கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 27, 2026

மேட் இன் இந்தியா -டைட்டன் ஸ்டோரி

  

மேட் இன் இந்தியா -டைட்டன் ஸ்டோரி 

 


ஒரு காலத்தில் ஃபாரின் பொருள்கள் இந்தியாவில் கிடைக்காது. அப்போதெல்லாம் டேப் ரிகார்டர் என்றால் நம் நாட்டு ஃப்லிப்ஸ், புஷ் போன்றவைகளை விட நேஷனல் பேனசானிக், அக்காய் போன்றவை வைத்திருப்பது அந்தஸ்தான ஒரு விஷயமாக கருதப்பட்டது. 70களில் கல்ஃப் பூம் நிலவிய காலத்தில் அங்கிருந்து வருபவர்கள் கண்டிப்பாக நேஷனல் பேனசானிக் டேப் ரிகார்டர் கையில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் யார்ட்லி சோப், யார்ட்லி பௌடர், செண்ட் போன்றவை கிடைத்தால் புளகாங்கிதம் அடைவார்கள். பர்மா பஜாரில் சொல்லி வைத்து சிடிசன் வாட்ச், சீகோ வாட்ச் போன்றவைகளை வாங்கி, அதை கட்டிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள் உண்டு.  

அந்த நேரத்தில் வெளிநாட்டு கைகடிகாரங்களுக்கு இணையான தரத்தில் ஒரு வாட்சை தயாரிக்க நினைத்த ஜே.ஆர்.டி. டாடா ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு கூட்டு சேர விரும்பி அவர்களை அணுக,கைக்கடிகாரங்களை தயாரிப்பதில் தங்கள் அளவுக்கு இந்தியர்களுக்கு திறமையோ, தொழில்நுட்ப அறிவோ கிடையாது என்று மறுத்து விடுகிறது. உலகத்தரத்தில் கை கடிகாரங்களை தயாரிக்கும் வரை தான் கை கடிகாரமே கட்ட மாட்டேன் என்று டாடா முடிவெடுக்கிறார்.  

அதன் பிறகு கைகடிகாரங்களைத தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்குவதிலும், கடிகார உற்பத்தியிலும், அதை மார்கெட் பண்ணுவதிலும், உலக சந்தைக்கு எடுத்துச் செல்வதிலும் டாடா நிறுவனம் சந்தித்த சவால்கள், பிரச்சனைகள், அடைந்த வெற்றி இவைகளை சுவாரஸ்யமான தொடராக ஆறே எபிசோட்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

டாகுமெண்ட்ரி போல இல்லாமல், உண்மை சம்பவங்களோடு கற்பனையும் கலந்த கதையாக படைத்திருப்பதைை பாராட்ட வேண்டும்.  

பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்திருப்பது சிறப்பு. ஜே.ஆர்.டி.டாடா ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார் நசுருதீன்ஷா. செர்ஸக்ஸ் தேசாய் ரோலில் ஜிம் சர்ப் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். இந்த சீரியலில் கதா பாத்திரங்கள் குறைவு, ஆனால் அவர்களின் பங்களிப்பு நிறைைவு. காட்சிகளின் ஆழத்தை கூட்டி மேம்படுத்துகிறது பின்ணனி இசை. 

இந்த சீரீஸை இயக்கி, நம்முடைய பெருமையை நமக்கு உணர்த்தியிருக்கும் ராபி க்ரேவலுக்கு நம் நன்றி. தவற விடாமல் பாருங்கள்.  



22 comments:

  1. நல்ல அறிமுகம். சரி.. எந்த OTT யில் பார்த்தீர்கள்? தமிழில் மொழிபெயர்ப்பு உரையாடல் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:38 AM

      Amazon prime. உண்டு. ஆனால் எங்களுக்கு ஏனோ கடைசி எபிசோட் படம் வராமல் வசனம் மட்டும் கேட்டது. அதனால் அதை மட்டும் ஹிந்தியில் பார்த்தேன்.

      Delete
  2. மறுபடியும் பதிவு சிவப்புக் கோடுகளுடன் கோலம் போட்டது போல காட்சி அளிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:39 AM

      காரணம் தெரியவில்லை, பதிவு போட்டவுடன் அப்படி இல்லை.

      Delete
  3. படத்தில் டை கட்டிக்கொண்டு நிற்பவர் நஸிருத்தீன் ஷா என்றால் அடையாளமே தெரியவில்லை.  இல்லை வேறு யாரோவா?

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:41 AM

      இல்லை, இவர் நசுருதீன் ஷா இல்லை. செர்ஸக்ஸ் தேசாயாக நடித்த ஜிம் சர்ப்.

      Delete
  4. நேஷனல் பானாசோனிக் இல்லாத வீடுகளே அப்போது இருந்திருக்காது.  நானும் வைத்திருந்தேன்.  மதுரையில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கடைத்தெரு மற்றும் ஹெட் போஸ்ட் ஆபீஸ் அருகே ஒரு கடைத்தெரு இதுபோன்ற பொருட்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.  அந்தப் பக்கமாக போய் அதையெல்லாம் ஒரு லுக் விடுவதே ஒரு சந்தோஷம்!  அப்போது வேறென்ன செய்ய முடியும்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:42 AM

      :)). பர்மா பஜார் விற்பனை கொடி கட்டி பறந்த காலம்.

