கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 4, 2018

டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடு


டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடு





இப்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். க்ரிகெட் மாட்சுகளை பார்க்கும் பொழுது, அப்போதய டெஸ்ட் மாட்சுகள் நினைவுக்கு வந்தன.

ஐந்து நாட்கள் நடக்கும் மாட்சில் நடுவில் ஒரு நாள் ரெஸ்ட் உண்டு என்று என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான். வார இறுதியான சனி, ஞாயிறில் கடைசி இரண்டு நாட்களை வைத்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலும் வெள்ளி அன்று விடுமுறை விடுவார்கள். சிலர் அந்த கடைசி இரண்டு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்குவார்கள். நாலாவது நாளிலேயே மாட்ச் முடிந்து விட்டால் ஒரு நாள் டிக்கெட் வீணாகும். ஐந்து நாட்கள் விளையாடியும் வெற்றி தோல்வி இன்றி ட்ராவில் முடிவது பிடிக்காத சிலர், க்ரிகெட்டை வெறுக்க பெர்னாட் ஷாவை உதவிக்கு அழைப்பார்கள்.

ஒன் டே மாட்சுகள் வந்து, அதை ஒளி பரப்ப தொலைகாட்சியும் வந்த பிறகு, என்னைப் போன்றவர்கள் கூட மாட்ச் பார்க்க ஆரம்பித்தோம். வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியும் என்பது ஒரு நல்ல விஷயம்தான் என்றாலும், சிலருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அபாயமும் ஏற்பட்டது. இப்போது ட்வென்டி ட்வென்டி சீசன்.

டெஸ்ட் மாட்ச் ஐ.பி.எல். இவ்விரண்டோடும் அந்தக் கால மண வாழ்கையையும், இந்தக் கால மண வாழக்கையையும் ஒப்பிடலாம் என்று தோன்றியது.

டெஸ்ட் மாட்சுகள் மட்டும் கோலோச்சிய காலத்தில் விளையாட்டு வீரர்களை க்ரிகெட் போர்டுதான் தேர்ந்தெடுக்கும். அதைப் போல முன்பெல்லம் மணமகனோ, மணமகளோ, சம்பந்தப்பட்ட வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

இப்போது ஐ.பி.எல் ஏலம் நடப்பதை போலத்தான் திருமண வெப்சைட்டுகள் மூலம், மணமகனும், மணமகளும் தங்களைப் பற்றியும், தங்கள் திறமைகள்  குறித்தும் புகைப்படங்களோடு ப்ரகடனப் படுத்த எதிர் பார்டி தங்களுக்கு தேவையனவர்களை பிடிக்கிரார்கள். க்ரிஸ் கெயிலை தவற விட்டது போல சில நல்ல வரன்கள் மிஸ் ஆகலாம்.

முன்பெல்லாம் டெஸ்ட் மாட்சுகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்படும் பொழுது பந்து வீச்சாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போது போல வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வது, எகிறி குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கர்ம வீரர்களாய் அடுத்த பந்து வீசப் போய் விடுவார்கள். அது போலத்தான் அப்போது தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்தான், தம்பியை படிக்க வைத்தான் என்று கொண்டாட மாட்டர்கள். பெண்களுக்கும் அப்படித்தான் புகுந்த வீட்டில் உழைத்துக் கொட்டியதற்காக பாராட்டெல்லாம் கிடைக்காது.
டெஸ்ட் மாட்ச் முதல் இரண்டு நாட்கள் அத்தனை விறுவிறுப்பாக இருக்காது. மெதுவாகத்தான் பிக் அப் ஆகும். அது போலத்தான் அந்தக் கால மண வாழ்க்கையும். முன்னேற்றம் மெதுவாகத்தான் இருக்கும். சன்மானமும் குறைவுதான்.

ஐ.பி.எல்.மாட்சுகளில் அப்படி நிதானமாக ஆட முடியாது. போடுகிற பந்தை எல்லாம் அடித்துதான் தீர வேண்டும். அதைப் போன்ற வேகமான வாழ்க்கைதான் இப்போது. பணப்புழக்கம் மிக அதிகம். சின்ன விஷயங்களை கூட கொண்டாடி உற்சாகப்படுத்த  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சியர் லீடர்கள்.

தொழில் நுட்பம் வளராத அந்த காலத்தில் அம்பயர் சொல்வதுதான் தீர்ப்பு. இதில் சில சமயங்களில் அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டர்கள். அந்த அம்பயர்களைப் போல வீட்டுப் பெரியவர்களின் வார்தைக்கு மறு பேச்சு இல்லாத காலம்.
இன்றோ, தர்ட் அம்பயரின் உதவி இல்லாமல் எதையும் தீர்மானிக்க முடிவதில்லை. தர்ட் அம்பயராக பணியாற்றுவது பெண்களின் பெற்றோர். பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.

ஒன்று கேம் ஃபார் த சேக் ஆஃப் கேம் என்றால், மற்றது சர்வைவல் டு த ஃபிட்டஸ்ட்!

27 comments:


  1. ஆஹாஅருமையான ஒப்பீடு
    மிகவும் இரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து பாராட்டு. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. ஒருநாள் போட்டிகள் கூட முதலில் 60 ஓவர்கள், பின்னர் 55 ஓவர்கள் என்று இருந்தன. அதற்குப்பின்னரே அது 50 இல் நிலை கொண்டது.

    ReplyDelete
  3. //க்ரிஸ் கெயிலை தவற விட்டது போல சில நல்ல வரன்கள் மிஸ் ஆகலாம்.//

    நல்ல ரசிக்கத்தக்க ஒப்பீடு! ஆழ்ந்து கிரிக்கெட் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. கெயில் சீண்டப்பட்டதாலேயே சிறந்த ஆட்டத்தை வழங்கினார்...

    ReplyDelete
    Replies
    1. கெயில், லக்கில் நன்றாக விளையாடுகிறார். இதற்கு முன்பு அவர் சோபிக்கவில்லை. அதனால்தான் ஆர்சிபி அவரை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இண்டர்னேஷனலிலும் கெயில் அவ்வளவாக சோபிக்கலை.

      Delete
    2. கெயில் சீண்டப்பட்டதாலேயே சிறந்த ஆட்டத்தை வழங்கினார்... என்று அதனால்தான் சொன்னேன் நெல்லை.. அவருக்கும் வயதாகிறதே....

      Delete
  4. மொத்தத்தில் நல்ல ஒப்பீடு. வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று சொல்வார்கள். அது உண்மைதான் போலிருக்கு! சுவாரஸ்யமாய் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் அதை சீரியஸாக விளையாட வேண்டும்.

      Delete
  5. //பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.//

    என்ன அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்? முன்னெல்லாம் கடிதம் போட்டு அது போய்ச் சேர்ந்து பெற்றோர் பதிலும் போடுவதற்குள்ளாக விஷயம் சூடு ஆறி விடும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இரவு, பகல் பார்க்காமல் வாட்சப் மூலம் பெண்ணும் பெற்றோரும் தகவல் பரிமாற்றம். புக்ககத்தில் நடக்கும் ஒரு சின்ன மாறுதல் கூட உடனடியாகப் பெற்றோருக்குப் போய் விடும். பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது இப்போதெல்லாம் பெண்ணின் பெற்றோர் தான்!

    ReplyDelete
  6. கிரிக்கெட்டோடு திருமண வாழ்க்கையை ஒப்பீடு செய்ததில் இருந்து உங்கள் ஆழ்ந்த நுணுக்கமான கவனிப்புப் புரிகிறது. வாழ்க்கையை மட்டுமில்லாமல் கிரிக்கெட்டையும் ரசித்து நுணுக்கங்கள் தெரிந்து பார்க்கிறீர்கள். தொடர்ந்து நீங்களும் சிக்சர் அடியுங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய நுணுக்கமான விமரிசனத்திற்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  7. // பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.////

    ஆமாம் கீதா / பானு அக்கா.. எங்கள் அலுவலகத்திலேயே மிகச் சிறந்த இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  8. // தொடர்ந்து நீங்களும் சிக்சர் அடியுங்கள்! :) //

    சூப்பர் கீதா அக்கா....

    ReplyDelete
  9. உங்கள் வீடு கிரிக்கெட் ஸ்டேடியம்போல் விஸ்தாரமானது.

    மனம்போல் ஓடியாடலாம் அடக்குமுறைக்கு பழங்காலம்போல வீட்டில் பெரியவர்களின் குறிக்கீடு இருக்காது.

    ஒப்பீடுகளை இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டுக்கு வராமலேயே சரியாக கணித்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன்.

      Delete
  10. இரண்டாவது புகைபடத்தில் இந்த தமிழக குருட்டு இளைய சமூகம் கடவுளாக நினைக்கும் படகுகாரனின் முகத்தை காணவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. படம் இணைக்க வேண்டும் என்பதற்காக கூகுளில் எடுத்தது. யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை.
      வருகைக்கும், மீள் வருகைக்கும் நன்றி ஜி!

