கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 6, 2019

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, கை கொடுத்த சஹாயாத்ரி

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, 
கை கொடுத்த சஹாயாத்ரி

கோலாப்பூர் ஹோட்டலிலிருந்து கிளம்பும் பொழுது என் கணவர் சாதாரணமாகத்தான் இருந்தார். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி இறங்கியது வயிற்றை பிரட்டுவதாக கூறினார். அதோடு பகல் காட்டில் குடித்த சாய்,  உடனே கீழே காளேஸ்வர் கோவில் வாசலில் குடித்த லஸ்ஸி எல்லாம் வயிற்றுக்கு   ஒவ்வாமல் வாமிட்டிங், வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட அங்கிருந்த ஸ்டேஷன் இன்சார்ஜிடம் நிலைமையை விளக்கி, என் கணவரை எங்காவது படுக்க வைக்க முடியுமா? என்று கேட்டதற்கு "அதெல்லாம் முடியாது,  பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகள் ஏதாவது ஒன்றில் படுக்க வையுங்கள்" என்று கூறி விட்டார்.  இத்தனைக்கும் நாங்கள் முதல் வகுப்பில் பயணச்சீட்டு எடுத்திருந்தோம். அங்கு முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு என்று தனி வெயிட்டிங் ரூம் இல்லை. எனவே பொதுவான தங்கும் அறையில்தான் நாங்கள் இருக்க வேண்டியிருந்தது.  சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு சற்று தெளிவானார்.

நாங்கள் மும்பை சென்று என் நாத்தனாரின் கணவரை பார்த்து விட்டு அங்கிருந்து மந்த்ராலயம்        சென்று விட்டு பெங்களூர்            திரும்புவது என்று திட்ட மிட்டிருந்தோம், ஆனால் என் கணவரின் உடல் நிலையை கருதி மும்பையிலிருந்து பெங்களூர் திரும்பி விடலாம் என்று திங்கட்கிழமை பயணம் செய்ய விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிய என் கணவர் மும்பை, பெங்களூர் ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தார். அதில் எது தவறாகியது என்று தெரியவில்லை. கோலாப்பூர், மும்பை ரயில் டிக்கெட்டும் கான்சலாகி விட்டது. நேரிடையாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் எனறால் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் இல்லை, வேண்டுமானால் சஹாயாத்ரி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.  அவசர அவசரமாக ரிசர்வேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, கார்டோடு நீட்டினால், "கார்ட் என்றால் நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும், இப்போது முடியாது கேஷ்தான் வேண்டும்" என்று ஹிந்தியில் பாத் கர்த்தினார் ஒரு வார்த்தை ஆங்கிலம் பேச மாட்டேன் என்று விரதம் எடுத்திருந்த கவுண்டரில் இருந்த டிப்டாப் ஆசாமி. நல்ல வேளையாக கையில் பணம் இருந்ததால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வெயிட்டிங் அறையில் தேவுடு காக்கத் தொடங்கினோம்.

நான் மட்டும் இரவு உணவு சாப்பிட காண்டீனுக்குச் சென்ற பொழுது அங்கிருந்த ஒரு தம்பதியினர் தாங்கள் ஏதோ ஒரு பாசன்ஜர் ரயிலுக்காக காத்திருப்பதாக ஹிந்தியில் கூறினார்கள். அப்போது ஹிந்தியில் வந்த அறிவிப்பு ஒன்று பாசன்ஜர் ரயில் ஒன்று ஒன்றாம் எண் பிளாட்ஃபாரத்தில் வரும் என்றது.
சற்று நேரத்தில் ஒரு வண்டி முதலாம் பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. அது கிளம்பி சென்ற பிறகு சஹாயாத்ரி வரும் என்று நினைத்தோம். என் கணவர், "எதற்கும் இங்கே விசாரிக்கலாம், ஒரு வேளை சஹாயாத்ரி இரண்டாவது பிளாட்ஃபாரத்தில் வந்தால் மாடிப்படி ஏறி இறங்க வேண்டும், போர்ட்டரும் இல்லை, நாம்தான் லக்கேஜை தூக்கி க்கொண்டு செல்ல வேண்டும்." என்றார். எனவே அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம்,"சஹாயாத்ரி எந்த பிளாட்ஃபாரத்தில் வரும்?" என்றதும், "இதோ நிற்கிறதே, இதுதான் சஹாயாத்ரி" என்றதும் தூக்கி வாரி போட்டது. நல்லவேளையாக வெயிட்டிங் ரூமிற்கு எதிராகவே செகண்ட் ஏ.சி. கோச் நின்றது. ஏறி உட்கார்ந்து ஒரு பெரிய பெருமூச்சு விட்டோம்.

