கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 19, 2021

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்...

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்... 

பலர் பாராட்டிய 'ஹோம்' என்னும் மலையாள படத்தை நானும் பார்த்தேன். எனக்கென்னவோ அப்படி பிரமாதமாக தோன்றவில்லை. படம் ரொ...ம்...ப... ஸ்லோ! தவிர  கட்டுக்கோப்பாக இல்லாமல் அலைகிறது. 


அடுத்து நான் பார்த்த இன்னொரு மலையாள படமான 'கோல்ட் கேஸ்' எனக்கு பிடித்தது. அமானுஷ்யம் கலந்த திரில்லர்.  அதிதி பாலன், லட்சுமி பிரியா, மற்றும் பிரித்விராஜ் நடித்திருக்கும் படம். நல்ல திரைக்கதை, மற்றும் சாதுர்யமான எடிட்டிங் படத்தின் பிளஸ்.


நேற்று 'தலைவி' பார்த்தேன். இந்தப் படம் பிரமாதம் என்று சிலரும், மஹா மட்டம் என்று சிலரும் கூறினார்கள். ஒரு முறை பார்க்கலாம்.  எம்.ஜி.ஆர். போலவும், கருணாநிதி போலவும், ஒப்பனை செய்து விட்டு, எம்.ஜே.ஆர்., கருணா, ஆர்.என்.வீ. என்று பெயரை சற்று மாற்றினால் தெரியாதா என்ன? கதாநாயகியின்  பெயர் ஜெயா. 

ஒப்பனை கலைஞரை பாராட்ட வேண்டும். எம்.ஜி.ஆரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். கொஞ்சம் உயரம்! முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் சிறப்பாக செய்திருக்கிறார் அரவிந்த்சாமி. 

ஜெயலலிதாவின் பாத்திரப் படைப்பு சரியில்லை. அவரை ஆணவம், கர்வம், திமிர், தான் நினைத்ததை சாதிக்க எந்த நிலைக்கும் செல்பவர் என்பது போல் காட்டியிருப்பது சரியா? ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார் கங்கனா ரெனாவத்.  ஜெயாவின் அரசியல் ஆலோசகரான சோ எங்கே? 

தலைவி என்று பெயர் கொடுத்து விட்டதால் ஜெய லலிதாவின் அரசியல் வாழ்க்கையை மட்டும் காட்டினால் போதும் என்று நினைத்து விட்டார் இயக்குனர், ஆனால் பாத்திர படைப்பில் கோட்டை விட்டது தோல்வி. இந்தப் படத்தை பார்த்தால் ஜெயாவின் மீது அபிமானமோ, மரியாதையோ,பரிதாபமோ வராது. அவருடைய சொந்த வாழ்வில் அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், இழப்புகள் இவை எதையும் காட்டாமல், தலைவி என்னும் இடத்திற்கு வெகு சுலபமாக வந்து விட்டது போல சித்தரித்திருக்கிறார். கங்கானாவிற்கு குரல் கொடுத்திருக்கும் சவிதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!
தம்பி ராமையாவும், சமுத்திரக்கனியும் தங்கள் பங்கை செம்மையாக செய்திருக்கிறார்கள். 

ஓ.டி.டி. யை விட்டு விட்டு தொலைக்காட்சிக்கு வரலாமா? சனி, மற்றும் ஞாயிறு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'மாஸ்டர் செஃப் இந்தியா' - தமிழை தொடர்ந்து பார்க்கிறேன்.  ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. அதில் அவர்கள்  கொடுக்கும் சேலஞ்சுகளும், அதை போட்டியாளர்கள் திறம்பட சமாளிப்பதும் பார்க்க வெகு சுவாரஸ்யம். ஆனால் அப்படிப்பட்ட உணவுகளை வீட்டில் சாதாரணமாக செய்து சாப்பிட முடியுமா? என்று தெரியவில்லை. 

