கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, May 1, 2023

ஆம் பன்னா

 ஆம் பன்னா

டில்லி, உ.பி. ஸ்பெஷலான மாங்காய் சர்பத். செய்முறை பார்க்கலாமா?

புளிப்பு மாங்காய் - 1

புதினா இலைகள் - சிறிதளவு.

சர்க்கரை அல்லது

வெல்ல சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன் 



*மாங்காயை அடுப்பில் சுட்டுக் கொள்ளவும். 

சுட்ட மாங்காயில் தோலை உரித்து விட்டு செதில் செதிலாக சீவிக் கொள்ளவும். 

பின்னர் அதில் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். 

அந்த கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றி விட்டு அதில் வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை போட்டு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

தேவையான பொழுது 1/4 டம்பளருக்கும் குறைவாக மாங்காய் கூழோடு குளிர்ந்த நீர் சேர்த்து கலந்தால் சுவையான ஆம் பன்னா வை அருந்தலாம்.



*சுட்ட வாசனை பிடிக்காதவர்கள் மாங்காயின் தோலை சீவி, செதில் செதிலாக நறுக்கி வேகவைத்து அரைத்துக் கொள்ளலாம்.





15 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஆம் பன்னா செய்முறை படங்கள் நன்றாக உள்ளது. (நான் அவசரத்தில் ஆம் மன்னா என்று படித்து விட்டேன் ஹா ஹா ஹா.) மாம்பழ ஜூஸ் நினைத்தாலே, பார்த்தாலே நாவூறுகிறது. ஆனால் சாப்பிட முடியாதே...! முக்கனிகளுக்குமே நான் விரோதி. வாழையை மட்டும் கொஞ்ச(சு)ம் நட்பாக வைத்துக் கொண்டிருக்கிறேன். பகிர்வு நன்றாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. // (நான் அவசரத்தில் ஆம் மன்னா என்று படித்து விட்டேன் ஹா ஹா ஹா.) //

      ஹா..  ஹா..  ஹா...  யாரோ "இது பன்னாவா?" என்று கேட்டது போல பெயர்.  "ஆம் பன்னா"

      Delete
    2. /யாரோ "இது பன்னாவா?" என்று கேட்டது போல பெயர். "ஆம் பன்னா"/

      ஆம்.. இப்படியும் சொல்லலாம். :)) நன்றி.

      Delete
    3. //(நான் அவசரத்தில் ஆம் மன்னா என்று படித்து விட்டேன் ஹா ஹா ஹா.)// :)))
      இது மாம்பழ ஜூஸ் இல்லையே, மாங்காய் ஜூஸ்தானே? அதனால் நீங்கள் தாராளமாக பருகலாம். சர்க்கரைக்கு(ஜீனி)பதில் வெல்ல சர்க்கரையோ, பனை வெல்லமோ சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி

      Delete
  2. ஆம் பன்னா மிகவும் ருசியான ஒரு பானம். இங்கே நிறையவே உண்டு. செய்முறை குறிப்பு நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. டில்லியிலிருந்து வருபவர்களிடம் இதை வாங்கி வரும்படி சொல்லிக் கொண்டிருந்தேன்.

      Delete
  3. ஒரு ஸ்பூன் காரப்பொடி சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது!

    ReplyDelete
    Replies
    1. காரப் பொடிக்கு பதிலாக கொஞ்சம் இஞ்சி தட்டி போடலாம், அல்லது அரைக்கும் பொழுது இஞ்சியை சேர்த்து அரைக்கலாம். நன்றி

      Delete
  4. சுலபமான செய்முறை

    ReplyDelete
    Replies
    1. ஆம். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

      Delete
  5. Super Banu. எளிதாகவும் பார்க்கவே அருமையாகவும் இருக்கிறது👌👏

    ReplyDelete
    Replies
    1. ஆம், ஆம் பன்னா சுலபம்தான். நன்றி

      Delete
  6. செய்தும் பார்த்து விடலாம் நன்றி.🙏

    ReplyDelete