      Delete
  11. பானுக்கா மிகவும் ரசித்தேன் பதிவை. மிக செமையா கம்பேர் பண்ணிருக்கீங்க. செமை...

    சின்ன விஷயங்களை கூட கொண்டாடி உற்சாகப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சியர் லீடர்கள்.// அக்கா வீட்டில் கூட இப்போதைய பெண்கள், அவர்கள் பிறந்த நாளை மறந்துவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டுவிடுகிறார்கள். காய் கட் பண்ணுவதைக் கூட, வெந்நீர் போடுவதைக் கூட ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் முகம் சுருங்கி விடுகிறது. எல்லாவற்றிற்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள்.

    இப்போதைய பெற்றோர் கூடக் குழந்தைகளை ரொம்பவே பாராட்டி எதற்கெடுத்தாலும் ச்சோஓஓஓஓ ஸ்வீயீயீயீயீயீயீயீட் என்று....நல்ல விஷயம்தான் பாசிட்டிவ் விஷயம் குழந்தையின் கான்ஃபிடென்ஸ் வளருகிறது எல்லாம் சரிதான் ஆனால் ஒரே யடியாக மறுபக்கமும் தெரியாமல் வளர்க்கப்ப்டுகிறார்கள்.

    நான் நினைத்துக் கொள்வேன் பரவாயில்லை நம் தலைமுறை இதை நன்றாகவே நீந்திக் கற்றுக் கொண்டுவந்துவிட்டோம் என்று. ..

    ரசித்த பதிவு அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதிகப்படியான கவனிப்பும், அதிகப்படியான பாராட்டும் இந்த தலைமுறையை சீரழிக்கும் விஷயங்கள். வருகைக்கும், நீண்ட விமர்சனத்திற்கும் நன்றி கீதா.

      Delete
  12. நல்லா கம்பேர் பண்ணியிருக்கீங்க. எனக்கு 20 20 போரடிக்குது. இந்தக் கால திருமண வாழ்க்கை அவ்வளவு போரா? தெரியலை.

    நான், இரண்டாவதாக சேஸ் செய்யும் டீம் 5 ஓவர் முடிக்கும்போதே (கிட்டத்தட்ட 8 அல்லது 8.15) நான் தூங்கிடுவேன். எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. இந்தக்கால திருமண வாழ்க்கை போர் என்று யார் சொன்னது? மிகவும் பரபரப்பானது. பொறுமையாக அணுக வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிவதில்லை.

      Delete
    2. //எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.//

      OMG! என்னுடைய மாலை நேரத்தில் நீங்கள் உறங்கியே விடுவீர்களா? நான் ராக்கோழி. 12 மணிக்கு முன்னால் உறங்க மாட்டேன். சீக்கிரம் படுத்துக்க கொள்ள வேண்டும் என்று இரவு பத்தரைக்கு சொன்னால் என் மகன், "ஜோக் அடிக்காதம்மா" என்பான். சில சமயம் ப்ளாக் எழுதி விட்டு உறங்கச் செல்ல இரவு மணி இரண்டாகி விடும். காலையில் ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் எழுந்து கொள்வேன்.

      Delete
    3. //எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.// for me too. at any cost will go to bed before 9.00 PM

      Delete
  13. நான் ஐ பி எல் பார்ப்பதே இல்லை.

    ReplyDelete
  14. டெஸ்ட் மாட்ச் ஒரு கலை நின்று நிதானமாக ஆடவேண்டும் ஐபிஎல் ஒரு தடால் அடி ஆட்டம் அன்றைய ஃபார்ம் பொறுத்தது திருமண வாழ்க்கையோடு கம்பேர் செய்வதில்நான் வேறு படுகிறேன் டெஸ்ட் மாட்ச் அருமையான மனைவியோடு குடும்பம் நடத்துவது ஐபிஎல் சின்ன வீடோடு வாழ்வது

    ReplyDelete
  15. //டெஸ்ட் மாட்ச் அருமையான மனைவியோடு குடும்பம் நடத்துவது ஐபிஎல் சின்ன வீடோடு வாழ்வது//
    ஹா ஹா! இது கூட நன்றாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஒரு ஆணின் பார்வையில் சொல்கிறீர்கள், என்னுடையது பொது பார்வை. வருகைக்கு நன்றி!

    ReplyDelete