மசாலா சாட் - 13
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கியவர்களில் 65%
இந்தியர்களாம். சென்ற வருடமும் அங்கு குடியுரிமைக்கு அதிகம் விண்ணப்பித்தது இந்தியர்கள்தானாம். அதற்கு அடுத்த இடத்தில் சீனா.
அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பான்மையோர் பேசும் மொழி ஹிந்தியாம். அதற்கடுத்த இரு இடங்களை குஜராத்தியும், தெலுங்கும் பிடித்துக் கொள்ள, நான்காம் இடத்தில் நம் தாய் மொழி.
முன்னாள் எலெக்க்ஷன் கமிஷனர் டி.என். சேஷன் 10.11.19 1அன்று காலமானார். அரசியல்வாதிகளுக்கு எலெக்க்ஷன் கமிஷனின் சக்தியை உணர்த்தியவர். அதனால் கிடைத்த பிராபல்யத்தில் தேர்தலில் நின்றதையும், விளம்பர படங்களில் நடித்ததையும் எல்லோரும் மறந்திருப்பார்கள்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பத்தான் விக்ரமோடு இணைந்து தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கிறாராம். ஆரம்ப காலத்தில் சுருள் சுருளாக தொங்கும் அவருடைய தலையலங்காரம் எனக்கு பிடிக்கும்.
"பட்டு முக பத்தான்
வீசும் பந்து வேகம்
அவன் கேசப் பந்தோ
சுழலும்"
என்று கவிதை எழுதியிருக்கிறேன். யாருடைய துர் போதனையோ அவர் அதை மாற்றிக்கொண்டு விட்டார்.
திரை அரங்குகள், விமான நிலையங்கள், மால்கள் போன்ற இடங்களில் டாய்லெட்டுகளில், ஆண், பெண், என்ற பிரிவுகள் மட்டும்தான் இருக்கும். சமீபத்தில் விமான நிலையங்களில் family toilet என்ற அறிவிப்பை பார்த்தபொழுது தூக்கிவாரிப் போட்டது. அதன் சூச்சுமம் பிறகுதான் புரிந்தது. யாருக்காவது ஃபேமிலி டாய்லெட்டின் அவசியம் தெரிகிறதா? தெரியாவிட்டால் இந்த கட்டுரையின் கடைசி பாரா வரும் வரை காத்திருக்கவும்.
பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பேருந்துகளை மக்கள் அதிகம் பயன்படுத்தும் விதமாக அதன் கட்டணத்தை குறைக்கவும், பி.எம்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். நல்லதுதான், ஆனால், அந்த பஸ்கள் செல்ல சாலையில் இடம் வேண்டுமே? சாலையில் ஒரு லேனை(lane) பேருந்துகளுக்காக மட்டும் ஒதுக்கப் போகிறார்களாம்.
சமீப காலங்களில் நிறைய தொலைக்காட்சி பார்க்கிறேன். பொறுமையை சோதிக்கும் பொழுது நிறுத்தி விட்டு, யூ டியூபிற்கு மாறுவேன். சேனல்களை மாற்றிய பொழுது, முப்பது வருடங்களுக்கு முன்னால் வெளியான ஏதோ ஒரு படப்பாடலுக்காக கமல்,அம்பிகாவை தூக்கி சுழற்றுவதை பார்க்க நேர்ந்தது. கமல் திறமையான நடிகராக இருப்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதை மறைத்துக் கொண்டார்.
ஏதோ ஒரு படத்தில் பாடல் காட்சியில் கதா நாயகியை தூக்கியபடி பாட்டு பாட வேண்டிய காட்சியில் நடித்த சிவகுமாரிடம் அந்த படத்தின் கேமிராமேன் கொஞ்சம் சிரியுங்கள் என்றாராம், உடனே சிவகுமார், "இத்தனை எடையை தூக்கிக் கொண்டு உங்களால் சிரிக்க முடியுமா? என்னால் இவ்வளவுதான் முடியும்" என்றாராம்.
நம்பியாரின் அனுபவம் இது: ஏதோ ஓர் படத்தில் சரோஜாதேவியை தூக்கிக் கொண்டு மலை மேல் ஏற வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டியிருந்தபொழுது, அவர் கன்னடத்து கிளியிடம், "நான் உங்களை தூக்கும் பொழுது மூச்சை தம் பிடித்துக் கொள்ளுங்கள், அப்போது எடை தெரியாது, எனக்கு கஷ்டமில்லாமல் இருக்கும்" என்றாராம். மண்டையை ஆட்டிய சரோஜா தேவி அப்படி செய்யாததால் நம்பியாருக்கு கஷ்டமாக இருந்ததாம். இரண்டு டேக் எடுத்தும் சரியாக வரவில்லையாம். நம்பியார் சரோஜா தேவியிடம்,"அடுத்த முறை நீங்கள் மூச்சை பிடித்துக் கொள்ளாவிட்டால் நான் உங்களை கீழே போட்டு விடுவேன்" என்று எச்சரித்தும் கதாநாயகி அவர் சொன்னதை கேட்கவில்லையாம், கடுப்பான நம்பியார் நிஜ வில்லனாக மாறி, சொன்னதை செய்ய, அதன் பிறகுதான் சரோஜாதேவி ஒத்துழைப்பு கொடுத்து, அந்த காட்சி ஓ.கே. ஆனதாம்.
இப்போது ஹீரோயின்கள் சைஸ் ஸீரோ என்பதில் கவனம் செலுத்துவதால் ஹீரோக்களுக்கு கவலை இருக்காது.
சில வாரங்களுக்கு முன் ஸ்ரீராம் எந்த சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சி பிடிக்கும் என்று கேட்டிருந்தார். பொதுவாக நம் இயக்குனர்கள் க்ளைமாக்சில் சொதப்புவதில் வல்லுநர்கள். சமீபத்திய சொதப்பல் திலகம் ஏ.ஆர்.முருகதாஸ்.
பாக்யராஜ் படங்களில் க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கும். அந்த ஏழு நாட்களையும், டார்லிங்,டார்லிங்,டார்லிங்கையும் மறக்க முடியுமா?
ஜிகிர்தண்டா |
அவரைப் போலவே எதிர்பாராத, ஸ்வாரஸ்யமான க்ளைமாக்ஸை கார்த்திக் சுப்புராஜ் அமைக்கிறார். ஜிகிர் தண்டா, பேட்ட இரண்டிலேயும் க்ளைமாக்ஸ்
ரசிக்கும்படி இருந்தது.
பரியேறும் பெருமாள் |
மேலை நாடுகளில் சிங்கிள் பேரண்ட் என்பது சகஜம். அப்படிப்பட்டவர்கள் ஆணோ, பெண்ணோ குழந்தையை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அல்லது சிறு குழந்தைக்கு டயபர் மாற்ற வேண்டும்
என்றால் பயன்படுத்த தோதாக இப்படிப்பட்ட பேமிலி டாய்லெட்டுகள்.
இப்பொழுது மூன்றாம் பாலினத்தவர்கள் படித்து, வேலைக்கு வருவது அதிகரித்திருப்பதால் அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தங்களுக்கு தனி டாய்லெட் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் நியாயமான கோரிக்கைதான்.
// பரியேறும் பெருமாள் படத்தின் இயல்பான க்ளைமாக்ஸ் //
ReplyDeleteஅது இயல்பானது அல்ல... நாட்டை ஆளும், ஆள நினைக்கும் சிலருக்கு கொடுக்கும் சவுக்கடி... புரிந்தால் நலம்... புரியாவிட்டாலும் நலம்... நன்றி அம்மா...
நாட்டு நடப்பை சொல்வதால் இயல்பானது என்றேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteபாக்யராஜ் - The legend - திரைக்கதையில்...! அதற்கு ஒரு உதாரணம் : இது நம்ம ஆளு...!
ReplyDeleteஇது நம்ம ஆளு அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசுவையான மசாலா சாட்டாக தந்திருக்கின்றீர்கள். அரிய பல வெளிநாட்டு, உள் நாட்டு செய்திகள் அறிந்து கொண்டேன்.
ஆமாம்..! இர்பான் பத்தான் தலைமுடி ஸ்டைல் நன்றாக இருக்கும். நானும் ரசித்திருக்கிறேன். தங்கள் கவிதை நன்றாக உள்ளது.
கதாநாயகியை தூக்குவது என்பது மட்டுமல்ல..! யாரையுமே தூக்கியபடி நடிப்பதென்பது கஸ்டந்தான். கமல் படம் காக்கிச்சட்டையா? படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜ வாழ்வில் மிகவும் நல்லவராம். அவரையே கோபப்படும்படி செய்து விட்ட சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது.
பாக்யராஜின் அந்த க்ளைமாக்ஸ் படங்கள் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் டார்லிங் டார்லிங் யாருமே நினைத்து பார்க்க முடியாதபடிக்கு நகைச்சுவையாக இருக்கும்.
மேலும் குறிப்பிட்டுள்ள சில படங்கள் பார்க்கவில்லை.
பேமிலி டாய்லட் பற்றி தெரிந்து கொண்டேன். இங்கு கூட பெரிய மால்களில் குழந்தைகளை அழைத்துச் சென்று டயபர், மாற்ற, தனி ரெஸ்ட் ரூம் பயன்படுத்துகின்றனர். அனைத்து செய்திகளும் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//கமல் படம் காக்கிச்சட்டையா?// அதேதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஆஸ்திரேலியா நல்ல க்ளைமேட் இங்கே இங்கிலாந்தில் இருந்தே பலர் குடும்பமா மைக்ரேட் பண்ணிட்டாங்க அங்கே இன்னும் போய்ட்டுதான் இருக்காங்க .பொண்ணுகூட அங்கே படிக்க போக ஆசைப்பட்டு பிறகு cost கூடன்னு விட்டுட்டா .
ReplyDeleteசேஷன் அவர்கள் தேர்தலில் நின்றது தெரியும் .விளம்பரப்படம் ? தெரியாத தகவல் .அவரும் அவர் மனைவியும் அவள் விகடனில் ஒரு சமையல் தொடர்பகுதியில் வந்தாங்க பாலக்காட்டு சமையல்னு அந்த புக் என்கிட்டே பத்திரமா இருக்கு .கிச்சன் பதிவில் ஷேர் செய்றேன் .அந்த 7 நாட்கள் கிளைமேக்ஸ் நினைவிருக்கு மற்றது பார்க்கவில்லை
இப்போதும் ஹீரோயினை தூக்கி சுற்றும் சீன்ஸ் வருதா ?? தமனா ஓகே ஆனா ஆனா :) சரி விடுவோம் :))அந்த WC இங்கேயும் உண்டு ஆனா படம் ஒரு பெண் ஒரு கால் ட்ரவுசர் மறுகால் ஸ்கர்ட் போல் இருக்கும் .
வாங்க ஏஞ்சல். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.
Deleteமஸ்கட்டிலிருந்தும் சிலர் ஆஸ்திரேலியாவுக்கும், பலர் கனடாவிற்க்கும் மைக்ரேட் ஆனார்கள்.
Frozen peas இந்தியாவிற்கு வந்த புதிதில் அதற்கான விளம்பர படத்தில் நடித்தார்.
Delete//அந்த WC இங்கேயும் உண்டு ஆனா படம் ஒரு பெண் ஒரு கால் ட்ரவுசர் மறுகால் ஸ்கர்ட் போல் இருக்கும்.// இதை என் மகளும் கூறினாள். நான் சரியாக கவனிக்கவில்லையோ?
Deleteசீக்கிரம் ஆஸ்திரேலியாவை கசகச என்று ஆகிவிடுவோம்! தமிழர்களுக்கு அமெரிக்கா மேல் மோகமில்லை!
ReplyDelete//தமிழர்களுக்கு அமெரிக்கா மேல் மோகமில்லை!// அப்படியா? கல்யாண மார்க்கெட்டில் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு இன்னும் டிமாண்ட் குறையவில்லை.
Delete//அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு இல்லை// - அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் மாப்பிள்ளைகளுக்கு. ஹா ஹா. டிரம்ப் போடும் போட்டில், நிறையபேரை வெளியில் தள்ளாமல் இருக்கமாட்டார் போலிருக்கு
Deleteசேஷனுக்குப் பிறகுதான் அந்தப் பதவியின் அதிகாரம் வெளியே தெரிந்தது! பின்னர் வந்த கமிஷனர்கள் கொஞ்சம் மாறுதலாய் வேலை செய்யத் தொடங்கினார்கள்.
ReplyDeleteஇர்பான் பதான் போலவே ஹர்பஜன் சிங்கும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறாராம். நீங்கள் எழுதி இருக்கும் கவிதை ரசித்தேன். அவ்வளவு பிடிக்குமா அவரை! எனக்கு என்னவோ இப்போதைய அவர் ஹேர் ஸ்டைல்தான் எனக்கு பிடித்திருக்கிறது.
ReplyDeleteவரட்டும் வரட்டும், தமிழில் அழகான கதாநாயகர்கள் இல்லை என்ற குறையாவது நீங்கட்டும்.
Deleteஅவ்வளவு பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. அந்த ஹேர் ஸ்டைல் பிடித்தது. கவிதை முகிழ்த்தது. அவ்வ்ளோதான்.
Deleteஒரு வீட்டில் அப்பாஒரு கார், அம்மா ஒரு கார், மகன் ஒரு இருசக்கர வண்டி, மகள் ஒருசிறு சக்கர வண்டி என்று கிளம்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... இதையே அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன் படுத்தினால் சாலையில் நெரிசல் குறையும். முன்னர் எனது ஆசையாக நகரும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றுசொல்லியிருந்தேன்.
ReplyDeleteவாஸ்த்தவம்.
Deleteகமல் தூக்கிச் சுற்றாத நடிகை யார்? அதை ஒரு உடற்பயிற்சிப் பெருமைபோலவே செய்வார். சீதாவை உன்னால்முடியும் தம்பியை, ஸ்ரீப்ரியாவின் சட்டம் படத்தில் என்று நிரைய உண்டு!
ReplyDeleteசரிதா...?😋
Deleteஇந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும்போது, பின்னூட்டத்தில் இல்லாத ஸ்ரீராம் விடும் பெருமூச்சு, எனக்கு மட்டும்தான் கேட்கிறதா?
Deleteஎதற்குப்பெருமூச்சு?!!
Deleteசரிதாவை அவர் மரோ சரித்ராவில் தூக்கி இருக்கக் கூடும்! அதெல்லாம் அவ ஒரு வழக்கமாகவே வைத்திருப்பர்.
கதாநாயகிகளைத் தூக்குவதைவிட, வேறு ஏதோ அவர் எல்லாப்படங்களிலும் செய்வார் என்றுதானே படித்திருக்கிறேன். உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா ஸ்ரீராம்?
Deleteபாக்யராஜ் திரைக்கதை மன்னர். அவர் படங்கள் எல்லாமே ரசிக்கும்படியிருக்கும். அந்த 7 நாட்கள், மௌனகீதங்கள் எல்லாம் நானும் ரசித்த படங்கள்.
ReplyDeleteதிறமையான இயக்குனர். வருகைக்கும்
ReplyDeleteமீள் வருகைகளுக்கும் நன்றி.
//ஹீரோயின்கள் சைஸ் ஸீரோ என்பதில் கவனம் செலுத்துவதால் ஹீரோக்களுக்கு கவலை இருக்காது.// - என்னது.... தமிழ் சினிமாவில் இனி எப்போதும் அனுஷ்கா நடிக்க மாட்டார் என்பதில் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கையா?
ReplyDeleteமுத்தாரம் போன்ற கோர்வையான செய்திகள் ரசிக்கும்படி இருந்தது.
ReplyDeleteநான், திருவனந்தபுரத்தில் கோவிலுக்குச் செல்லும்போது, கோவில் முகப்பில் ஒரு ஷூட்டிங்கில் அம்பிகாவைப் பார்த்திருக்கிறேன். உங்கள் மனதில் இருப்பது தற்போதைய அம்பிகாவாக இருக்கும். அப்போதைய அம்பிகாவை கமல் தூக்க முடியவில்லை என்றால்தான் ஆச்சர்யம்
நன்றி நெல்லை.
Delete