கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 3, 2018

எண்ணச் சங்கிலி

எண்ணச்  சங்கிலி  


பத்து நாட்கள் இடைவெளியில் சென்னைக்கு இரு முறை செல்ல வேண்டிய நிர்பந்தம். பயணத்தின் பொழுது சேத்தன் பகத்தின்,"ஒன் இந்தியன் கேர்ள்"(இலக்கணப்படி An Indian girl என்பதுதான் சரி இல்லையோ?) படிக்கலாம் என்று  நினைத்தேன்.

சதாப்தியில் எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த பெண்மணி என்னைப்  பார்த்து சினேகமாக புன்னகைத்தார்.  அவர் படித்துக் கொண்டிருந்த சாரி பாராயணம் செய்து கொண்டிருந்த சுந்தர காண்டத்தை முடித்து விட்டு, என்னோடு எடியூரப்பா பதவி ஏற்க முடியாமல் போனது, நடிகையர் திலகத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, சாவித்திரி, ஜெமினி, 
ந.தி. படம் பற்றி கமலா செல்வராஜ் தந்தி டி.வி.யில் பேசியது, ஐ.பி.எல். போட்டிகள், உஷ்ணமாகிக்கொண்டு வரும் பெங்களூர் என்று பேச்சு பல தளங்களில் பயணித்தது. 

இடையே சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு 
ஃபோன் செய்து, "நாளைக்கு அத்தையாத்து(அத்தை வீட்டு) விசேஷத்திற்கு வரும் பொழுது க்ஷேவ் செய்து கொண்டு வா, ப்ளீஸ், இந்த ஒரு நாள் அம்மா சொல்றத கேளு.." என்று கெஞ்சினார்.  

இப்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன்களே ஷேவ் செய்து கொள்வதில்லை. மணமகளுக்கு இணையாக  ஃபேஷியல் செய்து கொண்டாலும் திருமணத்தன்று மூன்று நாள் தாடியோடும், கலைந்த தலையோடும்தான் காட்சி அளிக்கிறார்கள். என்ன நாகரீகமோ? எதிர் காலத்தில் இவர்கள் குழந்தைகள் இவர்களின் திருமண ஆல்பத்தை பார்த்து விட்டு,"என்னப்பா, கல்யாணத்தன்று இவ்வளவு கேவலமா இருந்திருக்க?" என்று கேட்காமல் இருக்க வேண்டும்.  

திருமணம் என்றதும் தோன்றுகிறது. திருமணமாகி 25வருடங்கள் ஆவதை வெள்ளி விழா என்போம், ஐம்பதாவது வருடத்தை பொன் விழா என்போம்.   மர ஆண்டு, காகித ஆண்டுதகர ஆண்டுமுத்து ஆண்டு இவையெல்லாம் எந்த வருடங்களை குறிக்கிறது தெரியுமா?

சேத்தன் பகத்தின் புத்தகத்தை சென்னையிலேயே மறந்து வைத்து விட்டேன். அதற்குப் பதிலாக டவுன்லோட் செய்து வைத்திருந்த சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' படித்து முடித்தேன். இது குமுதத்தில் தொடராக வந்த பொழுது படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. அப்போதெல்லாம் 24 ரூபாய் தீவு படிப்பதற்கு முன்னால் சுஜாதா ஒரு மேம்போக்கான எழுத்தாளர் என்ற அபிராயம்தான் எனக்கு இருந்தது.
சுஜாதாவுக்கே உரிய திறமையான எழுத்து. இதிலும் கணேஷ்,வசந்த் வருகிறார்கள், ஆனால் மிகவும் சொற்பமாக என்பது ஆச்சர்யம்தான். இந்த கதையை படித்தவுடன் சுஜாதாவின் எல்லா பாதிக்கப்பட்ட பெண்களும் டைரி எழுதுவார்களோ? என்று தோன்றியது. 'ப்ரியா' ஆன் லைனில் கிடைக்கவில்லை. கிடைத்தால் படிக்கலாம்.  

31 comments:

 1. உண்மைதான் இன்றைய இளைஞர்கள் தாடியோடுதான் அலைகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. விரக்தி, இடதுசாரி சிந்தனை இவைகளை குறிக்க பயன்பட்ட தடி இப்போது நாகரீகமாகி விட்டது. வருகைக்கு நன்றி சார்.

   Delete
 2. ,"என்னப்பா, கல்யாணத்தன்று இவ்வளவு கேவலமா இருந்திருக்க?" என்று கேட்காமல் இருக்க வேண்டும்.//

  அக்கா கேக்கும்ன்றீங்க?! எனக்குத் தோனலை. இப்பவே பசங்க இப்படினா எதிர்காலத்துல வேற ஸ்டைலா இருக்கும்னுதான் தோணுது...

  அப்படியாக சுஜாதா கதை ஒன்று முடிச்சீங்க...சூப்பர்.

  கீதா

  ReplyDelete
 3. காகித விழா - ஒன்றாவது ஆண்டு?

  ஐந்தாவது ஆண்டு - மர விழா

  30 - முத்து ஆண்டு

  10 - தகர ஆண்டு

  என்று நினைவு. குறித்து வைத்திருந்தேன். ஃபைலை பெயர் போடாமல் சேவ் செய்ததில் தேடி எடுக்க முடியலை..நினைவில் இருந்ததைக் கொடுத்திருக்கேன்..சரியோ?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமா கீதா நான் குடுத்த லிங்கிலும் இருக்கு 1-35

   Delete
 4. https://www.hitched.co.uk/wedding-planning/organising-and-planning/the-complete-wedding-anniversary-guide_850.htm

  முதல் வருஷம் பேப்பர்
  30..pearl ,tin இஸ் டென்த்

  இந்த லிங்க்கில் நிறைய இருக்கு

  ReplyDelete
 5. அந்த இண்டியன் கேர்ள் புத்தகத்தை எல்லாரும் சொல்றாங்களேன்னு கியூரியாசிட்டியில் pdf இல் படிக்க ஆரம்பிச்சு அப்டியே மறந்து விட்டுட்டேன் .சுஜாதாவின் பல புத்தகங்கள் முடிச்சாச்சு .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், சேத்தன் பகத்தின் 'டூ ஸ்டேட்ஸ்' படிக்க ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டேன். படம் பார்த்தேன்.
   சுஜாதாவின் 'ப்ரியா' ஆன் லைனில் கிடைக்கிறதா?

   Delete
 6. என் மகன்களும் தலைமுடி தாடியோடுதான் அலைகிறார்கள். 500 ரூபாய், 400 ரூபாய் கொடுத்து முடி வெட்டுகிறார்கள். இடதுபக்கம் வலதுபக்கம் என்று வினோதமாக வெட்டிக் கொண்டு வருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. என், கல்லூரியில் படிக்க ஆரம்பித்திருக்கிற மகனும் மொட்டை அடித்துக்கொளப்போகிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். இப்போ பசங்களே வித்தியாசமாத்தான் இருக்காங்க.

   Delete
  2. ஹா ஹா ஹா எங்கள் சின்னவரும்.. மொட்டை தான் அடிக்கப்போகிறேன் என ஒரே அமளி.. மை ஹெயார் மை டிஷிசன் என்கிறார்:)).. அதெல்லாம் ஓகே ஆனா மை மணி:)) அதனால நாங்க சொல்றபடி வெட்டோணும் என்றால்.. சிரிப்பார்:)).. ஹா ஹா ஹா

   Delete
  3. எங்கள் பக்கத்து வீட்டு பையன் இன்ஜீனீயரிங் படிக்கிறான். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவரின் ஹேர் ஸ்டயிலும் வினோதமாக இருக்கும். என்ன செய்ய முடியும்? இதெல்லாம் ஒரு phase.

   Delete
  4. @நெ.த. : //இப்போ பசங்களே வித்தியாசமாத்தான் இருக்காங்க.// நீங்கள் மாணவராக இருந்த பொழுது உங்களை பற்றி கூட உங்கள் வீட்டு பெரியவர்கள் இப்படி கூறியிருக்கலாம்.

   Delete
 7. 24 ரூபாய்த்தீவு கதை படித்திருக்கிறேன். ஆனால் என்ன கதை என்று நினைவுக்கு வரவில்லை. எடுத்து ஒரு புரட்டு புரட்டினால் நினைவுக்கு வரும்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பத்திரிகை நிருபராக வரும் கதாநாயகனின் சின்னத் தங்கைக்கு நேர்ந்த கொடூரம். அதைப் படிச்சதும் நான் 24 ரூபாய் தீவு தொடராக வந்தப்போப்
   படிக்கிறதையே விட்டுட்டேன். ஹிஹிஹிஹி மீ அப்போ ரொம்பபபபபப்பபபச் சின்னக் குழந்தையா? இதெல்லாம் படிக்கிறச்சே மனசுக்கு வருத்தம் அதிகம் ஆயிடும். :)))))) அப்புறமாச் சில வருஷங்கள் முன் தான் படிச்சுட்டு விமரிசனம் கூட எழுதின நினைப்பு!

   Delete
  2. //எடுத்து ஒரு புரட்டு புரட்டினால் நினைவுக்கு வரும்.// உங்கள் வீட்டில் நீங்கள் அடுக்கி வைத்திருக்கும் அட்டைப் பெட்டிகளை பிரித்ப் பார்ப்பது கஷ்டம். அதற்கு பதில் tamil nanool என்னும் தளத்திற்குச் சென்று படித்து விடுங்கள்.

