கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 31, 2019

பேட்ட(விமரிசனம்)

பேட்ட(விமரிசனம்) 


கபாலியும், காலாவும் தந்த ஏமாற்றங்களுக்குப் பிறகு 'பேட்ட' பார்ப்பதில் கொஞ்சம் பயம் இருந்தது. நீலச்சட்டை வேறு தன் விமர்சனத்தில் கலாய்த்திருந்தார். மணிகர்ணிகா செல்லலாம் என்றேன், ஆனால் என் கணவருக்கு என்னவோ பேட்ட தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் ஒரு ரிஸ்க் எடுத்தோம்.

மலைவாச ஸ்தலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் வார்டனாக வந்து சேரும் முதல் காட்சியிலிருந்து, "போட்றா நம்ம பாட்டை.."என்று 'ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.." என்று ஆடும் இறுதி காட்சி வரை அவுட் அண்ட் அவுட் ரஜினி படம். எத்தனை நாட்களாயிற்று ரஜினியை இப்படி பார்த்து? 

கல்லூரியில் வம்பு செய்யும் பையன்களை அடக்குவது, மற்ற மாணவர்களோடு ஆட்டம் போடுவது, என்று சம்பவங்கள் எதுவும் இல்லாமல் டிரைலர் போல முதல் பாதி படம் ஓடுகிறது. இரண்டாவது பாதியில்தான் கதை துவங்குகிறது. முதல் பாதியில் ஆங்காங்கே அரசியல் பேசுகிறார். 

விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா,ஒய்.ஜி.மகேந்திரன் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இதில் பாபி சிம்ஹாவும், விஜய் சேதுபதியும் தவிர மற்றவர்கள் ஓரிரெண்டு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இயக்குனர் மகேந்திரனும் சில காட்சிகளில் வந்து இறந்து போகிறார்.

மற்ற படங்களைப் போல் இல்லாமல் பாபி சிம்ஹா ட்ரிம்மாக ஒரு கல்லூரி மாணவன் என்று சொல்லலாம் போல இருக்கிறார். ரஜினியின் தோழனாக சசிகுமார், உணர்ந்து, அழகாக பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். விஜய் சேதுபதி நன்றாகத்தான் நடித்திருக்கிறார், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறாரோ? என்று தோன்றுகிறது. 

ரஜினியின் மனைவியாக வரும் திரிஷா, வரும் காட்சிகளிலெல்லாம் புடவை உடுத்தி, தலையை இழைத்து வாரி, பின்னலிட்டு குடும்ப பாங்காக வந்து பரிதாபமாக இறந்து போகிறார். வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் பஹுத் அச்சா ஹை!

இதற்கு முன் சில படங்களில் வந்திருந்தாலும், அவைகளைப் போல் இல்லாமல், கல்லூரியில் படிக்கும் பெண்ணின் தாயாராக இருந்தாலும் டி.எல்.ஜே. அணிந்து, வாலி படத்தை நினைவு படுத்தும்படியாக வரும் சிம்ரனுக்கு ஒரு 'ஓ' போடத்தோன்றுகிறது. ஆனால் மிக சொற்பமாகத்தான் வருகிறார் என்பது கொஞ்சம் வருத்தம்.  அவருக்கும் சரி, ரஜினிக்கும் சரி இளமையை மீட்டுத் தந்திருப்பது ஒப்பனையாளரா? போட்டோஷாப்பா? எதுவாக இருந்தாலும் குட் ஜாப்!

முழு க்ரெடிட் கொடுக்கப்பட வேண்டிய இன்னும் இருவர், இசையமைத்திருக்கும் அனிருத்தும், காமிராவை கையாண்டிருக்கும் திருவும். 'ஊலாலா.' 'மரண மாஸ்..' போன்ற பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார் அனிருத் என்றால், காட்சிக்கேற்ற கோணம், லைட்டிங் இவற்றில் 'திரு'வின் பணி திருத்தம்!

தனக்கே உரிய ஸ்பெஷல் டச்சோடு இறுதி காட்சியை வைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. வயலென்ஸ் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், "நான் வீழ்வேன் என நினைத்தாயோ?" என்றபடி அறிமுகமாகும் ரஜினியை தூக்கி நிறுத்தி விட்டார். 

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் கட்டு பிரியாணி. 

