கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 14, 2021

மசாலா சாட்!

மசாலா சாட்!

பகுள பஞ்சமி அன்று யூ ட்யூபில் வெளியிட சத்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி பேசி அனுப்ப கேட்டிருந்தார்கள். அதற்காக திரட்டிய தகவல்களில் இதுவரை கேள்விப்படாத சில சங்கதிகள்:

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பினாராம். அப்போது இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் மீது ஆனந்த பைரவி ராகத்தில் பல பாடல்களை பாடியிருப்பதை கேட்ட பிறகு,அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து, தியாகராஜர்  அதற்குப் பிறகு ஆனந்த பைரவி ராகத்தில் பாடப் போவதில்லை என்று முடிவெடுத்தாராம். 

தியாகராஜர் சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிடம் இவற்|றிலும் வல்லவராக இருந்தாராம். 

ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், போன்ற புகழ் பெற்ற இசை நாடகங்களும் எழுதியிருகிறார்.  

பஜனை சம்பிராதய வழியில் திவ்ய நாம கீர்த்தனங்கள், உற்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் போன்றவைகளையும் இயற்றியிருக்கிறார். 

***********************************************************************************

மனதார சொல்கிறேன், என்று கூறும் பொழுது நம் கையை இதயம் இருக்கும் இடத்திற்கருகே வைத்துக் கொள்வது நம் பழக்கமாக இருந்தாலும்,  மனம் என்பது எது? அப்படி நிஜமாகவே ஒன்று உண்டா? மனமும், மூளையும் ஒன்றுதானா? என்று பல சந்தேகங்கள் உண்டு. மனம் என்று தனியாக ஒன்று கிடையாது, அது எண்ணங்களின் தொகுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் மனம் ஒரு குரங்கு என்னும் கூற்றில் சந்தேகம் இருக்க முடியாது. அதை அடக்குவதும் ஆள்வதும் பிரும்ம பிரயத்தனம்தான். இல்லாத ஒன்று என்ன பாடு படுத்துகிறது? அன்று சௌந்தர்யலஹரி வகுப்பில் திரிஷா என்று ஒரு வார்த்தை,  காது கேட்பதை, வாய் சொல்லிக் கொண்டிருக்க,  இந்த பொல்லாத மனம், அழகான அஜித்தைப் பார்த்து, மிக அழகான திரிஷா, "இப்படி ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போனால்மா நாங்களெல்லாம் என்ன செய்வது?" என்று கேட்கும் காட்சிக்கு தாவி விட்டது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகப் போனது. 

தடந் தோளினாய்! மனம் அலையும் தன்மையது, அதை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அப்பியாசத்தாலும், வைராக்கியதாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கீதாச்சார்யன். வைராக்கியம்.. அதுதானே குறைவாக இருக்கிறது.  

***********************************************************************************

என் மகன் காதி சோப்தான் உபயோகப்படுத்துவான். இப்போது காதி சந்தன சோப் பயன்படுத்திகிறான். குளித்துவிட்டு வந்தால் வீடே மணக்கிறது. இன்று அவன் குளித்து விட்டு வந்ததும், ஒரே கம கம மணம். அது எனக்கு ஒரு பழைய விளம்பரத்தை நினைவூட்டியது.

கம,கமா, நிதம் நிதம் கம கமா

இதென்ன சரிகமா? ஏதாவது சுரமா?

நறுமண சுரம் 

புதுவிதமா?

எக்ஸோடிகா டால்கம் கம,கமா 

சரி சரி சரி 

யாருக்காவது இந்த விளம்பர பாடல் நினைவிருக்கிறதா?

*************************************************

இரண்டு வார்த்தைகளால் எந்த கதவையும் திறக்க முடியும் 

அப்படியா?

ஆமாம், தள்ளு, இழு... 

இந்த ஜோக் கூகுள் சொன்னது. அவ்வப்பொழுது செல் போன் திரையில் ஒரு மைக் தோன்றி, இதை சொல்லிப் பாருங்கள் என்று ஒரு தமிழ் வார்த்தை தோன்றும். இன்று, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்டு, கீழே ஒரு கட்டத்துக்குள்  ஒரு ஜோக் சொல்லு, என்ற ஆணையும் இருந்தது. சரி என்று அழுத்தினேன், அப்போது வந்த ஜோக் இது. 

ஒரு திரைப்புதிரோடு முடித்துக் கொள்கிறேன். 

தமிழ் திரையுலகில் சகோதர,சகாதரிகள் நடித்திருக்கிறிர்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி சிலரை நினைவு கூற முடிகிறதா? 

  

33 comments:

  1. மனம் ஒரு குரங்குதான் மறுக்க இயலாது. அழகை குறிப்பிட இந்த திரைப்பட கூத்தாடிகளைத்தான் சொல்ல வேண்டுமா ?

    தேவகோட்டையில் கைவண்டி இழுக்கும் துறையில் ஆடவரும், காய்கறிகடையில் தராசு பிடிக்கும் துறையில் பெண்மணியும்கூட அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. என் மனது தாவிய இடத்தைதானே நான் சொல்ல முடியும்.

