பாரதி பாஸ்கர் செய்வது சரியா?
பாரதி பாஸ்கர் நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது. பட்டிமன்றத்தில் மட்டுமல்லாது கம்பன் கழங்கங்களிலும் ஆழமாக உரையாற்றக் கூடியவர். சமீபமாக யூ டியூபில் கதைகளை சொல்கிறார். கவனியுங்கள், சொல்கிறார், படிப்பதில்லை. அவருடைய மேடை அனுபவங்கள் கதைகளை திறம்பட சொல்ல உதவுகின்றன. குரலில் நல்ல மாடுலேஷனோடு அழகாக சொல்கிறார்.
அவர் கதை சொல்வதில் ஒரு விஷயம் சற்று நெருடலாக இருக்கிறது. ஒரு கதையை அந்த கதாசிரியர் எந்த காலத்தில் எழுதினாரோ அப்பொழுதிருந்த சூழலைத்தான் அவர் தன் கதையில் குறிப்பிட்டிருப்பார். இவரானால் அந்த குறிப்பிட்ட சூழலை தற்காலத்திற்கேற்றார்போல மாற்றி விடுகிறார்.
சுஜாதாவின் மத்யமர் கதைத் தொகுப்பில் தாய் -2 என்று ஒரு கதை உண்டு. அதில் வயதான விதவைத் தாயை பராமரிக்கும் பொறுப்பை அண்ணன்,தம்பி இருவரும் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள். டில்லியில் உயர் பதவியில் இருக்கும் அண்ணன் அம்மாவை அழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தனக்கு வெளிநாட்டு டெபுடேஷன் என்பான். தம்பியின் மனைவியோ நாம்தான் இளித்த வாயர்களா? என்பாள். இந்த சமயத்தில் ஊரிலிருந்து வரும் மாமா இவர்களின் அம்மாவுக்கு பிதுர்ராஜிதமாக கிடைக்க வேண்டிய சொத்திலிருந்து எட்டு லட்சம் கிடைக்கும், அந்த பணத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, மிச்ச பணத்தை வங்கியில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் ஒரு ஆளை துணைக்கு வைத்துக் கொண்டு தனியாகவே இருக்கலாம் என்றுகூறுவார். உடனே தம்பிக்காரன், ராத்த்ரி ஒன்பது மணிக்கு மவுண்ட் ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு," என்று தந்தி கொடுStarting by grand trunk express tomorrow to take mother Divakar த்துவிட்டு திரும்புவான். வந்தால் வீட்டில் அவனுக்கு அண்ணனிடமிருந்து, Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar என்று தந்தி வந்திருக்கும்.
இந்தக் கதையை கூறிய பாரதி பாஸ்கர் தந்தி என்று கூறாமல் SMS வருவதாக கூறுகிறார். சுஜாதா இந்தக் கதையை எழுதிய காலத்தில் எஸ்.எம்.எஸ். என்னும் ஒரு விஷயமே கிடையாது. அப்போது இருந்த தந்தி இப்போது இல்லை, ஆனால் இந்தக் கதையை படிக்கும் அல்லது கேட்கும் இளைய தலைமுறைக்கு தந்தி என்று ஒரு விஷயம் அப்போது இருந்தது. ராத்திரி எந்த நேரத்திலும் தந்தி கொடுக்க முடியும் போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடியுமே.
அதைப் போல ஆர்.சூடாமணியின் 'அந்நியர்கள்' என்னும் கதையில் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் தங்கை சௌமியாவை தன்னுடைய லேடீஸ் கிளபிற்கு அழைத்துச் செல்லும் அக்கா சவிதா அங்கு ஒரு உடல் ஊனமுற்ற ஒரு ஏழை மாணவனுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டபொழுது அக்கா பத்து ரூபாய் கொடுப்பாள், தங்கை சற்று யோசித்துவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தாள் என்றுதான் சூடாமணி எழுதியிருப்பார். பாரதி பாஸ்கருக்கு பத்து ரூபாய், ஐந்து ரூபாயெல்லாம் ரொம்ப குறைவு என்று தோன்றியதோ என்னவோ, அதை ஐநூறு ரூபாயாக உயர்த்தி விட்டார். இப்போது வேண்டுமானால் பத்து ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம். சூடாமணி அந்தக் கதை எழுதிய காலத்தில் பத்து ரூபாய்க்கு மதிப்பு இருந்திருக்கிறது என்பதை அந்தக் கதையை படிக்கும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை பாரதி பாஸ்கர் தடுத்து விடுகிறார்.
