குருவே சரணம்!
இன்று (28.5.2013)வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி குரு பெயர்ச்சி! திருக்கணித காரர்கள் 24ம் தேதியே குரு பெயர்ந்து விட்டார் என்கிறார்கள். எப்படியோ, இது வரை ரிஷப ராசியில் இருந்த குரு பகவான் மிதுன ராசிக்கு மாறுகிறார்.ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம். தேவர்களின் ஆச்சர்யனாக(ப்ரஹஸ்பதி) விளங்குவதால் குரு என அறியப்படுகிறார். பொன் வண்ண நிறத்தில் விளங்குவதால் 'பொன்னன்' என்றும் 'வியாழன்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
சிலர் குரு பகவானும் தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக் கொள்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு ரூபம். தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி சிவ பெருமானை வழிபட்டு அவரால் "குரு" என்று
அழைக்கப்பட்டு நவ கிரகங்களில் ஒன்றானவர்.
குரு வழிபட்ட தலங்களுள் முக்கியமானவை குருவாயூர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சென்னைக்கு அருகில் உள்ள பாடி, தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திட்டை, முதலிய கோவில்கள் ஆகும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியே குரு வடிவாக வணங்கப் படுகிறார்.
குருவிற்கு உரிய மூலிகை : பொன் ஆவரை
திசை : வட கிழக்கு என்னும் ஈசான்யம்
உலோகம் : தங்கம்
நிறம் : மஞ்சள்
மரம் : சந்தனம்
சமித்து : அரசு(அரச மர பட்டை/குச்சி)
குருவிற்குரிய தலம் : திருச்செந்தூர்
No comments:
Post a Comment