கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 10, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020
தொடர்ச்சி  


ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் அமைக்கப் பட்டிருந்த சில ஸ்டால்கள். 
கீழே காணப்படுவது ஃபைபரினால் செய்யப்பட்டிருந்த பொம்மைகள். 




வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன்.


மேலும் சில ஃபாய்பர்  பொம்மைகள்.


அயோத்தியில் அமையப்போகும் ஸ்ரீராமர் கோயிலின் மாடல்.



கீழே காணப்படுவது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பொம்மைகள். 


மாதா அமிர்தானந்தமயி மடங்களில் காணப்படும் பிரும்மஸ்தானங்களின் மாடல். 









வேலூரைசேர்ந்த ஜெய்சங்கர் என்னும் இவர் ஒரு பாசிட்டிவ் மனிதர்.  அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை ஒரு சேவையாக செய்து வருகிறாராம். பழைய பேப்பர் வியாபாரியாக இருந்த இவருக்கு தினமும் நிறைய அழைப்புகள் வருவதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டாராம். திருமணமும் செய்து கொள்ளவில்லை. எல்லோரிடமும் உதவிகள் பெற்று அனாதை பிணங்களை அடக்கம் செய்வதாக கூறினார். 



கை குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடம். 


இதோ இங்கே வருகிறது நம்ம ஏரியா! Multi cuisine food court!



அதிராவின் அரிசி அல்வா!





ஜவ்வரிசி கொழுக்கட்டை! முதல் முறையாக சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. பாண்டிச்சேரி ஸ்பெஷலாம். ஜவ்வரிசிக்குள் தேங்காயை வைத்து ஆவியில் வேகவைத்து, அதன் மீது பனங் கல்கண்டை தூவி தந்தார்கள். நன்றாக இருந்தது. 

22 comments:

  1. ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    அங்குமா அரிசி அல்வா...!

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் அருமை. ஜவ்வரிசிக் கொழுக்கட்டை செய்முறை கேட்டிருக்கலாமோ? எல்லா பொம்மைகளும் அருமை. பாரதியார் மனைவியுடன் ஓரமாக நின்றுகொண்டு எல்லாவற்றையும் பார்க்கிறார் போல. நாங்க போனப்போ எல்லாம் உணவகம் கிடையாது. காஃபியே அபூர்வமாகத் தான் கிடைக்கும். இப்போ எல்லாமும் கிடைக்கிறது போல!

    ReplyDelete
    Replies
    1. //ஜவ்வரிசிக் கொழுக்கட்டை செய்முறை கேட்டிருக்கலாமோ?// கேட்டால் சொல்வார்களோ மாட்டார்களோ? என்ற தயக்கத்தால் கேட்கவில்லை.

      Delete
    2. //பாரதியார் மனைவியுடன் ஓரமாக நின்றுகொண்டு எல்லாவற்றையும் பார்க்கிறார் போல.//கண்காட்சி வளாகத்திற்கு வெளியே நிறுவப்பட்டிருந்த ஒரு இடம். நிறைய சாதனைப் பெண்களின் கேட் அவுட்டுகளுக்கு நடுவே பாரதி மட்டும் ஒரே ஒரு ஆண். பெண்மையை அவனை விட போற்றியவர்கள் வேறு யார்?

      Delete
  3. எல்லாமே சுவாரஸ்யம்.  படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போதுதான் அருமை தெரிகிறது.  கீதா அக்கா பாரதியார் பற்றிச் சொல்லி இருப்பதைப் படித்ததும் திரும்பச் சென்று அவர் எங்கே நிற்கிறார் என்று தேடி, பார்த்து வந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. //கீதா அக்கா பாரதியார் பற்றிச் சொல்லி இருப்பதைப் படித்ததும் திரும்பச் சென்று அவர் எங்கே நிற்கிறார் என்று தேடி, பார்த்து வந்தேன்!// அப்படியா? நன்றி.

      Delete
  4. பாராட்டப்பட வேண்டிய மனிதர் ஜெய்சங்கர்.

