கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 14, 2019

போண்டாவில் கரைந்த பணம்

போண்டாவில் கரைந்த பணம் 

Image result for bajji bonda maduva vidhana


இன்று திங்கற கிழமையாக இருப்பதால் திங்கற விஷயத்தை வைத்து இரண்டு நகைச்சுவைகள். இரண்டுமே நிஜமாக நடந்தவை.

என் அண்ணாவும் அவரோடு பணி புரிந்த சில நண்பர்களும் ஒன்றாக தங்கி இருந்தார்கள். அதில் விஜயகுமார் என்னும் ஒரு நண்பர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறையில் இருக்கும் மற்ற சில நண்பர்களிடம் அவ்வப்பொழுது கை மாற்றாக பணம் வாங்கிக் கொள்வாராம். தினசரி அலுவலகத்திலிருந்து வரும்பொழுது பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுப்பாராம், அதிலும் அவர் யாரிடம் கைமாற்று வாங்கியிருக்கிறாரோ அவரை வற்புறுத்தி எடுத்துக் கொள்ளச் சொல்வாராம். 

இப்படி மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. விஜயகுமார் பணத்தை திருப்பித் தருவதாக இல்லை. கடன் கொடுத்த நண்பர் மெதுவாக ஒருநாள், "விஜய் நீங்கள் கூட எனக்கு 30 ரியால் பணம் தர வேண்டும், ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டதும் விஜயகுமார்,
"என்னது 30 ரியாலா?" தினமும் பஜ்ஜி, போண்டாவெல்லாம் சாப்பிட்டீர்களே? எப்படி சாப்பிட்டீர்கள்? அந்த 30 ரியாலில்தான்" என்றதும் கடன் கொடுத்த நண்பர் ஆடிப்போய் விட்டாராம். 

இதுவும் மஸ்கட்டில் இருந்த ஒரு நண்பர் கூறியதுதான். அவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு பம்பாயில் இருந்த தன் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி சி.ஏ.படித்துக்கொண்டிருந்தாராம். அவருடைய இன்னொரு சகோதரரும் பெரிய அண்ணா வீட்டிலிருந்துகொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஊரிலிருந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக பம்பாய் வந்த உறவினர் பையன் ஒருவன் இவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறான்.  



வேலைக்குச்சென்று கொண்டிருந்த நண்பரின் அண்ணி, சகோதரர்கள் மூன்று பேர், ஊரிலிருந்து வந்த பையன் ஆகிய எல்லோருக்குமாக ஒன்பது அடைகள் வார்த்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு இவர்களிடமும் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டாராம். அவரைத் தொடர்ந்து ஊரிலிருந்து வந்த பையனும் சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்று விட்டானாம். இவர்கள் குளித்து விட்டு சாப்பிடலாம் என்று பாத்திரத்தை திறந்தால், காலியாக இருந்ததாம். சரி, அண்ணி மறந்து விட்டார்  போலிருக்கிறது என்று இவர்களும் கிளம்பி விட்டார்களாம்.

மாலையில் எல்லோரும் வீடு திரும்பிய பின் அந்த விருந்தினர் பையனை இண்டர்வியூ பற்றி விசாரித்து விட்டு, " காலையில் எங்கு சாப்பிட்டாய்?" என்று கேட்டதும், "இங்குதான், அடை வார்த்து வைத்திருந்தார்களே?" என்று கூறி விட்டு, தொடர்ந்து,"ஆனால் பிரேக்ஃ பாஸ்டுக்கு ஒன்பது அடை கொஞ்சம் அதிகம்தான்.." என்றானாம், இவர்களுக்குத்தான் அதை ஜீரணம் செய்வது கஷ்டமாக இருந்ததாம்.   

படங்கள்: நன்றி கூகுள் 

31 comments:

  1. போண்டா நண்பரது செயல்.

    "ஊரான்விட்டு ரியால் எடுத்து உம்மாவுக்கு பாத்தியா ஓதினானாம்"

    என்ற மஸ்கட் பழமொழியை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இப்படி ஒரு பழமொழி நிஜமாகவே இருக்கிறதா?

      Delete
  2. இப்படியுமா இருக்கிறார்கள்?...

    அடை எல்லாவற்றையும் தின்று தீர்த்தது ஒருபுறம் இருக்கட்டும்...

    வாங்கிய கடனுக்கு போண்டா கொடுத்துக் கழித்தது அநியாயம்....

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஓவர் ஸ்மார்ட்டாகவும், ஓவர் ஜீரண சக்தியோடும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வருகைக்கு நன்றி!

      Delete
  3. சிரிக்க வைத்த செய்திகள்....

    ReplyDelete
    Replies
    1. நிஜமாக நடந்தது என்பதால் வியப்பும் கூட இல்லையா?

      Delete
  4. அடை சாப்பிட்ட பையன் ரொம்ப புத்திசாலி போலிருக்கிறதே.. கண்டிப்பாக இண்டர்வியூவில் பாஸ் செய்திருப்பான்.

    கடனுக்கு 'போண்டா' என்றதும் எனக்கு எங்க ஊரில் நடந்த பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

    நான் எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த தங்குமிடத்தில் (10 ஃப்ளாட் அலுவலகத்தை ஒட்டியே இருக்கும்) எல்லா பேச்சலர்களும் தங்குவதோடு நானும் தங்கியிருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃப்ளாட். ரெண்டு பேருக்கு காமன் கிச்சன். அந்த மாதிரி அமைப்பு அது. முதல் தளத்தில் என்ன வாங்கிவந்தாலும், அதனை எல்லோரும் பகிர்ந்துகொண்டு, அவரவர் கணக்கில் எழுதிடுவாங்க. நான் பொதுவா அங்க போகமாட்டேன். நான் வெஜ்ஜும் சமைப்பார்கள் என்று. என்னை ஒரு தடவை கூப்பிட்டு தர்பூசனி ஒரு துண்டு எடுத்துக்கச் சொன்னார்கள். எனக்கு அது பிடிக்காது என்று சொன்னேன். வற்புறுத்தி ஒரு சின்ன பீஸ் கைல கொடுத்துட்டாங்க. பிறகு என் அக்கவுண்டில் 70 ருபாய் தரணும்னு எழுதிட்டாங்க.

    என் ஆபீசில் வேலை பார்த்தவனை, அவனுடைய சீனியர் ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்வாராம். ரொம்ப வற்புறுத்தி அவனையும் ஏதாவது சாப்பிடச் சொல்லிவிட்டு, அவரே பணம் கொடுப்பாராம். அவனுக்கு தேவையில்லாமல் தன்னைக் கூப்பிட்டுச் சென்று கொஞ்சமாவது சாப்பிடச் சொல்வதும், பிறகு அவரே பணம் கொடுப்பதும் ரொம்ப சங்கடமாகத் தெரிந்ததாம். ரெண்டு மாதம் கழித்து அவர், அவனிடம், 'இதுவரை நாம சாப்பிட்டது இவ்வளவு. அதில் பாதி நீ இவ்வளவு தரணும்'னு சொன்னபோது அவனுக்கு ஷாக்கிங்காக இருந்ததாம். வேறு வழி.. பணத்தை (மனதில் அழுதுகொண்டே) கொடுத்தானாம்.

    ReplyDelete
    Replies
    1. என்னது தர்பூஸ் ஒரு துண்டு கொடுத்துட்டு ஷேர்ல சேர்த்துட்டாங்களா? கெட்ட மக்களா இருப்பாங்க போலிருக்கே!

      Delete
    2. என்னமாதிரி மனிதர்களை நாம் சந்திக்கிறோம்!! வருகைக்கு நன்றி நெ.த.

      Delete
  5. சுவாரஸ்யமான நிகழ்வுதான்.பதிவை இரசித்தோம்.வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  6. //(பெயர் மாற்றப்பட்டுள்ளது) //

    மாற்றாமல் இருந்தால் மட்டும் எங்களுக்குத் தெரியப் போகிறதா என்ன!!!

    ReplyDelete
  7. போண்டாக்காரர் விவரமான ஆள்தான் போல! அடுத்த முறை அவர் யாரிடமும் பணம் கடன் வாங்க முடியுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. அதற்கெல்லாம் அவர் வேறு ஆள் பார்த்துவிடுவார். ஆனால் அவரிடமிருந்து ஐந்து பைசா கறக்க முடியாது.

      Delete
  8. ஒன்பது அடைகளை ஒரே நபர் சாப்பிட்டாரா? வயிறு என்னத்துக்காகும்!!

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை அவர்கள் வீட்டு அடை, கனமாக இல்லாமல் மெலிதாக அடைதோசை போல இருந்ததோ என்னவோ? எப்படி இருந்தாலும் ஒன்பதையும் ஒருவரே சாப்பிடுவது என்பது அதிகம்தான்.

      Delete
  9. சாப்பாடு விஷயத்தில் இப்படி எல்லாம் ஏமாத்துவாங்கனு இப்போத் தான் படிக்கிறேன். பானுமதி, நெல்லை ஆகியோரின் அனுபவங்கள் விசித்திரமாக இருக்கின்றன. என்றாலும் நடந்ததைத் தானே சொல்கின்றனர். ஒன்பது அடை தின்றவருக்கு மத்தவங்க சாப்பிட்டாங்களா எனக் கேட்கத் தோன்றவில்லை. அதோடு நேர்முகத் தேர்வுக்குப் போயிட்டும் வந்திருக்கார். வயிறு பேசாமல் இருந்ததே அவர் அதிர்ஷ்டம், அல்லது அவர் குறைந்தது ஒன்பது அடை சாப்பிடுபவராக இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்கடைசியாக சொல்லியிருப்பதுதான் சரி.

      Delete
  10. எங்க அனுபவமே வேறே. சமைக்க முடியாத நாட்களில் நாங்க நாலுபேரும் பசியோடு உட்கார்ந்திருக்கப் பக்கத்து அறையில் எல்லோரும் ஓட்டலில் இருந்து தினுசு தினுசாக வாங்கி வந்து விமரிசனம் செய்து கொண்டே சாப்பிடுவாங்க! உங்களுக்கும் வாங்கி வரோம்னு பேச்சுக்குக் கூடச் சொல்ல மாட்டாங்க! குழந்தைங்களைச் சாப்பிடுங்கனும் சொல்ல மாட்டாங்க! பின்னர் சமைச்சுச் சாப்பாடு போடும்போது பசியே முத்திப் போயிடும். சாப்பாடு வேண்டி இருக்காது! மனசுக்கு வருத்தமாகவும் கஷ்டமாகவும் இருக்கும். அதுவும் கடந்து வந்தாச்சு!

    ReplyDelete
    Replies
    1. அடடா! கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.

      Delete
  11. கடனுக்கு போண்டா அட்ஜஸ்ட்மெண்டா :) இப்படி ஒருவர் தூரத்து உறவு கடன் வாங்குவார் ஆனா வார வாரம் எங்க வீட்டுக்கு கோயம்பேடு மார்கெட்லருந்து வெஜிடபிள்ஸ் அரைமூட்டைக்கு குறையாம கொண்டாந்து கொடுப்ப்பர் ..ஆரம்பத்தில் நல்ல இருந்தது பிறகு கசந்தது .காரணம் அது அவர் மாமூல் வாங்கிய பொருட்களாம் .பிறகு இதை நிறுத்த வழி தெரியாம அம்மா பணம் கடன் இல்லைனு சொல்ல ஆரம்பிச்சதும் வெஜிடபிள்ஸ் வரவும் நின்னுபோச்சு :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். கருத்துக்கு நன்றி!

