கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 1, 2019

அன்பு VS பாசம்

21 comments:

  1. அன்புக்கும் பாசத்துக்குமான வித்தியாசம் அழகாகப் புரிய வைத்தீர்கள். பாசம் பொஸசிவ்னெஸ்ஸை உண்டாக்கி விடுகிறது. அன்பு எல்லையில் நிறுத்துகிறது.. எங்கிருந்தாலும் வாழ்க மனோபாவம்.

    ReplyDelete
  2. திருதராஷ்டிரன் என்பதற்கு பதில் துரியோதனன் என்றே சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பானுக்கா ஸ்ரீராம் சொல்லிருக்கறதை நானும் நோட் பண்ணினேன். திருதராஷ்டிரன்னு வர இடத்துல நீங்க துரியோதனன்னு சொல்லிருக்கீங்க...

      இந்த எடுத்துக்காட்டை நான் அடிக்கடி வீட்டுல சொல்லுறதுண்டு....

      கீதா

      Delete
    2. இரண்டு முறை போட்டு கேட்டேன், அப்படியும் தவற விட்டிருக்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

      Delete
  3. மத மாற்றத்துக்கு பாசவெறி என்று சொல்வதைவிட பொருத்தமாய் வேறு ஏதாவது சொல்லியிருக்கலாம். தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்பவர்கள் தங்கள் கடவுளிடம் நிச்சயம் பாசம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்பவர்கள் தங்கள் கடவுளிடம் நிச்சயம் பாசம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள்!//

      அதே அதே!! ஸ்ரீராம்...கடவுள் பற்றும் இருக்காது அங்கு ஆன்மீகமும் இருக்காது..நிச்சயமாக அதை இறை நம்பிக்கை என்றோ மத நம்பிக்கை என்றோ சொல்லவே முடியாது...

      கீதா

      Delete
  4. ஆமாம் அக்கா அன்பிற்கும் பாசத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாசம் என்பது பல கோபதாபங்கள் ஏற்பட வழியுண்டு. பாகுபாடு உண்டு. அதீதா ஒட்டுதல்?!! பொசசிவ்னெஸ்...ஆனால் அன்பு என்பது நோ கண்டிஷன்ஸ். எல்லையற்றது. பாகுபாடு கிடையாது...பற்றற்றது. அதான் அன்பே சிவம் என்று சொல்லப்படுகிறதுஇல்லையா..

    இதோ உங்க காணொளி பார்த்து கேட்கிறேன் மொபைலில்...

    வரேன்

    கீதா

    ReplyDelete
  5. அழகான விளக்கம் அக்கா.

    ஆமாம் பாசம் பாத்தீங்கனா நம்ம குழந்தை சப்பு செய்யும் போது சப்போஸ் அடுத்த வீட்டுக்காரங்க புகார் சொன்னாலும் ஏற்காது...என் குழந்தை நல்லவள்/ன் அவன் அப்படி எல்லாம் இல்லை உங்க குழந்தைதான் அப்படி என்று சுட்டுவது. இது பெரும்பாலான பெற்றோர்களிடத்தில் நான் காண்பதுண்டு. ஒரு சில பெற்றோர் அப்படி பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னாலும் தன் குழந்தையின் தப்பை தனியாகச் சொல்லித் திருத்துவார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உண்டு....நம்ம அப்பா/அம்மா ஆண்டிகிட்ட நான் தப்பு செய்யலைனு சொல்லிட்டு இப்ப தப்புனு சொல்லுறாங்களேன்னு. ஸோ அப்படி புகார் வரும் போது நம் குழந்தைக்கு சப்போர்ட் செய்யாமல் அதுவும் குழந்தையை வைத்துக் கொண்டு சொல்லாமல்...."நான் கவனிக்கிறேன் என்று சொல்லுவது நல்லது. நிகழ்வைப் பொருத்து அவர்களிடம் சாரி என்று சொல்லியும் வரனும். இதைக் குழந்தையின் முன் செய்யனும்..."

    இப்படி இல்லாமல் போகும் போதுதான் குழந்தைகள் திசை மாறிப் போகிறார்கள். ஒரு சிலர் தப்புவது தாங்களே கற்றுக் கொள்வதால்..

    சூப்பர் அருமையான வீடியோ அக்கா! குடோஸ்!

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    அன்புvsபாசமென்ற அழகான சப்ஜெக்டை கையிலெடுத்துக் கொண்டு அருமையாக விளக்கங்கள் கொடுத்து நன்றாக உரையாற்றியிருக்கிறீர்கள். பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும். உண்மைதான்.! நாம் பிறரிடம் காட்டும் அதீத பாசம் நமக்கே சிலசமயம் சோதனையாக அமைந்து விடுகிறது. அன்பு எல்லை மாறாமல் இருப்பது நல்லது. அன்பின் எல்லை கடப்பது பாசத் தொல்லையாகவும் மாறி விடுகிறது. அருமையான பகிர்வு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. அழகான பகிர்வு நான் என்னையே பின்னோக்கி பார்க்கிறேன். எனது குழந்தைகளிடம் அன்பாகத்தான் இருந்து வருகிறேன்.

    காரணம் தவறுகளை சுட்டிக்காண்பித்தே வந்து இருக்கிறேன் இன்றுவரை...

    ReplyDelete
  8. கிட்டத்தட்ட இந்தக் கருவை வைத்து எழுதப்பட்ட ஒரு கதைக்கான விமரிசனம் தான் என்னோட வலைப்பக்கம் வந்திருக்கு. முடிஞ்சா வந்து பாருங்க. ஆடியோ, வீடியோ நல்ல தெளிவா வந்திருக்கு. உங்க கணவர் எடுத்து உதவி செய்யறாரா? ஆனால் துரியோதனன்/திருதராஷ்ட்ரன் என்பதை முன்னரே கவனித்துச் சரி செய்திருக்கலாம். எல்லோரும் சொல்லி இருக்காங்க! நீங்க எழுதி வைச்சுப் பேசறீங்களா? அல்லது அப்போது மனதில் தோன்றுவதைப் பேசுவீர்களா? பின்னது எனில் எடிட் செய்யும் போது திருத்த முடியாதோ? எழுதி வைச்சுப் பேசினால் எழுதும்போது கவனமாக இருந்துக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அக்கா. நீங்கள் எழுதியிருந்த விமர்சனம் படித்தேன். உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தாலும், நான் குறிப்பிட்ட கதையை வாசிக்காததால் என்னால் கருது கூற முடியவில்லை.

      Delete
    2. கதைக்குச் சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சால் போய்ப் பாருங்க. சின்னக் கதை தான். ஒரே பக்கம். :)))) பத்து நிமிஷத்தில் படிச்சுடலாம்.

      Delete
  9. பதிவாய் எழுதுவதற்கு பதில் இது உங்களுக்கு எளிதாக இருக்கு போல. மத ரீதியான அதீத நம்பிக்கைகளுக்கும், பாசத்துக்கும் சம்பந்தம் இருப்பதாய்த் தெரியலை. ஏன்னா கடவுளிடம் வைப்பது பாசம் இல்லை! இந்தப் பொசசிவ்னெஸ் இதனால் அதிகம் பாதிப்படைந்திருக்கேன். நிறைய எழுதலாம். நம்மோட மனசையே நினைச்சுப் பார்க்க மாட்டாங்க! அவங்க சொல்வது தான் சரினு சொல்வாங்க! நம் பேச்சே எடுபடாது! ஆனால் இதை அதீதப் பாசம்னு சொல்லுவதா? ஒரு வித சுயநலம்னு சொல்லலாமோ?

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் மத மாற்றம் என்பதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் அதில் இறை நம்பிக்கை, அன்பு இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. நான் குறிப்பிட்டது நம் மதத்திற்குள்ளேயே இருக்கும் பிளவுகளைப் பற்றிதான். வேளுக்குடி போன்ற பெரியவர்களே திருமாலை உயர்த்த, சிவனை மட்டமாக பேசும் அவலம், and vice versa.

      Delete
    2. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான். சிதம்பரம் நடராஜா கோயிலுக்குப் போனால் பார்க்கலாம். கோவிந்தராஜரைப் பார்க்க வரும் வைணவர்கள் நடராஜர் பக்கம் திரும்பாமல் இரு கைகளால் மறைத்துக்கொண்டு நேரே பார்த்தபடி செல்வார்கள். சிரிப்பு வரும்! :)))))) நீங்க கேட்ட கோவிந்தராஜர் பற்றிய தகவல்களைச் சீக்கிரமாய் மெயிலில் அனுப்பறேன். வேலை அதிகம்! :) முதல் வாரம் இல்லையா!

      Delete
    3. //பதிவாய் எழுதுவதற்கு பதில் இது உங்களுக்கு எளிதாக இருக்கு போல.//இல்லை, குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்சம் பாதை மாறி விட்டது.

      Delete
  10. என் மகன்தான் வீடியோ எடுப்பான். எழுதி வைத்துக் கொண்டு பேசுவதில்லை, மனதிற்குள் ஒத்திகை பார்த்துவிட்டு, பின்னர் பேசுவேன். மேற்படி வீடியோ எடுக்கும் பொழுது, ஒரு முறை இடையில் மின்சாரம் போனது, ஒருமுறை யாரோ இடையில் அழைப்பு மணியை அடித்தார்கள். இப்படி அடிக்கடி இடையூறு ஏற்பட்டதால் தவறாக சொல்லி விட்டேன் போலிருக்கிறது(சொல்லக் கூடாது என்பது முக்கியம்). எடுக்கப்பட்ட வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று தெரியவில்லை. கற்றுக் கொள்ள வேண்டும்.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete