கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 23, 2020

மசாலா சாட் -18

மசாலா சாட் - 18 

என் மகள் ஒப்போஸ்(OPOS) குக்கிங் பற்றி ரொம்ப சொன்னாளே என்று அதைப் பற்றி யூ டியூபில் தேடினேன். முதலில் சிம்பிளாக ஏதாவது செய்து பார்க்கலாம் என்று தேடியதில் இஞ்சி பூண்டு விழுது செய்முறை கண்ணில் பட்டது.
இதற்கு 2 லிட்டர் குக்கர்தான் வேண்டுமாம். அது இருக்கிறது. இஞ்சி,    பூண்டு இரண்டுமே இருந்தன. 
இஞ்சியும், பூண்டும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டிருந்தார்கள். இரண்டும் தலா ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் பூண்டு உரிப்பது  மிகவும் கஷ்டமாக இருந்தது. பூண்டு சிறியது, கை நகத்தை வேறு வெட்டி விட்டதால் உரிக்கும் பொழுது நகக்கணுக்கள்  ஆரம்பித்து விட்டன. பிறகு மைக்ரோ வேவ் அவனில் சற்று நேரம் வைத்து எடுத்ததும் ஈசியாக உரிக்க வந்தது. ஒரு வழியாக உரித்து, அதே அளவு இஞ்சிக்கு தோலை சீவி, குக்கரில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய், ஒரு டீ ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொண்டு, குக்கரில் இஞ்சியை ஒரு பாதியிலும், பூண்டை மற்றொரு பாதி இடத்திலும் போட்டு அடுப்பை பெரிதாக எரிய விட வேண்டும். அதாவது flame,  குக்கரின் அடி பாகம் முழுவதையும் கவர் செய்ய வேண்டும். பக்கவாட்டு பகுதிகளையும் கவர் செய்தால் அடுப்பை தணிக்கவும். இப்படி மூன்று நிமிடங்களுக்கு சமைக்கவும். அவர்கள் ஆறு விசில் என்று போட்டிருந்தார்கள்,ஆனால் என்னுடைய குக்கரில் மூன்று நிமிடத்தில் எட்டு விசில்கள் வந்தன. இந்த ஓபோஸ் குக்கிங்கில் நேரம் முக்கியம்.  மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு. சற்று,நேரம் கழித்து குக்கரை திறந்து, இஞ்சி,பூண்டு ஆறும் வரை காத்திருந்து, பின்னர் மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை ஒரு காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இரண்டு மாதங்கள் வரை கெட்டுப் போகாதாம். எல்லாவற்றிர்க்குமாக மொத்தமாக இருபது நிமிடங்கள் ஆகி விட்டது. இதை சாதாரண முறையில் செய்திருந்தாலும் இதே நேரம்தான் ஆகியிருக்கும். மாரல் ஆஃப் த ஸ்டோரி அல்ப விஷயங்களுக்கு ஓபோஸ் குக்கிங் தேவையில்லை. ஏனென்றால் அந்த முறையின் நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்துவது. அடுத்த முறை ஏதாவது கடினமான ரெசிபியை ஒப்போஸ் முறையில் சுலபமாக செய்து பதிவிடுகிறேன்.

என் அக்கா பெண் வீட்டில் அவர்களின் செல்லம் டெக்ஸ்டரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள். உங்கள் பார்வைக்கு:













45 comments:

  1. ஒபோஸ் எல்லாவற்றிற்கும் உகந்ததல்ல! :) சில சமயங்களில் சொதப்பி விடுகிறது.

    செல்லத்திற்கு பிறந்த நாள் - நல்ல கொண்டாட்டம்!

    ReplyDelete
  2. ஓபோஸ் படங்களை காணவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. படங்கள் எடுக்கவில்லை ஜி. வருகைக்கு நன்றி. 

      Delete
  3. ஒப்போஸ் குக்கிங் பற்றி இன்று தான் அறிந்தேன்...

    முடிவில் காணொளி என்று சொடுக்கி விட்டேன்... !