      Delete
  12. ஒன்பது அடையா !!!! என்னால் அரை கூட சாப்பிட முடியாதே .9 யும் சாப்பிட்டு இவர் எப்படி இன்டெர்வியூ போனார்னு ஆச்சர்யமா யிருக்கு ..

    ReplyDelete
  13. இங்கே வெளிநாடுகளில் ஒரு முறை இருக்கு :) நம்ம ஊரில் ஹோட்டலுக்கு இப்போ எக்ஸ்சாம்பில் நாம் க்ரூப்பா போறோம்னு வச்சிக்கோங்க நானா வரவச்சிருந்தா நானேதான் எல்லார்க்கும் க்கும் பில் பே பண்ணுவேன் ..ஆனா இங்கே யாரவது நம்மை ரெஸ்டாரன்ட் சாப்பிட இன்வைட் பண்ணினா நாமம் உணவுக்கு நாம்தான் பில் பே பண்ணனும் ..என் கணவர் ஒருமுறை மேனேஜர்களுடன் போனப்போ இந்த விஷயம் தெரியாம மூன்று நம்மூர்காரங்க கார்ட் கூட கொண்டு வரலாமா கைவீசி வந்திருக்காங்க :) என் கணவர் கிட்ட பணம் வாங்கி கொடுத்தார்களாம்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் எங்க வீட்டுலயும் ஓரிருவர் இருந்தாங்க...ஃப்ரென்ச் ஸ்டைல்னு யாரெல்லாம் ஹோட்டலுக்கு சாப்பிட வரீங்கனு கேட்பாங்க. எல்லாரும் வரவங்க அவங்கவங்க சாப்பிடுவதற்கு பே பண்ணனும் இல்லைனா எவ்வளவு ஆச்சோ அதை அப்படியே எத்தனை நபரோ அதால் டிவைட் செஞ்சு தலைக்கு இவ்வளவு ந்னு..நாம சூப் மட்டுமெ சாப்பிட்டுருந்தாலும் பே செய்யனும்..இப்படியும் உண்டு...

      ஆனா இப்ப யாராவது இன்வைட் பண்ணினா..சொல்லிடுவாங்க நான் தான் ந்னு நீங்க சொல்லிருக்காப்புல அவங்களெ செலவு ஏத்துப்பாங்க...

      அதனால நான் யார் கூடப் போனாலும் கேட்டுருவேன்.....

      கீதா

      Delete
  14. என் மகனுக்கு ஒரு முறை இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதாம். தெரிந்தவர் ஒருவர் சாப்பிட கூப்பிட்டதால் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறான், பில் வந்ததும், அவரவர் சாப்பிட்டதற்கு அவரவர்தான் பே பண்ண வேண்டும் என்று கூறி விட்டார்களாம், இவன் நண்பரிடம் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் அவருக்கு திருப்பி கொடுத்தானாம்.

    ReplyDelete
  15. இப்படி எல்லாம் கூட ஏமாற்றுகிறார்களே. போண்டா கொடுத்து..ஏமாற்றிவிட்டாரே. சாதாரணமாக நாம் இப்படியான நிகழ்வுகளுக்கு "அல்வா கொடுத்துட்டான்" என்று சொல்வதுண்டு..இவர் போண்டா கொடுத்துவிட்டார்.

    அடை விஷயமும் வியப்பாக இருக்கிறது. இப்படியும் இருப்பார்களா என்று தோன்றியது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசிதரன்.

      Delete
  16. போண்டோ காரரைப் போல் லட்சத்தில் ஏமாற்றியவரும் உண்டுக்கா.

    அடையும் இப்படி ஒரு பையன் இருப்பாரா? வீட்டில் உள்ளவர்களிடம் கேட்காமலா எடுத்துச் சாப்பிடுவான்?

    ஆனால் எங்கள் வீட்டிலும் இந்த அனுபவம் உண்டுதான்...அதுவும் எனக்கே!!! ஹா ஹா ஹா....

    கீதா

    ReplyDelete
  17. நிதர்சனம் கற்பனையைவிட வினோதமானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதே.!நன்றி கீதா!

    ReplyDelete