கோலாப்பூர் உலா
New Palace @ Kolhapur |
கோலாப்பூர் கார்ப்பரேஷன் கட்டிடத்தின் முன்புற, பக்கவாட்டுத் தோற்றம் |
அடுத்த நாள் கோலாப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, மும்பை செல்ல இரவு 8:30 மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரெஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அன்று காலை முதல் ஆடி வெள்ளி என்பது என் நினைவில் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அன்னை மஹாலக்ஷ்மியை தரிசித்து விட விரும்பினேன். என் கணவர் வரவில்லையென்று கூறிவிட்டதால், நான் மட்டும் தனியாக கோவிலுக்குச் சென்றேன். காலை நேரத்திலேயே நல்ல கும்பல். ஆனால் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் சுலபமாக தரிசிக்க முடிந்தது. அம்மனுக்கு அருகில்தன கொஞ்சம் தேக்கம். சிறப்பு பூஜைக்காக பணம் கட்டியவர்களை பின் பக்கம் சென்று அமரச் சொன்னார்கள் போலிருக்கிறது. அதில் இருந்த ஆண்களும் பெண்கள் வரிசையை பிளந்து கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் தள்ளுமுள்ளு, அதனால் சலசலப்பு. பெண்கள் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் தாயாரை நிதானமாக நன்றாக தரிசனம் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!.
அன்று காலை பூ போன்ற இட்டிலியும், நன்றாக வெந்து ஆனாலும் உதிர் உதிராக, சுவையாக இருந்த போகாவும் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்டில் இருந்தன. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் என்ற பெயரில் அடர்ந்த சிவப்பில் ஒரு திரவம். அதை தவிர்த்து விட்டு, சட்னி எடுத்துக் கொண்டேன். ப்ரெட் டோஸ்டும் இருந்தது. அவர்களுக்கு காபி மட்டும் போடத் தெரியவில்லை. அதனால் டீ.
அந்த ஹோட்டல்காரர்களே டூரிஸ்ட் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். முதலில் நியூ பேலஸ் எனப்படும். ஷாஹு மஹாராஜின் இருப்பிடமான அரண்மனையே தற்சமயம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் பொழுது செல்போனை ஆஃப் செய்து விடுங்கள் என்கிறார்கள். ஷாஹு மஹராஜ் என்றதும் மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.
அங்கிருந்து ஓவியங்களில் ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?
அங்கிருந்த ஆவணங்களில் இங்கிலாந்தின் அரசர் ஜார்ஜ், ஷாஹூஜியை, கோலாப்பூரின் அரசராக நியமித்து, மகாராஜா என்று அழைக்கப்பட உரிமை வழங்குவதாகவும் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்ததும் கொஞ்சம் கோபம் கூட வந்தது. யாருடைய மண்ணிற்கு ராஜாவை யார் நியமிப்பது? இது கூட உரைக்காமல் நம் நாட்டு அரசர்கள் இருந்ததால்தான் அன்னியர்க்கு அடிமை ஆனோம்.
அங்கிருந்து, கோட்டை ஒன்றை பார்க்கச் சென்றோம். நிறைய கொண்டை ஊசி வளைவுகளோடு இருக்கும் மலைப்பாங்கான சாலையில் பயணித்தால்
சத்ரபதி சிவாஜி அமைத்த பகல்காட் கோட்டை, தானியங்கள் சேமிப்பதற்காக பன்ஹாலா என்னும் இடத்தில் கட்டப்பட்ட இடம் போன்றவற்றை பார்த்தோம்.
காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை |
பகல்காட் கோட்டையிலிருந்து கீழே தெரியும் காட்சி |
பனாலா என்னும் இடத்தில் தன்னுடைய படையில் இருந்த வீரர்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் தானியங்களை சேமித்து வைக்க சத்திரபதி சிவாஜி கட்டப்பட்ட கோட்டையில் அவரும் அவ்வப்பொழுது வந்து தங்குவாராம். மிக அழகாக இருக்கிறது. இதுவும் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.
வசதிகள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் இங்கெல்லாம் பயணிப்பது சுலபமாக இருக்கிறது. மலைப்பாங்காகவும், அடர்ந்த வனமாகவும் இருக்கும் இங்கெல்லாம் கோட்டைகள் கட்டுவது என்பது நினைக்கும் பொழுதே பிரமிப்பாக இருக்கிறது. சிவாஜியின் கொரில்லா தாக்குதல்களுக்கு அதுதான் மிகவும் வசதியாக இருந்திருக்கிறது போலும்.
அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். லிங்கமாகவும் இல்லாமல், ஆவுடையார் மீது, சிவபெருமானின் திருமுகம் என்றும் இல்லாமல், அமர்ந்த திருக்கோலத்தில் கருப்பு நிறத்தில், முண்டாசு அணிந்து கொண்டு வித்தியாசமான ரூபம். பிரகாரத்தில் ஒரு பெரிய காமதேனு பிம்பம்.
கோவில் வளாகம் முழுவதும் கத்தரிப்பூ நிற குங்குமம் சிதறிக் கிடக்கிறது. கோவிலுக்குள் நுழையும் பொழுது, நம்மிடம் இருக்கும் தேங்காயை வாங்கிக்கொண்டு, தக்ஷனை போடுங்கள் என்று தட்டை நீட்டி, நம் நெற்றியில் கத்தரிப்பூ நிற குங்குமத்தை இட்டு விடுகிறார்கள்.
கோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொன்று ரங்காலா ஏரி. நல்ல சுத்தமான நீர் நிரம்பி இருக்கும் நீர் நிலை. அதுவும் சமீபத்திய மழையினாலோ என்னவோ நீர் அலையடிக்க ததும்பிக் கொண்டிருந்தது. மாலை நேரங்களை கழிக்க உள்ளூர் வாசிகளுக்கு ஒரு இடம். குழந்தைகளுக்கு விளையாடுமிடங்கள், சாட் ஐட்டங்கள், ஐஸ் க்ரீம்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஏரியின் ஒரு புறத்தில் போட்டிங் போக வசதி இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது அதன் எதிர் புறம், அதனால் ஐஸ் க்ரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.
நடுவில் தெரியும் கட்டிடம் நீராழி மண்டபமாக இருக்கலாம் அதிக பட்ச நீரால் பெரும்பான்மை மஇருக்கிறது |
மொத்தத்தில் கோலாப்பூர் பயணம் நன்றாக இருந்தது, கடைசியில்தான் எதிர்பாராத சில விஷயங்களால் வெகு சீக்கிரம் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டாலும் எங்களால் திட்டமிட்டபடி மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்க முடியவில்லை, அதை தவர விட்டோம்.
குட்மார்னிங்.
ReplyDeleteகாஞ்சியிலிருந்து அங்கு அனுப்பினாலும் இங்கேயே வாங்குவதற்கும், அங்கு வாங்குவதற்கும் தரத்தில் / வெரைட்டியில் மாறுபாடுஇருக்கலாம்!
ஆமாம், இருக்கிறது.
Delete//மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.//
ReplyDeleteஹா.. ஹா.. ஹா... நல்ல வர்ணனை. சிரித்துவிட்டேன். எதிரிகள் அதிகமோ!!
எல்லாம் இந்த சிவாஜி கணேசனால் வந்த வினை, அவர் நடிப்பை பார்த்து விட்டு ராஜா என்றால் அவர் கம்பீரமாகத்தான் இருப்பார் என்று நினைத்து விடுகிறோம். யார் கண்டார்கள்? வீர பாண்டிய கட்டபொம்மன் கூட சாதாரண தோற்றத்தில் அவிங்க, இவிங்க என்றுதான் பேசியிருப்பாயிருக்கும்.
Deleteகடவுளே கர்ர்ர் என்று மதுரைக்காரர்கள் வராமல் இருக்க வேண்டும்.
ஜிவாஜி அப்படித் தான் பேசி இருப்பார்னு நாங்க தான் முன்னாடியே சொல்லிட்டோமே! இஃகி,இஃகி,இஃகி! :)))) ஆகவே நீங்க கட்டபாண்டிய வீர பொம்மனை என்ன சொன்னாலும் எனக்கு ஒண்ணும் பாதிக்காது. நான் அவரை எல்லாம் ஓர் தியாகினே ஒத்துக்காத கட்சி! காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் என்பதையே தவறு என்னும் கட்சி!
Delete//அவிங்க, இவிங்க என்றுதான் பேசியிருப்பாயிருக்கும். // - பா வெ. மேடம்.. சமீபத்தில் வீரபாண்டிய கட்ட பொம்முவின் நேரடி வாரிசு படங்கள் வெளியிட்டிருந்தார்கள், கூடவே அவர்கள் வறுமையில் வாடுவதாக. அதுபோலவே முகலாயர்களின் கடைசி சக்ரவர்த்தியும் ரொம்பப் பரிதாபமாக இருந்ததாக. சரித்திரம் படித்து நாம் ஒரு இமேஜை உருவாக்கிக்கொள்கிறோம். அதற்கு நடிகர்களின் நடிப்பும் துணைபோகின்றது.
Deleteயார் மனிதன், யார் மிருகம்... நல்ல கேள்வி. அதைப் படம் எடுக்க முடியாதது எங்கள் துரதிருஷ்டம்!
ReplyDeleteசுவாரஸ்யமான விஷயங்கள். நிறைந்த ஏரியின் படம் மனதையும் நிறைக்கிறது.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகோலாப்பூர் உலா இனிமையாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருட்கள் பிரபலம். எதுவுமே நினைவுச் சின்னமாக வைத்துக் கொண்டால், பல வருடங்கள் அதுவும் நம்முடன் தொடர்ந்து வரலாம்.
படங்கள் நன்றாக உள்ளன. யார் மிருகம் யார் மனிதன் அந்த ஓவியத்தையும் படமெடுத்து போட்டிருந்தால், சிங்கத்தின் அமைதியை கண்டிருக்கலாம். தாங்கள் கண்ட ஒவ்வொரு இடத்திற்கும் தங்களுடைய விமர்சனம் அழகாக, மிக ரசனையாக இருக்கிறது.
"காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை" என்ற பாடல் புகைப்படத்திற்கு மிக பொருத்தம். அந்த பாடலும் நன்றாக இருக்கும்.
நீர் நிரம்பிய ஏரி மிக அழகாக உள்ளது. நேரத்துக்கு வந்தும் ஏன் ரயிலை தவற விடும்படி ஆகி விட்டதோ? அடுத்த பதிவில் விபரமறிய காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. விவரங்கள் அறிய அடுத்த பதிவிற்கு காத்திருங்கள்.
Deleteசெருப்பு மற்றும் வெல்லம்தான் பேமஸ். சில இடங்களில் நாம் ஒன்று நினைக்க அவர்கள் தம் பெருமையைக் கூறி நமக்கு உணர்த்துவது மகிழ்வாக இருக்கும்.
ReplyDeleteகோலாப்பூரில் செருப்பு ஃபேமஸ் என்று தெரியும். வெல்லமும் ஃபேமஸ் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
Deleteபயணத்தின் பொழுது வழியெங்கும் கரும்பு கொல்லைகளை பார்க்க முடியும்.
வெல்லம் பிரபலம்னு தெரியும், அதே போல் கோலாப்பூர் மசாலாவும் பிரபலம். ஆனால் நாங்க செருப்போ, வெல்லமோ, மசாலாவோ வாங்கலை! ரொம்பக் காரமாக இருக்கும் மசாலா! செருப்பு காலுக்கு ஒத்துக்காது! வெல்லம் அவ்வளவெல்லாம் வாங்கிட்டுச் செலவு செய்யறது யாரு?
Deleteஅது சரி, நீங்க கோலாப்பூர்க் கைத்தறிப் புடைவை வாங்கினீங்களா? அல்லது வேறேயா?
Deleteவெல்லத்தை அவ்வளவு தூரம் சுமந்து கொண்டு வர வேண்டுமே, அதைச் சொல்லுங்கள்.
Deleteஎப்படியோ அங்கும் போய் நம்மூர் புடவைகளைத்தான் வாங்கி வந்தீர்கள்.
ReplyDeleteபடங்கள் ஸூப்பர்
நன்றி ஜி.
Deleteஙே!!!!!!! நம்ம ஊர்ப் புடைவை தானா?
Deleteஅந்த ஊர் புடவையோடு நம்மூர் புடவையும் வாங்கினேன்.
Deleteபெரும்பான்மை மறைந்து இருக்கிறது என்பதைக் கவிதையாக எழுத 'மறைந்து' என்ற வார்த்தையையே மறைத்துவிட்டீர்களோ
ReplyDeleteநேற்று காஞ்சியில் புடவைகள் பார்த்தேன்...மிக அருமையாக இருக்கு. ஏகப்பட்ட டிசைன், குறைந்த விலை.
🙄🙄பயணம் தொடங்கும் முன் எழுதி விட வேண்டும் என்ற அவசரம்+தூக்க கலக்கம். கவிதை எழுதும் நோக்கமெல்லாம் இல்லை.
Deleteகாஞ்சீபுரத்தில் சின்னக் காஞ்சீபுரத்தில் தான் புடைவைகள் நன்றாக இருக்கும். நெல்லை எங்கே பார்த்தாரோ!
Deleteசின்னக் காஞ்சீபுரத்தில்தானே வரதராஜர் கோவில்....... என் பெண் சொன்னதால் நேற்று இரவே அவள் தேர்ந்தெடுத்து இரண்டு புடவைகள் வாங்கினேன் (சில்க் காட்டன் என்றாள்)
Deleteஅட, ஆமாம், நெல்லை, சின்னக் காஞ்சீபுரத்தில் தான் நம்ம வரதுக்குட்டி இருக்கார். அங்கே சில்க் காட்டன் வாங்கினீங்களா? ஓகே தான். ஆனாலும் கைத்தறிப் புடைவை பருத்தியில் வாங்கி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பத்து வருடங்கள் முன்னரே 500 ரூபாயில் ஆரம்பித்தது! நான் 500 ரூபாயில் 2 புடைவை வாங்கி இருந்தேன் என நினைவு. தோய்த்துக் கட்டக் கட்ட நன்றாக இருக்கும். சாயம் போகாது. இப்போது கோலாப்பூர்க் கைத்தறியும் அப்படித் தான் இருக்கு. தோய்த்துக் கட்ட நன்றாக இருக்கிறது. சாயமே போகவில்லை.
Deleteநம்மூர் மயில்சாமி... ஹா... ஹா...
ReplyDeleteஓவியர் பொள்ளாச்சியை நினைத்து இருக்கலாம்...
"போத்திஸ்/நல்லி அல்லது அந்த பிரபலமான கடைக்கு சென்று வாங்கினோம்" என்று சொன்னால் தானே பெருமை...! தயாரிப்பது நாங்கள்...!
நம்மூர் புடவையை அங்கு பார்த்த பொழுதும், அதைப்பற்றி பெருமையாக அந்த ஊர்காரர்கள் பேசியதை கேட்ட பொழுதும் எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஓவியம் எடுத்துப் போடாமல், வர்ணணைகளால் எனக்கு என்ன புரியும்?
ReplyDeleteபுகைப்படம் எடுக்க
Deleteஅனுமதி இல்லையே.? நன்றி நெல்லை.
//கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?//
ReplyDeleteநல்ல கேள்வி.
பயணம் செய்த இடங்களை விவரித்த விதம் அருமை.
படங்கள் அழகு. கோலாபுபூர் செருப்பு நன்றாக இருக்கும், ஆனால் தண்ணீர் பட்டால் அடிபாகம் கழன்று வந்து விடும் மறுபடியும் ஒட்ட வேண்டும். எத்தவகை செருப்பு வாங்கினீர்கள் என்று தெரியவில்லை.
//மத்தியில் ஆயுதங்களை சேமிக்கவும், மேல் அடுக்கு தண்ணீரை சேமிக்கவும் பயன்பட்டதாம். அங்கு வந்திருந்த ஒருவர் கூறினார்.//
நல்ல திட்டமிடல்.
சிவாஜியின் போர் திறமையை கூறியதும் அருமை.
ஒரு குறுநில மன்னனாக இருந்து கொண்டு பேரரசனாக விளங்கிய ஔரங்கசீப்பின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய மாபெரும் வீரனல்லவா சிவாஜி!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
சிவாஜி ஆரம்பத்தில் குறுநில மன்னனாக இருந்திருக்கலாம். பின்னர் மராட்டி சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திவிட்டுத் தான் போனார். அவர் மட்டும் இல்லை எனில் தமிழகம் எல்லாம் இந்த அளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்காது. விஜயநகர சாம்ராஜ்ய அரசர்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டைக் காபந்து பண்ணியவர்களில் முக்கியமானவர்கள் மராட்டி அரசர்கள்.
Deleteநாங்க ஜிவாஜி, சேச்சே, சத்ரபதி சிவாஜியோட கோட்டைக்குப் போகலை! ஏனெனில் தங்கியது ஒன்றரை நாள் கூட இல்லையே! ஆகவே மலைமேல் உள்ள சிவன் கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்தோம். ம்யூசியம் எல்லாம் போனோம். மஹாலக்ஷ்மி கோயிலுக்குப் பின்னால் இருக்கும் பவானி கோயில் சென்றோம்.
ReplyDeleteபவானி கோவிலும், பஞ்ச கங்கா நதியும் செல்லவில்லை.
Deleteவருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.
இந்தப் பதிவு போட்டதே தெரியலை! :) தற்செயலாக வந்தால் இத்தனை கருத்துப் பரிமாற்றங்கள்.
ReplyDelete😊😊
Deleteநல்ல பகிர்வு. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ராஜாக்களின் தோற்றம் - பல கற்பனை கலந்தவை! சில இடங்களில் ஓவியங்களாகவும், படங்களாகவும் இருக்கின்றன - அவை உண்மையான தோற்றத்தினைக் காண்பிக்கும் ஓவியங்களா என்பதை யாரறிவார்... 23-ஆம் புலிகேசி படத்தில் இராஜா வடிவேலு தன் ஓவியத்தை வரைய வைக்கும் காட்சி மனதிற்குள் வந்து போகிறது!
ReplyDeleteதொடர்கிறேன்.
வெங்கட்ஜி ஹைஃபைவ்!
Deleteஎனக்கும் 23 ஆம்புலிகேசிதான் நினைவுக்கு வந்தார் பார்த்தால் நீங்களும் சொல்லியிருக்கீங்க...
கீதா
நன்றி வெங்கட்.
Deleteபானுக்கா நல்ல விவரங்கள்.
ReplyDeleteமயில்காமி// ஹா ஹா ஹா
பாவம் ராஜா அவருக்கு 23 ஆம் புலிகேசி பத்தி தெரிஞ்சிருந்தா "வரலாறு முக்கியம் அமைச்சரே" அப்ப்டினு ஒரு நல்ல படம் வரையச் சொல்லி எடுத்துப் போட்டிருப்பார்! யாருக்குத் தெரியப் போகுது இப்படித்தன இருந்திருப்பார் என்று!!!!!
றங்காலா ஏரி வெகு அழகு. அந்த நீராழி மண்டபம் என்ன அழகா இருக்கு இல்லையா..
அது சரி ப்ளாட்ஃபார்ம் தெரியாம இல்லைனா அனௌன்ஸ்மென்ட் இல்லாம தவற விட்டீங்களா சீக்கிரமே போயும்? இல்லை கடைசி நிமிஷத்துல ப்ளாஅட்ஃபார்ம் மாத்தி அந்த ப்ளாட்ஃபார்ம் போக முடியாம? யப்பா என்னமா மைன்ட் போகுது!!!!
கீதா
நன்றி கீதா.
ReplyDeleteநம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.....
ReplyDeleteநானும் ரசித்தேன் இந்த வரிகளை ..
ஒரே பதிவில் அரண்மனை , கோட்டை , கோவில், ஏரி என எல்லாம் வந்தாச்சு ...சூப்பர்