இந்த பதிவில் இரண்டு காணொளிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்னும் பழமொழிக்கான விளக்கம். மற்றது என் மாமா மகன் நடித்திருக்கும் குறும்படம்.
https://www.youtube.com/watch?v=GzjQ9_wSdWQ&t=16s
மேற்கண்ட காணொளியில் நான் கன்னம் என்பது கடப்பாரை போல ஒரு ஆயுதம் என்று கூறியிருந்தேன். எங்கள் உறவினரான திருமதி.நிர்மலா கல்யாணராமன் அவர்கள் கன்னம் என்பது உறுதியான மூங்கில் கழி, அதன் கீழ் பாகத்தில் ரசாயன கலவைகள் கலந்த துணி கட்டப்பட்டிருக்கும். அந்தக் காலங்களில் வீடுகள் பெரும்பாலும் மண், சுண்ணாம்பு, காறை போன்ற கரையக் கூடிய பொருட்களால் தான் கட்டப்பட்டிருக்கும் என்பதால் ரசாயன கலவை கொண்ட கன்னத்தால் சுவரை சத்தமில்லாமல் கரைத்துவிட முடியும். என்னும் விளக்கத்தை அளித்திருந்தார்.
அடுத்து பிராயச்சித்தம் என்னும் குறும்படத்தை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
https://www.youtube.com/watch?v=bpgvrRhmKFU
பிராயச்சித்தம் குறும்ப(பா)டம் அருமை...
ReplyDeleteநன்றி டி.டி. சம்பந்தபடாடவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
Deleteஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு
ReplyDeleteதெள்ளியர் ஆதலும் வேறு
திரு- செல்வமுறை வேறு...
தெள்ளியர் - தெளிந்த அறிவினை உடையராதல் வேறு...
பெண்களை ஆண்களுடன் ஒப்பிடுவது எந்தளவு பேதைமையோ, அந்தளவு மரங்களை மனிதனை ஒப்பிடுவது...!
ReplyDeleteமனிதனைX
Deleteமனிதனோடு
மீள் வருகைக்கும் நன்றி.
Deleteகன்னம் வைத்தல் - நல்ல தகவல். வேறு மாதிரியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்னவென்று கேட்காதீர்கள். நினைவில்லை!
ReplyDelete//அது என்னவென்று கேட்காதீர்கள். நினைவில்லை!// ஹாஹா!
Deleteவிடியோவில் பின்னால் சுவரில்,
ReplyDeleteஎன்ன, டப்பர்வேர் டப்பா மூடிகளைக் கொண்டு அலங்காரமா? புதுமையாக இருக்கிறது.
இல்லை, டிஸ்போஸபில் தட்டுகளை கொண்டு செய்திருக்கிறாள் என் மகள்.
Deleteம்ம்ம்ம், எனக்கென்னவோ படிப்பதில்/படித்துத் தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் இந்த யூ ட்யூப் மூலம் கிடைப்பதில்லை. ஆகவே மெதுவா வரேன். பார்க்கலை எதுவும்.
ReplyDeleteTake your time.
Deleteபானுக்கா பழமொழி விளக்கம் அருமை. கன்னம் - நல்ல விளக்கம். தகவல்.
ReplyDeleteகீதா
பின்பக்கம் அலங்காரம் ரொம்ப நன்றாக இருக்கிறது. அன்றே சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் மீண்டும் இங்கும்
Deleteகீதா
அலங்காரம் செய்த சுபாவுக்குப் பாராட்டுகள்! நேர்த்தியான ரசனையான வொர்க்.
Deleteகீதா
நன்றி கீதா. சுபாவிடம் அன்றே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன்.
Deleteஅக்கா குறும்படம் நல்லதொரு கருத்து. நன்றாக எடுத்திருக்காங்க. அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!
ReplyDeleteஎனக்குத் தோன்றியவை - நல்ல கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக வெளிப்படுத்தியிருக்கலாம் அதற்கான சீன்ஸ் கொஞ்சம் எடுத்து இதில் இருக்கும் சில வேண்டாத சீன்ஸ் குப் பதிலா அதை வைத்திருக்கலாம். மற்றொன்று படம் முடிவது பேத்திக்கு தாத்தா சொல்வது போல...பேத்தி மரக்கன்று நடுவதை கடைசி சீனாக வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் கேப்டிவாக இருந்திருக்குமோ? எனக்குப் படம் எடுத்தல் பற்றி அத்தனை தெரியாது அக்கா. ஜஸ்ட் மனதில் தோன்றியது.
கீதா
குறும்படத்திற்கு யுட்யூபிலும் இந்தக் கருத்தைப் பதிந்துள்ளேன் பானுக்கா.
ReplyDeleteகீதா
பார்த்தேன்.
Deleteபழமொழிக்கான விளக்கம் அருமை. இதுவரை கேட்டிராத விளக்கம்.
ReplyDeleteகுறும்படம் நல்ல ஆக்கம். நல்லதொரு கருத்தை சில நொடிகளில் மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார்கள். 5 நிமிடம் 36 நொடிக்குள் முன்னும் பின்னும் சிலவை சென்றுவிட இடைப்பட்ட நிமிடங்களுக்குள் மிக நன்றாகவே சொல்லியிருக்கிறார்கள். எனவே குறைகள் சொல்வது ஆகாதுதான். படக்குழுவினருக்கும் அழகாக நடித்திருக்கும் உங்கள் மாமா மகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
துளசிதரன்
பெரியவர் மரத்தைத் தொட்டுத் தடவிப் பார்க்கும் இடமும், மரத்துண்டுக்களை வெட்டும் இடமும் அவர் மனதில் தோன்ற்றும் குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. படம் சட்டென்று முடிவது போல் உள்ளது. ஆனால் இத்தனை நிமிடங்களு
நன்றி துளசிதரன்.
ReplyDelete//படம் சட்டென்று முடிவது போல் உள்ளது// எனக்கும் அப்படி தோன்றியது.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. தாங்கள் "கப்பல் கவிழ்ந்தாலும்" என்ற பழமொழிக்கு தந்த விளக்கங்கள் பொருத்தமானவை. நன்கு தெளிவாக கன்னக்கோல் வைப்பது குறித்தும், அதற்கு எப்படி கப்பலோடு இணைப்பு ஏற்பட்டது என்ற சரியான விளக்கங்கள் குறித்தும் பேசி உள்ளீர்கள். உங்கள் பேச்சை மிகவும் ரசித்தேன்.
பிராயச்சித்தம் குறும்படம் அருமையாக உள்ளது. பார்த்து ரசித்தேன். தங்கள் மாமா மகன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா.
ReplyDelete