கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, May 2, 2018

கவிதா ஒயின்ஸ் ஸ்டாப்!


கவிதா ஒயின்ஸ் ஸ்டாப்!

அந்தப் பெண் மிகவும் பதட்டமாக இருந்தாள். ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் ஓ.டி.பி. நம்பர் கூட சொல்லமல் “சீக்கிரம், சீக்கிரம்” என்று அவசரப் படுத்தினாள். ஆட்டோ டிரைவர் பாலாஜிக்கு அவள் பதட்டம் கொஞ்சம் கவலை அளித்தது. அவளுக்கு தெரிந்தவர் யாருக்காவது உடல் நலம் சரியில்லையோ என்று தோன்றியது.

“எங்கம்மா போகணும்?” என்றான்

“வளசரவாக்கம் கவிதா ஒயின்ஸ்” கூறிவிட்டு அந்தப் பெண் செல் போனில் யாரையோ அழைத்தாள். இந்தக் கால பெண்கள் குடிக்கிரார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறான், ஆனாலும் அதற்காக ஒரு பெண் ஒயின் ஷாப்பைத் தேடி தனியாக செல்லும் அளவிற்கு முன்னேற்றமா?
“எல்லாம் ரெடியா? நான் வரும் வரை வெயிட் பண்ணுங்க.. என்னை விட்டு விட்டு ஆரம்பித்து விட வேண்டாம், ஹரீஷ் இருக்கானா? அவன் வந்தால் அவ்வளவுதான், எல்லாத்தையும் அவனே ஃபினிஷ் பண்ணிடுவான்”

பசங்களோடு வேறு கூட்டா? சு..த்..த..ம்..

அவர்கள் எதிர் முனையில் என்ன சொன்னர்களோ..? நான் பாதி வழி வந்தாச்சு.. என்றவள், இவனிடம், சீக்கிரம் போப்பா..” என்றதும் பாலாஜிக்கு கோபம் வந்தது.

“சிக்னலில் நிக்காம போக முடியுமா?” என்றதும் “ஸ்..சூ.” என்று நகத்தை கடிக்க தொடங்கினாள்.

“சரிதான், இந்த அளவு முத்திப் போய் விட்டதா?”

“இங்கதான், இங்கதான், நிறுத்துங்க,” ஆட்டோவை நிறுத்தும் முன்பே அதிலிருந்து குதித்து விடுவாள் போலிருந்தது. நாற்பத்து மூன்று ரூபாய் ஆகியிருந்தது. ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு, மிச்சம் வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றாள்.

அவளுக்காக கவிதா ஒயின்ஸ் வாசலில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும்,” ஏன் லேட்டு? இத்தனை நேரம் பாதி முடித்திருக்கலாம், எனிவே, லெட் அஸ் நாட் வேஸ்ட் டைம்” என்று எல்லோரும் கவிதா ஒயின்ஸ் பக்கத்தில் இருந்த வீட்டின் கேட்டை திறக்கும் பொழுது, "உங்க வீட்டுக்கு, லாண்ட் மார்க் சொல்வது ரொம்ப கஷ்டமா இருக்கு, கவிதா ஒயின்ஸ்னு சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றுகிறது, ஆனால் அப்படி சொன்னால்தான் ஈசியா புரிகிறது," என்று ஆட்டோவில் வந்த பெண் கூறியதும், எல்லோரும் சிரித்தார்கள்.

“ம்ம்.. கச்சேரிதான்..” என்று நினைத்துக்கொண்ட பாலாஜி, கிடைத்த அடுத்த சவாரியிடம், “காலம் ரொம்ப கெட்டுப் போச்சு சார், பசங்களும், பொண்ணுங்களும் சேர்ந்து குடிக்கிராங்க..” என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குத் தெரியாது, அவர்கள் எல்லோரும் ஆர்கிடெக்சர் படிக்கும் மாணவர்கள், என்பதும், எல்லோரும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் பண்ணுவதற்காக கூடி இருக்கிரார்கள் என்பதும்.

12 comments:

  1. நிச்சயம் திருப்பம் இருக்கும் என்று தெரியும். 'குமுதம் ஒரு பக்கக் கதைகள்' டைப் கதை.

    ரசித்தேன்.

    ஆட்டோ ஓட்டுநருக்குக் கடைசிவரை இவள் நல்லவள் என்று தெரியாததும் சின்னத் திருப்பம்...

    ReplyDelete
  2. ஆட்டோ ஓட்டுநர் கொஞ்சம் நின்னும் கவனிச்சிருக்கக் கூடாதோ! கடைசி வரை த்ரில்லிங்க்! சுவாரசியம் குன்றாமல் இருக்கு!

    ReplyDelete
  3. ஆட்டோ டிரைவர் மீண்டும் அவளை சந்திக்காமலேயே இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா! ஹா! உங்கள் வழி தனி வழி ஜி. நன்றி!

      Delete
  4. Replies
    1. நன்றி! சமீபத்தில் உங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொழுது உதித்த ஐடியாதான் இது.

      Delete
  5. பானுக்கா வாசிக்கும் போதே ரைடோ!! கடைசில ஒரு ட்விஸ்ட் என்று....நான் நினைத்தேன் ஏதோ ஷார்ட் ஃபில்ம் செய்கிறார்கள் என்று தோன்றியது...நன்றாக இருக்கிறது அக்கா கதை ரசித்தேன்...அந்த ஆட்டோகாரருக்குத் தெரியாமல் போவது கூட ...நன்றாக இருந்தது அந்த முடிவும்....அவரது வார்த்தைகள் யதார்த்தம். அப்படித்தானே எந்த ஒரு பெண்ணோ அல்லது பையனையோ மதிப்பீடு செய்கிறது இந்த சமூகம்...

    கீதா

    ReplyDelete
  6. கதை ஸ்வாரஸ்யம். முடிவு ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. அந்தப் பெண் பாவம்....ஆட்டோக்காரர் பாலாஜி தவறாகவே நினைக்கும்படி ஆகிவிட்டது. ரசித்தேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  7. ஸ்வாரஸ்யம். ஏதோ திருப்பம் இருக்கும் என நினைத்தேன்.

    ReplyDelete