கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 6, 2019

கொடிக்கு காய் பாரமா?

கொடிக்கு காய் பாரமா?

அரசனாக இருந்தாலும், கர்ம யோகியாக வாழ்ந்தவர் ஜனகர். கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வமும், ஒருமுகப்பட்ட கவனிப்பும் அவருடைய குருவிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் மீது ஒரு தனி பாசம் வைத்திருந்தார். இது மற்ற சீடர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜனகர் ஒரு அரசனாக இருப்பதால்தான் தங்களுடைய குரு பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்தார்கள், அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்தார்கள். ஜனகரின் தன்மையையும், தன்னுடைய நிலைபாட்டையும் மற்ற மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்த குரு,ஒரு நாள்,  தன் யோக சக்தியால், அரண்மனை உட்பட மிதிலாபுரி முழுவதும் எரிவது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்.  அந்த காட்சியை கண்ணுற்றதும், எல்லா மாணவர்களும், பாடத்தை அப்படியே பாதியில் விட்டுவிட்டு தங்கள் உடமைகளை பாதுகாக்க ஓடினர். அங்கு சென்றதும்தான் நிஜமாக அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெளிந்து திரும்பி வந்தனர். ஜனகரோ கொஞ்சம் கூட பாதிக்கப்படாமல் தன் கற்றலை தொடர்ந்து  கொண்டிருந்தார்.  ஆசிரியர் அவர்களிடம்,"உங்களுக்கும் ஜனகருக்கும் இருக்கும் வித்தியாசம் புரிகிறதா?பெரிதாக சொத்து பத்துக்கள் இல்லாத நீங்கள் எல்லோரும் உங்கள் உடைமைகளை காப்பாற்றிக் கொள்ள ஓடி விட்டீர்கள், ஆனால், இந்த நாட்டுக்கே அதிபதியாக, ஏராள சொத்துக்களுக்கு உடமையாளரான ஜனகனோ, இதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறான். நான் ஏன் அவனிடம் பிரத்யேக அன்போடு இருக்கிறேன் என்று இப்போது தெரிந்து கொண்டீர்களா?" என்றாராம்.

இந்த கதையை நான் கல்லூரி மாணவியாக இருந்த பொழுது, என் ஆசிரியர்  கூறியதும், நான் அவரிடம் ,"ஒரு ராஜாவாக இருந்துகொண்டு தன் நாட்டில் ஒரு பெரிய தீ விபத்து நிகழும் பொழுது, அவர் அங்கு சென்று, அந்த நெருப்பை அணைக்க  வேண்டாமா?" என்று கேட்டேன். அதற்கு  அவர் சிரித்துக்கொண்டே, " ஒரு நாடு என்றால் அதில் தீயணைப்பு படைகள் இருக்காதா? ஒரு நல்ல நிர்வாகி என்பவன் தானே எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும் என்னும் நிலையில் வைத்திருக்க மாட்டான். எல்லா துறைகளுக்கும் திறமையான, செயல் திறமை மிக்க ஆட்களை அதிகாரிகளாக நியமித்து, அவர்களுக்கு செயல்படும் அதிகாரமும் கொடுத்து வைத்திருப்பான். அதனால் ஜனகரே ஒவ்வொன்றிற்கும் நேரில் சென்று பார்வையிடும் தேவை இருந்திருக்காது". என்றார்.  

நான் சாதாரணமாகத்தான் இந்த கதையை எழுதியிருக்கிறேன். உடனே நீங்களாகவே, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளோடு சம்பந்தப்படுத்திக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பு இல்லை. 

மஹாத்மா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் என்ன 
வித்தியாசம்?
அவர் பாபு(Bapoo), இவர் பப்பு(Pappu) 


பெண்ணின் மனதை தொட்டு படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி எனக்கு மிகவும் விருப்பமானது. 

அரசியலை விட்டு வெளியே வந்து ஒரு சமூக விஷயத்தைப் பற்றி பேசலாமா? இப்போது பெண்கள் தங்கள் படிப்பு, வேலை இவை காரணமாக திருமணத்தையும், பிள்ளைப் பேற்றினையும் தள்ளிப் போடுகின்றனர். சிலர் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். 

என் மகனோடு பணி புரியும் ஒருவர்," குழந்தைகள் எல்லாம் எதற்கு? அனாவசிய செலவு, புடுங்கல், அதனால்   நானும் என் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்து விட்டோம்" என்றாராம். மக்கள் இந்த அளவு தற்குறிகளாகி விட்டார்களா? என்று தோன்றியது. 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா?
கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?" என்றொரு பழைய பாடல் உண்டு. குழந்தையை பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்களா? கடவுளே!




24 comments:

  1. இப்படி எல்லாம் இவர்கள் வாழ்வது ஏன் என்பது தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. தன்னுடைய சொந்த குழந்தைகளுக்காக கூட சிறு தியாகம் செய்ய முடியாதவர்கள், தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காகவும், நாட்டிற்க்காகவும் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? கருத்திற்கு நன்றி.

      Delete
  2. நான்கூட தீ பிடித்த விசயத்தை... புயலால் மக்கள் செத்துக்கொண்டு இருக்கும்போது... மோடி நடிகை வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்ட விசயத்தோடு முடிச்சு போடுறீங்களோனு தப்பாக நினைச்சுட்டேன் ஸாரி....

    ReplyDelete
  3. சிலர் தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்கிற பிரமையில் இருப்பார்கள். அதே போல ஹார்ட் ஒர்க், ஸ்மார்ட் ஒர்க் வித்தியாசமும்...

    நகைச்சுவைக்கு காட்சி ரசித்தேன்.

