கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 13, 2018

உரத்த சிந்தனை!

உரத்த சிந்தனை!



எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு  இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்? 

எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம். பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.  


அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.


போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச  வேண்டும்  என்று  இன்றும்  சிலர்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர்  பொது  இடம்  என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய  தகவல்களையும்  பகிர்ந்து  கொள்கிறார்கள்.  


ஹார்ன்  அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம்  எப்படிப்பட்ட  டிராபிக்  ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள்.  





சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்? 

நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்"  என்னும்  வசனத்தைக்  கூட   ஹை  டெசிபெல்லில்தான்  கூறுவார்கள்.  


எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் சமீபத்தில் அவர் பெண் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டு வந்தார். அதை பற்றி அவரிடம் விசாரித்த பொழுது, "எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் மிகவும் நிசப்தமாக இருக்கிறது. அவ்வளவு சைலண்டாக இருந்தாலும் என்னவோ போல் இருக்கிறது" என்றார்.  

ஏதோ நிர்பந்தத்தால் பூ விற்பவர் வீட்டில் தங்க நேரிடும் ஒரு மீனவன் மறு  நாள் காலையில் சொன்னானாம், "முடை நாற்றம் இல்லாத இந்த பூ வாசனையில் தூக்கமே வரவில்லை" என்று. 


 இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது.  இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக  இருக்கும்  நம் நாட்டில்தான் தியானம், யோகம்  போன்ற  விஷயங்களும்  இருக்கின்றன. மௌன  விரதம்  அனுஷ்டிக்கும்  பழக்கமும்  நம்  மதத்தில்  ஒரு வழிபாட்டு முறை. ஒரு  வேளை  நம்மை  சுற்றி  இத்தனை  சத்தம்  இருப்பதால்தான் ஒரு  சிலராவது  அமைதியை  தேடிச்  செல்கிறார்கள்  போலிருக்கிறது.  பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் குறைவு. ஆனால் பெரும்பாலானோர் அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ? 


படங்கள்: கூகிள். நன்றி

40 comments:

  1. மேடம் மஞ்சள் கலர் ஹை லைட்டை எடுத்துவிடுங்கள் படிக்க கஷ்டமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எடுத்து விட்டேன், நன்றி!

      Delete
  2. அப்படிபட்ட இரைச்சல்கள் இல்லாவிட்டால் அது மயான பூமி போல இருக்கும்... இந்தியாவில் எனக்கு பிடித்ததே அந்த சத்தங்கள்தான் அதுதான் உயிர்பிடிப்போட இருப்பதாக தோன்ற செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எனக்கும் இந்த எண்ணம் உண்டு
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மிகக் குரிப்பாய் இறுதிப் பத்தி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. எனக்கும் இந்த ஹார்ன் அடிக்கிறது பிடிக்காத ஒன்று .சில நேரம் சிக்னலில் யாரவது மூவ் பண்ணாம இருந்தா பின்னாடி இருக்கிற கார் அடிப்பாங்க பாவமா இருக்கும் நெஞ்சு படபடன்னு இருக்கும் .சத்தத்தோட பழகிட்டோம் நம்ம நாட்டில் .மதுரை தமிழன் சொன்ன மாதிரி இங்கே வெளிநாட்டில் 8 மணி இரவுக்கு மேலே மயான அமைதிதான் .
    நீங்க சொன்ன பூ விற்பவன் மீன்காரன் போல் என் கசின்ஸ் வீடு ரெயில்வே ஸ்டேஷன் ஒட்டி .ட்ரெயின் சத்தம் கேட்காட்டி தூக்கம் வராதாம் அவங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. நம் ஊரில் என்ன கொடுமை என்றால், கடுமையான டிராபிக் ஜாம் என்று தெரியும். வண்டி ஒரு இன்ச் கூட நகர முடியாது என்று புரிந்து கொண்டே, பீம், பீம் என்று ஹார்ன் அடித்து வெறுப்பேற்றுவார்கள்.
      வருகைக்கு நன்றி ஏஞ்சல்.

      Delete
  6. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு சிட்டியில் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்க வழக்கம்... அதனை இன்னொரு இடத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது கஸ்டமே.

    இதனாலதானே முற்காலத்தில் திருமணங்கள்கூட தம் கிராமத்தை விட்டு அடுத்த கிராமத்தில் பெண்ணோ மாப்பிள்ளையையோ தேட மாட்டார்கள்... எதுவும் ஒத்து வராது எனும் பயம்தானே..

    கோன் இங்கும் நம்மிடத்தில்.. நம் காரில் கோன் என ஒன்று இருப்பதே மறந்து விட்டோம். பிள்ளைகள் எப்பவாவது ஆசைக்கு ஒருக்கால் அடிச்சுப் பார்க்கட்டோ எனக் கேட்பார்கள்.. நம் வீட்டில் பார்க் பண்ணியபின் மெதுவாக ஒரு தடவை பம்.. என அடிக்க விடுவோம்ம். பாஆஆம் என அடிச்சால் அயல் சனம் எல்லாம் திடுக்கிட்டு விடுமோ எனப் பயம்...

    ஆனா சில சிட்டிகளில் கோன் அடிக்கிறார்கள் வெளி நாட்டிலும்..

    ReplyDelete
    Replies
    1. ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க

      Delete
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா கோன் அடிக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காதடைக்குதூஊஊஊஊஊஊ:))

      Delete
    3. //ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு சிட்டியில் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்க வழக்கம்... அதனை இன்னொரு இடத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது கஸ்டமே.//
      வேறு எந்த நாட்டோடும் நம் நாட்டை ஒப்பிடவில்லை அதிரா. நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கத்தை கொஞ்சம் உரக்க சொன்னேன். அவ்வளவுதான்.

      Delete
    4. //கீசாக்கா கோன் அடிக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காதடைக்குதூஊஊஊஊஊஊ:))//
      ஹா ஹா ஹா ...

      Delete
  7. எதுவுமே பழக்கத்தால் வருவதுதானே... நைட்டில் ரீ குடிச்சுப் பழகிட்டால் குடித்தால்தான் திருப்தி.. சிலர் பதறுவார்கள் என்ன நித்திரைக்குப் போக முன் ரீ ஆஆஆஆஆ என:)).

    உண்மைதான் அது என்னவோ மேலை நாட்டவர்கள்தான் செல்லப்பிராணிகளில் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். நம் நாடுகளில் எத்தனை வீடுகளில் அடிப்பது காலால் உதைப்பது கலெறிவதெல்லாம் பார்த்திருக்கிறோம்ம்... ஆனா அன்பு பாசம்..நம் நாட்டில்தான் அதிகம் என மேடையில் பேசுவோர் சொல்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. //ஆனா அன்பு பாசம்..நம் நாட்டில்தான் அதிகம் என மேடையில் பேசுவோர் சொல்கிறார்கள்...//
      பொல்லாத குறும்புக்காரிதான் நீங்கள். ஹாஹாஹா

      Delete
    2. மீண்டும் மீண்டும் வந்து கருத்து கூறியதற்கு நன்றி கூற மறந்து விட்டேன். நன்றி! நன்றி! நன்றி!

      Delete
  8. இன்னமுமா கல்யாண மண்டபங்களில் லவுட்ஸ்பீக்கர் வைத்து சத்தம் ஏற்படுத்துகிறார்கள்? ரொம்பப் பழைய வழக்கமாயிற்றே... உண்மையில் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களுக்கு அரசாங்கம் தடை போட்டிருக்கிறது. கெட்டிமேளம் அடிப்பதற்கான காரணமே வேறு எந்த அமங்கலமான சொற்களும் காதில் விழுந்து விடக் கூடாது என்றுதானே?

    கல்யாண வரவேற்புகளில் இசைக்கச்சேரி வைப்பதற்கு நான் பயங்கர எதிரி!

    ReplyDelete
    Replies
    1. ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!

      Delete
    2. //இன்னமுமா கல்யாண மண்டபங்களில் லவுட்ஸ்பீக்கர் வைத்து சத்தம் ஏற்படுத்துகிறார்கள்?//
      திருமணம் மண்டபத்தில் முடிந்து விட்டது. மருமகளும்,சம்பந்திகளும் வரும் பொழுது இப்படி லவுட் ஸ்பீக்கரில் பாடல் அலற விட்டால்தான் அவர்களுக்கு மரியாதையாம்.

      Delete
    3. //கெட்டிமேளம் அடிப்பதற்கான காரணமே வேறு எந்த அமங்கலமான சொற்களும் காதில் விழுந்து விடக் கூடாது என்றுதானே?//
      அது மட்டுமல்ல, நாதஸ்வரம் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வாத்தியம்.

      Delete
  9. ஃபோனில் பொது இடங்களில் சத்தமாகப் பேசுபவர்களை தினமும் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது போல ஒரே சவுண்டு! போனை கட் செய்துவிட்டால் கூட அவர்களுக்கு இவர்கள் பேசுவது கேட்கும் என்பேன்!

    ReplyDelete
  10. //செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள்/

    இந்திய முரண்பாடு!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,மீள் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  11. சத்தமே இல்லாமலும் இருக்கமுடியாதே! ஒரே அமைதின்னாலும் ஒரு மாதிரியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சத்தம் தேவைப்படும்போது எயார்போர்ட் பக்கம் போய்க் கொஞ்ச நேரம் நின்றிட்டு வாங்கோ:))

      Delete
    2. சத்தத்திற்கும், இரைச்சலுக்கும் வித்தியாசம் இல்லையா அக்கா?

      Delete
  12. பொது இடத்தில் சத்தமாக போன் பேசும் நபர்கள்களைக் கண்டால் எனக்கு பத்திக்கொண்டு வரும்.

    எனக்கு தெரிய சத்தமின்றி அழகாக கள்ளத்தனமாகவும் ரகசியம் பேசுபவர்கள் அரேபிய பெண்மணிகளே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! உங்கள் கூற்றுபடி பாதி நேரம் உங்களுக்கு பற்றிக் கொண்டுதான் வந்திருக்கும் இல்லையா?
      எங்கள் வீட்டில் இளைய தலைமுறையினர் எல்லோரும் அரேபிய பெண்கள்தான். ஹா ஹா! நன்றி சகோ!

      Delete
  13. நீங்கள் எழுதியுள்ளது சரி. ஆனால், 30 வருடங்களுக்கு முன்னால் சப்தம் இல்லாமல்தான் இருந்தது. இப்போ இரைச்சல் தாங்கலை.

    25 வருஷம் வெளில இருந்ததற்கும் இங்கு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு தெரிகிறது. இங்கு கூச்சல், குழப்பம், வாகன சப்தம், ஹார்ன்... இது தவிர நிறைய திருவிழா, கோவில் லவுட் ஸ்பீக்கர்கள். தாங்கலைடா சாமி.

    இன்னொன்று, நம்ம ஊரில் எந்தப் பொருளையும் பயன்படுத்தத் தெரியாமல் ஆனால் வாங்கக்கூடியவர்கள்தான் அதிகம். போனை எப்படி உபயோகப்படுத்துவது என்று 10 சதவிகிதம் பேர்களுக்குக்கூட (இந்தியர்கள்) தெரியாது. இரயிலில், யூடியூப் போன்ற விடியோக்களை ஹெட்போன் இல்லாமல் உபயோகிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன், எம்பி3 பாடல்களை இரைச்சலாக ஒவ்வொரு மொபைலிலும் வைப்பார்கள். அடுத்தவர்கள் ஸ்பேசை மதிக்காத பண்புதான் பெரும்பாலானவர்களிடத்தில்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் காரணம் நாம்.. வசதியை நாடியும் வேலை வாய்ப்பு, படிப்பு என நம் பிறந்த ஊரை விட்டு புலம்பெயர்வதுதானே?

      பிறந்து வளரும்போது அச்சூழலுக்கேற்பவே பழக்கப் பட்டிருப்போம்ம்... இப்போ பல இடங்களையும் பார்ப்பதால் ஒப்பிடுகிறோம்.. அதனாலேயே சிலது எரிச்சலைக் கொடுக்கிறது, சிலது நம்மிடத்தில் அப்படி இல்லையே என ஏங்குகிறது மனது.

      முன்பெல்லாம் ஒவ்வொரு சமயத்தவர்களுக்கும் ஒவ்வொரு ஏரியா இருக்குமெல்லோ.. அப்போ அதுக்குப் பழக்கப் பட்டிருப்போம்.. ஆனா இப்போ நாம் இஸ்லாமியர்கள் அருகில் போயிருந்து கொண்டு சே சே 4 மணிக்கே ஸ்பீக்கரில் சத்தம் போடுகிறார்களே என நினைக்கிறோம்.. அதுபோல இந்துக் கோயிலுக்கு அருகில் வந்திருந்து பாட்டுப் போடுகிறார்களே என கலங்குவோரும் உண்டு... எல்லாத்துக்கும் காரணம் முன்னேற்றமும் புலம் பெயர்வுகளும்தானே...

      நீங்க கூட பிறந்த ஊரில் இல்லாமல் புலம்பெயர்ந்துதானே இருக்கிறீங்க.. அதனாலேயே இரைச்சல் என்கிறீங்க.. ஆனா உங்கள் பிள்ளைகள் அங்கேயே பிறந்து வளர்வதால் அவர்களுக்கு அதுதான் பிடிச்சிருக்கும்:)).

      உங்கள் கடசிப் பரா ஹா ஹா.. அது உண்மையேதான்.... :))

      Delete
    2. உங்களோடு 100% ஒத்துப் போகிறேன்.

      Delete
    3. வாங்க அதிரா! // எல்லாத்துக்கும் காரணம் முன்னேற்றமும் புலம் பெயர்வுகளும்தானே...// மாறுதல் காலத்தின் கட்டாயம். நாம் உடை, உணவு விஷயங்களில் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அந்த காலத்தில் இரண்டு கட்டு, அல்லது மூண்டு கட்டு வீடு, வாசலில் நின்று கொண்டு,ஏ! கோவாலு, என்று அப்பா அழைத்தால், கொல்லையில் இருக்கும் மகன், "ஓவ்" என்பார். அதே பழக்கத்தை 650-800 சதுர அடி வீட்டிலும் கடை பிடிக்க முடியுமா?

      Delete
  14. /நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்" என்னும் வசனத்தைக் கூட ஹை டெசிபெல்லில்தான் கூறுவார்கள்./படம்பார்ப்பவர்களுக்காக அது

    ReplyDelete
    Replies
    1. ஜிஎம்பி சார்... அது 'படம் பார்ப்பவர்களுக்கு' இல்லை. 'படம் கேட்பவர்களுக்கு' ஹா ஹா ஹா

      Delete
    2. மிகச் சமீபம் வரை இருட்டில் நிகழும் காட்சி என்பார்கள், ஆனால் நல்ல வெளிச்சமாக இருக்கும். இருட்டை இருட்டாக காண்பிக்கவே நாம் இப்போதுதானே கற்றுக் கொண்டிருக்கிறோம்? வருகைக்கு நன்றி!

      Delete
  15. இரைச்சல் இல்லாது இவ்வுலகமா!...
    சத்தம் இல்லாத உலகம் யாருக்கு சமர்ப்பணம்!?...

    பல ஆண்டுகளுக்கு முன்பு வரை
    மாலை நேர கடைத்தெரு ஏலச் சத்தங்களாலும் லேகிய விற்பனைகளாலும் நிறைந்திருக்கும்..

    இன்னும் கொஞ்சம் இருட்டி விட்டால் தோல் பொம்மை மற்ற கூத்துக்காரர்களால் கலகலத்து இருக்கும்...

    ஆனாலும் தற்காலத்தில்
    அநியாயத்துக்கு சத்தம் கூட்டுவது ஆபத்து தான்...

    இருந்தாலும்,
    கொட்டிக் கிழங்கோ கிழங்கு!.. - என்று, கம்பனுக்காக - கலைமகள் கூவி வந்ததும் இம்மண்ணில் தானே!..

    ReplyDelete
    Replies
    1. வியாபாரிகளின் கூவலை இரைச்சல் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நான் கூட 'தெருவில் ஒலித்து தேய்ந்த கூறல்கள் என்று அவைகளைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
      லவுட் ஸ்பீக்கரின் ஒலி தன்னுடைய டம்பத்தை வெளிப்படுத்த, ஹார்ன் சப்தம் பொறுமை இன்மையை காட்டுகிறது. நான் அவைகளைத்தான் சொன்னேன்.
      பின்னூட்டத்தை அழகான கவிதையாக்கி விட்டீர்கள். நன்றி!

      Delete
  16. உரத்த சிந்தனை அதிகம் சிந்திக்க வைத்தது.

    ReplyDelete