    ReplyDelete
    Replies
    1. 'One pot one shot' என்பதைத்தான் சுருக்கமாக ஓபோஸ் என்கிறார்கள். வருகைக்கு நன்றி டி.டி. 

      Delete
  4. ஓப்போஸ் குக்கிங் அனுபவம் படிக்க நன்றாக இருந்தது. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  5. ஓபோஸ் - அப்படி ஒரு சமையல் முறையா?

    டெக்ஸ்டர் பார்க்க அழகாக இருக்கிறான்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ்டர் பார்க்க அழகாக இருக்கிறான்.// Thank you. I will pass on this to my niece.
       

      Delete
  6. எங்கள் வீட்டில் குக்கர் பயன்பாடே அரிது. விறகடுப்பு கிச்சன், கேஸ் அடுப்பு வைத்துக் கொள்ள தனி கிச்சன். விறகடுப்பில் தான் பெரும்பான்மையான சமையல். கேஸ் அடுப்பில் டீ போடுவது போன்ற சில வேலைகள் மட்டுமே.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. //விறகடுப்பு கிச்சன், //  அட! இப்போது கூடவா? கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. 

      Delete
  7. பானுக்கா ஒபோஸ் ம்ம்ம்ம்ம் அது எல்லாவற்றிற்கும் பொருந்தி வருவதில்லை. அதைவிட உங்களுக்கு எளிதான ஒன் பாட் குக்கிங்க் சொல்கிறேன். பெரிய குக்கர் இருந்தால் போதும் அதிலேயே சாதம் கூட்டு எல்லாமும் செய்துவிடலாம். கோடம்பாக்கம் வீட்டில் நானும், என் அப்பாவும், மச்சினரும் இப்படி சிலதெல்லாம் செய்வதுண்டு. அப்புறம் தனியாகச் சொல்கிறேன்!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஒப்போஸில் வேறு ஏதாவது செய்து பார்க்க வேண்டும். சில சமயம் வெளியில் போக வேண்டியிருந்தால் குக்கரில் புளி ஜலத்தில் சாம்பார் பொடி,உப்பு, காய் இவைகளை சேர்த்து குக்கரில் வைத்து விட்டு சென்றதுண்டு. அப்போதும் பருப்பை தனியாகத்தான் வேக வைத்துக் கொள்வேன். 

      Delete
  8. செல்லாம் அழகோ அழகு!! ஆயுஸும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்வாக இருந்திட செல்லத்துக்கு வாழ்த்துகள்! மிகவும் ரசித்தேன் அழகா கேப் எல்லாம் போட்டுக் கொண்டு!!! ஹா ஹா ஹா ஹா... லேப்ரடார்/லேப் மிக்ஸ்? போல இருக்கு. இன்னும் குழந்தைதான் போல. ஒரு வயது ஆகிறதா? டெக்ஸ்டர் செல்லத்தின் பெயரோ? டெக்ஸ்டர் நு ஒரு ப்ரீடும் உண்டு என்று நினைவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது என்ன ப்ரீட் என்று எனக்குத் தெரியாது. அதன் பெயர் டெக்ஸ்டர். 

      Delete
  9. பானுக்கா ஒபோஸில் எனக்கு எழும் கேள்விகள். 10, 15 நிமிடத்தில் விருந்தே சமைக்கலாம் என்கிறார்கள்/. ஓகே...

    பார்த்தால் தேங்காய் பயன்படுத்தினால் துருவுக் கொள்ள வேண்டும், அவர்கள் வேக வைத்த ப்ருப்பைத்தான் போடுகிறார்கள். அப்போ பருப்பு வேக வைக்க வேண்டும்தானே அது இந்த டைமில் ஆட் ஆகவில்லை. அடுத்து காய் கட்டிங்க். மிளகாய் சேர்த்தால் அது கட்டிங்க். கூட்டு என்றால் கூட்டுக்கு அரைத்தல், எல்லாவற்றிற்கும் ஒரே தாளிப்பு அதை தாளித்து வைத்தல் அப்போ இதுக்கான நேரம் எல்லாம்? அந்த 10, 15 நிமிடத்தில் சேர்க்கப்படுவதில்லையே...