யூ டியூபில் நான் ரசிக்கும் ஒரு நிகழ்ச்சி சுபஸ்ரீ தணிகாசலம் வழங்கும் QFR(quarantine from reality). பல வருடங்களுக்கு முன்பு டிசம்பர் சீசனில் ஒருவர், கர்னாடக இசையை வளர்க்க வேண்டுமென்றால் இளைஞர்களுக்கு மியூசிக் அப்ரிசியேஷன் வகுப்பு எடுக்க வேண்டும் என்று பேசியதற்கு,விகடனில் இசையை ரசிப்பது எப்படி என்று எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? அது இயல்பாக வர வேண்டாமா? என்று எழுதியிருந்தார்கள். இப்போது சுபஸ்ரீ QFR நடத்துவதை பார்த்தால் அந்தக் கேள்வி வராது. அவர் ஒவ்வொரு பாட்டையும் அணு அணுவாக ரசித்து,அதை விவரிக்கும் பொழுது அட! இந்தப் 
பாட்டில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று தோன்றும்.   




30 comments:

  1. தலைவி பார்க்கும் பொறுமை இல்லை.  நீங்கள் சொல்லி இருக்கும் மலையாளப்பப்படங்கள் பார்க்கவில்லை.  வேறு இரண்டு படங்கள் பார்த்தேன்.  தொலைக்காட்சிப் பக்கம் ஒதுங்குவதில்லை!

    அப்பத்தா என்கிற படம், லிப்ட், வினோத சிதயம் ஆகியவை பார்க்கும் லிஸ்ட்டில் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் லிஃப்ட் படம் ஹாரர் படமோ? ஒரெ ஒரு வரிதான் விமர்சனம் பார்த்தேன். அப்படி என்றால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்

      வினோத சிதயம்? வினோத சித்தம் தானே இல்லையா சமுத்ரகனி இயக்கிய படம்? நல்ல கருத்துள்ள படம் போல!!??

      கீதா

      Delete
    2. தலைவி போரடிக்கவில்லை, ஒரு முறை பார்க்கலாம்.

      Delete
  2. பொறுமையாகப் படங்களைப் பார்த்து விமரிசிக்கிறீர்கள். என்னால் எல்லாம் அத்தனை நேரம் உட்கார முடிவதில்லை. :))) பொறுமையும் இல்லை. தொலைக்காட்சியில் கூட மாலை எட்டு மணிக்கு மேல் வரும் இரண்டு சீரியல்கள் பார்க்கிறேன். அதுக்காக ஏழரை மணியில் இருந்தே காத்துக் கிடக்க வேண்டி இருக்கு! :))))) இப்போதைக்குக் "கர்மா" தொடரை விடாமல் பார்த்து வருகிறேன். 65 பகுதிகள் பார்த்திருக்கேன். மிச்சம் இருக்கு. இன்னும் தற்போது உள்ளனவற்றைப் பார்க்கலை.

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே எனக்கு படங்களை முழுமையாக பார்க்கும் பொறுமை உண்டு. அவார்ட் வின்னிங் படங்களை கூட பொறுமையாக பார்ப்பேன். ஆனால் இந்த படங்களை எல்லாம் அடுத்தடுத்து பார்க்கவில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததும் இருக்கிறது.

      Delete
  3. படங்களைப் பார்க்க உங்களுக்கு இருக்கும் பொறுமை பாராட்டுக்குரியது! என்னால் முழு நீளப் படங்களைப் பார்க்க முடிவதில்லை. குறும்படங்கள் விளம்பரங்கள் மட்டுமே பார்க்க விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், விளம்பரங்கள் பிடிக்கும். குறும்படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை.

      Delete
  4. பானுக்கா ஹோம் நன்றாக இல்லையா ஓகே அப்ப என் லிஸ்டில் கடைசியாக இருக்கட்டும். கோல்ட் கேஸ் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று லிஸ்டில் இருக்கிறது.

    மாஸ்டர் செஃப் கேள்விப்பட்டேன் ஆனால் பார்க்க வில்லை வேறு ஒரு சேனலிலும் இப்படியான ஒரு ப்ரோக்ராம் நடக்கிறது இல்லையா? விஜய் டிவி? அர்ஜுன் என்று நினைக்கிறேன் அது வேறயோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மெதுவாக நகரும் படங்கள் பார்ப்பீர்கள் என்றால் ஹோம் தாராளமாக பார்க்கலாம். பலர் இதை ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்தார்கள், அந்த அளவு இல்லை என்று தோன்றியது.