      Delete
  5. பதிவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் மாடல் போஸ் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:43 AM

      நன்றி. எடுத்தது சின்ன பேத்தி.

      Delete
  6. Panasonic Tape Recorder எங்களிடம் இருந்தது. அப்பா அது போல SEIKO 5 வாட்ச் வாங்கி பயன்படுத்தினார். அதன் பிறகு அவர் பயன்படுத்தியது titan தான்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:46 AM

      அப்போதெல்லாம் பெரும்பான்மையான வீடுகளில் National Panasonic தான். என் அக்கா டேப் ரிகார்டர் வாங்க வேண்டும் என்றபோது நாந்தான் ஃபிலிப்ஸ் வாங்கச் சொன்னேன்.

      Delete
  7. உண்மையிலேயே லைசென்ஸ் கோட்டா கட்டுப்பாடுகளை எடுத்து எறிந்து தாராள மயமாக்கலுக்கு வித்திட்ட மன்மோகன் மற்றும் நரசிம்ம ராவ் ஆகியோரைப் பாராட்டவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:48 AM

      அந்த கால கட்டத்தில் தாராளமயமாக்கல் செய்யப்படாவிட்டால் நமக்கு உலக வங்கி கடன் தந்திருக்காது. அது காலத்தின் கட்டாயம்.

      Delete
  8. எத்தனை தயாரிப்புகள் உள்நாட்டில்... HMT அதற்கு முந்தையதா? மாருதி காரைக் கொண்டுவந்த சஞ்சய் காந்தி என பலர் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பார்க்க வேண்டிய சீரியல்.

    ஆஆமாம்.. நிஜமாவே டைட்டன்தானா நீங்க கட்டியிருப்பது? ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:53 AM

      இந்திரா காந்தி 'பீ இண்டியன், பை இண்டியன்' என்னும் வாசகத்தை பிரபலமாக்கினார். பின்னாளில் காங்கிரஸ்காரர்கள்தான் வேறு வழியில்லாமல் சந்தை பொருளாதரத்தை திறந்து விட்டார்கள்,
      நிஜமாகவே டைட்டந்தான் சுவாமி. வாட்ச் சிறியதாக இருப்பதால் பெயர் தெரியவில்லை.

      Delete
  9. துபாய்க்கு வேலைக்குப் போன புதிதில் பெரிய சோனி டூ இன் ஒன், டிவி, விசிடி ப்ளேயர் ஆகியவற்றை வாங்கினேன். வாரம் இரண்டு அல்லது மூன்று விசிடி ஒவ்வொன்றும் பத்து திர்ஹாமுக்கு வாங்குவேன்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 29, 2026 at 9:57 AM

      என் கணவர் எக்கச்சக்கமாக நேஷனல் பேனசோனிக் டேப் ரிகார்டர்,சீகோ,சிடிசன் வாட்சுகள் வாங்கி உறவினர்களுக்கு பரிசளித்திருக்கிறார். அவர் மஸ்கட் சென்றதும் முதன் முதலில் வாங்கியது சீகோ வாட்ச்தான் என்பார். எனக்கும் முதலில் சீகோ வாட்ச்தான் பரிசளித்தார்.

      Delete
  10. பிறகு ஒரு காலத்தில் முடிந்த அளவு சுதேசிப் பொருட்களைத்தான் வாங்க ஆரம்பித்துவிட்டேன்.

    பழைய லைஃப்பாய் சோப் மணம் எனக்கு இன்றும் பிடிக்கும்.

    ReplyDelete
  11. பானுமதி.வெ.July 29, 2026 at 9:59 AM

    நான் மஸ்கட்டில் இருந்தபோது கூட ஹமாம் சோப்புதான், வீகோ வஜ்ரதந்தி பற்பசைதான்.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அறியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. இந்த சீரியல் முடிந்தால் பார்க்கிறேன். நான் முன்பு திருமணமான புதிதில் கீ தரும் வாட்ச் கட்டிக் கொண்டதோடு சரி.! அதுவும் டைட்டன்தான். என் அப்பா வாங்கித் தந்தது. அதன் பிறகு அதை அப்படியே விட்டு விட்டதில் அது பழுதாகி விட்டது. இப்போது என் மகள் மறுபடியும் இந்த டைட்டன் கைக்கடிகாரம் வாங்கி தந்துள்ளாள் இதையாவது முறையாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். ஆனால், எங்காவது வெளியில் செல்லும் போது நினைவாக எடுத்து கட்ட மறந்து விடுகிறேன்.

    உங்கள் கை கடிகாரத்தை சுட்டிக் காட்டும் போஸ் நன்றாக உள்ளது அழகாக உங்களைப் படம் எடுத்துள்ள உங்கள் பேத்திக்கு என் வாழ்த்துகள். .அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. வாங்க கமலா, நலமா? எ.பி.யில் உங்களைக் காணாததால் கவலையாக இருந்தது.
    நான் திருமண நாளிலிருந்து வாட்ச் கட்டிக் கொள்வதால், வாட்ச் இல்லையென்றால் எதையோ இழந்தது போலிருக்கும்.

    ReplyDelete