மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ்
ஓமான் நாட்டின் அரசரான மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ் அவர்கள் மறைந்து விட்டார் என்னும் செய்தியை படித்த பொழுது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலத்தில் அக்கறை காட்டியவர். ஓமான் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் அங்கு மற்ற மதத்தவர்களுக்கும் பாதுகாப்பும், வரையறுக்கப்பட்ட சுதந்திரமும் இருந்தது.
ஓமானில் விநாயக சதுர்தியிலிருந்து ஆரம்பித்து இந்து மத பண்டிகைகள் அனைத்தும் விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் மற்ற மதத்தினர்களும் தங்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாடலாம். ஸ்வாமி சின்மயானந்தா, பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி உட்பட பல இந்து மத ஆன்மீக பெரியோர்கள் அங்கு வருகை தந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல அந்த நாட்டில் மினிஸ்ட்ரி ஆஃப் ஹிந்து எண்டோமென்ட் உண்டு. சுல்தான் காபூஸ் ஒரு உண்மையான செகுலரிஸ்ட்!
பெரும்பாலும் சலாலாவில் வசித்த அவர் மஸ்கட் வரும் பொழுதெல்லாம் எந்தவிதமான போக்குவரத்து கெடுபிடியும் இல்லாமல் அவர் செல்லும்
பாதையில் மட்டும் கொஞ்ச நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுமே ஒழிய மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. தன் நாட்டு மக்களை கல்வி அறிவில் முன்னேற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.
பாதையில் மட்டும் கொஞ்ச நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுமே ஒழிய மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. தன் நாட்டு மக்களை கல்வி அறிவில் முன்னேற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஓமானுக்கு வருகை புரிந்த பொழுது அவருடைய மாணவனாக இவர் இருந்ததால், தான் ஒரு அரசர் என்று கூட நினைக்காமல் அவர் வந்த விமானத்திற்குள் சென்று அவரை வரவேற்று, அவர் அமருவதற்காக தன் கார் கதவை திறந்து விட்டதோடு, தானே அந்த காரை
ஓட்டியும் சென்றார். சாதாரணமாக அரசியல் பிரமுகர்கள் வருகை தரும் பொழுது அந்த நாட்டின் தலைவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். அந்த மரபுகளை அவர் பின்பற்றாததற்கான காரணத்தை அவரிடம் கேட்டபொழுது, "திரு.சங்கர் தயாள் சர்மா என்னுடைய ஆசிரியர். அவரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஒரு மாணவனாக என் ஆசிரியருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதையைத்தான் நான் செய்தேன்" என்று கூறினார். எவ்வளவு எளிமை!
1990, ஆகஸ்டில் சதாம் ஹுசைன் குவைட்டை கைப்பற்றி அதன் விளைவாக வளைகுடா போர் மூண்ட பொழுது, மக்கள் அச்சத்தில் சாமான்களை வாங்கி பதுக்க ஆரம்பித்தார்கள். சூப்பர் மார்கெட்டுகள் அசுர வேகத்தில் காலியாகின, காய்கறிகள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டது. எல்லாம் ஒரே ஒரு நாள்தான். அடுத்த நாளே, மக்கள் அச்சப்பட தேவையேயில்லை, எல்லாம் கிடைக்கும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணை வந்தது. இயல்பு வாழ்க்கை உடனே திரும்பியது. கோனு புயலால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகள் போன்றவை மிக விரைவாக சரி செய்யப்பட்டன. நாட்டு முன்னேற்றத்தின் மீதும், மக்கள் நலனின் மீதும் அக்கறை கொண்ட நிஜமான தலைவர். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
ஓமன் சுல்தான் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்திருக்கிறேன்..
ReplyDeleteஎனினும் மினிஸ்ட்ரி ஆஃப் ஹிந்து எண்டோமென்ட் என்ற தகவல் புதிது...
சுல்தான் அவர்கள் இறைநிழலில் இன்புற்றிருப்பாராக...
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
Deleteஉண்மையான ஒரு தலைவர்.
