கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 16, 2018

பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க

பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க

காலா  வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது என்று நினைத்து சில தீவிர ரஜினி ரசிகர்கள் பெங்களூரிலிருந்து ஹோசூர், கிருஷ்ணகிரி, சேலம் போன்ற ஊர்களுக்குச் சென்று இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்கள். பார்த்து திருப்தி அடைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் பொழுதும் அதைப் பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து இந்தியா வரும் ஒரு தம்பதி, காலா படம் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும்,வேறு எந்த ரஜினி படமும் இந்த அளவிற்கு அவர்களுக்கு ஏமாற்றம் அளித்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி கூட ரசிகர்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச்சு ஒரு கலை. அந்தக் கலையை உபாசிப்பவர்கள்  இந்தியர்களாகிய நாம்.  

ஜப்பானியர்கள் ஆங்கில இலக்கணம் படிக்கும் பொழுது, 
ஐ ஒர்க், யூ ஒர்க், ஹி ஒர்க்ஸ் என்றும் 
ஃ பிரஞ்ச் காரர்கள் ஐ பிளே ,யூ பிளே, ஹி பிளேஸ் என்றும் 
இந்தியர்கள் ஐ டாக், யூ டாக், ஹி டாக்ஸ் என்றும் படிப்பார்கள் என்பது முன்பு  பிரபலமாக இருந்த ஒரு ஜோக். ஆனால் அந்த ஜோக் இப்போது உண்மையாகி விட்டது. நாம்  பஸ்ஸில் பேசுகிறோம்,  புகை வண்டியில் பேசுகிறோம், நடக்கும் பொழுது பேசுகிறோம், தொலை கட்சியில் பேசுகிறோம், எஃப்.எம். ரேடியோவில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறோம். 

ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். அன்று கலைஞர் டி.வி.யில் முன்பு எப்போதோ கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா ஒன்றை ஒளி பரப்பினார்கள். அதில் காணொளி காட்சியாக, கலைஞர் எழுதிய நீ..ண் ..ட .. வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு சிவாஜி பேசிய காட்சி காட்டப்பட்டது(எந்த படம் என்பதை நான் கவனிக்கவில்லை).

சிவாஜி பேசுவதற்கென்ன? பிரமாதமாக பேசினார். அதைப் பார்த்த பிரபு, உணர்ச்சிவசப்பட்டு, ஓடிப்போய் கலைஞர் கையை பிடித்து குலுக்கி விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து கண்களை துடைத்துக் கொண்டார். எல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

அந்த காட்சி அரசவையில் அரசனை நோக்கி வேற்று நாட்டு அரசனோ, வேறு யாரோ பேசுவதைப் போன்ற காட்சி. ஏனென்றால் டயலாக் பேசிய சிவாஜியும் அரச உடைகளைத்தான் அணிந்து கொண்டிருந்தார். ஒரு ராஜாவிடம் முறையிடுபவன் இத்தனை நீ...ள...மா...க... பேசினால் அது ராஜாவின் மண்டைக்குள் செல்லுமா? ராஜாங்க, நிர்வாக விஷயங்களைப் பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரிய வேண்டாமா?  

கேட்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ தன் வாய் ஜாலத்தை காட்டி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அப்போதைய நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தனது முதல் சட்ட சபை உரையை மிகவும் விஸ்தாரமாக தயாரித்து, "அரிஸ்டாட்டில் அப்படி சொல்லியிருக்கிறார், காரல் மார்க்ஸ் இப்படி சொல்லியிருக்கிறார்" என்றெல்லாம் நீளமாக பேசிக் கொண்டே போக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காமராஜ்,"அவங்க சொன்னதெல்லாம் இருக்கட்டும், நீங்க என்ன செய்யப் போறீங்க, அதைச் சொல்லுங்க" என்றாரம். அதுதானே தேவை? 


மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஐசன் ஹோவரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவர் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய கோப்பு(file) அவர் மேஜைக்கு வந்ததும், அது எத்தனை பக்கங்களை 
கொண்டிருந்தாலும் அதன் சாராம்சத்தை கால் பக்கத்திற்கு 
சுருக்கித் தருமாறு தன் உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டு விட்டு அவர் கால்ஃப் விளையாடச் சென்று விடுவாராம். அவருடைய உதவியாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு சுருக்கி தந்ததை படித்து விட்டு, விரைவாக முடிவெடுத்து விடுவாராம். 

நம்முடைய மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும் இரண்டு பக்க விஷயத்தை இரண்டே வரிகளில் சுருக்கி சொல்லும் திறன் உண்டு என்பார்கள். 

இவையெல்லாம் இருக்கட்டும் ஜோதிடத்தை தொழிலாக கொள்ளாவிட்டாலும், அதில் நிறைய ஆர்வமும், அறிவும், திறமையும் கொண்ட என் சகோதரர் எந்தெந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தன் அனுபவத்தில் கண்டு எங்கள் குடும்ப குழுவில் அனுப்பி இருந்தார். சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

மேஷ ராசிக்காரங்ககிட்ட எச்சரிக்கையா பேசணும். பாராட்டி பேசலாம், ஆனால் வாக்குவாதம் செய்யக் கூடாது.

ரிஷப ராசிக்காரங்ககிட்ட கனிவா, பக்குவமா பேசணும்.

மிதுனம் ராசிக்காரங்ககிட்ட அதிகமா வெச்சுக்காதீங்க. லைட்டா பேசுவாங்க, ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.

கடக ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம், எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரங்ககிட்ட பொறுமையா பேசணும். படபடன்னு பேசிட்டு போயிட்டே இருப்பாங்க. நேர்மையா பேசலைனா கட்டம் கட்டிடுவாங்க.

கன்னி ராசிகாரங்க நட்பை முறிச்சுக்கள் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. அதுவே உத்திரம் நட்சத்திரக் காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையை பார்த்து பேசுங்க.

துலாம் ராசின்னா, ஜாலியா பேசலாம். ஸ்வாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க, உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்டுருவாங்க.

விருச்சிகம்.. அன்பா, அனுசரணையா பேசலாம். கொஞ்சம் கவனக் குறைவா கிண்டலடிச்சா, நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல், கோபத்துல சுனாமி.

தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்.நாலு வார்த்தை பாராட்டுங்க, அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம். அர்ஜுனன் கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை. அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார். தேரோட்டியாக வந்தார். வில்லுக்கு விஜயனான அர்ஜுனன் தனுசு ராசி. 

மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க, அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள், பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம்... அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க, உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க.

மீனம்..அசந்தா ஆத்துல இல்ல, காத்துல கூட மீன் பிடிப்பாங்க. மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவங்ககிட்ட தெரிஞ்சுக்கலாம். 

சரிதானா என்று  சொன்னால் சந்தோஷப் படுவோம்.

35 comments:

 1. சில நட்சத்திரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ராசிகளில் வரும் சரியான பிறந்தநேரம் தெரியவேண்டும் என்னால் அனுமானிக்க முடியவில்லை நானும்கைரேகை பார்த்து பலன் சரியாகச் சொல்லியிருப்பதாகக் கூறு வார்கள் எனக்கு மட்டும்தான் அவைபொதுவாக அனுமானங்கள் என்று தெரியும்

  ReplyDelete
  Replies
  1. ஆம், ஒரு ராசிக்கு ரெண்டேகால் நட்சத்திரங்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள். உதாரணமாக மேஷ ராசியில் அஸ்வினி முழுவதும் அதாவது நான்கு பாதங்களும், பரணி முழுவதும்(நான்கு பாதங்களும்), கார்த்திகையில் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் வரும். இப்படி 27 நட்சத்திரங்களை 12 ராசிக்குள் அடக்க வேண்டும். ஆனால் இங்கே குறிப்பிட்டிருப்பது நட்சத்திர பலன்கள் இல்லை. ராசி பலன்கள்தான்.

   இவை அனுமானம் இல்லை, பல்வேறு ஜாதகங்களைப் பார்த்து, பல் வேறு மனிதர்களோடு பழகி, அவர்களளின் சுபாவம், அவர்களின் ராசியோடு எப்படி ஒத்துப் போகிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக(ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்) ஆராய்ந்து சொல்லப் பட்டது.

   Delete
 2. கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியிலும் வரும், ரிஷப ராசியிலும் வரும். முதல் இரு பாதங்கள் எனில் மேஷ ராசி, அடுத்த இருபாதங்கள் எனில் ரிஷப ராசி. இப்படியே எல்லா நட்சத்திரங்களிலும் வரும். எங்க வீட்டிலே எல்லாருடைய ராசிக்கும் சரியா இருக்கு! :)))))அதுவும் எனக்கு அப்படியே!

  ReplyDelete
  Replies
  1. அப்போ கீசாக்கா மேஷ ராசி.. அவ்வ்வ்வ்வ் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:)) நான் ஆரம்பமே சொன்னேன் தானே?:)

   Delete
  2. ஹிஹிஹிஹி! ஏமாறச் சொன்னது நானோ!

   Delete
  3. எச்சரிக்கை! கோபம் வந்தால் சுனாமியாம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். நன்றி அக்கா.

   Delete
 3. கொஞ்சம் சரியாகத்தான் இருக்கிறது.பேச்சு குறித்து ஆரம்பித்தது தொடர்ந்தது முடித்தவிதம் அருமை வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. காலா படம் நன்றாக இருந்ததாக துபாயிலிருந்து ரிவ்யூ வந்தது! வழக்கம்போல நிறைய மசாலா இல்லை என்றும் வித்தியாசமான படம் என்பதாலும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்திருக்கும்!

  என் கணவரின் கண் மருத்துவர் ஒரு முறை patient's case history என்பது நீளமாக இருக்கலாம் ஒவ்வொருத்தருக்கும். ஆனால் என்பதை அதன் முன்னால் present historyஐ சுருக்கமாக கொடுத்தால் தான் மருத்துவருக்கு உதவியாக இருக்கும் என்றார்.

  இன்னொரு நண்பர் இருக்கிறார். எப்போதுமே அவர் மேடையில் பேச ஆரம்பித்தால், அது ஒரு மணி நேரத்திற்கு மேல் என்றால்கூட அவை அப்படியே மந்திரத்தால் கட்டுண்டது போலிருக்கும். காரணம் அவரின் பேச்சுத்திறனும் சுவையும்.
  மொத்தத்தில் குறைவான பேச்சோ, அதிகமான பேச்சோ, அதன் சாராம்சம் ஈர்க்க வேன்டும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி. ரொம்பவும் அதிகமாக பேசினால் சாராம்சமே புரியாதே.

   Delete
 5. ஆத்துல மீன் பிடிக்கலாம் சரி, காத்துல மீன் பிடிக்க முடியுமா ?

  ReplyDelete
  Replies
  1. மணலை கயிறாக திரிக்க, முடியும், வானத்தை வில்லாக வளைக்க முடியும் என்றால் காற்றில் மீன் பிடிக்க முடியாதா? வருகைக்கு நன்றி சகோ.

   Delete

 6. நான் விருச்சிக ராசியை சார்ந்தவன் அம்புட்டுதான் சொல்லுவேன்

  ReplyDelete
  Replies
  1. அப்போ நீங்க இங்க யாருக்கோ ஹை ஃபாய்வ் கொடுக்கணும்.

   Delete
 7. >>> எந்தெந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை... <<<

  அது சரிதான்.. ஆயினும்,
  நமக்கு எதிரில் இருப்பவர் எந்த ராசி என்று தெரிந்தால் தானே!..