ரயிலில் இருந்த போர்டில் ஹிந்தியில் மட்டுமே பெயர் எழுதப்பட்டிருந்தது. அறிவிப்புகளும் ஹிந்தியில் மட்டுமே செய்தார்கள். ஹிந்தி தெரியாதவர்களுக்கு கஷ்டம்தான். நம் ஊர் தொலைகாட்சிகளில் ஹிந்தியை எதிர்ப்போம் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முழங்குகிறார்கள். வாழ்க!




  . 

23 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மொழிகள்தான் ஒசத்தி போலும்.. ஆனாலும் ஹிந்தி பேச, படிக்க தெரிந்திருந்தால் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் செளகரியமாகத் தான் இருக்கும்.

    எப்படியோ மஹாலக்ஷ்மி தங்களை கை விடவில்லை.( இருதடவை போய் வணங்கி வந்த அந்த அன்னையைதான் கூறுகிறேன்.)

    செல்ல வேண்டிய "சகயாத்திரை" நிறைவேறாது போனது வருத்தமாய் இருந்தாலும், நழுவிய மஹாலக்ஷ்மிக்கு ஈடு கொடுத்து கை தந்த சஹாயாத்ரிக்கு கண்டிப்பாக நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    தாங்கள் பதிவுக்கு வைத்த தலைப்பும் அருமை.

    ஊருக்கு சென்றவிடத்தில் உடல்நலம் பாதித்தால் கஸ்டந்தான்.. தங்கள் கணவருக்கு தற்சமயம் உடல்நிலை நன்றாக குணமாகி விட்டதா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் கணவர் அடுத்த நாளே சரியாகி விட்டார்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. அடடா... பயணச் சீட்டுகளை Cancel செய்யும்போது கொஞ்சம் ஏமாந்தால் கூட திட்டங்கள் பாழாகிவிடும். நல்ல வேளை வேறு இரயிலில் இடம் கிடைத்ததே.

    ஹிந்தி - ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹிந்தி கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஹிந்தி ஒருவருக்குத் தெரிந்திருந்தால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சுற்றி வந்து விடலாம் - அனுபவத்தில் உணர்ந்த உண்மை இது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  3. உங்களுக்கு நேர்ந்த அனுபவம் உண்மையிலேயே கவலையும் ஆதங்கமும் கொள்ள வைக்கிறது. அன்று உங்களுக்கு நேரம் சரியில்லை போலும். எப்படியோ சரியான ரயிலில் ஏற முடிந்ததே அது வரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். எங்களுக்கும் 2,3 முறை இப்படி நடந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் போனதில் அல்ல. சரியான ரயில் எது என்னும் அறிவிப்புச் செய்யாததால். இரு முறை ரயிலைத் தவற விட இருந்தோம். இரு முறையும் நல்லவேளையாக சுதாரித்துக் கொண்டு ரயிலில் ஏறினோம். கடைசியாக இப்படி நடந்தது, இங்கே திருச்சி, ஸ்ரீரங்கத்திலேயே கல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்ப்ரஸுக்காகக் காத்து நின்றபோது. ரயில் நடைமேடைக்கு வந்துவிட்டது. ஆனால் அறிவிப்பு இல்லாததால் ஏற முயலவில்லை. பின்னர் ரயிலின் கூட்டத்தைப் பார்த்துப் பயணம் செய்த பிரயாணியிடம் கேட்டதுக்கு அது தான் ஹவுரா எனச் சொல்லவே தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு அதே பெட்டியில் ஏறி எங்களுடைய இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரயிலுக்குள்ளேயே சாமான்களைத் தூக்கிக் கொண்டு சென்று எங்களுடைய இருக்கைக்குச் சென்றால் அங்கே ஏற்கெனவே ராஜஸ்தானி தம்பதியர் இருவர் குடித்தனமே நடத்திக் கொண்டிருந்தார்கள். சாமான்கள் வைக்கவோ, நாங்கள் உட்காரவோ இடமே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏதோ போதாத காலத்திலும் ஒரு நல்ல காலம் என்றுதான் கூற வேண்டும்.

      Delete
  4. நடந்தது நடந்து விட்டது. ஆனால் தேநீர் குடித்து மூன்று மணி நேரத்துக்குள்ளாக லஸ்ஸி சாப்பிடாமல் இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. இப்போது உடல்நிலை தேவலை தானே! உங்கள் தைரியமும் , முன் யோசனையும் தான் இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பங்களில் இருந்து உங்களை வெளிவரச் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் லஸ்ஸி குடிக்கவில்லை. என் கணவருக்கு லஸ்ஸி மிகவும் பிடிக்கும்.

      Delete
  5. கோலாப்பூரில் முதல் வகுப்புப் பயணிகளுக்கு என ஓய்வறை தனியாக இல்லை தான். இதை நாங்களும் அனுபவித்தோம். ஆனால் நாங்கள் சென்ற நேரம் ரயில்வே அலுவலகத்தினர் உதவியாகவே இருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. சஹாயாத்ரி (அப்படியென்றால்...?) என்றாலும் மஹாலக்ஷ்மி வேண்டும் !

    அப்புறம் திணிப்பது எதற்கும் நல்லதல்ல...

    ReplyDelete
    Replies
    1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மஹாராஷ்ட்ராவில் "சஹ்யாத்ரி மலைத்தொடர்" என அழைக்கப்படும். மராட்டி சாம்ராஜ்யம் அங்கே தான் துவங்கியது!

      Delete
    2. மொழி திணிப்பு என்று ஏன் நினைக்க வேண்டும்? பெரும்பான்மையான நாடுகளில் மூன்று மொழிகளை படிக்கத்தான் வேண்டும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. ஆங்கிலத்தில் அறிவிப்புச் செய்ததாக நினைவு நாங்க போனப்போ! ஆனால் ஹிந்தியில் மட்டும் அறிவிப்புச் செய்திருந்தாலும் எங்களுக்குப் புரியும் தான்! இங்கே திருச்சி ஶ்ரீரங்கத்திலேயே சில வண்டிகளுக்கு அறிவிப்பே செய்வதில்லை. அதுவும் ஹவுரா எக்ஸ்ப்ரஸ் 3 ஆவது நடைமேடைக்கு வரும். அங்கே அடுத்தடுத்து பத்து நிமிட இடைவெளியில் இரண்டு ரயில்கள் வருவதால் அறிவிப்புக் கொடுக்கலைனா நமக்குப் புரியாது! நாங்க கிட்டத்தட்ட ரயிலை விட இருந்து பின்னர் சமாளித்தோம். புவனேஸ்வரில் இருந்து கல்கத்தாவுக்கு விமானப் பயணச் சீட்டு வேறே வாங்கி இருந்தோம். அதெல்லாம் வீணாகி இருந்திருக்க வேண்டியது!

    ReplyDelete
  8. //என்று ஹிந்தியில் பாத் கர்த்தினார் ஒரு வார்த்தை ஆங்கிலம் பேச மாட்டேன் என்று விரதம் எடுத்திருந்த கவுண்டரில் இருந்த டிப்டாப் ஆசாமி..//

    இது தான் வடக்கே என்றாலே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது!

    அங்கே ஆங்கில அறிவு கிடையாது; (உண்டு என்றாலும் வீம்புத்தனமாக பேச மறுக்கிறார்கள்)

    இங்கேயோ இந்தி செல்லாக்காசு..

    எந்தக் காலத்தில் வடக்கும், தெற்கும் (குறிப்பா தமிழ் நாடும்) இந்த மொழி விஷயத்தில் கைகுலுக்கப் போகிறாரகளோ, தெரியவில்லை!..

