துக்கு நன்றி. 

      Delete
  19. ஆடம்பரம் வேண்டாம். சரி. பதிவுத் திருமணத்தை அப்பா அம்மா முன்னிலையில் செய்து கொண்டிருக்கலாமே. அது சற்று ஒத்துக்கொள்ளும்படி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. True Ranjani, This is also my point of view.

      Delete
    2. அப்பா, அம்மா சிக்கன திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால்தான் இந்த ஏற்பாடு. அப்படித்தான் கதை துவங்குகிறது. தவிர கதை என்று வரும் பொழுது கொஞ்சம் டிராமாட்டிக்காக இருக்க வேண்டாமா? அதுதானே சுவாரஸ்யம், இல்லாவிட்டால் வெறும் கட்டுரை ஆகி விடாதா? கருத்துக்கு நன்றி. 

      Delete