கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 28, 2022

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம் 

சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது. 

சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?

சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது. 

தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

15 comments:

 1. சுழல் பார்க்கவில்லையா...?

  ReplyDelete
  Replies
  1. பார்த்து விட்டேன். அதுவும் நன்றாகவே இருந்தது

   Delete
 2. வெப் தொடர்கள் பரவாயில்லையே அதன் கதைகள்...பார்க்க வாய்ப்பில்லை எனக்கு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எல்லா வெப் சீரியல்களும் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. Fingertip, சுழல் போன்றவை highly professional.

   Delete
 3. நான் அந்தப் பக்கமே போவதில்லை. அதோடு படங்கள் பார்த்தும் சுமார் 3 வருடங்கள், அம்பேரிக்காவில் பொண்ணு வீட்டில் இருக்கும்போது பார்த்தவை தான் வெப் சீரீஸ்களும், திரைப்படங்களும்.

  ReplyDelete
 4. நானும் பார்த்தேன்.  முஹல் சீஸன் கொஞ்சம் துண்டு துண்டாய் இருந்தது.  குறிப்பக முதல் எபிசோடில் வரும் டாக்டரின் செல்பி மனைவி என்னவாகிறாள்?  இரண்டாவது சீஸனில் வரும் நடிகை அவள்தானா?  நியாயத்தைத் தட்டிக் கேட்டதால் தவறான தகவல் பரப்பப்பட்டு அவமானப்படும் பெரியவர் பாத்திரம் அருமை.  எக்லிப்ஸ் என்று பயமுறுத்தி எல்லோர் சேக்ட்டாப், செல்போனில் எளிதாக நுழைவதாகக் காட்டுவது பயமுறுத்தியது.  என் செல்போனை எடுத்து தலையணைக்கடியில் வைத்து விட்டேன்!!  பிரசன்னா வேஸ்ட்.  முடிவில் வரும் ஒரு இங்கு மூன்றாவது சீஸனுக்கு வழி சொல்கிறது.  ஒன்றுமில்லாமலேயே சீரிஸ் எடுக்கிறார்கள்!  சூழல் பார்க்க வேண்டும்.

  காலை இரண்டு கமெண்ட்ஸ் போட்டு (அதுவும் இரண்டுமுறை)  காணாமல் போனது.  இது வருமா, தெரியாது!  ஆனால் இந்தப் பதிவுக்கு என் கமண்ட்ஸோடு மற்றவர்கள் கமெண்ட்ஸ் மட்டும் என் மெயிலுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. Media influencer ஆக ஆசைப் படும் மனைவி(சுனைனா) கணவனை விட்டு விட்டு பாலோடு சென்று விடுகிறாளே. மீண்டும் பாருங்கள். அவளுக்கும் நடிகைக்கும் சம்பந்தம் இல்லை.

   Delete
  2. *பாஸோடு

   Delete
  3. //எல்லோர் சேக்ட்டாப், செல்போனில் எளிதாக நுழைவதாகக் காட்டுவது பயமுறுத்தியது.// என்னையும் தான்.

   Delete
  4. // பாஸோடு சென்று விடுகிறாளே.//

   அதெல்லாம் பார்த்தேன்.  சீரிஸ் என்பதால் அதை முடிவாக நினைக்கவில்லை என்பதோடு அடுத்த பகுதியிலும், முதல் சீஸனின் கடைசி பகுதியிலும் அவள் காணவனும், அவளும் மீண்டும் தலைகாட்டுகிறார்கள்.  அது ஒரு சரியான முடிவில்லாமல் நிற்கிறது!

   Delete
  5. அது சரி, பதில் அளித்திருப்பது நீங்கள்தானா?  வேறு யாராவதா?!

   Delete
 5. நின்று விட்டது என் கமெண்ட் என்று தோன்றுகிறது! முதல் வரியில் முஹல் இல்லை, முதல்!

  ReplyDelete
 6. சூழல் இல்லை, சுழல்.

  ReplyDelete
 7. கடவுளே நான் உங்களுக்கு போட்ட பதில் எங்கே? காக்கா உஷ்..ஆ?

  ReplyDelete