கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 6, 2021

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அழகு உண்டு அந்த பிராந்தியத்திற்கு என்று விசேஷமான பண்டிகைகள் உண்டு. அது வரும் சமயத்தில் அந்த இடத்தின்  பொலிவு அதிகமாகிவிடும். பொங்கல் என்றால் கிராமங்களில்தான் அதன் அழகை பார்க்க முடியும் நாங்கள் திருச்சியில் இருந்த வரை  தீபாவளி கடைத் தெருவை பார்ப்பதற்கென்றே ஒருமுறை சின்ன கடை வீதி பெரிய கடை வீதி எல்லாம் சுற்றி விட்டு வருவோம்.  சென்னையிலும் விண்டோ ஷாப்பிங் செய்யவே டி.நகர் சென்றிருக்கிறோம். ஊரே ஜொலி ஜொலிக்கும்.  ஓமானில் ரமதான் வருகிறது என்றால் அந்த ஊரின் தோற்றமே மாறிவிடும். ஒரு ஃபெஸ்டிவல் மூடு வந்து விடும். கடைகள் எல்லாம் இரவு பதினொன்றரை திறந்திருக்கும். பூங்காக்களும் அப்படியே. நிறைய பேர் இரவு பூங்காக்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்தி விட்டு மெல்ல வீடு திரும்புவார்கள். அதைப்போல இப்பொழுது இங்கு கனடாவில் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. அதன் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு



நாதன் பிலிப் ஸ்கொயர்(Nathan Phillips square) என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம்தான் டொரோண்டோவின் அதிகாரபூர்வ கிருஸ்துமஸ் மரம். 58 அடி  உயரமும்,, 300,000 விளக்குகளும், 500 அலங்கார அமைப்புகளும் கொண்டிருக்கிறது. இந்த மரம் நிறுவப்பட்ட பிறகுதான் மற்ற இடங்களில் கிருஸ்துமஸ் மரங்கள் நிறுவப்படுமாம். 








உறைந்திருக்கும் பனியில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்கள் அவுட் ஆஃப் 
ஃபோகஸில் தெரிகிறார்களா? 

பனிக்கட்டி சிற்பங்கள் 


ஈடன் சென்டர் என்னும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய கிருஸ்துமஸ் மரம். 


16 comments:

  1. அம்மாடி...  கொண்டாட்ட்ம்...  அவங்க ஊர் தீபாவளி.  நம்ம ஊரிலெல்லாம் தீபாவளியைவிட கார்த்திகை அலங்காரம் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //நம்ம ஊரிலெல்லாம் தீபாவளியைவிட கார்த்திகை அலங்காரம் நன்றாக இருக்கும்.//கடைவீதி ஜொலிப்பது தீபாவளி சமயத்தில் தானே?

      Delete
  2. அவர்கள் ஊரில் கிரிஸ்த்மஸ் என்பது செம கொண்டாட்டம். அலங்காரங்கள் பிரமிப்பாக இருக்கும். படங்கள் அந்த பிரமிப்பைச் சொல்கின்றன.

    நன்றாக இருக்கிறது

    கீதா

    ReplyDelete
  3. அங்கு ஸ்னோ வந்துவிட்டால் ஸ்கேட்டிங்க் விளையாடத் தொடங்கிவிடுவார்கள். படத்தில் தெரிகிறது, பானுக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்தந்த சூழலுக்கு ஏற்ப தம்மை தயார் செய்து கொண்டு விடுகிறோம்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. பெரிய கிறிஸ்துமஸ் மரம் அலங்கார விளக்குகளுடன் ஜொலிக்கிறது. தகவல்கள் படித்து தெரிந்து கொண்டேன். உறைபனியில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்கள் படத்தில் தெரிகிறது. அந்த விளையாட்டில் அங்குள்ளவர்கள் சிறப்பாக எளிதாக விளையாடுவார்கள். ஏனெனில் அங்குள்ள குளிர் பருவ மாற்றங்கள் அவர்களை பழக்கத்தில் எளிதாக்கி விடும். பனிக்கட்டி சிற்பங்கள் அழகாக உள்ளது. இறுதி படமும் சிகப்பு நிற அலங்கார விளக்குகளுடன் கண்களை பறிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பதிவையும் ஊன்றி படிப்பதோடு இல்லாமல், அவற்றினால் உள்ள அம்சங்களை குறிப்பிட்டு விமர்சனம் எழுதும் உங்கள் திறமை ஆச்சர்யமூட்டுவது.

      Delete
  5. என்னையும் மகள் நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றாள் . விளக்கு அலங்காரம் வீடுகளிலும் மிக அழகாய் இருக்கிறது.
    மகன் மகள் வீட்டிலும் அல்ங்காரம் செய்து இருக்கிறார்கள்.
    கார்த்திகை மாதம் நம் வீடுகளில் வாசலில் விளக்கு வைப்பது போல டிசம்பர் முதல் ஜனவரி வரை இந்த விளக்கு அலங்காரம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகை மாதம் நம் வீடுகளில் வாசலில் விளக்கு வைப்பது போல டிசம்பர் முதல் ஜனவரி வரை இந்த விளக்கு அலங்காரம் இருக்கும்.// கரெக்ட்!

      Delete
  6. நீங்கள் பார்த்த விளக்கு அலங்கார படங்கள் நன்றாக இருக்கிறது.
    உறைந்திருக்கும் பனியில் ஸ்கேட்டிங் விளையாடுவது தெரிகிறது.
    இந்த மாதம் அதுதான் அவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு.
    பனி சிற்பங்கள் நன்றாக இருக்கிறது.



    ReplyDelete
  7. Replies
    1. நன்றி டி.டி. நீங்கள் சமீபத்தில் எதுவும் பதிவிடவில்லையா?

      Delete
  8. எல்லாமே மிக அழகு. 2004 ஆம் ஆண்டில் தொடங்கிக் கடைசியாக 2019 வரை அம்பேரிக்காவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்து வருகிறேன். இதே போல் தான் விளக்கு அலங்காரங்கள் அங்கேயும் பார்த்திருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா. நேற்று என்னுடைய ஃபோன் என்னவோ பிரச்சினை செய்ததால் டி.டி.க்கும் உங்களுக்கும் பதிலளிக்க இயலவில்லை.

      Delete
  9. விளக்கு அலங்காரங்கள் .மிகப் பிரமாதம் பானு.
    இங்கேயூம் 4 மணிக்கு இருட்டிவிடுகிறது. பிறகு எல்லா வீடுகளிலும்

    வண்ண அலங்காரங்கள் தான். முன்பெல்லாம்
    பதிவு போடுவேன். இப்பொழுது
    பார்த்து ரசிப்பதோடு முடிந்து விடுகிறது.

    நல்ல படங்களுக்கு நன்றிமா.

    ReplyDelete