   Delete
  3. //இதெல்லாம் படிக்கிறச்சே மனசுக்கு வருத்தம் அதிகம் ஆயிடும். :))))))//
   அவ்வளவு இளகிய மனசா உங்களுக்கு?(வருத்தப் படுகிறவங்க போடுகிற ஸ்மாய்லியை பாருங்கப்பா..!)
   'என் இனிய இயந்திராவில்' ஜுனோ சாவது போல் முடியும் அத்தியாயம் படித்து விட்டு, "ஜுனோ செத்து விட்டது, ஜுனோ செத்து விட்டது" என்று ஒரு வாரம் புலம்பிக் கொண்டிருந்தேன்.

   Delete
 8. தாடி குறித்த அப்சர்வேஷன் சரிதான். ரயில் பிரயாணம் எப்போதும் இன்டெரெஸ்டிங்.

  ReplyDelete
  Replies
  1. ஆம், பஸ், மற்றும் விமான பயணங்களை விட ரயில் பிரயாணம் சிறந்ததுதான். மீள் வருகைக்கு நன்றி நெ.த.

   Delete
 9. இப்போல்லாம் தாடி வித விதமான டிசைனில் பிரபலம். :)))))) தாடி இல்லைனா இளைஞனே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்! மீள் வருகைக்கு நன்றி

   Delete
 10. 'தாடிகள் எல்லாம் தாகூரா? மீசைகள் எல்லாம் பாரதியா?' என்ற வைரமுத்துவின் வரிகளை இவர்களுக்கு நினைவூட்டலாமே!

  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. கீ.சா. அக்கா சொல்லியிருப்பதுதான் பதில். வருகைக்கு நன்றி சார். உங்களுடைய மின் நூல் படித்துக் கொண்டிருக்கிறேன்.

   Delete
 11. தாடி வைத்துக் கொள்வது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை - நான் கூட தாடி வைத்துக் கொள்வதுண்டு! :) ஆனால் வீட்டினருக்குப் பிடிப்பதில்லை என்பதும் உண்மை!

  சுஜாதாவின் இந்தக் கதை படித்த நினைவில்லை.

  பயணங்கள் இனிமையானவை. ஆதலினால் பயணம் செய்வோம்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட். தாடி வைத்துக் கொள்பவர்களுக்கு அது பிரச்சனை கிடையாது, பார்பவர்களுக்குத்தான் பிரச்சனை. கருத்துக்கு நன்றி.

   Delete
 12. தாடியோடு இருப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். கேட்டால் அதான் அப்பப்ப ட்ரிம் பண்ணிவிடுகிறோமே என்கிறார்கள். பள்ளிக்காலத்தின் இறுதியிலும், கல்லூரிக்காலத்திலும் இரு காதுகளும் மூடும் வரை நான் முடி வளர்த்திருந்தேன். அப்போதைய நிழல்கள் திரைப்படத்தில் வரும் நடிகர்களைப் போல. யாராவது முடியை குறைக்கச் சொன்னால் கோபம் வரும். அந்தந்த காலத்தின் நாகரிகம் (கோமாளித்தனம்) இதுதானோ?

  ReplyDelete
  Replies
  1. எழுபதுகளில் நீண்ட முடியும், பெல் பாட்டம் பேண்டும்
   ஃபேஷன். எங்கள் வீட்டில் ஞாயிறு என்றால் அப்பாவுக்கும், அண்ணாவுக்கும் சண்டை வரும். தலை முடியை வெட்டச் சொல்லி அப்பா கத்த, முடியாது என்று அண்ணா எகிற, ரகளைதான். இதனால் அப்பாவின் கண்ணில் படாமல் அண்ணா ஒளிந்து ஒளிந்து நடந்தது நினைவுக்கு வருகிறது.

   Delete
 13. ஒரு குட்டிப் போஸ்ட்டில் பெரிய 3 சந்ததிகளை வெரி சோரி சங்கதிகளை உள்ளடக்கிட்டீங்க:))... ஆனாலும் பாருங்கோ.. மூன்று விசயத்திலயும் அந்த தாடி மட்டர்தான் எல்லோரையும் கவர்ந்திடுச்சீஈஈஈஈஈ ஹா ஹா ஹா:).

  பஸ் ல பக்கத்துப் பெண்மணி கதைச்சதை ஒட்டுக் கேட்டுக்.., கொண்டு வந்து ஒரு போஸ்ட்டும் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. //மூன்று விசயத்திலயும் அந்த தாடி மட்டர்தான் எல்லோரையும் கவர்ந்திடுச்சீஈஈஈஈஈ//
   ஆமாம்! எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

   //பஸ் ல பக்கத்துப் பெண்மணி கதைச்சதை ஒட்டுக் கேட்டுக்.., கொண்டு வந்து ஒரு போஸ்ட்டும் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
   இதுதானே வேண்டாம் என்கிறது. :))

   Delete
 14. ஆம் இன்றைய இளைஞர்களின் ரசனை மடத்தனமாகவே இருக்கிறது.

  திருமண மாப்பிள்ளை மூன்றுநாள் தாடியோடு இருப்பது என்ன அழகு ?

  அதற்கு டி.ஆர். சினேகன், இவர்கள் மாதிரி வைத்திருந்தால் அதை வேறு கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

  ReplyDelete