    நான் இன்னும் எளிய முறையில் செய்வதைச் சொல்கிறேன். என் மகனுக்குச் சொல்லிக் கொடுத்ததுதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான். பிரிபரேஷன் நேரத்தை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      Delete
  10. நாய்க்கு கேக்காக அட ராமா? இனிப்பை நாய்களுக்கு கொடுக்க கூடாது என்பது அவர்களுக்கு தெரியாதா? இனிப்பு, நட்ஸ், உப்பு நாய்க்கு கொடுக்கவே கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...   சொறி வரும் என்பார்கள்.  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      Delete
    2. கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒருவேளை இது நாய்களுக்கான ஸ்பெஷல் கேக்கோ என்னவோ? நாய்களுக்கென்று தனி சாக்லேட் இருக்கிறதே. நன்றி மதுரைத் தமிழன். 

      Delete
  11. பானும்மா,
    ஓபோஸ் எனக்கு சரிப்பட்டு வரவில்லை.
    ப்ரஸ்டிஜ் வந்த புதிதில் எல்லாம் முழங்கித்தே!!!!
    குக்கரில் ரசம், சாம்பார், பொரியல்
    எல்லாம் செய்து விடலாம் என்று ரெசிப்பி புஸ்தகம் வந்ததே அது போல.
    இதுவும் ஒரு அன்ய்பவம் தான்:)
    டெக்ஸ்டருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    நலமாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மைக்ரோ வேவ் அவனிலும் எல்லாம் செய்யலாம் என்பார்கள். சாம்பார், ரசம் எல்லாம் அதில் செய்யும் பொழுது சேர்ந்து வராமல் நீர்க்க இருக்கும். 

      Delete
  12. ஐந்தாறு வருடங்களாக ஓபோஸ் செய்முறை பற்றி ஒரே புகழ்ச்சி. அதிலும் முகநூலில் மங்கை குழுமத்தில் எல்லோரும் இதைப் பற்றியே எழுதினார்கள். எனக்கென்னமோ பிடிக்கலை. குளிக்கப் போகும் முன்னர் கல்சட்டியில் பருப்பை ஊறவைத்ததை வேகவிட்டுப் போவேன். குளித்துவிட்டு வந்தால் வெந்து விடும். பின்னர் என்ன? சமையல் தான். சாதம் கூடக் குக்கரில் வைப்பதில்லை. அதிலும் இப்போத் தீட்டாத அரிசி வேறே சமைக்கிறேனா! நேரடியாகத் தான் சாதம் வடிக்கிறேன். அதான் அரை மணி நேரத்தில் மொத்த சமையலும் ஆகும்படி வருகிறது. இன்னொருத்தர் எழுதி இருந்ததில் குக்கர் அடிப் பாத்திரத்தில் நீரை வைத்துவிட்டு ஓர் கிண்ணத்தில் இஞ்சி, பூண்டை எண்ணெய் சேர்த்து வைக்கச் சொல்லி இருந்தார்கள். நாம வதக்குவது இன்னும் நேரம் குறையும்னு எனக்குத் தோன்றியது.

    ReplyDelete
  13. எழுபதுகளில் பிரஸ்டிஜ் குக்கர் வாங்கிய புதுசில் அதிலேயே காய்களை வேகவிடுவது, பருப்பு ஒரு கிண்ணம், சாதம் ஒரு கிண்ணம், காய்கள் ஒரு கிண்ணம் என 3 கிண்ணங்களில் வைத்துச் சமைத்திருக்கிறேன். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அது பிடிக்காமல் போய்விட்டது. அதோடு கீரையை அப்படிக் குக்கரில் வைத்துச் சமைக்கக் கூடாது. என்பதும் தெரிந்திருந்ததால் ஒரு ஆறு மாசத்துக்கப்புறமாப் பழைய குருடி, கதவைத் திறடி கதை தான்.