ReplyDeleteஇந்தியாவின் பெரிய நண்பர்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
Deleteஓமானில் இருந்ததால் உங்கள் கணிப்பு சரியாயிருக்கும்
ReplyDeleteஇதை கணிப்பு என்பதை விட, பார்த்து, அனுபவித்து, உணர்ந்த விஷயம் என்பது சரியாக இருக்கும். வருகைக்கு நன்றி
Deleteபா.வெ.யிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு. பல விஷயங்கள் அறியாதவை என்பதினால்
ReplyDeleteவாசித்த அளவில் தெரிந்து கொண்ட செய்திகளாகி விட்டன.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
Deleteபசி நேரத்தில் பதிவு போட்டால் சதாம் சாதம் ஆகிவிடுவாரோ?
ReplyDeleteஹாஹா! பசி நேரம் அல்ல, ஒரு வேலைக்காக வெளியே சென்று விட்டு, பின்னர் தர்பார் செல்ல மகன் டிக்கெட் புக் பண்ணியிருந்தான். அதனால் அவசரப்படுத்தினான். சதாம் சாதம் ஆனது மட்டுமல்ல, வேறு சில தவறுகளும் இருந்தன. வருகைக்கு நன்றி.
Deleteஓமானில் நிறைய தடவை பிரயாணம் செய்திருக்கிறேன்.
ReplyDeleteநல்ல தலைவருக்கு இறைவன் வாரிசை உருவாக்கவில்லையே என நிறை தடவை கவலைப்பட்டு இருக்கிறேன்.
இறைவன் ஓமான் நாட்டை சுல்தான் அவர்கள் காலத்தில் இருந்ததுபோல செழிப்பாக வரும் காலங்களிலும் வளமாக இருக்க நல்ல தலைமையை அளிக்க வேண்டும்.
சுல்தான் அவர்கள் இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்
அவரது எளிமையும், தங்களுக்கு பகிர்ந்து கொள்ள தூண்டி இருக்கிறது...
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
Deleteகீழுள்ள இந்த கருத்தை பதிவு செய்யக்காரணம் :-
ReplyDeleteநம் நாட்டின் எளிமையைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்...!
ம்ம்ம்... பெருமூச்சு...!
நான் இன்று வரை அறியாத விஷயங்கள். அறியத் தந்தமைக்கு நன்றி. அரபு நாடுகள் குறித்து அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தெரியுமே தவிர்த்து வேறே ஏதும் தெரியாது.
ReplyDeleteஅரபு தேசங்கள் போல ஆட்சியர் சட்டத்தை மதிக்கும் நிலைமை இந்தியாவில் ஏழு நூற்றாண்டுகள் ஆனாலும் வராது.
Deleteஅன்பின் நெல்லைத் தமிழன் ..
Delete>>> அரபு தேசங்கள் போல ஆட்சியர் சட்டத்தை மதிக்கும் நிலைமை இந்தியாவில் ஏழு நூற்றாண்டுகள் ஆனாலும் வராது...<<<
சரிதான் ... ஆனாலும் தம்மைத் தானே தண்டித்துக் கொண்ட மாமன்னர்கள் நமது வரலாற்றில் பலர் உள்ளனர்...
ஐருப்பினும் சுதந்திர இந்தியாவில் ஏழு அல்ல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வரவிடமாட்டார்கள்....
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கீதா அக்கா.
Delete//அரபு தேசங்கள் போல ஆட்சியர் சட்டத்தை மதிக்கும் நிலைமை இந்தியாவில் ஏழு நூற்றாண்டுகள் ஆனாலும் வராது.// முன்பெல்லாம் இப்படி யாராவது சொன்னால் எனக்கு கோபம் வரும். ஆனால் நடைமுறையை பார்க்கும் பொழுது அது உண்மைதான் என்றுதான் தோன்றுகிறது.
Deleteபல தகவல்கள் அறிஞ்சுகொண்டேன்... அவரின் ஆத்ம சாந்திக்கு என்னுடைய பிரார்த்தனைகளும்...
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அதிரா.
ReplyDeleteசுல்த்தான் அவர்கள் பற்றிய செய்திகள் நான் அறிந்ததுதான் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteநல்ல தகவல்கள். சில அறிந்தவை என்றாலும் நல்லதொரு மனிதர் பற்றி மீண்டும் படிப்பதால் தவறில்லை.
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தியடையட்டும்.