கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 12, 2020

தர்பார்(திரைப்பட விமர்சனம்)

தர்பார்


இந்த படத்திற்கு என்ன விமர்சனம் எழுதுவது? ரஜினியை முன்னிறுத்தி ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார். அதில்  நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, அனிருத், நயன்தாரா என்று பலரும் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

சும்மா சொல்லக்கூடாது ரஜினி அசத்துகிறார். எழுபது வயதா இந்த மனிதருக்கு என்று நம்பவே முடியவில்லை.

நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் நிவேதா தாமஸ். (பாபநாசத்தில் கமலின் மூத்த மகளாக வந்தவராமே?) யோகி பாபு முதல் பாதியில் ரஜினியை கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் சுனில் ஷெட்டி பெரிதாக செய்யப் போகிறார் என்று நினைக்கிறோம். ம்ஹும்!

காதில் பஞ்சு வைத்துக் கொண்டால் தேவலாம் போல் அனிருத்தின் இசை அலறுகிறது. ஆனால் இந்த படத்திற்கு இது தேவைதான், இல்லாவிட்டால் எடுபடாது என்கிறார்கள். பாடல்கள் என்று ஏதோ வருகிறது. அவற்றின் வரிகள் காதில் நுழைந்தால்தானே மனதில் நுழையும்.

திருமண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நயன்தாராவின் இமேஜுக்கு சரி படாது என்பதாலோ என்னவோ, ரஜினிக்கு நயன் ஜோடிதான், ஆனால் ஜோடி இல்லை என்பது போல் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு பாடலில் ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டி தான் சூப்பர் ஸ்டாரினி என்று நிரூபித்திருக்கிறார். அடுத்த படத்தில் ரஜினி ஜோடி இல்லாமல், அல்லது, தன் வயதிற்கேற்ற ஜோடியோடு நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

போலீஸ், அதுவும் கமிஷனர் என்கிறார்கள் தலை முடியை ட்ரிம் பண்ணிக்கொள்ள வேண்டாமா? க்ளீன் ஷேவ்டாக இருக்க வேண்டாமா? ரஜினி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் கொடுப்பது வில்லனின் நண்பருக்கு எப்படி தெரிய வந்தது?  என்ற கேள்விகள் எல்லாம், வீட்டில் வந்து உட்கார்ந்து யோசிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது. தியேட்டரில் எதுவும் தோன்றவில்லை. வெளியே வரும்பொழுது 'சும்மா கிழி' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

குப்பத்து ராஜா என்று ஒரு ரஜினி படம் எழுபதுகளின் இறுதியில் வந்தது. டி.ஆர்.ராமண்ணா இயக்கம். அந்த படத்திற்கு குமுதத்தில் 'என்னவோ நினைச்சுகிட்டு உள்ளே போனோம், எதையோ கலக்கி கொடுத்தாங்க, எல்லாம் மறந்து விட்டது' என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படத்திற்கும் அதேதான். புதிய மொந்தையில் பழைய கள்ளாக இருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே,  செம போதை!


 










27 comments:

  1. கடைசி வரி - செம கலக்கல்! :)

    விமர்சனம் நன்றாக இருந்தது. நான் படம் பார்ப்பது கடினம்! நீண்ட தொலைவு பயணித்து படம் பார்க்கும் பொறுமை எனக்கில்லை!

    ReplyDelete
  2. //போலீஸ், அதுவும் கமிஷனர் என்கிறார்கள் தலை முடியை ட்ரிம் பண்ணிக் கொள்ள வேண்டாமா ?//

    டோப்பா முடிக்கு ட்ரிம் பண்ணப் போனால் சலூன்காரர் சிரிப்பாரே... அதனால் விட்டு இருக்கலாம்.

    இந்த நுணுக்கம் கமல் படத்தில் சரியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த நுணுக்கம் கமல் படத்தில் சரியாக இருக்கும்.//ஆமாம்,ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு விடுவார். வருகைக்கு நன்றி ஜி.

      Delete
  3. ரஜினி படம் கடைசியாப் பார்த்தது என்னனு நினைவில் வரலை. நேற்றுக் கூட மாட்டுப் பொண்ணு கேட்டாள். அண்ணாமலை, படையப்பாவெல்லாம் கூடப் பார்க்கலையா? தொலைக்காட்சிகளில் பலமுறை வந்திருக்கேனு! ம்ஹூம், அன்னிக்கு ஞாபகமாத் தொலைக்காட்சிப் பக்கமே போகாமல் இருந்துடுவேன். ஆனால் உங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி தான்! :)))))))

    ReplyDelete
    Replies
    1. அட்டா... நல்ல படங்கள் வந்தால் பார்க்காமல் விட்டுவிட வேண்டியது. அப்புறம் அவங்களை ஜிவாஜி, உலக்கை நாயகர்னு பகடி பண்ண வேண்டியது

      Delete
    2. அதான் சொல்லி இருக்கேனே நெல்லையாரே, எனக்கு இந்த மிகைப்படுத்தலை எல்லாம் பார்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லைனு! :)))))

      Delete
    3. அவார்ட் வின்னிங் மூவிகளை கூட பொறுமையாக பார்ப்பேன்.

      Delete
    4. முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமைகளில் இம்மாதிரிப் படங்கள் போடுவார்கள். பல சமயங்களில் ஒரு புதையலே கிடைக்கும். அப்படிப் பார்த்ததில் முக்கியமானது ஜி.வி.ஐயரின் மஹாபாரதம்! சாருஹாசன் நடித்த ஓர் படம். பணி ஓய்வு பெற்றதும் பென்ஷனுக்காக அலைவார். கட ச்ராத்தம் போன்றவை அடக்கம்.

      Delete
  4. கடைசி வார்த்தை! நச்! :))))

    ReplyDelete
  5. அற்புதமான விமர்சனம் ..அடுத்த வாரம் போதையை இரசிகர்கள் ஆரவாரமின்றி பார்க்கத் தீர்மானித்துள்ளோம்...

    ReplyDelete
  6. யாரோ சொன்னார்கள்... ரஜினி மற்றும் ஸ்டார் படங்களுக்கு வெகு பாசிடிவ் ஆக எழுதினால் வரவு உண்டாமே...





    நான் ரசிகர கூட்ட வருகையைச் சொன்னேன்.. ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. //யாரோ சொன்னார்கள்... ரஜினி மற்றும் ஸ்டார் படங்களுக்கு வெகு பாசிடிவ் ஆக எழுதினால் வரவு உண்டாமே...// நான் பேட்ட படத்துக்கு விமர்சனம் எழுதியபொழுது கில்லர்ஜி இதே கருத்தைக் கூறியிருந்தார். ஆனால் நீங்கள் இருவருமே விமர்சனத்தை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் அனுப்பவில்லை. விவரம் அனுப்பினால் கிடைக்கும் வருவாயை எ.பி.வளர்ச்சி நிதிக்கு தந்து விடுவேன்.

      Delete
  7. வீட்டில் ஓய்வாக இருந்திருக்கலாம்....

    !?....

    ReplyDelete
  8. எல்லா இடங்களிலும் குறை சொல்லாமல் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போல...  சின்னச்சின்ன லாஜிக்கமீறல்கள்தான் இருக்கும்போல...  ஆனாலும் வசூல் போதுமான அளவு இல்லையாமே...   அதையும் சொல்கிறார்களே...

    ReplyDelete
    Replies
    1. சினிமாலே லாஜிக்கா? அப்படினா இன்னா சார்?..

      Delete
    2. பிரசாந்த் குறைகளையும் சொல்லியிருந்தார். நீலச்சட்டை விமரிசனம் கேட்கவில்லை.வசூல் இல்லையா? நம்ப முடியவில்லை.

      Delete
  9. Replies
    1. படத்தை சொல்கிறீர்களா? விமர்சனத்தையா? நன்றி.

      Delete
  10. 'என்னவோ நினைச்சுகிட்டு உள்ளே போனோம், எதையோ கலக்கி கொடுத்தாங்க, எல்லாம் மறந்து விட்டது' என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள்,,



    சூப்பர் மா...

    இந்த படம் பார்க்கும் எண்ணமும் இல்லை வாய்ப்பும் இல்லை ..

    ReplyDelete
  11. தொலைகாட்சியில் போடும் பொழுது பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  12. தொலைகாட்சியில் போடும்பொழுது பார்க்கலாமே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete