கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 30, 2019

மாலைப் பொழுதினிலே

மாலைப்  பொழுதினிலே 

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு முதல் முதலில் தெய்வீக அனுபவம் ஏற்பட்டது ஒரு மாலை நேரத்தில்தான். அஸ்தமன நேரத்தில் வயல்காட்டில் நடந்து வந்து கொண்டிருந்த அவர் கண்ணில் கூட்டமாக கூடு திரும்பி கொண்டிருந்த பறவை கூட்டம் ஒன்று பட்டது. துல்லியமான வான பின்னணியில் அந்த பறவை கூட்டத்தை கண்டவர் பரவச நிலைக்கு ஆட்பட்டாராம். மாலை நேர வானம் மோனமானதுதான்.

எங்கள் வீட்டிற்கு கிழக்கு பார்த்த வாசல். ஆகவே வரவேற்பு கூடத்தை ஓட்டிய பால்கனியிலிருந்து சில சமயங்களில் வெகு அழகான மாலை நேர வானத்தை பார்க்க முடியும். அவற்றில் சில உங்கள் பார்வைக்கும்.





26 comments:

  1. அருமையான காட்சிகள். மாடிக்குப் போய்க் கொண்டிருந்த காலங்களில் நானும் மாலை வானத்தைக் கிழக்கே இருந்தும் மேற்கே இருந்தும் எடுத்திருக்கேன். இப்போல்லாம் மாடிக்கே போவதில்லை என்பதால் படங்கள் எடுத்தே பல நாட்கள் ஆகிவிட்டன. காவிரியில் தண்ணீர் வந்தப்போக் கூடப் போய் எடுக்கமுடியலை!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் காவிரியில் தண்ணீர் கரைபரண்டு ஓடுகிறது.

      Delete
  2. "மாலைச் செவ்வானம் உன் கோலம்தானோ" என்கிற இளையராஜா  பாடல் நினைவுக்கு வருகிறது.  படங்கள் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு பாடல் இருக்கிறதா?

      Delete
  3. பொதுவாக மேகங்கள் காட்டும்  கற்பனைத் தோற்றங்களே அழகாக இருக்கும்.  அவற்றைப் படமெடுக்கும்போதும் உற்சாகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. படமெடுக்கும் பொழுது உற்சாகம் என்பதை விட அதை கேப்சர் பண்ணிக்கொள்ள விரும்பினேன்.

      Delete
  4. மாலை பொழுதினில் பறவைகள் கூட்டமாய் பறந்து செல்வது பார்க்க அழகு. அந்த கூட்டம் கண்ணுக்கு தெரியும் வரை மெய்மறந்து பார்த்து கொண்டு இருப்பேன் .

    வானம் செய்யும் ஜாலங்கள் அழகு.
    மனதுக்கு இதம், சாந்தி தரும் .

    படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மாலையில் கூடு திரும்பும் பறவைகள் சற்று ரிலாக்ஸ்டாக பறப்பது போல தோன்றும்.

      Delete
  5. மாலை நேரக் காட்சிகள் அழகு தான் பானும்மா... எனக்கும் மொட்டை மாடிக்குச் சென்று படங்கள் எடுக்கும் வழக்கம் உண்டு. பயணங்களிலும் இப்படி நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன்.

    தலைநகரில் அப்படி படங்கள் எடுக்க முடிவதில்லை! :(

    ReplyDelete
    Replies
    1. படமெடுப்பதில் உங்கள் ரேஞ்ச் வேறு. நான் அறிச்சுவடி.

      Delete
  6. அற்புதமான காட்சிகள் மேடம் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. 18 மாடிகள் இருக்கும் குடியிருப்பில் நீங்கள் இருக்கும் தளம் 4 அல்லது 5 ஆக இருக்கலாம்.

    வானத்தின் வர்ணஜாலம் அழகு

    ReplyDelete
    Replies
    1. ஏறக்குறைய சரியாக கணித்திருக்கிறீர்கள். எங்களுடையது ஆறாவது தளம்.

      Delete
  8. அருமையான காட்சிகள் பானுமா.

    மாமியார் மாலை நேரம் சொல்லும் வார்த்தைகள் இதமானவையாக இருக்கும் என்பார். பாட்டி கிட்ட நிறைய கேட்டுக்கோ. அவ்வளவு விஷயம் தெரியும் என்றதும் பாட்டி
    காலைப் பிடித்துவிட்டுக் கொண்டே பழைய அனுபவங்களைக் கிரஹித்துக் கொள்வேன்.
    நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் பாட்டிகளும் இல்லை, அவர்கள் சொல்வதை அக்கறையோடு கேட்கும் பேரன் மனைவிகளும் இல்லை.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    அருமையான மாலை நேரத்து சூரியனின் வர்ண ஜால காட்சிகள்.மிகவும் அழகாக படமெடுத்திருக்கீறீர்கள். நானும் இந்த மாதிரி காட்சிகளை கண்டு ரசிப்பேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெவ்வேறு காட்சிகள் மனதை அள்ளும்படி மாறிக் கொண்டேயிருக்கும். படங்களும் எடுத்து வைத்துள்ளேன்.

    "வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கு அது சேதி தரும்"என்ற பாடலும் இந்த காட்சிகளை காணும் போது என் மனதில் வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. 'வானம் என்கொரு போதி மரம்..' வரிகள் மட்டுமல்ல, 'கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூங்கச் செல்க..' என்னும் வரிகளும் நினைவுக்கு வரும்.

      Delete
  10. செல்வி மாதங்கி மாலி ஃபேஸ் புக்கில் த லோன்லி பெர்ட் என்னும்பதிவு எழுதி இருந்தார் அதைதனிமைப்பறவை என்னும் தலைப்பில் தமிழ்ப்படுத்தினேன்அது இதோ
    மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
    ஆதவன் மேற்கே மறைய மறைய
    செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
    களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
    மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

    அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
    ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
    எல்லாம் சென்றதைக் கண்ட நான்
    தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
    ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

    “புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
    சிறகில் வலிமை குறைந்ததோ ?
    உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
    வெகுவாகப் பாடுபட்டாயோ.?
    தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
    புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
    இரையின்றி நீ சென்றால் அவற்றின்
    ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

    இருந்தாலும் சின்னப் பறவையே
    உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
    எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
    இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
    விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
    தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

    நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
    நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
    இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
    உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
    உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
    அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

    நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
    உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
    சென்று வா என் சின்னப் பறவையே.”

    ReplyDelete
  11. மிக அழகு... நானும் கொஞ்சம் எங்கள் வீட்டிலிருந்து எடுத்த அந்திமாலை போட்டிருக்கிறேன்...

    ReplyDelete
  12. கடைசிப் படம் வித்தியாசமான ஒரு அழகு.

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது.

      Delete
  13. மிகவும் அழகாக இருக்கிறது அம்மா...

    ReplyDelete