அந்தக் கதையில் ஈராஸ் தியேட்டரில் ஓடும் எல்லாப் படங்களுக்கும் சவிதா தன் தங்கையை அழைத்துச் சென்றதாக சூடாமணி எழுதியிருப்பார். இப்போது ஈராஸ் தியேட்டரே இல்லை, அதற்காக இ.ஏ.மாலிலோ அல்லது ஃபீனிக்ஸ் மாலிலோ படம் பார்த்தார்கள் என்று சொல்லிவிட முடியுமா? அப்போது அடையாரில் ஈராஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது என்னும் தகவல் நமக்கு கிடைக்கிறது, அதை காலத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று கதை சொல்கிறவர்கள் மாற்றினால் என்னவாகும்?இன்றைக்கு இவர் ஒன்றை மாற்றுவார், நாளைக்கு வேறு ஒருவர் வேறு ஒன்றை மாற்றுவார், கடைசியில் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான் என்பது போல கதை சொல்லிகள் கதையை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!
ஸாஹித்ய் கர்த்தாக்களின் கிருதிகளை(பாடல்களை) மாற்ற மற்றவர்களுக்கு எப்படி அதிகாரம் கிடையாதோ, அதைப்போல எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியேதான் சொல்ல வேண்டும், அதை மாற்ற மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றுதான் நான் கருதுகிறேன்.
உங்களை வழிமொழிகிறேன். உரிமை கிடையாது மட்டுமல்ல, அது மிகப் பெரும் தவறும்கூட.
ReplyDeleteநன்றி பட்டறிவாளரே.
Deleteநன்றி பட்டறிவாளரே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! பதிவிற்கு உங்கள் விமர்சனம் எங்கே?
Deleteஉங்களுடைய வாதம் சரிதான். தகவல்கள் அப்படியே இருக்கவேண்டும். கதை நடந்த காலத்தில் எழுதியவற்றை மாற்றக்கூடாது என்பது சரி. நான்கூட பட்டிமன்றத்தில் ஒரு தடவை இப்படிப் பேசினார் எனப் புரிந்துகொண்டு தவறில்லை என நினைத்தேன்.
ReplyDeleteஅது சரி மகாபாரதம் பற்றிப் பேசினால், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த சகுனி இந்தியாவின் பாண்டவர்களுக்குக் கெடுதல் செய்தான் என்றும் இலங்கை அரசன் இந்திய ராஜகுமாரியை கடத்தினான் என்று நாடுகளுக்கிடையேயான பிரச்சனையாக மாற்றிவிடுவாரோ?
நன்றி நெல்லை! கதையை படிக்காமல் இவருடைய கதையை முதல் முறையாக கேட்பவர்கள் அவர் சொல்வதுதான் நிஜம் என்று நினைத்துவிட மாட்டார்களா?
Deleteஎழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியேதான் சொல்ல வேண்டும்,//
ReplyDeleteஆமாம், அப்படியேதான் சொல்ல வேண்டும்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
நன்றி கோமதி அக்கா! என்னுடைய கருத்தோடு பலரும் ஒத்துப் போவது மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஅக்கா உங்கள் கருத்தை வழி மொழிகிறேன். அதை மாற்றினால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் கடைசி வரிகள் அதாவது இதுதான் சரி என்று...அதுவும் ரொம்ப வாசிக்காத என்னைப் போன்றவர்களுக்கு, அதுவும் பிரபலமான ஒருவர் சொன்னால் அவங்களே சொல்றாங்கன்னு தானே படும் அதுவும் அடுத்த தலைமுறை குறிப்பாகப் புத்தகம் படிக்காதவர்களுக்கு...அதுவும் இப்போது நிறையப் பேர் காதில் மாட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டே வேலைகள் செய்யறாங்களே.
ReplyDeleteஸோ டிட்டோ!!
கீதா
வாங்க கீதா. நீங்கள் சொன்ன இதே கருத்தைத்தான் என் அக்காவும் சொன்னார். மேலும் புத்தகங்கள் காலத்தின் கண்ணாடி அல்லவா? அதை எப்படி மாற்றலாம்?
Delete