படித்ததும், பார்த்ததும்
இன்றைய பதிவில் இரண்டு விமர்சனங்கள். ஒன்று புத்தக விமர்சனம், மற்றொன்று திரைப்பட விமர்சனம். மெர்க்குரிப் பூக்கள் சாவியில் தொடராக வந்த பொழுது படிக்கவில்லை, அதற்குப் பிறகும் படிக்கத் தோன்றவில்லை. யாரோ ஒருவர்," பாலகுமாரனனின் சிறந்த புதினங்கள் என்றால் மெர்க்குரி பூக்களும், அகல்யாவும்தான் என்றார். புஸ்தகாவில் இரண்டுமே உள்ளன. மெர்குரிப் பூக்கள் படித்தேன்.
மெர்குரிப் பூக்கள்
டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தியை பெருக்குவதற்காக ஓவர் டைம் செய்ய தொழிலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொழிலாளர்கள் ஒவர்டைம் கூலியைத் தாண்டி இன்னும் அதிகமாக கூலி கேட்கிறார்கள், நிர்வாகம் மறுக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
லாக் அவுட் அறிவித்த நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க கூலிப் படையை ஏவுகிறது. அதில் ஒரு அப்பாவி தொழிலாளி கணேசன் கொல்லப்படுகிறான்.தொழிற்சங்க தலைவன் கோபாலன் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன் மனைவி சாவித்திரி அவனுடைய தலைமறைவு வாழ்க்- கைக்கு உதவுகிறாள்.
அதே கம்பெனியில் ஸ்டெனோவாக பணிபுரியும் சங்கரன் தன் அண்ணா,மன்னியோடு வசிக்கிறான். கம்பெனி லாக் அவுட் ஆனதில் வீட்டோடு இருக்கும் அவனுக்கும், அந்த வீட்டில் குடியிருக்கும் தண்டபாணியின் மனைவி சியாமளிக்கும் முறைகேடான உறவு பூக்கிறது. சியாமளி மனதில் எத்தனையோ நிறைவேறாத ஆசைகள். அவள் தன் பெண் குழந்தையைக் கூட விட்டு விட்டு சங்கரனோடு ஓடிப்போக முடிவெடுக்கிறாள்.
கம்பெனி முதலாளியான ரங்கசாமி தொழிலாளர்கள் தன் தொழிற் சாலையை நாசமாக்கியதில் மனசு நொந்து அதை விற்று விட்டு வெளிநாட்டில் தங்கி விடலாம் என்று முடிவுசெய்கிறார்.
இதைத்தவிர பிற்படுத்தப்பட்ட குலத்திலிருந்து வந்து போலீஸ் அதிகாரியான துரைசிங்கம், கணேசனை குத்தி கொலை செய்த பாவாடை என்னும் அறிவரசன் அவனைப் பழி தீர்க்கும் தொழிலாளி சுப்பையா, ரங்கசாமியின் தாய், சங்கரனின் அம்மா என்று சின்ன ஆனால் கதையில் முக்கிய திருப்பங்களை கொண்டு வரும் பாத்திரங்களைக் கொண்டு மிக அழகாக கதையைப் பின்னியிருக்கிறார் பாலகுமாரன். இது அவருடைய முதல் நாவல். முதல் நாவலிலேயே புகுந்து விளையாடியிருக்கிறார்.
‘கெட்டாலும் ஆண் மக்கள்’ என்ற சிறுகதையில் வந்த சியாமளி கதா பாத்திரம் இதில் விரிவடைந்திருக்கிறது. அதில் சியாமளி இறந்து போவாள். இதில் கணவனையும், குழந்தையையும் உதறி காதல னோடு ஓடத் துணிந்து, சங்கரன் அண்ணியால் தடுக்கப்பட்டு மனம் மாறுகிறாள். ஆனாலும் அவள் மீது ஏனோ பரிதாபம் வரவில்லை. நல்ல வேளை இதை பாலகுமாரன் நியாயப்படுத்தவில்லை.
//இத்தனை நாள் சியாமளியிடம் சொன்ன ‘லவ் யூ’ அர்த்தமற்றது. ‘லவ்’ என்பதே என்ன என்று தெரியாமல் சொன்னது தான். இரண்டு பேருக்கும் ஒரே சினிமாப்பாட்டு பிடித்திருக்கிறது. இரண்டு பேருக்கும்ஒரே ராகத்தில் ஈடுபாடு இருக்கிறது. இரண்டு பேருக்கும் கொஞ்சம் இலக்கியம் தெரிந்திருக்கிறது. இவை போதுமா லவ் பண்ண. ஈடுபாடு ஒன்றாய் இருந்தால் அடுத்த வார்த்தை லவ் தானோ? இதே சியாமளி ஆணாய் இருந்தால் நல்ல நண்பனாய் ‘ஹலோ’ என்ற சொல்லும் ஆளாய் இருந்திருப்பாள் இல்லையா? பெண்ணாகிப் போனதால் ஈர்ப்பு வந்துவிட்டது.//
சாவித்திரியின் பாத்திரப் படைப்பு அற்புதம்! “எனக்கு தெரிஞ்சு எல்லாபோராட்டமும், யுத்தமும் ஒரு கட்டத்துல ஏன் எதுக்குனு காரணம் புரியாமல் முழிக்கத்தான் செய்கிறது”. என்று சாவித்திரி கூறுவது இன்றைக்கும் பொருந்துமே. அவளிடம் கோபாலன் “ஐ லவ் யூ” என்று சொல்லும் பொழுது காதலின் பரிமாணம் மாறி உயர்கிறது.
