கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 23, 2018

அன்புள்ளம் கொண்ட எங்கள் ப்ளாக் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். மிக சமீபத்தில்(17.12.18) என் சகோதரியின் கணவர் இறந்து போனார். சில வருடங்களாகவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு க்கொண்டிருந்த அவருக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உடம்பு சரியில்லாமல் போய், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதும், மீண்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த முறை ஸ்வைன்  ஃபளூ, நிமோனியாவாக மாறி அவரை வீழ்த்தியது.

இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் இரண்டாவது பெண்ணுக்கு சென்ற மாதம் 25ம் தேதி வந்த காய்ச்சல் விடவேயில்லை. இரண்டு முறை ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதித்தும் அவளுக்கு வந்திருப்பது எந்த வகை காய்ச்சல் என்று சரியாக கண்டு பிடிக்காமல் ஏகப்பட்ட ஆண்டி பயாடிக்ஸ்,  ஸ்டிராய்ட்ஸ் போன்றவை கொடுத்ததால் உடம்பு மிகவும் பலவீனமானதேயொழிய காய்ச்சல் விடவேயில்லை. பிறகு தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் மாம்பலம் ஹெல்த் சென்டரில் அனுமதித்தோம்.  அங்கு மீண்டும் டெஸ்டுகள் எடுத்ததில் லட்சத்தில் 160 பேரை தாக்கும் stills disease  என்று கண்டு பிடித்து இப்பொழுதுதான் ட்ரீட்மெண்ட்  ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் காய்ச்சல் வருவது நிற்கவில்லை. என் அக்காவுக்கு கணவர் மறைந்த துக்கம் ஒரு புறம், மகளின் உடல் நிலை குறித்த கவலை ஒரு புறம். "இரு கோடுகள் தத்துவம் போல ஆகி விட்டது என் நிலமை" என்கிறாள்.
என் அக்கா பெண்ணின் உடல் பூரண குணமடையவும், என் அக்காவின் மனதிற்கு அமைதி கிடைக்கவும் ப்ரார்த்தனை செய்ய உங்கள் அணைவரையும் வேண்டுகிறேன்.🙏🙏

12 comments:

  1. அக்காவின் பெண் குணமடையவும் அக்கா மன நிம்மதி அடையவும் அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறோம்.நிச்சயம் விரைவில் எல்லாம் நல்லவிதமாய் நடக்கும் வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தங்கள் அக்காவின் வேதனை மனதை மிகவும் கஸ்டபடுத்துகிறது. அவர் கணவர் மறைந்த துக்கத்திலிருந்து மன அமைதி அடைந்து ஆறுதல் அடைய வேண்டும். அவர் மகள் நல்லபடியாக உடல் நலம் தேறி பழையபடி ஆக வேண்டும். இவ்விரண்டும் நடக்க மனம் நிரம்ப பிரார்த்திக்கிறேன். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். நம்புவோம். வேதனைப்பட வேண்டாம்.

    பிராத்தனைகளுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. தங்களது சகோதரியின் மகள் பூரண குணமடைய இறைவன் துணை புரிவானாக!

    ReplyDelete
  4. தங்களது சகோதரியின் மகள் பூரண குணமடைய இறைவன் துணை புரிவானாக!

    ReplyDelete
  5. பானுக்கா கண்டிப்பாக எங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் உண்டு. கூட்டுப் பிரார்த்தனை என்பதற்கு சக்தி உண்டு. கண்டிப்பாக பானுக்கா பூரண குணமாகி மீண்டு வருவார் உங்கள் அக்கா மகள்.

    கீதா

    ReplyDelete
  6. எங்கள் பிரார்த்தனைகள். கணவரை இழந்த சகோதரிக்கு மன அமைதி கிடைக்கவும், சகோதரி மகள் விரைவில் நல்லபெறவும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  7. மனதுக்கு வேதனை அளித்த செய்தி. சிலர் வாழ்க்கையில் இறைவன் மிக அதிகமான சோதனைகளை ஒரே சமயத்தில் கொடுக்கிறார். விரைவில் உங்கள் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்து எல்லோரும் மன ஆறுதல் பெறப் பிரார்த்தனைகள். உங்கள் சகோதரி மகளின் உடல் நலத்துக்காகப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  8. படிக்கவே மிக வேதனையாக இருக்கிறது.

    சகோதரியின் மகள் பூரணநலம் பெற இறைவனை பிரார்த்தனைகள் செய்கிறேன்.
    சகோதரியின் மனம் ஆறுதல் அடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  9. என்னமாதிரியெல்லாம் கஷ்டம் வருகிறது பாருங்கள்.

    ப்ரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  10. படிக்கும்போதே மனம் கலங்குகின்றது...

    எதைக் கடக்க முடிந்தாலும்
    விதியைக் கடக்க முடிவதேயில்லை...

    எல்லாம் வல்ல தெய்வம் உடனிருந்து ஆறுதலும் தேறுதலும் அளிக்கும்...

    நோயவை சாரும் ஆகின் நோக்கி
    நீ அருள் செய்வாயே...

    - என்று அருளிய அப்பர் பெருமானின் திருவாக்கினை சிந்தித்து
    தெய்வம் துணை இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. அனைத்து துன்பங்களும் விலகி அமைதி சூழ என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete