கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 19, 2018

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் 

இப்போது ஸ்டாண்ட் அப் காமெடி என்பது பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவர் மேடையில் வந்து நின்று கொண்டு ஜோக்குகளாக உதிர்த்து அரங்கில் இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும். 

இந்த கான்செப்ட்டே கொஞ்சம் உதைக்கிறது. நகைச்சுவை என்பது பெரும்பாலும் டைமிங்கை பொறுத்துதான் அமையும். மேலும் உரையாடல்களில் இயல்பாக வெளிப்படும் பொழுதுதான் ரசிக்க முடியும். அப்படி இல்லாமல் நான் ஜோக் அடிப்பேன், நீங்கள் சிரிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி சிரிக்க வைக்க முற்படுவது...?

இந்த ஸ்டாண்டப் காமெடியில் கார்த்திக் குமாரும், அரவிந் சுப்பிரமணியனும் முன்னணியில் நிற்கிறார்களாம். "இந்த இருவர்களின் காமெடியையும் கேள்" என்று என் மகன் கேட்க வைத்தான். கார்த்திக் குமாரை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அலைபாயுதே, கண்ட நாள் முதலாய் போன்ற படங்களில் அமெரிக்க ரிடர்ன் மாப்பிள்ளையாக வருவார். மிர்ச்சி சுசியின் கணவர். ஆழ்வார்பேட்டை மேட்டுக்குடி! ஆனால், அவருடைய நிகழ்ச்சி முழுவதும் கெட்ட வார்த்தைகள் விரவிக் கிடக்கின்றன. ஆங்கிலத்தில் F இல் தொடங்கும் வார்த்தை, தமிழில் 'ம..' என்ன கொடுமையிது!? சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை யாராவது பேசினால்,"நீ படித்தவன்தானே? படிக்காதவனைப் போல பேசுகிறாய் என்பார்கள். ஆனால், படித்த, மேட்டுக் குடியைச் சேர்ந்த கார்த்திக் குமார் போன்றவர்கள் இப்படி பேசுவதும், அதை நகைச்சுவை என்று ஒரு கூட்டம் கைதட்டி ரசிப்பதும்..??! நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?


இவரோடு ஒப்பிடும் பொழுது அரவிந்த் சுப்பிரமணியம் பரவாயில்லை. கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை, ஒரு மாதிரியான ஜோக்கை நாசூக்காக சொல்கிறார். அவருடைய பிரபலமான ஜோக் ஜெட்டி ஜோக்காம். உவ்வே!


நம்முடைய மதிப்பீடுகள் குறைந்து கொண்டே வருகிறதோ என்று எண்ண வைத்த இன்னொரு சம்பவம் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் வந்த காதல் காட்சிகள். கதைப்படி ஐ.பி.எஸ். அதிகாரியான கதாநாயகன், போஸ்டிங் வருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு எதிர் வீட்டிலிருக்கும் +2 முடிக்காத பெண் மீது காதல் வயப்படும் அவன் அவளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன் என்ற சாக்கில், "என்னை கட்டிப் பிடி", "முத்தம் கொடு" என்று மிரட்டுவதும், அதுவும் சிறு குழந்தைகள் இருக்கும் பொழுது, அவர்களை, "கண்ணை மூடிக் கொள்ளுங்கள்," "அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு இதையெல்லாம் செய்கிறான். போலீஸ் அதிகாரி, ஆசிரியர் என்ற இரண்டுமே புனிதமான பணிகள். ஒரு கௌரவமான போலீஸ் அதிகாரி, டியூஷன் எடுக்கிறேன் என்ற பெயரில் தரம்கெட்டத் தனமாக நடந்து கொள்வதாக காட்டுவது சரியாகப் படவில்லை. காதலை காட்ட வேறு களங்களா இல்லை?  

16 comments:

  1. //போலீஸ் அதிகாரி, ஆசிரியர் என்ற இரண்டுமே புனிதமான பணிகள்.//

    உண்மைதான் ஆனால் சில ஆசிரியர்கள் & போலீஸ் அதிகாரிகள்தான் தொழிலை புனிதமாக செய்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அப்படி இல்லையே

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சிலர் ஆசிரியர் மற்றும் போலீஸ் துறையின் நம்பகத்தன்மையை மாசு
      படுத்துகிறார்கள், இந்த நேரத்தில் அதை ஞாயப்ப்பபடுத்துவது போல சினிமாக்களிலும் சித்தரிக்க வேண்டுமா? என்பதுதான் என் ஆதங்கம். வருகைக்கு நன்றி

      Delete

  2. எப்போது மேலைநாட்டிற்கு நம்மவர்கள் அதிகம் குடிபெயர்ந்து மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டிற்குள் நுழைந்ததோ அப்போதே இந்த கெட்டவார்த்தகள் பேசுவது மேட்டுக் குடிமக்களிடம் எளிதாக பரவிவிட்டது. கீழ்மட்ட மக்கள் அந்த காலத்திலே இருந்தே பேசிக் கொண்டிருக்கிரார்கள் ஆனால் என்ன மத்திய தரக் குடும்ப மக்கள் பேசினால்தான் அது இன்றும் தப்பாக பார்க்கப் படுகிறது

    ReplyDelete
  3. உங்கள் ஆதங்கங்கள் நியாயமானதே.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்! நன்றி ஶ்ரீராம்!