    ReplyDelete
  4. கதைகள் வாழ்வியலுக்கு ஒத்துவருமா

    ReplyDelete
    Replies
    1. நம்மை தெளிவிக்கவும், இருக்கும் நிலையிலிருந்து மேலே இட்டுச் செல்லவும்தானே கதைகள். வருகைக்கு நன்றி.

      Delete
  5. நகைச்சுவை - நன்று.

    பச்சை நிற எழுத்துகள் - :) வண்ணத்தினை மாற்றினால் நல்லது.

    குழந்தை வேண்டாம் - இப்போது நிறைய தம்பதிகள் இப்படித்தான் யோசிக்கிறார்கள்.... வேதனை.

    ReplyDelete
  6. நன்றி வெங்கட்! பச்சை நிற எழுத்துக்களை மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  7. சிறப்புப் பார்வை
    பாராட்டுகள்

    ReplyDelete
  8. குடும்பம், மன்னர். நிகழ்கால அரசு அனைத்துக்கும் பொருந்தும் ஜனகர் கதை.
    பணிகளை பிரித்துக் கொடுத்து கவலையின்றி இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நானே பார்ப்பேன் இருந்தால் குழப்பம், கவலை, எல்லாம் வந்து சேரும்.

    நகைச்சுவை சுவையாக இருக்கிறது.

    அந்தக் கால பெரியவர்களை நினைக்க தோன்றுகிறது, ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் எல்லோரையும் எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள்!

    ReplyDelete
    Replies
    1. //குடும்பம், மன்னர். நிகழ்கால அரசு அனைத்துக்கும் பொருந்தும் ஜனகர் கதை. // சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும், அவைகளை ஒரு போதும் பாரமாக நினைத்ததில்லை நம் பெரியவர்கள்.
      கருத்துக்கு நன்றி.

      Delete
  9. ராஜாவாக இருந்தாலும் ஜனகர் தண்ணிவாளியுடன் அங்கே ஓடியிருக்கவேண்டும் எனக் கூக்குரலிடும் அதிபுத்திசாலிகள் இல்லாத காலமது! ஜனகர் செய்த புண்ணியம்..

    வாழ்க்கை என்றால் ‘ஜாலி’யாக இருப்பது.. அதற்கு குழந்தை என்பது ஒரு வேகத்தடை அல்லது பெரும்பிரச்னை என நினைக்கும் அறிவுச்சுடர்கள் ’படித்த’ சமூகத்தில் பெருகிவருகிறார்கள்..

    ReplyDelete
  10. ஜனகர் இப்போது இருந்திருந்தால், அவர் செய்ததை பற்றி சோஷியல் மீடியாக்களில் விவாதங்கள் தூள் பறக்கும்.
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. நல்ல கதை பானுக்கா. பணிகள் பிரிப்பது என்பது மேனேஜ்மென்டில் மற்றும் பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட், பெர்சானல் மேனேஜ்மென்ட் இதில் சொல்லப்படுவது. தலைவன் எமோஷனலாக இருந்தால் வேலைக்காகாது என்பதும் சொல்லப்படும்.

    வீட்டிற்கும் பொருந்தும்.

    இப்போதுள்ள இளைஞர்கள் இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஜக்கி வாசுதேவ் கூட நீங்கள் இங்குக் குறிப்பிட்டிருப்பது போல இப்படி ஒரு கருத்து சொன்ன வீடியோ ஒன்று இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
  12. என்னாதூஊஊஊ பானுமதி அக்கா யூ ரியூப்லதான் குதிச்சிருக்கிறா என நினைச்சேன்ன்ன் இப்போ அரசியலுக்குள் குதிச்சிட்டாவோஒ ஆஆஆஆ என்னை விடுங்கோ மீ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. எதில் குதித்தாலும் தேம்ஸில் குதிப்பதற்கு ஈடாகுமா?

      Delete
  13. வணக்கம் சகோதரி

    நிதானத்திற்கும், பொறுமைக்கும் உதாரணமாய் நல்ல கதை. படித்து ரசித்தேன். நகைச்சுவையும் அருமை. எத்தனைச் செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வத்துக்கு ஈடாகுமா? இப்படியும் சிலர்.! கேட்கவே சங்கடமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சந்தோஷங்களில் தலையாயது குழந்தைகள் மூலம் கிடைக்கும் சந்தோஷம்தான். இதை உணராதவர்களை என்ன சொல்ல முடியும்? கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கதை. ஜனகர் அரசனாக இருந்தாலும் நல்ல ஞானியும்
      கூட. நல்ல தெளிவான சிந்தனை கூடிய உயர்வான பிறவி.
      அது போல இருக்க நாமும் கற்க வேண்டூம். சிரமமான விஷயம் தான்.
      குழந்தைகள் சம்பந்தமாக வேண்டாம் என்று முடிவெடுத்த தம்பதிகளை
      நிறைய சந்திக்கிறேன்.

      புரியவில்லை அவர்கள் மனது.
      நகைச்சுவை வீடியோ நன்றாக இருந்தது.
      நன்றி பானு மா.

      Delete
  15. ராஜரிஷி ஜனகர்! நல்ல கருத்துள்ள கதை. இந்தக் காலப் பெண்களின் மனோபாவம் பொறுப்பை ஏற்க அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. எங்கள் சுற்றுவட்டாரத்திலேயே இதற்கு உதாரணங்கள் பல உண்டு. திருமணம் செய்துக்கவே பெண்களுக்கு இப்போதெல்லாம் 30 வயது ஆகி விடுகிறது.

    ReplyDelete