  அவர் வேண்டுமென்றே மாற்றிச் சொன்னாலும் வில்லங்கமாகி விடும்...

  அல்லது - அவர் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் எதிரானவர் என்றால் என்ன செய்வது!..

  எல்லாம் இருந்தாலும் அவரவர் தம் கோள்சாரத்தைப் பொறுத்து அவரவருக்கும் குணாதிசயங்கள் மாறும் என்பதும் பெரியோர் வாக்கு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. // நமக்கு எதிரில் இருப்பவர் எந்த ராசி என்று தெரிந்தால் தானே!..//
   இது ஒரு நல்ல பாயிண்டுதான், ஆனால், அதை கண்டு பிடிப்பதில்தான் நம் திறமை இருக்கிறது.
   வருகைக்கு நன்றி!

   Delete
 8. ஜப்பான் ரசிகர்கள் க்ரேட் :)

  பேசுதல் புரிகிற அளவுக்கு உடனடி ஆக்ஷன் எடுக்குமளவுக்கு இருந்தா போதும் .
  ஸ்கூல் போர்டில் டாக் லெஸ் ஒர்க் மோர் னு நான் எழுதி வச்சேன் :)

  எனக்கு என்ன ராசின்னு தெரியாது :)

  ReplyDelete
  Replies
  1. //எனக்கு என்ன ராசின்னு தெரியாது :)//
   ஒண்ணும் ப்ரமாதமில்லை, கண்டுபிடித்துவிடலாம்.

   Delete
 9. எனக்கு பேச்சு அவ்ளோ சுலபமில்லை ஆனா 5 மார்க் கேள்விக்கு 50 மார்க் அளவுக்கு பதில் விலாவாரியா எழுதுவேன் :)

  ReplyDelete
  Replies
  1. // ஆனா 5 மார்க் கேள்விக்கு 50 மார்க் அளவுக்கு பதில் விலாவாரியா எழுதுவேன் :)//
   நான் ஜஸ்ட் ஆப்போஸிட்.

   Delete
 10. ///பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க///
  நீங்க இப்பூடிச் சொல்லிட்டீங்க:) ஆனா எப்பவும் பேசிக்கொண்டே இருந்தால்.. லூஸ் எண்டு சொல்லிட மாட்டாங்க? கர்ர்ர்ர்:))

  அதுசரி அப்போ நீங்க ரஜனி அங்கிளுக்கோ சப்போர்ர்ட்ட்ட்:))?

  ReplyDelete
  Replies
  1. என்ன தலைப்பு கொடுப்பது என்று குழம்பி, கடைசியில் கொடுத்தது இந்த டைட்டில். :(
   // அதுசரி அப்போ நீங்க ரஜனி அங்கிளுக்கோ சப்போர்ர்ட்ட்ட்:))?//
   இதில் ஏதாவது உள் குத்து இருக்கிறதா?

   Delete
 11. சிவாஜி அங்கிள்பற்றி என்னமோ எல்லாம் சொல்றீங்க.. ஆனா எனக்குத்தான் புரியுதில்ல...

  என் ராசியும் என் கணவரின் ராசியும் ஒரே ராசி... நீங்க சொல்லியிருக்கும் சாத்திரம் உண்மைதான்.. ஒத்துக்கொள்கிறேன்... ஆனா என்ன ராசி எனச் சொல்ல மாட்டனே:) ஏனெனில் கீசாக்கா விளக்கெண்ணெயொடு உலாவருகிறா:) அதிரா என்ன ராசி என அறிய கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. // ஆனா என்ன ராசி எனச் சொல்ல மாட்டனே:)//
   ஓ! நீங்கள்தான் அந்த இரட்டையரா?

   Delete
 12. காலா ஏமாற்றம்தான். ரஜினி ரசிகர்களுக்கென சில காட்சிகள் இருந்தனவே.... அதையும் ரசிக்கவில்லையா அந்த ஜப்பானிய தம்பதியினர்..?

  ReplyDelete
 13. பேச்சு... இது என்னிடம் குறைவாக இருக்கும். ரிசர்வ் டைப் என்றில்லை. சிலர் இதனால் என்னை சிடுமூஞ்சி என்று கூட நினைத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 14. கலைஞர் பிறந்தநாள் அன்று அந்த டீவியில் போட்ட படம் இருவர் உள்ளம். இதை மறுமுயற்சியாக சற்றே மாறுபட்டு பிரபுவை வைத்து ராகங்கள் மாறுவதில்லை எடுத்தார்கள். ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது கலைஞர் பேசிய (பழைய) நிகழ்வில் காட்டப்பட்டிருக்கக்கூடிய சிறு துணுக்கு காட்சி போலும்.

  ReplyDelete
 15. காமராஜ் காமராஜ்தான். அவர் செயல் வீரர். இந்த ராசிபலன் எல்லாமே ஃப்ராட் என்கிற எண்ணம் உண்டு எனக்கு!

  ReplyDelete
  Replies
  1. // இந்த ராசிபலன் எல்லாமே ஃப்ராட் என்கிற எண்ணம் உண்டு எனக்கு!//
   மை காட்! இப்படி ஒரு கடுமையான கருத்து ஸ்ரீராமிடமிருந்தா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுங்கள், மோசடி என்பது சரியில்லை, too harsh. ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்.

   Delete
  2. அவ்வளவு கடுமையாகவா தெரிகிறது?

   ஸாரி...

   சாதாரணமாகத்தான் சொன்னேன்.

   குமுதம் ஆசிரியர் குழுவோ, வேறெங்கோ..

   'இந்த வார ராசிபலன் ரெடியாகவில்லையே இன்னும்?' என்று உதவி ஆசிரியர் கேட்டதும், 'போன வார ராசி பலனை எதுத்து அதை பலன்களை ராசி மாற்றி போடுங்கள்.. பொதும என்றாராம். எங்கோ படித்திருக்கிறேன். அது நினைவுக்கு வரவும் அப்படிச் சொன்னேன். தவிரவும், சோ கூட இதே கருத்தைச் சொல்லியிருந்தார்!

   Delete
  3. சோ ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். ஒரு சிலர் செய்யும் இம்மாதிரியான காரியங்களினால் அப்படிச் சொல்லி இருக்கலாம். ராஜிவ் காந்தி இறந்தப்போ அவர் எத்தனை பேர் ஜோசியத்தில் சொல்லியும் அதை அவர் தீவிரமாக எடுத்துக்கலை என்பதைச் சொல்லி இருப்பார். அதோடு ஜோதிட சாஸ்திரத்தில் அவருக்குத் தீவிரமான நம்பிக்கை உண்டு.

   Delete
  4. நானும் இந்த ஜோதிடம் பற்றி ஒரு பதிவே போட்டிருந்தேன். எங்க அப்பா வீட்டு ஜோசியர் மாமா சொன்னதெல்லாம் எங்க வரை பலித்திருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கேன். அதே போல் இரு நண்பர்கள் எனக்குக் கை ரேகை பார்த்துச் சொன்னதும் பலித்திருக்கிறது.

   Delete
 16. காலா - பார்க்கவில்லை - பார்க்க விருப்பமுமில்லை! :)

  பேச்சு - பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் சிலர் நம் நாட்டில்!

  ராசிபலன் - என்னுடைய ராசிக்கு சரியாகத் தான் இருப்பதாகத் தோன்றுகிறது! என்ன ராசி என் ராசி என்றால் சொல்ல மாட்டேன்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட். நான் கவனித்தவரையில் நீங்கள் ஒரு டிப்ளமேட்.அதனால் துலா ராசி, அல்லது மிதுன ராசி. சரியா?

   Delete