30 comments:

  1. மணிகர்ணிகா என்பது யாருடைய, என்ன படம்? திருமண நாளுக்கு பேட்ட படம் பார்த்து மகிழ்ந்து விட்டீர்கள். இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மணிகர்ணிகா என்பது ஜான்சி ராணி பற்றிய படம். நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
      மணிகர்ணிகா என்பது ஜான்சி ராணி பற்றிய படம். நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
      மணநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. // டி.எல்.ஜே. அணிந்து, //

    டி எல் ஜேயா ? அப்படி என்றால் என்ன?

    குட்மார்னிங்.

    ReplyDelete
    Replies
    1. டி எல் ஜேயா ? அப்படி என்றால் என்ன?
      ஐயோ ஸ்ரீராம் இது கூட தெரியாத குழந்தை பிள்ளையா நீங்கள்?
      DLJ - dangerously low jeans. ;)

      Delete
    2. அட? எனக்கும் இப்போத் தான் தெரியும். இப்படி ஒரு code word இருப்பதும் அதன் அர்த்தமும் இன்னிக்குத் தெரிந்து கொண்டேன். !!!!!!!!!!!!!!!

      Delete
  3. பேட்ட இன்னும் பார்க்கவில்லை. நல்ல பிரிண்ட்டும் வரவில்லை. அமேசான் பிரைமிலும் வரவில்லை.சன் டிவியிலும் இன்னும் போடவில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு. தமிழ் புத்தாண்டில் உங்கள் ஆசை நிறைவேறி விடும் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. விமரிசனம் குறித்துச் சொல்லும்படி எதுவும் தெரியாது. ஆனாலும் நன்கு ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள். இனிய திருமண நாள் வாழ்த்துகள். தொலைக்காட்சியில் வந்தாலும் பார்ப்பேனா என்பது சந்தேகமே. பார்க்க வேண்டிய ரஜினி படங்கள் பட்டியல் ரொம்பப் பெரிசு! இஃகி, இஃகி! பாட்ஷா? ஆமாம்னு நினைக்கிறேன், அதிலே இருந்து ஆரம்பிச்சுப் பார்க்கணும்.

    முதல் பத்தி எழுத்து ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பொடியா இருக்கிறதாலே படிக்க முடியலை எனக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், கருத்திற்கும் நன்றி. நான் கூட பல ரஜினி படங்கள் தியேட்டரில் பார்த்தது இல்லை, தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். பாட்ஷா ஒருமுறை கூட முழுமையாக பார்க்கவில்லை.

      Delete
    2. எல்லா பதிவுகளிலும் முதல் பத்தி மட்டும் இப்படி பொடி எழுத்திலும், ஃபாண்ட் ஃபார்மெட் செய்யப்பட்டும் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை. இப்போது சரி செய்து விட்டேன்.

      Delete
  5. நன்றி டி.டி. சார்.

    ReplyDelete
  6. படம் பார்க்கவில்லை...

    நல்ல விமர்சனம். தமிழகத்தில் இருந்தாலும் படம் பார்க்கும் எண்ணம் இல்லை.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    முதலில் திருமணநாள் வாழ்த்துக்கள். திரைப்பட விமர்சனம் மிகவும் அழகாக செய்திருக்கிறீர்கள். மிகவும் ரசித்து படம் பார்த்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இப்போ வருகிற படங்கள் எதையும் பார்த்ததில்லை. தியேட்டருக்கு சென்று படம் பார்த்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. தங்கள் விமர்சனம் படம் பார்த்த திருப்தியை அளித்து விட்டது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலா(அப்படி அழைக்கலாம் அல்லவா?)

      Delete
  8. நான் இன்றுதான் படம் பார்த்தேன். பாலக்காட்டிற்கு ஒரு வேலை விஷயமாகச் சென்றிருந்ததால் பார்த்தேன். ஊரில் இருந்திருந்தால் பார்த்திருக்க முடியாது. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. எனக்கும் பிடித்திருந்தது. பரவாயில்லை முந்தைய படங்களை விட இது பெட்டர் என்றே தோன்றியது. இறுதி ட்விஸ்ட் அருமை.

    நல்ல விமர்சனம்.

    துளசிதரன்

    (அக்கா இந்த கமென்டை துளசி நேற்றே ராத்திரி அனுப்பியிருந்தார். நான் இன்றுதான் தளம் வந்தாலும் அவர் இன்று என்று போட்டிருப்பதை மாற்றவில்லை...---கீதா)

    ReplyDelete
    Replies
    1. //முந்தைய படங்களை விட இது பெட்டர் என்றே தோன்றியது.//
      அதேதான். நன்றி துளஸிஜி.

      Delete
    2. //(அக்கா இந்த கமென்டை துளசி நேற்றே ராத்திரி அனுப்பியிருந்தார். நான் இன்றுதான் தளம் வந்தாலும் அவர் இன்று என்று போட்டிருப்பதை மாற்றவில்லை...---கீதா)//
      It's OK.Geetha.

      Delete
  9. அக்கா படம் பார்க்கலை. பார்க்கவும் சான்ஸ் இல்லை. பார்ப்போம் வேறு வழி இருக்கான்னு.

    நீங்க பாஸிட்டிவாகவே கொடுத்திருக்கீங்க. அனிருத் ம்யூஸிக் நல்லாருக்கா? கேட்டுப் பார்க்கறேன்...

    டி எல் ஜே ஹா ஹா ஹா ஹா எனக்கு கமலின் இரண்டாவது பெண் அக்ஷராதான் நினைவுக்கு வருவார்.

    ஏதோ ஒரு நிகழ்வு அது சரியாக நினைவில்லை. அப்போது கமல் கௌதமியுடன் இருந்த நேரம். எல்லோரும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தாங்க....ஏதோ ஒரு கல்லூரினு நினைக்கிறேன். அக்ஷ்ராவின் ஜீன்ஸ் பார்த்து எனக்கு ரென்ஷன்!!!!!! (ஹையோ அதிரடியின் வார்த்தை வந்திருச்சு...டென்ஷன்!!!) கிழ விழுந்துராம இருக்கனுமேன்னு!!! ஹா ஹா ஆ ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாடல்கள் மாஸ், பின்னணி இசை மிக நன்றாக இருக்கிறது.

      Delete
  10. பானுக்கா பேட்ட கதை இப்பத்தான் விக்கில வாசிச்சேன். கதை சேம் ஓல்ட் வழக்கமான கதை போலத்தானே இருக்குக்கா? எதுவும் வித்தியாசமா இல்லையே...பழிவாங்கல் அது இதுன்னு...

    பானுக்கா "பேரன்பு" ராம் இயக்கம் கோவா இன்டெர்நாஷனல் ஃப்ரெஸ்ட் ல கலந்து நல்ல க்ரிட்டிக் ரெவ்யூ வந்த படம்....சென்னைல தியேட்டர்ல வந்துருச்சு போல...இங்க வருமான்னு தெரியலை. மம்மூட்டி நடித்திருக்கார். இந்தப் படம் வந்தா பார்த்துட்டு சொல்லுங்க..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //கதை சேம் ஓல்ட் வழக்கமான கதை போலத்தானே இருக்குக்கா? எதுவும் வித்தியாசமா இல்லையே..//
      கதைகள் மொத்தம் நான்குதான், அதை எப்படி எடுக்கிறார்கள் என்பதுதான் விஷயம்.

      Delete
  11. ம்... நானும்தான் பதிவு எழுதுறேன் என்ன பிரயோசனம் ?

    இப்படி விமர்சனம் எழுதினாலும் ஒரு அமௌண்ட் அக்கவுண்ட்ல விழும்.

    சினிமாக்காரனுக்கு என்னை மட்டும் பிடிக்கமாட்டுதே...

    ReplyDelete
  12. //இப்படி விமர்சனம் எழுதினாலும் ஒரு அமௌண்ட் அக்கவுண்ட்ல விழும்.//
    இப்படி கூட ஒரு விஷயம் இருக்கிறதா? தெரிந்தால் சம்பாதிக்கலாமே. "அஞ்சு காசுக்கு பிரயோஜனமில்லாமல் என்னவோ பிளாக் எழுதுகிறாள்" என்னும் என் கணவரின் வசையிலிருந்து தப்பிக்கலாம்.
    தவிர, மூணே முக்கால் பேர் படிக்கும் என் ப்ளாகிற்கு அமௌன்ட் வெட்டுவார்களா? நல்ல ஜோக்.

    ReplyDelete
  13. பேட்ட பார்க்கலாம் கற மாதிரி சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. If you are a Rajini fan, yes, otherwise..you may be disappointed.

      Delete
  14. விமர்சனம் நன்றாக இருந்தாலும்..
    படம் பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை...

    பழைய சோற்றை எதுக்காக கொதிக்க வைக்கோணும்?...

    ReplyDelete
  15. ஆமாம், ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம்தான். வித்தியாசமான சினிமா அனுபங்களை விரும்புகிறவர்களுக்கு சாதாரண படம்தான். வருகைக்கு நன்றி.

    ReplyDelete