வெஜிடபுள் சமோசா செய்முறை மிக அழகாக, பொறுமையாக சொல்லி, செய்து காட்டியுள்ளீர்கள். அருமையாக வந்துள்ளது. பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்மென எண்ணம் வருகிறது. இதில் மைதாவில் செய்தால்தான் சமோசா நன்றாக வருமென்று தெரியும், ஆனாலும் அதற்கு பதிலாக கோதுமை மாவில் செய்தால் நன்றாக இருக்குமா? ஏனெனில் என்னிடம் தற்சமயம் மைதா மாவு இல்லை. அதனால்தான் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் மேல் மாவில் கொஞ்சம் ஓமம் போட்டுக் கொள்வேன். இதே மெத்தட்ஸ் தான் அக்கா. க்ரிஸ்பா வரனும்னா இப்படி வாட்டி எடுத்துவிட்டு அதில் ஸ்டஃப் செஞ்சு போடுவது..ஆமாம் எண்ணை குடிக்காது என்பதால் பெரும்பாலும் அப்படித்தான் செய்வது...சின்ன சமோசா போடுவது போல.
உருளைக் கிழங்கை வேக வைத்துவிட்டு உதிர்த்து வதக்குவேன். இப்படிச் செய்ததில்லை.
வீடியோ நன்றாக இருக்கிறது. இது சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சகோதரி அல்லவா? நன்றாகச் செய்து காட்டுகிறார். கடையில் கிடைக்கும் சமோசா போன்றே இருக்கிறது. பாராட்டுகள்.
பெரும்பாலும் உணவு பற்றிய பதிவுகளைப் பார்த்தாலும் என்ன கருத்து இடுவது என்று தெரியாததால் கடந்து சென்றுவிடுவது வழக்கமாகிவிட்டது. வீட்டில் கேரளத்து பாரம்பரிய உணவைத் தவிர வேறு எதுவும் செய்வது இல்லை. வேண்டும் என்றால் கடையில் வாங்கிக் கொள்வதுண்டு எனவே சொல்லத் தெரிவதில்லை. பல உணவுப்பதார்த்தங்கள் பற்றியும் பரிச்சயம் இல்லை.
எங்கள் தலைமையகம் மெதுவாகச் செயல்படத் தொடங்கியிருப்பதால், நானும் வலையில் வரத் தொடங்கியிருக்கிறேன்.
தொட்டுக்கப் புளிச்சட்னி, பச்சைச் சட்னி இல்லாமல் சமோசாவா? சரி, சரி, அப்படியே சாப்பிட்டுக்கறேன். ஆனால் என்னை விட அவருக்குத் தான் சமோசா ரொம்பப் பிடிக்கும். செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் பொதுவாக கோதுமை மாவு+கொஞ்சம் போல் ரவை+மைதாமாவு மூன்றையும் சேர்த்துப் பிசைந்து பண்ணுவேன். மைதாவில் அதிகம் பண்ணுவதில்லை. தோசைக்கல்லில் போட்டுக் காய வைத்து அமெரிக்காவில் பண்ணி வைத்துக்கொள்வார்கள். நாங்க குளிர்சாதனப் பெட்டியில் அதிகம் வைப்பதில்லை என்பதால் அது பண்ணினாலும் சாப்பிடுவதில்லை.
சமோசாவை தக்காளி சாஸுடன் சேர்த்து படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அது சரியாக வரவில்லையென்று அக்கா பேரன் எடிட் செய்து விட்டானாம். நான் ஒரு முறை கூட சமோசா செய்ததில்லை. நன்றி.
திருச்சியில் சிந்தாமணி சூப் மார்க்கெட் ஆரம்பித்த புதிதில் மாலை சமோசா போடுவார்கள். பரபரவென்று விற்று தீர்ந்து விடும். சென்னை நெசப்பாக்கத்தில் ஒரு வட இந்தியர் ஒரு சிறிய இடத்தில் சமோசா, கச்சோரி போட ஆரம்பித்தார். மிகவும் சுவையாக இருக்கும். ஹாட் சிப்ஸில் கிடைக்கும் சமோசாவை விட பெரியதாக, அங்கு விருப்பதை விட குறைந்த விலையில் கிடைக்கும். கரோனா எல்லாவற்றையும் வீட்டில் செய்ய வைத்திருக்கிறது. வருகைக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteவெஜிடபுள் சமோசா செய்முறை மிக அழகாக, பொறுமையாக சொல்லி, செய்து காட்டியுள்ளீர்கள். அருமையாக வந்துள்ளது. பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்மென எண்ணம் வருகிறது. இதில் மைதாவில் செய்தால்தான் சமோசா நன்றாக வருமென்று தெரியும், ஆனாலும் அதற்கு பதிலாக கோதுமை மாவில் செய்தால் நன்றாக இருக்குமா? ஏனெனில் என்னிடம் தற்சமயம் மைதா மாவு இல்லை. அதனால்தான் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்க வீட்டில் கோதுமை மாவில்தான் செய்வோம்
Deleteதாராளமாக செய்யலாம். முயற்சிது விட்டு சொல்லுங்கள். நன்றி.
Deleteஇவர் உங்கள் சகோதரிதானே?
ReplyDeleteஆமாம்,ஆமாம், இல்லையா பின்னனே?
Deleteசுவை.. சென்ற வாரம் சமோஸா செய்யத் தொடங்கி, பின்னர்தான் திசைமாறி காரபோளி செய்தோம்!
ReplyDeleteகாரபோளி - அவ்வளவு ஆர்வமில்லை. அது சரி..ஸ்ரீராம்... தி.பதிவில் உங்கள் பதிவைக் காணோமே.
Deleteஎங்கே.... இப்போதைக்கு முடியாது போலிருக்கே...
Deleteஆனால் கார போளி சூ.....ப்பரா இருந்ததாக்கும்!
திப்பிசமா? ஹா ஹா! நன்றி
Deleteகாணொளிகள் நான் பெரும்பாலும் பார்ப்பதில்லை. அதனால்தான் காணொளிகளுக்கு கருத்திடுவதில்லை.
ReplyDeleteஇந்தக் காணொளி பார்க்கிறேன். அப்புறம் என்னால் செய்யமுடியுமா என்று சொல்கிறேன்.
ஆஹா! அதற்கென்ன? மெதுவாக வாங்க.
Deleteஎனக்கு கோன் போலத்தான் வருகிறது...! இது போல் மடிப்பதை கற்றுக் கொண்டே இருக்கிறேன்...!
ReplyDeleteமுயற்சி+பயிற்சி=வெற்றி. நன்றி
Deleteசூப்பரா செஞ்ச்ருக்கீங்க அக்கா. நானும் கரம் மசாலா சேர்ப்பதில்லை.
ReplyDeleteநான் மேல் மாவில் கொஞ்சம் ஓமம் போட்டுக் கொள்வேன். இதே மெத்தட்ஸ் தான் அக்கா. க்ரிஸ்பா வரனும்னா இப்படி வாட்டி எடுத்துவிட்டு அதில் ஸ்டஃப் செஞ்சு போடுவது..ஆமாம் எண்ணை குடிக்காது என்பதால் பெரும்பாலும் அப்படித்தான் செய்வது...சின்ன சமோசா போடுவது போல.
உருளைக் கிழங்கை வேக வைத்துவிட்டு உதிர்த்து வதக்குவேன். இப்படிச் செய்ததில்லை.
டைரக்டாக வதக்கிச் செய்கிறேன்.
கீதா
நன்றி கீதா.
Deleteவீடியோ நன்றாக இருக்கிறது. இது சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சகோதரி அல்லவா? நன்றாகச் செய்து காட்டுகிறார். கடையில் கிடைக்கும் சமோசா போன்றே இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteபெரும்பாலும் உணவு பற்றிய பதிவுகளைப் பார்த்தாலும் என்ன கருத்து இடுவது என்று தெரியாததால் கடந்து சென்றுவிடுவது வழக்கமாகிவிட்டது. வீட்டில் கேரளத்து பாரம்பரிய உணவைத் தவிர வேறு எதுவும் செய்வது இல்லை. வேண்டும் என்றால் கடையில் வாங்கிக் கொள்வதுண்டு எனவே சொல்லத் தெரிவதில்லை. பல உணவுப்பதார்த்தங்கள் பற்றியும் பரிச்சயம் இல்லை.