      Delete
  5. QFR ஆமாம் அக்கா அசாத்தியமான ப்ரோக்ராம். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறேன். சுபஸ்ரீயின் ப்ரெசென்டேஷன் செம...அலுப்பாகவே இல்லை. அது போல கலைஞர்கள் அத்தனை பேரும் நேர்த்தியாக வாசிக்கிறார்கள் பாடுகிறார்கள். அபரிதமான உழைப்பு தெரிகிறது.

    நல்ல விம்ரசனம் பானுக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்களும், ஸ்ரீராமும், வெள்ளியன்று பாடல்களை அலசும் பொழுதே, சினிமா பாட்டில் இவ்வளவு விஷயமா? என்று வியப்பேன். சுபஸ்ரீ உங்களுக்கு அக்கா.

      Delete
  6. த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன் படம் என்றால் ரொம்ப ஆர்வத்துடன் பொறுமையாகப் பார்ப்பது பிடிக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. த்ரில்லர் மற்றும் எந்தப் போட்டி சீரியல்களையும், நான் முதல் பகுதி பார்த்த பிறகு, கடைசி பகுதி பார்த்த பிறகுதான் மீண்டும் முதலிலிருந்து பார்ப்பேன். கதைப் புத்தகங்களுக்கும் அதே கதிதான்

      Delete
    2. எனக்கும் இன்வஸ்டிகேஷன் படங்கள் பிடிக்கும்.

      Delete
    3. @நெல்லை: அடக்கடவுளே!!!

      Delete
  7. விமர்சித்த விதம் அழகாக செல்கிறது. வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  8. சுபஸ்ரீ ஒரு பேட்டியில் (பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர்?) அவர் முதலில் தொடங்கிய சப்தஸ்வரங்கள் பற்றிய கேள்வி வந்தப்ப, இப்போது நடத்தப்படும் ம்யூசிக் ரியாலிட்டி ஷோக்கள் குறித்து உரித்தார்!!!!!!! நல்ல பாயின்டாகத் தோன்றியது. இனி பழைய மாதிரி இசை சம்பந்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் வராது என்றும் சொல்லிவிட்டார்.

    கீதா

    ReplyDelete
  9. விமர்சனம் நன்று... ஆனால் இதில் எந்த படத்தையும் பார்க்கவில்லை...

    (தப்பித்த வைத்தமைக்கு நன்றி...!)

    ReplyDelete
  10. நடுநிலையான விமர்சனம்...சுருக்கமாகவும் மிகச் சரியாகவும்...வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி

    அருமையான பட விமர்சனங்கள். நான் எதுவும் இதுவரை பார்க்கவில்லை. குழந்தைகள் பார்ப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பார்க்க எனக்குத்தான் நேரமிருக்காது. தலைவி இந்த சனி, ஞாயிறுகளில் பார்க்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்...! அருமையான விமர்சனங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      Delete
  12. சுபஸ்ரீ அவர்களது QFR நிகழ்ச்சியை இரண்டு மூன்று மாதங்களாகத் தான் பார்த்து வருகின்றேன். அருமையான நிகழ்ச்சி..

    சமயங்களில் சில பாடல்களைப் பற்றி எனது எண்ணம் எதுவோ அதுவே அங்கும் பிரதிபலிக்கும்..

    கடுமையான உழைப்பில் மலர்கின்ற சிறப்பான இசை நிகழ்ச்சி ...

    ReplyDelete
    Replies
    1. தேடித்தேடி பாடல்களையும், பாடகர்களையும் அவர் அறிமுகப் படுத்தும் சிறப்பு கொண்டாடத் தக்கது. உங்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடித்திருப்பது மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்களா?

      Delete
  13. அன்புள்ள பானுமதி, நீங்கள் அனுப்பி புத்தகம், சுஜாதாவின் "ப்ரியா" வந்து சேர்ந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  14. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete