சில வியப்புகள்
சேத்தன் பகத் எழுதிய 'ஒன் இந்தியன் கேர்ள்' என்னும் புத்தகத்தை சமீபத்தில்தான் படித்து முடித்தேன். அதில் சி.பி. இப்போது கையாண்டிருக்கும் விஷயத்தை (ஒரு கதாநாயகி மூன்று கதா நாயகர்கள்) நம் கே.பி. எழுபதுகளிலேயே அவர்கள் படத்தில் கையாண்டிருக்கிறாரே என்ற வியப்பு.
மற்றொரு வியப்பு கலைஞர்! என்னதான் மருத்துவ முன்னேற்றத்தின் உதவி இருந்தாலும் அவருடைய போராட்டம் வியக்க வைக்கிறது. கலைஞரின் பேச்சாற்றலும் நகைச்சுவை உணர்ச்சியும் பலரும் அறிந்ததுதான். அவரது நகைச்சுவை உணர்வு குறித்து யூ டியூபில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு செய்தி: முன்பு ஒரு முறை இதே காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டபொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்,"மூச்சை இழுத்து பிடியுங்கள்" என்றாராம், அதன்படி செய்திருக்கிறார் கலைஞர். கொஞ்சம் கழித்து,"மூச்சை விடுங்கள்" என்று மருத்துவர் சொன்னதும், "மூச்சை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கு வந்துள்ளேன்" என்றாராம். என்ன சாதுர்யம்!
இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியே செல்லும் வேலை இருந்ததால், கார் ஓட்ட டிரைவரை அழைத்திருந்தோம். வந்த ஓட்டுனர், மழு மழுவென்று க்ஷேவ் செய்யப்பட்ட முகம், டக் இன் செய்யப்பட்ட சட்டை, டிப் டாப்பாக உடை அணிந்து, தெளிவான தவறில்லாத ஆங்கிலம் பேசினார். விசாரித்ததில் அவர் ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவில் டீம் லீடர் என்றும், கால் டிரைவராக இருப்பது பகுதி நேரப் பணி என்றும் கூறினார். அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதி வீட்டுக் கடன் அடைக்க போய் விடுகிறதாம். அதனால் இந்த பகுதி நேரப் பணி என்றார். கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் வியப்பு இரண்டும் கலந்த உணர்வு தோன்றியது.
உற்றுக் கவனிக்கும்போது
ReplyDeleteஇவ்வுலகில் ஒவ்வொன்றுமே வியப்பாகவும்
வினோதமாகவும் இருக்கின்றன...
நலம் வாழ்க...
சிலவற்றை நாம் பழக்கி கொண்டு விடுகிறோம். வருகைக்கு நன்றி.
Deleteகால் டாக்ஸி ட்ரைவர் - ம்ம்ம்... வாழ்க்கைப் பயணம் பலருக்கும் கடினமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteகால் டாக்ஸி டிரைவர் இல்லை, டிரைவர் ஆன் கால். நம்மிடம் கார் இருக்கிறது, ஆனால் ஓட்ட இயலாது என்னும் பொழுது நிரந்தரமாக டிரைவரை வேலைக்கு வைத்துக்கொள்ளாமல் எப்பொழுது தேவையோ அப்போது மட்டும் அழைத்தால் டிரைவரை அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இதை டிரைவர் ஆன் கால் சேவை என்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு டிரைவர்.
Deleteமனிதர்கள் பலவிதம்.
ReplyDeleteஅவரவர் வாழ்க்கைப் பாதையை கடந்தே தீரவேண்டும்.
ஆம். வருகைக்கு நன்றி சகோ.
Deleteதமிழ் இந்துவில் அவர் (கலைஞர்) 2009 இல் ராமச்சந்திராவில் இருந்தபோது எழுதிய டைரிக்குறிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதுவும் சுவாரஸ்யமாக இருந்தது.
ReplyDeleteஎந்த தேதியிட்ட இந்து? கலைஞர் ஒரு ஸ்வாரஸ்யமான மனிதர்தான்.
Deleteவித்தியாசமான சுவாரஸ்யமான செய்திகள். சொல்லியவிதம் அருமை வாழ்த்துக்களுடன்.
ReplyDeleteநன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமனித மனங்கள். திடிரென தோன்றும் சிந்தனைகள், சமயங்களுக்கு ஏற்ப தோன்றும் பேச்சுக்கள், அனைத்துமே வியப்பாகத்தான் இருக்கிறது. வியப்பான விஷயங்களை ரசித்தேன். அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கு நன்றி.
Deleteபணத்தேவைகளுக்காக தவறான வழியில் செல்லாமல் உழைத்து முன்னேறுகிற அந்த இளைஞனை பாராட்டவே மனம் விழைகிறது
ReplyDeleteநிச்சயம் பாராட்டுதலுக்குறியவர்தான் அந் இளைஞர். வருகைக்கு நன்றி.
Deleteகார் டிரைவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது...
ReplyDeleteபல கிராமத்து பிள்ளைகள், படிப்பதற்காகவே தினமும் கிடைத்த வேலையை செய்கிறார்கள்...
பாராட்டப்பட வேண்டியவர்தான் அந்த இளைஞர். நம் நாட்டு கிராமத்து இளைஞர்கள் படிப்பதற்காக கிடைத்த வேலையை செய்கிறார்களா? நல்ல விஷயம்தான்.
Deleteமுதல்லே அந்தக் கார் ஓட்டுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவிச்சுடறேன். நல்ல உழைப்பாளி. விரைவில் முன்னுக்கு வரவும் பிரார்த்தனைகள். உங்கள் செய்தித் தொகுப்பு சுவாரசியம்! எல்லாமே ரசித்தவை எனினும் மீண்டும் ரசித்தேன். கார் ஓட்டுநர் மட்டும் புதிய செய்தி!
ReplyDeleteஅந்த இளைஞர் வாழ்க்கையில் முன்னேறி விடுவார் என்றுதான் எனக்கு தோன்றியது.
Deleteவருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.
கார் டிரைவருக்கு எனது பாராட்டுக்கள் , தொகுப்புகள் நன்றாகவே உள்ளன
ReplyDeleteஅந்த கார் டிரைவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எல்லோருடைய பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்..
ReplyDeleteபதிவை ரசித்தமைக்கு நன்றி.