கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 19, 2020

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்


கோவில் முகப்பு 
நேற்று தோழி ரமா ஶ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஐயன் வள்ளுவர் 


வாசுகி தாயாரின் சந்நிதி 
மயிலை விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது திருவள்ளுவர் கோவில். மிகப்பெரியதும் இல்லை. மிகச்சிறியதும் இல்லை.  சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, இரண்டு விநாயகர் சன்னதிகள், அதில் ஒரு விநாயகர் வித்தியாசமாக இருக்கிறார். நவகிரக சன்னதி, அதைத்தவிர திருவள்ளுவர் மற்றும் வாசுகிக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன. திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் இலுப்பை மரத்தினடியில் திருவள்ளுவரின் தாய் தந்தைக்கு சிலைகள் உள்ளன.  இந்த கோவில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படுகிறது.

வட இந்திய கோவில்களில் காணப்படுவதைப் போன்ற விநாயகர் 




வள்ளுவரின் தாயும்,தந்தையுமான ஆதி, பகவன்


ஆனால் எனக்கென்னவோ வள்ளுவரை இப்படி கோவிலில் வைத்து கும்பிடுவதை விட, நிறைய பேர்கள் திருக்குறளை அறியும் வண்ணம் செய்வதுதான் அவருக்கு செய்யும் நிஜமான மரியாதை என்று தோன்றுகிறது. 

21 comments:

  1. உண்மை தான். ஆனால் ஏற்கெனவே திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இந்தக் கோயிலுக்கு நான் கல்யாணம் ஆவதற்கு முன்னால் போயிருக்கேன். அது மாதிரியே தி.நகர் அகத்தியர் கோயிலும். கல்யாணம் ஆவதற்கு முன்னர் அறுபதுகளின் கடைசியில் என்னோட பதின்ம வயதில் போனது. அப்போ அங்கே வாத்தியங்கள் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுவது கண்டு ஆச்சரியப் பட்டிருக்கேன். பலரும் இதைப்பார்க்கவே கால வழிபாட்டின் போது தீபாராதனை சமயம் அங்கே கூட்டமாக வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. அகத்தியர் கோவில் வழியாகச் சென்றிருக்கிறேன், உள்ளே சென்றதில்லை. பாரத்வாஜ ரிஷிக்கும் கோடம்பாக்கத்தில் கோவில் உள்ளது.

      Delete
  2. இதுவரை போனதில்லை..அவசியம் அடுத்தமுறை சென்னை வருகையில் தரிசிப்பேன்..படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. //எனக்கென்னவோ வள்ளுவரை இப்படி கோவிலில் வைத்து கும்பிடுவதை விட, நிறைய பேர்கள் திருக்குறளை அறியும் வண்ணம் செய்வதுதான் அவருக்கு செய்யும் நிஜமான மரியாதை என்று தோன்றுகிறது//

    அழகான உண்மை மேடம் எனது கருத்தும் இதுவே...

    அதேநேரம் கூத்தாடி சிறுக்கிகளுக்கு கோவில் கட்டிய தமிழகத்தில் தெய்வப்புலவர் வாழ்ந்த மாமேதை அறிவுச்சுடர் உலகமே ஏற்றுக் கொண்ட திருக்குறள் இயற்றிய வள்ளுவருக்கு கோவில் கட்டுவதில் தவறில்லைதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.

      Delete
  4. எங்க ஊருக்கு வந்தீர்களா. ரமா நல்ல பெண்மணி.
    எனக்குத்தான் போயிருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
    மயிலையில் எல்லாக் கோயில்களும்
    நன்றாகப் பராமரிக்கப் படும்.

    திருவள்ளுவர் வாழ்ந்த இடம் என்று முன்பெல்லாம்
    நிறையக் கதைகள் சொல்வார்கள்.
    சிலைகள் புதிதாக இருக்கின்றன. பிற்காலச் சேர்க்கையோ.
    நல்ல பதிவுமா.

    ReplyDelete
    Replies
    1. //ரமா நல்ல பெண்மணி.// ஆமாம். உங்கள் மூலம் கிடைத்த நட்பு. பாராட்டுக்கு நன்றி.

      Delete
  5. நிஜமான மரியாதை மிகவும் பிடித்தது...

    ReplyDelete
    Replies
    1. அதை நீங்கள்,துரை செல்வராஜ் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

      Delete
  6. வள்ளுவப் பெருமானை ஆலயத்தில் வைத்து வணங்குவதில் தவறு இல்லை...

    வானுறையும் தெய்வத்துடன் வைக்கப்பட்டுள்ளார்...

    ReplyDelete
    Replies
    1. கோவில் என்று வந்துவிட்டால், சடங்குகள் டாமினேட் செய்ய ஆரம்பித்து விடுமே என்று அச்சம் வருகிறது.

      Delete
  7. ஊனுடம்பாகிய ஆலயத்துள்
    உள்ளம் பெருங்கோயில் ஆகின்ற போது
    வள்ளுவம் உரைக்கின்ற அறமே சுடராகின்றது.

    ReplyDelete
  8. திருவள்ளுவர் திருக்கோயிலுக்கு
    இதுவரை சென்றதில்லை...

    ReplyDelete
  9. திருக்குறளை எல்லாரும் அறியும் வண்ணம் செய்வதை விட..

    திருக்குறளின் வழி அனைவரும் நடக்கும்படிச் செய்தல் வேண்டும்....

    நம் நாட்டில் அவ்வாறு ஆகும் என்று தோன்றவில்லை...

    ReplyDelete
    Replies
    1. //திருக்குறளின் வழி அனைவரும் நடக்கும்படிச் செய்தல் வேண்டும்....// 100 பேர்கள் கற்றுக் கொண்டால் ஒருவருக்கு கடைபிடிக்க வேண்டும் என்று தோன்றாதா?. வருகைக்கும்,மீள் வருகைகளுக்கும் நன்றி.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    திருவள்ளுவர் கோவில் பற்றி அறிந்து கொண்டேன். நான் மைலாப்பூரில் இருந்தும் கூட இந்த கோவிலுக்கு சென்றதில்லை. இப்போது அனைத்து தெய்வங்களையும் தரிசித்து கொண்டேன்.படங்கள் அருமை. இனியொரு முறை சென்னை செல்லும் போது இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  12. நான் இங்கு சென்றதில்லை.  புதிய தகவல்.

    ReplyDelete
  13. திருவள்ளுவர் கோவில் அழகு. வள்ளுவரின் தாய் தந்தை சிலைகள் அமைத்தது சிறப்பு.

    ReplyDelete
  14. புதிய தகவல்.

    கடைசியில் சொன்ன விஷயம் - நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete