பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம்
எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்தனை நாட்கள் ரேடியோவில் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப்படாது. 'டொ..ய்...ங்..' என்று சித்தார் அல்லது 'பீ...ய்..ங்..' என்று ஷெனாய்தான் அழுது கொண்டிருக்கும். அதை கேட்டு எனக்கு ஷெனாய் இசை என்றாலே ஒரு அலர்ஜி. "வட இந்தியர்கள் திருமணத்தில் கூட இதைத்தான் வாசிப்பார்களாமே..?இதைப் போய் எப்படி..?" என்று நினைத்துக் கொள்வேன்.
அதன் பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. அரசு துக்கம் அனுஷ்டிக்கும் நாள்களில் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப ஆரம்பித்தார்கள். இப்போது கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் இறந்திருக்கும் பொழுது ஜெயா, விஜய், ஜீ போன்ற சேனல்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வழக்கம் போல் சமைத்துக் கொண்டு, விளையாடிக்கொண்டு, ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தது பார்க்க ரசமாக இல்லை. ஏன் கலைஞர் டி.வி. குழுமத்தை சார்ந்த மியூசிக் சேனல் வழக்கம்போல் பாட்டு போட்டுக் கொண்டிருந்தது. கலைஞரை புதைத்த உடனேயே சன் டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும் சீரியல்களுக்கு திரும்பி விட்டார்கள். ஹும், இதுதான் உலகம்!
பார்ப்பதற்கு ரசமாக இல்லாத இன்னொரு விஷயம் பிக் பாஸ்! நான் கூட சென்ற வாரம், "கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று தெரியாத இந்த தலைமுறையினர் பிக் பாஸை பார்த்து கூட்டு குடித்தனத்தின் தன்மைகளை தெரிந்து கொள்ளலாம். சின்ன சின்ன பொறாமைகள், புறம் பேசுதல், சண்டைகள் எல்லாம் கொண்டதுதான் கூட்டு குடித்தனம். என்ன வேற்றுமை இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பம், ஒருவருக்கு ஒரு கஷ்டம் வரும்பொழுது மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள்" என்று பிக் பாஸை சிலாகித்து கூறினேன். திருஷ்டி பட்டு விட்டது போலிருக்கிறது. அன்று 'உன்னைப் போல் ஒருவன்' என்று ஒரு டாஸ்க்!. அதில் ஒவ்வொருவருக்கும் யாருடைய படம் போட்ட டீ ஷர்ட் வருகிறதோ அந்த படத்தில் இருபவரைப் போல நடந்து கொள்ள வேண்டும். வைஷ்ணவி பாலாஜியாகவும், பாலாஜி டேனியலாகவும், டேனியல் யாஷிகாவாகவும், யாஷிகா வைஷ்னவியாகவும், ஜனனி சென்ராயனாகவும், மும்தாஜ் ஐஸ்வர்யாவாகவும், மஹத் மும்தாஜாகவும், நடித்தார்கள். தலை சுற்றுகிறதா? இதோடு விட்டு விட்டு விஷயத்திற்கு வருகிறேன். இதில் நீல அணிக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். சிவப்பு அணியினறில், ஒருவரை அழ வைக்க வேண்டும், ஒருவரை சிரிக்க வைக்க வேண்டும், ஒருவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்ல வைக்க வேண்டும், ஒருவரை எம்ப்ராஸ்(embarrass) அடையச் செய்ய வேண்டும்.
எம்ப்ராஸ் என்னும் வார்த்தையை எப்படி புரிந்து கொண்டார் வைஷ்ணவி என்று தெரியவில்லை. பிரபல எழுத்தாளரான சாவி அவர்களின் பேத்தியாகிய இவர் பாலாஜியை சங்கடப்பட வைக்கிறேன் பேர்வழி என்று அவருக்கு முன்னால் தான் அணிந்திருந்த டீ ஷர்ட் ஐ அவிழ்த்து வேறு மாற்றிக் கொண்டார்.
அதை பாலாஜி மட்டுமா பார்த்தார்? அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்க மாட்டார்களா? இது வைஷ்ணவியின் மண்டையில் உதிக்கவே இல்லையா? அல்லது வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கத் தயார் என்று சொல்கிறாரா? இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?
என்னவொரு கண்றாவி...! இப்படியெல்லாம் நடக்குதா...?
ReplyDeleteகேட்பார் இல்லாத கண்றாவி!😢
Delete//இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம்.// - ஐயோ... இதையெல்லாம் மிஸ் செய்கிறேனா?
ReplyDeleteJokes apart, இதையெல்லாம் பார்க்கிறதே இல்லை (இப்போ சில வாரமா). இது கிட்டத்தட்ட அடுத்தவன் வீட்டுல எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு. வேஸ்ட் ஆஃப் டைம்.
தொலைக்காட்சியெல்லாம், தூர்தர்ஷனா? வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க. நான் நிஜமாகவே ஆதித்யா, சிரிப்பொலி, கருணாநிதி மறைந்த அன்றும் மறுநாளும் பார்த்தேன். நல்லவேளையா 'நகைச்சுவை' அன்று மட்டும் ஒளிபரப்பலை.
//இது கிட்டத்தட்ட அடுத்தவன் வீட்டுல எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு// கிட்டத்தட்ட அல்ல, முழுவதுமாகவே அப்படித்தான். என் கணவர் பார்ப்பார். சாப்பிடும் பொழுது கண்ணில் படும்.
Deleteகடைசியில் கேட்டீர்களே ஒரு கேள்வி.
ReplyDelete//கமல் இதை கண்டிப்பாரா ?//
எனக்கு இந்த பழமொழி ஞாபகம் வந்தது.
யோக்கியர் வர்றார் செம்பை எடுத்து உள்ளே வையி.
ஹாஹாஹா
Deleteசாவியின் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமையா? கஷ்டம்... கஷ்டம்...
ReplyDeleteஎன்.எஸ்.கேயின் பேத்தியும் வந்தாள். இந்த அளவு கீழே இறங்கவில்லை.
Deleteசாவுக்கு துக்கம் அனுஷ்டிப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாக நினைத்து விட்டார்களோ?
ReplyDeleteஇருக்கும் இருக்கும்.
Deleteஇதெல்லாம் எப்போ வருதுனே தெரியாது. விஜய்த் தொலைக்காட்சியில் நான் பார்த்தது ஏழு வருடங்கள் முன்னர் வந்த சூப்பர் சிங்கர் முதல் ஒளிபரப்பு. அதில் ஓர் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டான், அப்போவே அதைக் குறித்து ஏகப்பட்ட விமரிசனங்கள். அப்போ விஜய் தொலைக்காட்சியைப் பார்க்க நேர்ந்ததின் காரணமும் அப்போ அம்பேரிக்காவில் பெண் வீட்டில் அது மட்டும் தான் பார்க்கலாம். மற்றச் சானல்கள் அங்கே வராது.
ReplyDeleteநேத்திக்கு மதியம் நான் பார்த்தது பொதிகையில் மீனாக்ஷி கல்யாணம் சங்கீத கதா காலட்சேபம். :) ஒரு சின்னப் பெண் 15 இல் இருந்து 18க்குள் இருக்கும். அந்தப் பெண் தான் நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தாள். இதை விட்டால் சாயங்காலம் சங்கரா, பக்தி, எஸ்விபிசி சானல்கள் பார்ப்பேன். எஸ்விபிசியில் அருமையான கச்சேரிகள். நேத்திக்கு வயலின் சந்திரசேகரன் அவர்கள் அவரே பாடிக் கொண்டு வயலினும் வாசிச்சார். காலை வேளைகளில் தொலைக்காட்சிப் பக்கமே போவதில்லை. நேரமும் இருக்காது. நம்ம ரங்க்ஸ் தான் ஜோசியம் பார்த்துட்டு இருந்தார். இப்போல்லாம் அலுத்துடுச்சு போல. பார்க்கிறதை விட்டுட்டார். :)
ReplyDeleteசங்கரா பார்த்துக் கொண்டிருந்தேன். எஸ்.வி.பி.சி டைமிங் தெரியவில்லை.
Delete//இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?// உலக்கை நாயகரான கமலுக்கு இந்தத் தகுதி இருப்பதாக நீங்க நினைப்பது ஓர் ஆச்சரியம்!
ReplyDeleteகீதா S அவர்களுக்கு நன்றி...
Deleteஉ.நா. கமலுக்கு அந்தத் தகுதி!?..
அதெல்லாம் மிகப் பெரிய ஆச்சர்யம்..
ஊடக ஒட்டுண்ணிகள் இல்லாத
ReplyDeleteஅந்தக் காலத்திலேயே -
சூரையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே..
- என்றார் திருமூலர்...
அடுத்த வேளை கஞ்சிக்கு ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டாமா -
அந்த பாவப்பட்ட ஊடகங்கள்!?....
பிக் பாஸ்..
ReplyDeleteஸ்மால் பூஸ்...
இதெல்லாம் பார்ப்பதேயில்லை...
பார்ப்பதில்லையா!...
தொ.கா.பெட்டியின் பக்கம் போவதேயில்லை...
கலைஞரின் இறுதி ஊர்வலம் சிறிது நேரம் பார்த்தேன்.. அவ்வளவு தான்...
//இதெல்லாம் பார்ப்பதேயில்லை//நானும் விரும்பி பார்ப்பதில்லை. என் கணவர் பார்ப்பது கண்ணில் படும்.
Deleteஇந்த நிகழ்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநல்லது ஐயா. பார்க்க ஒன்றுமில்லை.
Deleteஅவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களோதமிக்ஷ் நாட்டிலொருவர் இறந்தால் சங்கு ஊதுவார்கள் கர்நாடகத்தில் பூஜையின் போது சங்கூதுவார்கள்
ReplyDeleteஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியுவில்லை.
Deleteஇதெல்லாம் பார்க்க முடிகிறதா உங்களால் - பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை.
ReplyDeleteரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி... என்னவோ போங்க.
//ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி... என்னவோ போங்க.// உண்மைதான். அதுவும் விஜய் டி.வி.ரியாலிட்டி ஷோக்கள்..எல்லை மீறிக்கொண்டே இருக்கிறது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதாங்கள் கூறுவது போல் தலைவர்கள் தவறிப் போனால், துக்கம் அனுஷ்டிப்பதில்லை. உண்மை. அந்த காலத்தில், அந்த ஏழு நாட்களும்,
இறந்தவர்கள் நம் மனதில் நின்றார்கள்.
இப்போது மறுநாளே மறந்து விடும் நிலைமை.
பிக் பாஸ் பற்றி தாங்கள் கூறியது அதிர்ச்சியாயிருந்தது. நான் அதை பார்ப்பதே இல்லே. காலம் எல்லாவற்றிலும் மாறி விட்டது போலும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி.
Deleteவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி. என்னுடைய சு.டோ.கு.கதை படித்தீர்களா?
ReplyDelete