கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 15, 2020

கோலாகலப் பொங்கல்!

கோலாகலப் பொங்கல்!

எங்கள் குடியிருப்பில் பொங்கல் விழாவை 12.01.2020 அன்றே கொண்டாடி விட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா இங்கெல்லாம் சங்கராந்தி என்கிறார்கள். 




காலையில் பட்டம் விடும் போட்டி, மதியம் கோலப்போட்டி, இரவில் லோடி என்று களை கட்டியது. ஸ்டால்களும் இருந்தன.  இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டோம்.

அவ்வளவாக காற்று இல்லையே பட்டம் எப்படி பறக்கும்? என்று நினைத்ததற்கு மாறாக இரண்டு பட்டங்கள் மிக நன்றாகப் பறந்தன. அவற்றை என் செல்ஃபோனில் படம் பிடிக்க எனக்குத் தெரியவில்லை. அத்தனை பெரிய குடியிருப்பில் நாலு க்ரூப்புகள்தான், கலந்து கொண்டன. ஒரு அணியில் இரண்டு பேர் கலந்து கொள்ளலாம் என்ற அனுமதி இருந்த போதிலும் மூன்று அணிகளில் இரண்டிரண்டு பேர்களும் ஒரு பெண்மணி தனியாகவும் மொத்தம் ஏழு பேர்கள்தான் கோலப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.


இரவு லோரி! பஞ்சாபியர்கள் போல் இரண்டு மூன்று மரத்துண்டுகளை முக்கோணமாக நிறுத்தி அதை எரிய விட்டு, அதைச்சுற்றி ஹிந்தி சினிமா பாடல்களுக்கு ஆடினார்கள்.  கேக், சமோசா, பாணிபூரி, பேல்பூரி போன்றவை சாப்பிடக் கிடைத்தன. ஆக பொங்கல் தவிர மற்ற விஷயங்களோடு பொங்கலைக் கொண்டாடினோம். 












17 comments:

  1. அழகிய கோலங்கள், இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் பானுமதி அக்கா உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்... மகிழ்ச்சியாக மனதை வைத்திருப்பதுதான் முக்கியம் நமக்கு.

    ReplyDelete
  2. எங்க அப்பா வீட்டிலும் சங்கராந்தி அல்லது தை மாசப்பிறப்பு என்றே சொல்லுவோம். கல்யாணம் ஆகி வந்த புதுசில் பல பண்டிகைகளின் பெயர் இங்கே புக்கத்தில் மாறி இருந்தது. ஆடிப் பெருக்கை ஆடிப்பெரு அல்லது பயறு என்றார்கள். ஸ்ரீஜயந்தியை "சீசந்தி" என்றார்கள். இப்படிப் பலவற்றின் பெயர் மாறி இருந்தது. அதே போல் இந்தத் தனிக்கூட்டு விவகாரமும். நாங்கல்லாம் தனிக்கூட்டு என்னும் பெயரே கேட்டதில்லை. இவங்களுக்கானால் தெரியாதுனு சொன்னதும் ஒரே வருத்தம். நான் கத்துக் கொண்டு பண்ணிடுவேன் என்றதுக்கு என் மாமியார், மாமனார் எல்லாம் கேலி செய்தார்கள். ஆனால் மூன்றாம் வருஷமே தனியாகப் பண்ண ஆரம்பித்துவிட்டேன். முதல் வருஷம் புக்ககம். இரண்டாம் வருஷம் குழந்தை பிறந்து ஐம்பது நாள் தான் ஆகி இருந்தது. அதன் பின்னர் தனிக்கூட்டுச் சிறப்பு வித்தகியாகி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தனிக்கூட்டு!   ஆக்சிமோரான்!

      Delete
    2. என் பாட்டி, அம்மா இவர்களெல்லாம் கூட சங்கராந்தி, சீசந்தி என்றுதான் சொல்லுவார்கள்.

      Delete
  3. குடியிருப்புகளில் இது மாதிரி வழக்கங்கள் பிரபலமாகி வருகின்றன போலும்.   ஒருவகையில் ஒற்றுமையை வளர்க்கும்.  நல்லது.  லோரியா?  லோடியா?

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்தில் எழுதும்போது LOHRI என எழுதினாலும் படிப்பது லோடி என்று தான் ஸ்ரீராம். பஞ்சாபி வார்த்தைகள் பல இப்படி உண்டு - Arora என ஆங்கிலத்தில் எழுதுவார்கள் ஆனால் படிக்கும்போது அரோடா என்று படிப்பார்கள்! Chopra என எழுதும் பெயர் சோப்டா!

      Delete
    2. @ஶ்ரீராம்: எனக்கும் லோரியா? லோடியா? என்ற சந்தேகம் இருந்தது. கூகுள் உதவியை நாடினேன். வெங்கட் விவரமாக பதில் அளித்துள்ளார்.

      Delete
    3. @வெங்கட்:குரு காவோன் என்பதைக்கூட குடுகாவோன் என்றுதான் கூறுவார்கள்.

      Delete
  4. இனிய உழவர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி.உழவர் தினமாக கொண்டாடிய நாட்கள் எல்லாம் முடிந்து விட்டன.இப்போது டி.வி.தினம்தான். வருகைக்கு நன்றி.

      Delete
  5. நல்லதொரு கொண்டாட்டம். இப்படி அனைவருமாக ஒன்று கூடி விழா நடத்துவது நல்லவிஷயம்.

    ReplyDelete
  6. >>> ஆக பொங்கல் தவிர மற்ற விஷயங்களோடு பொங்கலைக் கொண்டாடினோம்... <<<

    ஆக நல்ல நகைச்சுவை...

    ReplyDelete
  7. தை திருநாள் வாழ்த்துகள். அழகிய கோலங்களுடன் இனிதான விழா.

    ReplyDelete