☺ ஆனந்தமாய் சிரிக்கலாம் ☺
இவையெல்லாம் எனக்கு வாட்ஸாப்பில் வந்த அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகள். யாம் பெற்ற இன்பம் பெறுக 'எங்கள் ப்ளாக்' என்று பகிர்கிறேன். நகைச்சுவை துணுக்குகள் ஒரு பங்கு என்றால், படங்கள் இரு மடங்காக நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக குறிப்பாக குழந்தை பலம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து கொடுக்க முயலும் பெற்றோர் படம் குபீர் சிரிப்பை வரவழைத்தது.
எல்லாவற்றையுமே ரசித்தேன். அந்தக் கால ஜோக்ஸ் ரசனை ப்ளஸ் பொக்கிஷம். யாரிடம் இவ்வளவு பழைய ஆனந்த விகடன்கள் வைத்திருக்கிறார்களோ...
ReplyDeleteபடங்களை க்ராப் செய்து போட்டிருக்கலாமே...
//படங்களை க்ராப் செய்து போட்டிருக்கலாமே...//
Deleteஓ! அப்படி ஒரு விஷயம் இருக்கிறது இல்லையா? அடுத்த முறை முயற்சி செய்கிறேன். நன்றி ஸ்ரீராம்.
'க்ளுக்'கிலிருந்து ஹஹ்ஹஹ்ஹா வரை... ஆனந்த விகடனின் ஜீவிதம் மறக்க முடியாதது தான்.. அந்தந்த காலகட்டங்களில் எந்த ஊரில் இருந்தோம், என்ன செய்தோம் என்று நினைத்தும் பார்த்துக் கொண்டேன். சடாரென்று ஒரு அதிரடி மாற்றமாய் ஆனந்தவிகடன் இப்பொழுது இது மாதிரியான நகைச்சுவை அட்டைப்படங்களுக்கு மாறினால் எப்படியிருக்கும்?.. சொல்லுங்கள்..
ReplyDelete//சடாரென்று ஒரு அதிரடி மாற்றமாய் ஆனந்தவிகடன் இப்பொழுது இது மாதிரியான நகைச்சுவை அட்டைப்படங்களுக்கு மாறினால் எப்படியிருக்கும்?.. //
Deleteஎனக்கு கூட இப்படி ஒரு எதிர்பார்ப்பு உண்டு. முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு தனித்தன்மை இருந்தது. அட்டை படத்திலிருந்து, உள்ளடக்கம் வரை ஒவ்வொன்றும் வித்தியாசமாய் இருக்கும். இப்போதோ எல்லாம் ஒரே மந்தை, ஒரே குப்பை. வருகைக்கு நன்றி.
இவை எல்லாம் முகநூலில் கணேஷ் பால பகிர்ந்திருந்தார். பின்னரும் இவை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்து விகடனே பொக்கிஷம் தான்! இப்போதுள்ள விகடனில் இப்படி எதிர்பார்க்க முடியாது! நான் ஆனந்த விகடன் படித்தே 20 வருடங்கள் போல் ஆகி விட்டன. குமுதம், கல்கி எதுவும் வாங்குவதில்லை. கல்கி தன்னோட அளவை மாத்திக்கும் வரை வாங்கினேன். பின்னர் பிடிக்காமல் நிறுத்திட்டேன். இப்போது கல்கி யாருடைய கைகளிலோ!
ReplyDeleteஎனக்கு இவை என் குடும்ப குழுவில் வந்தன. நானும் ஆ.வி., குமுதம் போன்றவைகளை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டன. கல்கி அவ்வப்பொழுது வாங்கி படிப்பேன், ஏனென்றால் அவர்கள்தான் இன்னும்கூட நல்ல சிறு கதைகள் பிரசுரித்துக்கொண்டிருக்கிறர்கள்.
Deleteஆம், ரிஷபன் கதைகள் இன்னமும் கல்கியில் வருகின்றன.
Deleteசிரத்தையுடன் வரையப் பெற்ற நகைச்சுவைப் படங்கள்...
ReplyDeleteகீதா S அவர்கள் சொல்வதைப் போல ஆனந்த விகடனைப் படித்து பல வருடங்கள் ஆகின்றன...
மற்றவைகளும் தான்...
இனிய பதிவு.. வாழ்க நலம்...
// சிரத்தையுடன் வரையப் பெற்ற நகைச்சுவைப் படங்கள்...//
Deleteஉண்மைதான். நாம் இப்பொழுது வாராந்தரிகள் படிப்பதில்லை, அதனால் இப்பொழுது இப்படி நகைச்சுவை படங்கள் வரைகிறார்களா என்று தெரியவில்லை. மதன் கூட இப்பொழுது பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வரைவதை நிறுத்தி விட்டாரே.
வருகைக்கு நன்றி.
பழைய ஆநந்த விகடன் ஜோக்குகளை முகநூலில் பால கணேஷ் பகிரப் பார்த்திருக்கிறேன்
ReplyDeleteகீதா அக்காவும் பால கணேஷ் பற்றி கூறியிருந்தார். அவர் என்னுடைய முக நூல் நண்பர் குழுவில் இல்லை. இது என் குடும்ப குழுவில் வந்தது. ரசித்தீர்களா?
Deleteஹா ஹா ஹா ஹா ஹா ரொம்பவே சிரித்தேன் பானுக்கா...அருமையான ஜோக்ஸ். படங்களும் தான். இவற்றில் சில எனக்கும் வாட்சப்பில் வந்தது. விகடன் வாசித்துப் பல வருடங்கள் ஆகிறது. எப்போதேனும் யார் வீட்டிற்காவது போகும் போது சும்மா எடுத்துப் பார்ப்பதுண்டு. சுஜாதாவிங்க் கற்றதும் பெற்றதும் தொடராக வந்த போது கூட அவ்வப்போது வாசித்ததே மாமனார் வைத்திருந்தால். முழுவதும் வசித்ததில்லை. அது போல எஸ்ரா வின் தொடர் வந்த போதும் கூட அப்படித்தான்...அதுவும் முழுவதும் வாசித்ததில்லை. ஆனால் இப்போது ஏனோ அதன் வடிவம் அவ்வளவு ஈர்க்கவில்லை.
ReplyDeleteகீதா
அதேதான் கீதா, ஒருவேளை நமக்கெல்லாம் வயதாகி விட்டதோ?
Deleteபிரமாதம் பானு மா. மிக ரசித்தேன். என்னிடமும் ஒரு பழைய.தொகுப்பு இருக்கிறது
ReplyDeleteகோபுலு கார்ட்டூன் மிக ஹாஸ்யம். இன்னும் பலம் வேணுமா அந்தப் பயலுக்கு. ஹாஹா.
நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அந்த சித்திரங்களை வரைந்த ஓவியர்களுக்கல்லவா?
ReplyDeleteநல்லா இருக்கு..
ReplyDeleteஎனக்கும் வந்துச்சு whats UPல் ...ப்ளாக் போஸ்ட் எல்லாம் ரெடி சிரிக்கலாம் ன்னு ...ஆன நீங்க போட்டுடீங்க்க் சோ மீ STOPPED...
ஓ...! அப்படியா? நானே கொஞ்சம் லேட். யார் போட்டால் என்ன? எல்லோரும் சிரிச்சுகிட்டு கிரிச்சுகிட்டு இருக்கணும். அதுதானே வேண்டியது.
Deleteமீண்டும் சில அருமையான ஓவியங்களை ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி!
ReplyDeleteஇவற்றில் சிலவற்றைப்பார்த்து சிறு வயதில் ரசித்த ஞாபகம் இருக்கிறது. என்னிடமுள்ள சில தொகுப்புகளிலும்கூட இந்த மாதிரியான விகடன் அட்டைப்படங்கள் உண்டு. நகைச்சுவையை விடவும், அந்த ஓவியங்களில் எப்படி உயிரோட்டம் மின்னுகிறது, பாருங்கள்!!
நாம் எல்லோருமே நன்றி சொல்ல வேண்டியது இந்தப் படங்களை வரைந்த ஓவியர்களுக்கேதான்.
Deleteஇந்த ஜோக்குகள் பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டது . இவைகள் அந்தக் கால கட்டத்தில் இருந்த வாழ்க்கை முறை பற்றியும் அறிய உதவும் , கிட்டத்தட்ட ஒரு காலக் கண்ணாடி
ReplyDeleteவாங்க அம்மா. முதல்முறையாக வந்திருக்கிறீர்கள். நன்றி மீண்டும் வருக.
Deleteஇந்த
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான நகைச்சுவை துணுக்குகள்.
இப்பெல்லாம் இந்த மாதிரி நகைச்சுவையை கொண்டு துணுக்குடன் வருவதில்லை.
கணக்கு சரியா என பையன் வந்து பிறருக்கு தெரியாமல், சிலேட்டை காட்டுவது
சிரிப்பாக உள்ளது.அந்த காலத்திலேயே பையனுக்கு "அசாத்திய விபரம்" தாயைப் போல் பிள்ளை என்பதை உண்மையாக்கிய ஓவியருக்கு பாராட்டுகள்.
எல்லா ஜோக்குகளும் ரசிக்கத் தக்கவை.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கு நன்றி மா!
Deleteஅருமையான நகைச்சுவைகளின் அணிவகுப்பு
ReplyDeleteமீண்டும் சிறு வயதிற்கு ஒரு சிறு பயணம்.
ReplyDelete