"கெஞ்சறவாளை பொம்மனாட்டிக்குப் பிடிக்காது சங்கர், மதிக்கறவாளைத்தான் பிடிக்கும்.” இப்படியெல்லாம் எழுதியதுதான் அவருக்கு பெண் ரசிகைகளை குவித்ததோ?
ரங்கசாமியும் அவர் அம்மாவும் உரையாடும் இடம் மிகவும் அழகு. மறந்து போனது நீ ரங்கு. உனக்குத்தான் மரந்து போச்சு. நாலணா காசு கூட கேட்டா, சரின்னு சந்தோஷமா சொல்லத் தெரியாம போச்சு”
“காசு மட்டும்தான் முக்கியமா?”
“இல்லாதவாளுக்கு காசுதான் முக்கியம். உனக்கு என்ன தெரியும் காசு பத்தி?” ரங்கசாமியின் அம்மா தொழிலாளர்களுக்காக பரிந்து பேசி அவர் மனதை மாற்றுகிறாள்.
சாவித்திரி, கோபாலன் மனதை மாற்றுகிறாள். மன்னி, சியாமளி மனதை மாற்றுகிறாள். அதனால் சங்கரன் மனம் மாறுகிறது. சங்கரன் முதலில் மன்னி மீது கோபப்பட்டாலும், அவன் அலுவலகத்தில் பணி புரியும் நாராயணசாமியின் மகளை, ஏற்கனவே ஒரு இடத்தில் நிச்சயிக்கப்பட்ட, வதட்சணை தர முடியாததால் திருமணம் நின்று போன பெண்ணை மணந்து கொள்கிறான். எல்லாமே விரும்பத் தகுந்த மாற்றங்கள்.
கதையை படித்து முடிக்கும்பொழுது நம் மனதிலும் பளிச்சென்று மெர்க்குரிப் பூக்கள் பூக்கின்றன.
நான் புஸ்தகாவில் படித்தேன்.
தாய் கிழவி
ராதிகா மட்டுமல்ல படத்தில் வரும் அத்தனை பேரும் ரொம்ப இயல்பாக, நிஜமான கிராமத்து மனிதர்களாகவே இருக்கிறார்கள். நடை, உடை பாவனை எல்லாமே அசல் கிராமம்.
பொதுவாக விமன் சென்ட்ரிக் படங்கள் என்றால் அவளை தியாக சீலியாக காண்பித்து, படம் முடியும் பொழுது நம் கண்கள் குளமாகி, மனசு பாரமாகி விடும். ஆனால் இந்தப் படத்தில் நெகடிவ் ஹீரோயினிஸம், தவிர படம் முழுவதும் இயல்பான நகைச்சுவை. குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் ப்ராஸ்தடிக் மேக்கப்பிற்காக அத்தனை மெனக்கெட்டிருக்கும் ராதிகா மதுரைத் தமிழுக்காகவும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தாய்கிழவி லேசுப்பட்டவள் இல்லை!
ஒரு சின்ன சந்தேகம், மெர்க்குரி பூக்கள், தாய்கிழவி இரண்டிலுமே ஒற்றெழுத்து விட்டுப்போய் விட்டதோ?
படித்ததும் பார்த்ததும் - இரண்டுமே ரசித்தேன். மெர்க்குரி பூக்கள் மறக்க முடியாத நூல் - சமீபத்தில் கூட ஒரு முறை படித்தேன். நேற்றைய எங்கள் பிளாக் பதிவிலும் அந்த நூலில் வரும் கவிதை குறித்தும் எழுதி இருந்தேன்.
ReplyDeleteஒற்றெழுத்து விட்டுப்போய் விட்டதோ? அதற்கான விளக்கம் போலவும் அதே நூலில் எழுதி இருப்பார் பாலகுமாரன்.
தாய்கிழவி - பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் - மகள் உட்பட. ஆனால் பார்க்கவில்லை.
மெர்க்குரி பூக்கள் விமர்சனம் எழுதிய அளவிற்கு தாய்கிழவி பற்றி எழுதவில்லை - மெர்க்குரி பூக்கள் தரும் தாக்கம் அதிகம் என்பதை இதுவும் குறிப்பதாகப் படுகிறது.
வாங்க வெங்கட். தாய்க்கிழவி பற்றி அதிகம் சொல்லவில்லை// டெக்னிகல் விஷயங்களை சொல்கிறீர்களோ? ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தராதது காரணமோ? கட்டுப்கோப்பான திரைக்கதை என்பதை குறிப்பிட நினைத்தேன். படத்தின் துவக்கத்திலேயே பஸ்ஸில் செல்லும் ராதிக்கவிற்கு முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவனையும், மாணவியையும் விரட்டி, அந்தப் பையனை தனியாக அமரச் சொல்வார், பிறகு அந்த்ப் பெண்ணிடம் "படிக்க வைக்கவே 40 வருஷம் ஆகியிருக்கு, இதுல.." என்று அதட்டுவார். அப்பொழுதே படம் என்ன சொல்லப் போகிறது என்று கோடி காட்டி விடுகிறார். கடைசியில் பணம் மட்டும் சந்தோஷத்தை தருமா? என்றால் எங்கிட்ட அதுக்கு பதில் இல்ல, ஆனால் பணம்தான் மரியாதையைத் தரும்" என்று முடித்திருப்பதையும் குறிப்பிட நினைத்தேன், இப்போது எஹுதி விட்டேன். நன்றி.
Deleteஇரும்புக் குதிரைகள், மெர்க்குரிப்பூக்கள் இரண்டும்தான் பாலகுமாரனின் மாஸ்டர்பீஸ் என்று சொல்வோர் உண்டு. நானும் கொஞ்ச காலம் அப்படி சொல்லிக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteஇரும்புக் குதிரைகள் கிளாசிக்! ராஜா அண்ணாமலை செட்டியார் பரிசை வென்றது.
Deleteஎப்படி இப்படி பதிவு வரவழைத்தீர்கள்? மெர்க்குரிப்பூக்கள் முழுவதும் சிவப்புக் கோடு அண்டர்லைன் ஆகி இருக்கிறதே... எனக்கு மட்டும்தான் அப்படித் தெரிகிறதா?!
ReplyDeleteஎனக்கும் தெரிகிறது, ஸ்ரீராம்.
Deleteகீதா
நீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன். ஏன் என்று எனக்கும் புரியவில்லை. கீதாவிடமும் கேட்டேன். அதை எடுக்கத் தெரியவில்லை. copilot ல் அடித்து, காபி,பேஸ்ட் பண்ணும்பொழுது நிறைய தவறுகள் வருகின்றன.
Deleteதாய் கிழவி பார்க்க வேண்டும். அதன் ப்ரமோஷன் காட்சிகளை பார்த்தபோது தியேட்டரிலேயே பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்புறம் OTT யில் வந்தும் கூட இன்னும் பார்க்கும் பொறுமை வரவில்லை!
ReplyDelete
தாராளமாக பார்க்கலாம். பொறுமை தேவையில்லை. படம் நம்மை இழுத்துச் செல்லும். நல்ல lucid flow.
Deleteஇந்தப் படத்துக்கு ராதிகாவுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ராதிகாவே அப்படி எதிர்பார்க்கிறார்.
ReplyDeleteஅப்படி அவர் ஆசைப்படுவதில் என்ன தவறு? அதற்கு முற்றிலும் தகுதியானவர். ரஜினிகாந்த், சத்யராஜ் எல்லாம் உடன் நடிக்க பயப்படும் நடிகையாயிற்றே? "இவர் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் எங்களையெல்லாம் ஓரம் கட்டியிருப்பார்" என்றார் ரஜனி.
Deleteஇரண்டு விமர்சனங்களும் நல்லாருக்கு பானுக்கா. மெர்குரிப்பூக்கள் உங்களுக்குப் பிடித்த பாலகுமாரன் அவர்களின் நாவல்.
ReplyDeleteமெர்குரிப் பூக்கள் பற்றி வெங்கட்ஜியும் எழுதியிருந்தார். எடுத்து வைத்திருக்கிறேன். வாசிக்க வேண்டும்.
தாய்க்கிழவி எல்லாம் என்ன விமர்சனங்கள் வாசித்தாலும், பார்க்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு.
கீதா
//உங்களுக்குப் பிடித்த பாலகுமாரன் அவர்களின் நாவல்.// பயமுறுத்தும் வரிகள். இவரை மட்டுமல்ல, இன்னும் பலரின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். அதில் நீங்களும் உண்டு.
Deleteமெர்குரிப்பூக்கள் படித்து இருக்கிறேன், ஆனால் நினைவில் இல்லை.
ReplyDeleteபாலகுமரன் கதையில் தொழிற்சாலை பற்றி நிறைய வரும். விமர்சனம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
தாய்கிழவி பார்த்து விட்டேன். உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
Deleteமெர்குரிப் பூக்கள் வாசிப்பனுபவ பதிவு நன்றாக உள்ளது. கதைஉருக்கம், மற்றும் கதை மாந்தர்களின் சுபாவ விமரிசனம் ஆகிய சிறப்பு சேர்க்கின்றன.
ReplyDeleteJayakumar