எங்கள் தலைமையகம் மெதுவாகச் செயல்படத் தொடங்கியிருப்பதால், நானும் வலையில் வரத் தொடங்கியிருக்கிறேன்.
துளசிதரன்
வாங்க துளசி சார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருகிறீர்கள். நன்றி.
Deleteதொட்டுக்கப் புளிச்சட்னி, பச்சைச் சட்னி இல்லாமல் சமோசாவா? சரி, சரி, அப்படியே சாப்பிட்டுக்கறேன். ஆனால் என்னை விட அவருக்குத் தான் சமோசா ரொம்பப் பிடிக்கும். செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் பொதுவாக கோதுமை மாவு+கொஞ்சம் போல் ரவை+மைதாமாவு மூன்றையும் சேர்த்துப் பிசைந்து பண்ணுவேன். மைதாவில் அதிகம் பண்ணுவதில்லை. தோசைக்கல்லில் போட்டுக் காய வைத்து அமெரிக்காவில் பண்ணி வைத்துக்கொள்வார்கள். நாங்க குளிர்சாதனப் பெட்டியில் அதிகம் வைப்பதில்லை என்பதால் அது பண்ணினாலும் சாப்பிடுவதில்லை.
ReplyDeleteசமோசாவை தக்காளி சாஸுடன் சேர்த்து படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அது சரியாக வரவில்லையென்று அக்கா பேரன் எடிட் செய்து விட்டானாம். நான் ஒரு முறை கூட சமோசா செய்ததில்லை. நன்றி.
Deleteசமோசா செய்முறை அருமை.
ReplyDeleteநன்றி.
Deleteமுன்பெல்லாம் அதிகமாக சமோசா மீது விருப்பம் இருக்கும்...
ReplyDeleteபல இடங்களிலும் அதன் செய்முறை / உள்ளடக்கம் கண்டு அலுத்து விட்டது...
தஞ்சாவூர் திருச்சி பக்கம் சாயங்காலம் வரைக்கும் ரயில்களில் சூடான சமோசா விற்பனை ஆகிக் கொண்டிருக்கும்...
பின்னொரு நாள் சமோசாவைப் பற்றி இன்னும் எழுதுகிறேன்...
திருச்சியில் சிந்தாமணி சூப் மார்க்கெட் ஆரம்பித்த புதிதில் மாலை சமோசா போடுவார்கள். பரபரவென்று விற்று தீர்ந்து விடும். சென்னை நெசப்பாக்கத்தில் ஒரு வட இந்தியர் ஒரு சிறிய இடத்தில் சமோசா, கச்சோரி போட ஆரம்பித்தார். மிகவும் சுவையாக இருக்கும். ஹாட் சிப்ஸில் கிடைக்கும் சமோசாவை விட பெரியதாக, அங்கு விருப்பதை விட குறைந்த விலையில் கிடைக்கும். கரோனா எல்லாவற்றையும் வீட்டில் செய்ய வைத்திருக்கிறது. வருகைக்கு நன்றி.
Deleteசமோசா வடக்கில் நிறைய பயன்பாடு உண்டு. காணொளியை பிறகு தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஆமாம், நமக்கு பஜ்ஜி ,பக்கோடா மாதிரி அவர்களுக்கு சமோசா இல்லையா? நன்றி வெங்கட்.
ReplyDeleteஆஆ பானுமதி அக்கா கிச்சினுக்குள்ளும் களம் புகுந்திட்டா என நினைச்சேன், அக்காவின் சமையலோ.. அழகு..
ReplyDeleteசமோசா மிகுந்த சுவை.
ReplyDelete