    ReplyDelete
  5. மற்ற ஸ்டால்களில் நிறைய தன்னார்வ தொண்டர்கள் இருந்தார்கள். இவரோ, தன்னந்தனியாக நின்றபடி யாசித்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் கொஞ்சம் மழை பெய்கிறது. இவரைப்பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் சேகரித்து பாசிட்டிவ் செய்திகளுக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. 

    ReplyDelete
  6. ஜெய்சங்கர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பாராட்டுக்குரிய செயல் அவருடையது.

    உணவு ஈர்க்கிறது!

    படங்கள் அனைத்தும் அழகு!

    ReplyDelete
  7. ஆஹா இப்பொழுதுதான் இதை எட்டிப் பார்க்கிறேன்.. சமயபுரமாரி அம்மனில் எனக்கொரு தீராத லவ் சின்ன வயசிலிருந்தே இருக்குது.

    ஆகா என் தொதலை அதற்குள், ரெசிப்பி பார்த்துச் செய்து இங்கு வைத்து விட்டார்களே:)) அதிரா எங்கேயோ போயிட்டேன் ஹா ஹ ஹா...

    ReplyDelete
    Replies
    1. //சமயபுரமாரி அம்மனில் எனக்கொரு தீராத லவ் சின்ன வயசிலிருந்தே இருக்குது.//கருணாசாகரி அவள். நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரிசி அல்வாவை அதுதான் தொதலை படம் எடுத்தேன். நன்றி அதிரா. 

      Delete
  8. ஜெயசங்கர் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

    ஜவ்வரிசிக் கொழுக்கட்டை பார்க்க அருமை. நான் மினி இடலி என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜவ்வரிசி கொழுக்கட்டை சாப்பிடவும் நன்றாக இருந்தது. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. 

      Delete
  9. அழகான காட்சிகள்.

    வேலூர் ஜெய்சங்கரை பாராட்ட வார்த்தைகள் இல்லை இவரது அலைபேசி எண் கிடைத்தால் எனக்கு அனுப்பவும்.

    இரண்டு வார்த்தை பாராட்டி பேச...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி. ஜெய்சங்கரின் தொலைபேசி எங்கள்: 8807521737 & 9543733450. இரண்டு வார்த்தை என்ன, இருபது வார்த்தைகள் பாராட்டிப்  பேசுங்கள். 

      Delete
    2. மிக்க நன்றி மேடம்...

      Delete
  10. வணக்கம் சகோதரி

    எல்லா ஸ்டால்களின் படங்களும் மிக அருமையாக உள்ளது. பொம்மைகள் ஒவ்வொன்றும் மிக அழகு. நவராத்திரி கொலு மாதிரி அடுக்கி வைத்திருப்பது பார்க்க நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் பெரிதுபடுத்தி பார்த்து ரசித்தேன். நன்றாக படமெடுத்திருக்கீறீர்கள்.

    ஜெய்சங்கர் அவர்களின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

    சகோதரி அதிராவின் அரிசி அல்வா படம் நன்றாக வந்துள்ளது. ஆனாலும் அவர் வழக்கமாக போகும் தேம்ஸ் கரைக்கு போகாமல் எங்கேயோ போயிட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே.. ஹா. ஹா. ஹா.

    ஜவ்வரிசி கொழுக்கட்டை பார்வைக்கு நன்றாக உள்ளது. செய்து பார்க்கலாம். (எல்லாவற்றையும் பார்த்து செய்ய நினைக்கின்ற மாதிரி இதையும் சொல்லி வைக்கலாம்.) அழகான படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. (எல்லாவற்றையும் பார்த்து செய்ய நினைக்கின்ற மாதிரி இதையும் சொல்லி வைக்கலாம்.) நான் வெற்றிகரமாக முயற்சி செய்து விட்டேன். விரைவில் திங்கற கிழமையில் எதிர்பாருங்கள். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு. முதல் வருகை. தொடருங்கள்... தொடர்வோம்...

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
  13. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள். 

    ReplyDelete