      Delete
  4. என்ன செய்ய முடியும்! எல்லாமே தரம் தாழ்ந்திருக்கும்போது ரசனையும் அதற்கேற்பத் தானே இருக்கும்! என்னால் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை என்னும் பெயரில் அடிக்கும் கூத்தையே ரசிக்க முடியாது! :( இதிலே இதெல்லாம் வேறேயா? நீங்க சொல்லும் கார்த்திக் குமாரையோ, அர்விந்த் சுப்ரமணியம் என்பரையோ இன்று வரை எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. அரவிந்தன் சுப்ரமணியன் நடித்தது இல்லை. ரசிகர்களின் ரசனை தாழலாம், கலைஞர்கள் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி கீதா அக்கா!

      Delete
  5. துளசி: நியாயமான கருத்துகள்!

    கீதா: இப்போதைய தலைமுறையின் ரசனையும் மாறியிருக்கிறது. உங்கள் ஆதங்கம் மிகவும் சரியே பானுக்கா. கார்த்திக்குமார் பற்றி தெரியும் ஆனால் அவர் இப்போது ஸ்டாண்டப் காமெடி செய்வது தெரியாது. மற்ற நபரையும் சுத்தமாகத் தெரியாது. தீரன் பார்க்கவில்லை. இப்போதைய காதல் காட்சிகள் அபப்டித்தான் ஆகிப் போனது..முன்பெல்லாம் அமெரிக்க கலாச்சாரத்தில் வளரும் நம் குழந்தைகளைக் குறை கூறிக் கொண்டிருந்தோம்,...ஆனால் இப்போது பார்க்கும் போது..இனி பிறக்கும் சிறு குழந்தைகள் இங்கு அங்கு வளரும் குழந்தைகளை விட மோசமான சூழலில் வளர்வார்களோ என்றும் தோன்றுகிறது. பண்பாடு கலாச்சாரம் என்று நாம் பேசுவதில் அர்த்தமே இல்லை என்றே தோன்றுகிறது. பெற்றோர் கையில் தான் இருக்கிறது எதிர்காலச் சந்ததியினரின் வளர்ச்சியும் எண்ணங்களும் சிந்தனைகளும் எல்லாம்.!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்!

      கீதா உங்களுக்கு ஒரு ஹை ஃபைவ்! செல் மூலம் அனுப்புவதால் விரிவாக அனுப்புவது கஷ்டமாக இருக்கிறது. வருகைக்கு நன்றி!

      Delete
  6. இரண்டு சம்பவங்களும், நம்முடைய மதிப்பீட்டுக் குறைவைக் காண்பிக்கிறது. இப்போ உள்ள இளைஞர்கள், வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவர்கள்போல (பெரும்பாலும்) கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக உபயோகிக்கிறார்கள். அதன் அர்த்தம் புரியாமலே அதனை உபயோகிக்கின்றனர். நம்முடைய கலாச்சாரம் மிகுந்த மேன்மையான கலாச்சாரம். 'இல்லை' என்பதைக்கூட சொல்லமாட்டாத கலாச்சாரம் (கடைக்காரனிடம் உப்பு இருக்கா என்று கேட்டால், அரிசி இருக்கு என்பார், உப்பு இல்லை என்றால்). இந்தச் சமூகத்தில் பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.

    தீரன் அதிகாரம் படத்தைப் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். கார்த்தி, 10 வகுப்பு பெயில் பெண்ணின் காதல் காட்சிகள் உண்மைக்கு மாறாகவும் வெகு மலினமான ரசனையாகவும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது ரொம்ப சரி நெ.த. .கேட்ட வார்த்தை பேசுவது ஒரு பேஷன் ஆகி விட்டது. ஹ்ம்ம்ம்!

      Delete
  7. நியாயமான கோபங்கள்.
    இதையெல்லாம் செய்தால் தான் 'மாஸ் அப்பீல்' கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

    //அதை நகைச்சுவை என்று ஒரு கூட்டம் கைதட்டி ரசிப்பதும்..??!//

    ஆக நிலமை இப்படி இருக்கும் பொழுது எங்கே கோளாறு என்று தெரிகிறது.

    என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.

    புறக்கணிப்பு ஒரு வழி. புறக்கணிப்பவரையும் புறக்கணித்து விடும் காலமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //புறக்கணிப்பு ஒரு வழி புறக்கணிப்பவரையும் புறக்கணித்து விடும் காலமாகவும் இருக்கிறது// சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் கவலையூட்டுகிறது.
      வருகைக்கு நன்றி!

      Delete
    2. தற்சமயம் சென்னையில் இருக்கிறேன். சென்னை வீட்டில் wifi இல்லை. செல்போன் மூலம் செய்திகளை அனுப்புவது கஷ்டமாக இருக்கிறது. 😣🙄

      Delete
  8. இப்படி எல்லாம் நடக்கிறதா. ரொம்ப முன்னேறிட்டோம் போல இருக்கே.இங்கேயும் சில நிகழ்ச்சிகள் பார்க்கிறேன். இதுவரை தரக் குறைவாகப் பார்க்கவில்லை.

    ReplyDelete
  9. முத்தத்தை மீறி தீரன் படம் சொன்ன உண்மை இருக்கிறதே!

    ReplyDelete