      Delete
  2. நமக்கு கூத்தாடிகளை நினைவில் வைத்துக் கொல்'வதில்லை இருப்பினும் மூளை சொல்லி மனதில் வந்தவர்கள்.

    01. பத்மினி, ராகினி
    02. எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன்
    03. எம்.ஆர்.ஆர்.ராதிகா, எம.ஆர.ஆர.ராதாரவி, எம்.ஆர்.ஆர.வாசு
    04. அம்பிகா, ராதா
    05. சாருஹாசன், கமலஹாசன்
    06. சூர்யா, கார்த்தி
    07. ராம்குமார், பிரபு
    08. ராஜூ சுந்தரம், பிரபுதேவா, கடைசிதம்பி
    09. ஷாலினி, ஷாமினி
    10. சுஹாசினி, அனு
    11. இடிச்சபுளி செல்வராஜூ, பி.பாண்டு
    12. அருண், வனிதா, ஸ்ரீதேவி, பிரீதா
    13. உதயநிதி, அருள்நிதி
    14. சிம்பு, தமிழ் இலக்கியா (குழந்தையாக)
    15. ஜோதிகா, நக்மா
    16. ஜோதிலட்சுமி, ஜெயமாலினி
    17. டிஸ்கோ சாந்தி, இளைய சகோதரி
    18. டி.ஆர். மஹாலிங்கம், டி.ஆர். ராமச்சந்திரன்
    19. ஸ்ருதி ஹாசன், அக்ஸரா ஹாசன்
    20. ஜெமினி கணேசன் மகள்கள் அனைத்தும்...

    (இவர்கள் சகோதர, சகோதரிகள் மட்டுமே)

    ReplyDelete
    Replies
    1. டி ஆர் மகாலிங்கமும் டி ஆர் ராமச்சந்திரனும் சகோதரர்கள் அல்ல.  நல்லவேளை, இதில் டி ஆர் ராஜகுமாரியையும் சேர்க்கவில்லை ஜி!  :))  

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      ஆகா . நினைவில் இல்லையென்று இருப்பவர்கள் அனைவரையும் ஒன்று விடாமல் நினைவிலிருந்து இறக்கி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

      Delete
    3. இராவணன், இரண்யகசிபு போன்றவர்கள் கொடியவர்கள் என்றாலும் அவர்கள், கடவுளிடம் பரம பக்தி உடையவர்களுக்கு ஈடாக கடவுளைப் பற்றி சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருந்ததனால் கடவுளிடம் ஐக்கியமானார்கள் என்று சொல்லுவார்கள்.

      சதா சர்வ காலமும் கூத்தாடிகள் என்று கோப்ப்பட்டுக்கொண்டிருந்தாலும் தீசீஸ் எழுதும் அளவு அனைவரையும் மனத்தில் இருத்தியிருக்கிறீர்களே கில்லர்ஜி... பாராட்டுகள்

      Delete
    4. அனேகமாக அத்தனை பேரையும் கவர் செய்து விட்டீர்கள். கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசனும் ராஜபார்வை,இந்திரா,ஹே ராம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
      நக்மா,ஜோதிகாவின் மற்றொரு சகோதரியும் நடித்திருக்கிறார். பெயர் நினைவில் இல்லை.
      பத்மினி,ராகினி சகோதரிகளோடு லலிதாவை மறந்து விட்டீர்களே. அவர்களை குறிப்பிடும் பொழுதே லலிதா,பத்மினி,ராகினி என்றுதானே சொல்வார்கள்.

      Delete
  3. தியாகராஜர் செய்தி சுவாரஸ்யம்.  ஆனந்தபைரவி பற்றிய செய்தி படித்திருக்கிறேனோ?

    ReplyDelete
  4. த்ரிஷா செய்தியும் சுவாரஸ்யம்.  அலைபாயும் மனதை அடக்குவது ரொம்பக் கஷ்டம்.  எனக்கும் ஒரு வார்த்தை சிலரையும், சில பெயர்கள், வார்த்தைகள் சட்டென ஏதாவது பாடலையும் நினைவுக்கு கொண்டுவரும்!

    ReplyDelete
    Replies
    1. த் பற்றிய உண்மைச் செய்தி மனதைக் கசக்க வைக்கும். கோயமுத்தூர் சம்பந்தப்பட்டது இச் செய்தி

      Delete
    2. கிசு கிசு பாணியில் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்,அபுரி.

      Delete
  5. எக்ஸோடிகா டால்க் கமகமா கமகமா கமகமா என்று சொல்லிக் கொண்டே போவதையும், அதையே பத்திரிகையில் அந்தப் பக்கம் முழுவதும் பின்னணி எழுத்துகளாக இதைப் போட்டு வருவதும் நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
  6. ஜோக்ஸ்.... ம்ம்ம்ம்ம்ம்.....

    சகோதர சகோதரிகள் லிஸ்ட் கில்லர் ஜி தந்து விட்டார்!

    ReplyDelete
  7. சூர்யா-கார்த்தி 
    ஜீவா-ரமேஷ் கே ஆர் விஜயா- கே ஆர் ....
    ஜீஜி-ரேகா 
    பானுப்ரியா- நிஷாந்தி 
    ராதிகா- நிரோஷா 

    ReplyDelete
    Replies
    1. கே.ஆர் வஸ்தலாவா

      Delete
    2. இருக்கலாம்.  சட்டென தங்கை பெயர் நினைவுக்கு வரவில்லை!

      Delete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கர்நாடக இசை மேதை தியாகராஜர் பற்றிய செய்திகள் அருமை. அறிந்து கொண்டேன். மனம் ஒரு குரங்குதான். எந்த விஷயத்திலும் ஈடுபட நினைக்கும் போது மற்றதற்கு தாவி விடுகிறது. விளம்பர பாடல் கேட்ட மாதிரிதான் தோன்றுகிறது.

    பூட்டு, சாவியின்றி வார்த்தைகளால் கதவு திறக்கும் ஜோக் நன்றாக உள்ளது.(அந்த கால அலிபாபவும், நாற்பது திருடர்களும் படம் நினைவுக்கு வருகிறது. அதிலும் திரைப்பட சகோதரர்கள்தான் நடித்திருந்தனர்.)

    திரைப்பட சகோதரர் சகோதரிகள் பட்டியலை சகோதரர் கில்லர்ஜி அவர்கள் சமர்பித்து விட்டார். பகிர்வத்தனைக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. நீங்கள் விமர்சன வித்தகி! எ.பி.யின் பொங்கல் மலருக்கு விமர்சனம் எழுதினீர்களா இல்லையா?

      Delete
    2. வணக்கம் சகோதரி

      விமர்சன வித்தகி:)))) நன்றி. சென்ற மாதம் முழுவதும் இணைய தொடர்பின்றி சற்று சிரமபட்டதில் பொ. மலருக்கு விமசர்னம் எழுத இயலவில்லை சகோதரி. நன்றி.

      Delete
  9. தியாகராஜர் குறித்த இந்தச் செய்திகளை ஏதோ ஒரு தீபாவளி மலரில் படிச்சிருக்கேன். உ.வே.சா. குறித்தும் நிறைய இம்மாதிரி மலர்களில் படிச்சது தான். மற்றபடி அஜித்தை திரிஷா கேட்டதெல்லாம் தெரியாது.திரைப்பட சகோதர சகோதரிகளில் உல(க்)கை நாயகர் கமலஹாசன் குடும்பத்தை எல்லோரும் மறந்துட்டாங்க போல!

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி கமெண்ட் படிக்கவில்லையா?!

      Delete
    2. கீழே பார்க்கலையா? :)))))

      Delete
    3. நான் அதற்கு முன்னாலேயே கேட்டு விட்டேனாக்கும்!

      Delete
    4. //சகோதர சகோதரிகளில் உல(க்)கை நாயகர் கமலஹாசன் குடும்பத்தை எல்லோரும் மறந்துட்டாங்க போல!// மறக்க கூடிய குடும்பமா?

      Delete
  10. வட்டார வழக்குச் சொற்கள் மட்டுமல்ல, அதைப் பேசுபவர்களும் இப்போதெல்லாம் அருகி வருகின்றனர். அட? கில்லர்ஜி சொல்லி இருக்கார் உலக்கை நாயகரின் குடும்பத்தினர் பற்றி. எக்ஸோடிகா டால்க் விளம்பரம் நன்றாய் நினைவில் இருக்கு. கம கமா, என்று பாடுவதும் கூடக் காதில் ஒலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வட்டார வழக்கு சொற்களை பயன்படுத்துவது பற்றி,எனக்கும்,என் தோழிக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை எழுதி, அதைத் தொடர்ந்து என் கருத்துக்களையும் எழுத நினைத்து தொடங்கினேன், முடிக்கவில்லை. காபி.பேஸ்ட் பண்ணும் பொழுது அதுவும் வந்து விட்டதை இப்போதுதான் பார்க்கிறேன். ஹிஹி!

      Delete
  11. எனக்கெல்லாம் செல்ஃபோனில் எந்த மைக்கும் வந்து செய்திகள் எதுவும் சொல்லுவதில்லை. புதிரும் போடுவதில்லை. பயன்பாடு குறைவு என்பதாலோ?

    ReplyDelete
    Replies
    1. கூகுளுக்கே கூகுள் செய்தி சொல்ல முடியுமா?

      Delete
  12. ஸ்வாரஸ்யமான மசாலா சாட்.

    ReplyDelete
  13. சகாதர,சகாதரிகளில் எல்லோரும் சரிதாவையும், அவர் தங்கை விஜியையும் விட்டு விட்டார்களே? விஜி தில்லு முல்லுவில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்தார்.சீரீயல்களில் நடிக்கிறார்.

    ReplyDelete
  14. மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி.

    ReplyDelete
  15. உள்மனம் - வெளிமனம்

    இரண்டும் சமநிலையை அடைந்து விட்டால்... ம்ஹிம்... சிரமம் :- விளக்கி சொல்வதற்கு...!

    ReplyDelete