சாரதே சாரதே ஞான தாயினே
"ஒரே ஒரு குழந்தை உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?, உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?" என்று பரமஹம்சர் கேட்க, இரண்டாவதை தேர்ந்தெடுத்து உலகத்திற்கே அன்னையான ஶ்ரீ சாரதா தேவியின் 166வது பிறந்த நாள் இன்று. "யாதேவி சர்வ பூதேஷு மா மாத்ரு ரூபேண சம்ஸ்திதா, நமஸ்தஸ்மை, நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமஹ"(எந்த தேவியானவள் எல்லா உயிகளிடத்திலும் அன்னை வடிவமாக விளங்குகிறாளோ, அவளை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்) என்று தேவி பாகவதம் துதிக்கிறது. சாரதா தேவியை எல்லா உயிர்களுக்கும் அன்னையானாளோ அவளை வணங்குகிறேன் என்று துதிக்கலாம்.
'கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகத்தில்' சுஜாதா எப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:
சாரதா தேவியாரைப் பற்றி ரா.கணபதி அவர்கள் கல்கியில் எழுதிய தொடரைப் படித்திருக்கிறேன். அவரை நினைவு கூர்ந்தமைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteரா.கணபதி எழுதிய அந்த நூல் அம்மா. நானும் படித்து உருகியிருக்கிறேன். வருகைக்கு நன்றி.
Deleteநான் படிக்கும்போது இடையில் ஒரு 20 நாட்கள் ஒரு ஹொஸ்டலில் இருக்க வேண்டி வந்தது.. அங்கு தினமும் சாரதாமணிதேவியை வணங்குவார்கள்.. டெய்லி பாடுவோம்ம்..
ReplyDeleteசாரதா மணி தேவியே
உயர் சத்ய சாந்தத்தின் ஆவியே.
அற்புதம் நிகழ் அம்மணி ..
.... கண்மணி.. என வரும்.. அப்பாடல்..
20 நாட்களிலேயே பாடலை கற்றுக்கொண்டு விட்டீர்களா? அதை நினைவிலும் வைத்திருக்கிறீர்களே..!👍
Deleteபானுக்கா நல்ல பதிவு சுஜாதா சொல்லியிருப்பதையும் பார்க்க முடிந்தது...கொஞ்சம் வாசிக்கவும் முடிந்தது.
ReplyDeleteநான் எம் ஏ படித்த போது எனக்கு பப்ளிக் ஃபைனான்ஸ் எடுத்த ஆசிரியை பரமஹம்ஸர் சாரதாதேவி பக்தை.அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும் அப்படித் தூய்மையாகவும், உள்ளே நுழைந்தாலே நமக்கு அமைதியும் ஆன்மீக உணர்வு ஏற்படுவ்து போலவும் இருக்கும்...
அருமையான ஆசிரியை. என்னை தனியாக அழைத்து நிறையப் பேசுவார் அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். சாரதா தேவியைப் பற்றி நிறையச் சொல்லுவார். என் திருமணத்திற்கு வந்த போது எனக்கு அவர் அளித்த பரிசும் சாரதா தேவியின் நல்லுரைகளும், பொன் மொழிகளும் தமிழில். பரமஹம்ஸரின் குட்டி குட்டிக் கதைகள் ஆங்கிலப்பதிப்பு....
இன்று அவரைப் பற்றி இங்கு சொன்னமைக்கு நன்றி, வாழ்த்துகள் அக்கா..
கீதா
நான் பார்த்த வரை ராமகிருஷ்ணா மிஷினை சார்ந்த பலர் எளிமையாக இருப்பார்கள். பரமஹம்சர் சொன்ன குட்டிக்கதைகளைதான் பலர் தங்களுடையதைப் போல எடுத்தாண்டு கொண்டிருக்கிறார்கள்.
Deleteஅன்னை ஸ்ரீ சாரதா தேவியின் மலர்ப் பதங்களுக்கு வணக்கம்...
ReplyDeleteஎப்படி இருக்கிறீர்கள் துரை சார். வாழ்க நலம்.
Deleteசாரதா தேவியைப் போற்றுவோம்.
ReplyDeleteதலைப்பைப் பார்த்ததும் எனக்கு இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
https://www.youtube.com/watch?v=-7Ti00UVJQw எஸ் பி பி குரலில்
https://www.youtube.com/watch?v=ifz7WBZjaOs - யேசுதாஸ் குரலில்...
இலக்கியம், இசை இரண்டிலுமே என்னவொரு கலக் ஷன் உங்களிடம்..!க்ரேட்!
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteஅன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
நன்றி வெங்கட்
ReplyDeleteஅருமை அம்மா...
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅன்னை சாரதா தேவியை பற்றிய பகிர்வு மிக அருமை. அனைவரும் அன்னையின் அருளைப் பெற்று வாழ்வோமாக. அனைவருக்கும் அன்னையின் ஆசிகள் பரிபூரணமாக கிடைத்திட பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி
Delete