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஏதாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுது இந்த ஆதங்கம் அதிகமாக வரும்.

      Delete
  9. பயணத்தில் இன்னல்கள் சில நேரங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது.

    //அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம்,"சஹாயாத்ரி எந்த பிளாட்ஃபாரத்தில் வரும்?" என்றதும், "இதோ நிற்கிறதே, இதுதான் சஹாயாத்ரி" என்றதும் தூக்கி வாரி போட்டது. //

    நல்லவேளை கேட்டீர்கள். இல்லையென்றால் ரயிலை தவறவிட்டு இருப்பீர்கள்.

    இறைவன் அருளால் நலமாக ரயில் ஏறிவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட அனுபவம் இதுதான் முதல்முறை. அதே தடத்தில் அடுத்த வாரம் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்த பொழுது பயங்கரமாக இருந்தது. வருகைக்கு நன்றி.

      Delete
  10. ஓ இதுதான் சென்ற பகுதியில் எழுதியிருந்த அந்த ரயில் விஷயமா..

    மாமாவுக்கு உடல்நலன் சரியில்லாமல் ஆனது அதுவும் வயிற்றுப் பிரச்சனை பிரயாணங்களில் கஷ்டம்தான்...

    அக்கா உங்களுக்கு தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை ந!!! ஹிஹிஹிஹி

    அவர்கள் ஹிந்தி மராட்டி கலந்து இருந்திருக்கும் இல்லையா?

    எப்படியோ ஒரு வழியாகப் பிரயாணம் செய்தீர்களே.

    பிரயாணங்களில் இப்படி நேர்வதுண்டுதான். நானும் மகனும் எதிர்பாரா விதமாக ரயிலை மிஸ் செய்தோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் கணவர் நன்றாகவே ஹிந்தி பேசுவார். அன்று அவருக்கு முடியாமல் போனதுதான் பிரச்சினை. எப்படியோ வண்டியில் ஏறி விட்டோம்.

      Delete
  11. அடிக்கடி ரயில் மூலம் பிற மானிலப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இந்தி அறிவிப்புகளைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காமல் இருந்தால் அது மாபெரும் குற்றமே. அந்த அறிவிப்புகளில் standard ஆக மொத்தம் பத்து அல்லது பன்னிரண்டு வார்த்தைகள் தான் இடம்பெறும். சென்னை செண்டிரல் ஸ்டெஷனில் அரைமணி நேரம் நின்றாலே நமக்குப் பழகிவிடும். நம்மை அறியாமலேயே அந்த வாக்கிய அமைப்பு மனதில் பதிந்துவிடும்.

    ஆனால் கல்கத்தாவில் இந்தியில் கூடப் பேச மாட்டார்களே, அங்கு என்ன செய்வது? அதற்கும் மொழிக் கொள்கைக்கும் என்ன சம்பந்தம்? நம்மை நாம்தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    மற்றப்படி, ரயில்வே கேன்சலேஷன் இணையத்தில் செய்யும்போது அதிக கவனம் தேவைப்படுவது உண்மையே.


    ReplyDelete
  12. இந்த பயணத்திற்குப்பிறகு அதிக பட்சம் நான்கு நாட்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது, எங்கெல்லாம் விமானத்தில் செல்ல முடியுமோ, அங்கெல்லாம் அந்த சேவையை பயன்படுத்தி க்கொள்ள வேண்டும் போன்ற முடிவுகளை எடுத்தேன். பார்க்கலாம். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. பயணங்களில் இப்படி வரும் அனுபவங்கள் கஷ்டம் தான் ...

    எப்படியோ ரயிலை பிடித்துவிடீர்கள் ...

    குழந்தைக்களால் எளிதாகவே பல மொழிகளை கற்க இயலும் ...நாம் இது கடினம் என கூறாமல் இருந்தால் ...எங்கே இங்கு தான் நம்மை படிக்க விட கூடாது என கங்கணம கட்டி கொண்டு இருக்கிறார்களே...

    ReplyDelete