கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 3, 2025

ஆப்பிள் ஃபெஸ்டிவெலும் ஹாலோவினும்

 ஆப்பிள் பெஸ்டிவலும் ஹாலோவினும்

Apples straight from the farms

ஃபால் எனப்படும் இலையுதிர் காலம்தான் இங்கே(கனடாவில்) அறுவடைக் காலம். ஆப்பிள், மஞ்சள் பூசணி என்னும் பரங்கிக்காய், சோளம் போன்றவை அறுவடை செய்யப்படும். அதை ஒட்டிதான் thanks giving day வருகிறது. நம்முடைய அறுவடைத் திருநாளான பொங்கலைப் போல. நாம்  காணும் பொங்கலன்று உறவினர்களைப் பார்க்கச் செல்வது போல இங்கும் தாங்க்ஸ் கிவிங் டே அன்று தங்கள் உறவினர்களை காணச் செல்கிறார்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிட்கப்பட்டுள்ள பரங்கிக் காய்கள்

பரங்கிக்காய்கள் ஹாலோயின் கொண்டாட்டத்திற்கு மிகவும் அவசியம். வீட்டு வாசல் படிகளில் வைக்கிறார்கள். ஆப்பிள்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருள்களை 'ஆப்பிள் ஃபெஸ்டிவெல்' என்று கொண்டாடி சந்தைப் படுத்துகிறார்கள். ஏப்ரலில் மேப்பில் ஃபெஸ்டிவெல் போல, அக்டோபரில் ஆப்பிள் ஃபெஸ்டிவெல்.

மேப்பில் ஃபெஸ்டிவெல் போலவே தெருவை அடைத்து கடைகள். புகைப்படங்களில் பாருங்கள்:









இதையடுத்து எல்லா வீடுகளும் ஹாலோயினுக்குத் தயாராகின. படிகளில் பரங்கிக்காய், ஜன்னலில் தொங்கும் கருப்புப் பூனை, பால்கனியிலும்,மனத்திலும் தொங்கும் எலும்பு கூடு பொம்மைகள், ஒட்டடை போன்ற அமைப்பு. ஹாலோவின் அன்று விதம் விதமான வேடங்களில் குழந்தைகள் எல்லா வீடுகளுக்கும் செல்கிறார்கள்.  அங்கு அவர்களுக்கு சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளைத் தருகிறார்கள். பேய், போல வேடம் தரித்து பயமுறுத்தவும் செய்வார்களாம். இதை Trick or treat என்கிறர்கள். இந்தப் பழக்கம் இப்போது நம் ஊரிலும் வந்து விட்டது. 
ஹாலோவின் புகைப்படங்கள் கீழே:






கருப்பு பூனையாக என் பேத்தி
 

அடுத்தது கிருஸ்துமஸ் அலங்காரங்கள் தொடங்கும்.

 

25 comments:

  1. இந்தப் பதிவில் என்னை மிகவும் கவர்ந்தது ஆப்பிள் கூடைகள்தாம். என்ன விலை என்று சொல்லவில்லையே

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ ஆப்பிள் பிடிப்பதில்லை.  ஆப்பிள் ஜூஸ் என்று படங்களில் - குறிப்பாக கல்யாணபபரிசு படத்தில் - பெரிதாக சொல்லப்பட்டு, ஒருநாள் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் முதன் முதலாக ஆப்பிள் ஜூஸ் குடித்தபோது, என்னடா இது..  இதையா இவ்வளவு சிறப்பித்து சொல்கிறார்கள் என்று இருந்தது!

      Delete
    2. எனக்கு ஆப்பிள் பிடிக்கும். நீங்க சொல்லும் ஹிமாலயன் ஆப்பிள் ஜூஸும் (இரயில்வே ஸ்டேஷன்) எனக்குப் பிடிக்கும். ஆனால் ஜூஸைவிட பழம் மிக உயர்ந்தது. என் அடுத்த aim, ஆப்பிள் மரங்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, ஆப்பிள்களைப் பறித்துச் சாப்பிடணும்.

      Delete
    3. Bhanumathy VenkateswaranNovember 4, 2025 at 4:09 AM

      விலை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். அன்று ஒரு நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது, 10 டாலருக்கு ஆப்பிள் வாங்கினார்கள். என் மாப்பிள்ளை அதை விட குறைந்த விலையில் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் என்றார்.

      Delete
    4. @ஸ்ரீராம்: எனக்கும் ஆப்பிள் அவ்வளவாக பிடிக்காது. என்ன இதைப் போய் பெரிதாக சொல்கிறார்களே என்று தோன்றும். இங்கு கிடைக்கும் ஆப்பிள்கள் நறுக் நறுக்கென்று(crisp) நன்றாக இருக்கின்றன. எனக்கு மாவு ஆப்பிள் பிடிக்காது.
      இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒருவர் இங்கு மாவு ஆப்பிள் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார். லோகோ பின்ன ருசி!

      Delete
  2. சிறிய பறங்கிக்காய்களை (மேற்கத்தைய) இப்போதுதான் பார்க்கிறேன். சல்லிசாக சீசனில் கிடைக்குதா? பறங்கி பச்சடி, அல்வா செய்வீர்களா? இல்லை நம்மூரில் பூசனிக்காய்களை வீண்டிப்பதுபோல பறங்கிகளும் வீண்டிக்கப்படுமா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை இந்த சீசனில் அவை சல்லிஸாகக் கிடைக்கும். குவித்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் பம்ப்கின் பட்டர், ஜாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

      கீதா

      Delete
    2. பறங்கிக் காயில் எய்தெர் எரிசேரி அல்லது பொரியல்தான். பச்சடி அல்லது அல்வாவெல்லாம் யாருக்கும் பிடிப்பதில்லை.

      Delete
  3. ஏப்ரலில் ஏப்பில் பெஸ்டிவல் இல்லையா? அக்டோபரில் மட்டும் ஆப்பிள் பெஸ்டிவல்...!!! :))

    ReplyDelete
  4. ஊரே விழாக்கோலம் கொண்டிருப்பது வியப்பு.  அதுவும் கடைகளில் எல்லாம் மேஜர் ஐட்டங்களாக இதுதான் இருக்கும் போல..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்... பெங்களூரில் பூசனிக்காய்கள், வாழை மரக்கன்று என்று நிற்க இடமில்லாமல் எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கில் நிறைந்திருக்கும். இதுபோல பொங்கல் சீசனிலும்.

      Delete
  5. விவரங்களும் படங்களும் சுவாரஸ்யம்.  பரங்கிதான் முக்கியம் என்பது தகவல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. அக்கா படங்களும் விவரங்களும் சூப்பர். படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கின்றன.

    இங்கு ஷிம்லா மனாலியில் ஆப்பிள் ஃப்ரெஸ்டிவெல் கொண்டாடுவார்கள் ரொம்ப நன்றாக இருக்கும். பாரம்பரிய நடனம் எல்லாம் இருக்கும். ஒரே ஒரு முறை பார்த்து ரசித்து ஆப்பிளில் விதம் விதமாகச் செய்தவற்றை ஒரு சில ருசித்தும் பார்த்ததுண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வீடியோவும் எடுத்தேன், நீளம் அதிகம் என்பதால் பகிர முடியவில்லை.

      Delete
  7. பரங்கிக்காயில் பம்ப்கின் பட்டர் என்று அவங்க செய்து வைத்துக் கொண்டுவிடுவார்கள், வருடம் முழுவதற்கும். அதைக் கற்றுக் கொண்டு நான் வீட்டிலும் முன்னர் செய்ததுண்டு,

    இந்த நிகழ்வுகள் எல்லாம் அங்கு ஒரே கோலாகலமாக இருக்கும். ஊரே கோலாகலம்தான் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்த மக்கள் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு எல்லாவற்றையும் செய்வார்கள்.

    இங்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல் பொங்கல் கொண்டாடப்படுவது போன்றுதான் அங்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பம்ப்கின் பட்டர், கேள்விப்பட்டதில்லை. மகளிடம் கேட்க வேண்டும்.

      Delete
  8. பேத்தி வேஷம் சூப்பர்!

    கீதா

    ReplyDelete
  9. அருமையான பதிவு. ஹாலோவின் சமயம் கடைத்ததெரு படங்கள் மற்றும் பேத்தியின் பூனை வேடத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
  10. ஹாலோவீன், தாங்க்ஸ் கிவிங் டே போன்ற கொண்டாட்டங்கள் பார்த்திருக்கேன். மருமகள், பெண் எல்லாம் வாசலில் ஒரு கூடையை வைத்து அதில் சாக்லேட், கான்டீஸ் என நிரப்பி வைத்துவிடுவார்கள். குழந்தைகள் எடுத்துச் செல்லும். ஒரு சில குழந்தைகள் கதவைத் தட்டி அழைத்துத் தாங்கள் யார் எனக் கண்டுபிடிக்கச் சொல்லும். படம் எடுக்கலாம் என்றால் மருமகளும் சரி, பெண்ணும் சரி கூடாது எனச் சொல்லிடுவாங்க. இங்கே கடைகளின் படங்கள் எல்லாம் அருமை. அம்பேரிக்காவிலும் காஸ்ட்கோவிலிருந்து ஹோம் டெப்போ. வால்மார்ட் இன்னும் பெரிய மால்களில் எல்லாம் இவற்றைக் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இங்கே தங்கள் குழந்தைகளை மற்றவர்கள் புகைப்படம் எடுப்பதை விரும்பவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள். ஒரு வீட்டு வாசலில் விருட்சிப் பூ பெரியதாக, அழகாக பூத்திருந்தது. அதை அருகில் சென்று புகைபடம் எடுக்க முயன்றபோது என் மகள் தடுத்து விட்டாள்.

      Delete
  11. குட்டிக்குஞ்சுலுவுக்குப் பொங்கலை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே என்றே சொல்லிக் கொடுத்திருக்கேன். ஆனால் இங்கே ஒண்ணும் கொண்டாட்டங்கள் இல்லாததாலும் அக்கம்பக்கம் இந்தியர்கள் இருப்பதாய்த் தெரியாததாலும் அதுக்கு மறந்து போயிடுமோனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. பேத்தியின் வேஷம் அருமை. சின்னவளா? பெரியவளா? கு.கு. பட்டர்ஃப்ளை வேஷம் போட்டுக்கொண்டு அதன் விங்க்ஸைக் கழட்டாமல் இரண்டு நாட்கள் அப்படியே வைத்துக் கொண்டு இருந்தது. எப்படித்தான் படுத்துண்டதோனு நினைச்சேன்.

    ReplyDelete
  13. சின்னவள்தான்.

    ReplyDelete