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா திவசத்தின் பொழுது எல்லா காய்களையும் தனித்தனியாக பாத்திரங்களில் வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்வார்.  நேரம் பெரிதாக மிச்சம் ஆகும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் பிரிப்பரேஷன் நேரத்தை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நன்றி கீதா அக்கா.

      Delete
    2. எங்க வீட்டுக்கு ஸ்ராத்த சமையல் சமைக்க வரும் மாமிகள் எல்லாம் குக்கர் கேட்டு அடம் பிடிப்பார்கள். நான் குக்கரே இல்லைனு சொல்லிடுவேன். ஸ்ராத்தம் சமையல் சமைக்க எனத் தனிப் பாத்திரங்கள் வைத்திருக்கிறேன். இப்போவும் அதில் தான்
      சமைப்பது. அது நான் சமைத்தாலும் சரி, வரும் மாமிகள் சமைத்தாலும் சரி. முன்னெல்லாம் ஸ்ராத்த சமையலில் சில
      சமயங்களில் இட்லிப்பானையில் (என்னோடது சீனாச்சட்டி) அடியில் சேப்பங்கிழங்கைப் போட்டுவிட்டு மற்றக் காய்களை இட்லித்தட்டு ஐந்திலும் உப்புச் சேர்த்து வேக வைப்பேன். சீக்கிரம் ஆகும் என்பதற்காக. இட்லித்தட்டும் ஈயம் பூசினது ஐந்து குழித்தட்டு. இப்போ அது வீணாகிவிட்டதால் காய்களைத் தனியாகவே வேக விடுகிறோம்.

      Delete
  14. பூண்டின் இரு முனைகளையும் கத்தியால் நறுக்கி விட்டு உரிப்பது என் வழக்கம்.  பரவாயில்லாமல் வரும்!  

    ReplyDelete
    Replies
    1. பெரிய பூண்டு பற்களை உரிப்பது சுலபம். சிறியதாக இருக்கும் பொழுது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. காய் வேறு பிசு பிசுவென்று ஆகி விடும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. 

      Delete
    2. பூண்டே வாங்குவதில்லை. ஆகவே பிரச்னை இல்லை. இஞ்சி மட்டும் துருவி ஃப்ரீஸரில் வைத்துக் கொள்வேன்.

      Delete
  15. //பெரிதாக எறிய விட வேண்டும்//

    எங்கு என்று சொல்லி விட்டால் நலம்.   ரொம்ப தூரத்திலா?  பக்கமாகவே எறியலாமா?

    ஹிஹிஹி.....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. எழுத்தின் நகைச்சுவையை ரசித்தேன்.

      Delete
    2. ஹாஹா! திருத்தி விட்டேன் நன்றி. 

      Delete
  16. டெக்ஸ்டருக்கு எங்கள் வாழ்த்துகளும்.  இரண்டாவது படத்தில் அதன் ஓரப்பார்வை ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  17. கடைசி படத்தை வீடியோ என்று நினைத்து ஏமாற வைத்தது நல்ல டெக் னிக்!!

    மறுபடியும் ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அது வீடியோ இல்லை என நானும் ஏமாந்தேன். எனக்குதான் வரவில்லை போலும் என பல தடவை... ஹா. ஹா. ஹா.

      Delete
    2. அது வாட்ஸாப்பில் வந்தது. வீடியோவாக பதிவேற்ற முடியவில்லை என்பதால் அப்படியே போட்டு விட்டேன். டெக்கினிக்கெல்லாம் இல்லை. ஏமாறச் சொன்னது நானோ? ஹி ஹி!

      Delete
  18. பிறந்த நாள் கொண்டாட்டங்களையு காணொளியையும் பார்த்தேன், ரசித்தேன். செல்லங்களுக்கு, குறிப்பாக நாய்க்கு இனிப்பு, உப்புச் சேர்த்தவை கொடுக்கக் கூடாது என்பார்கள். தோலில் நோய் வரும். கவனமாக இருக்கச் சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குதான் காணொளி ஓடவில்லையா?   என்னடா ஸ்ரீராமுக்கு வந்த சோதனை!

      Delete
    2. chummmmmmmmmmmmmmmmmmaa! Me also kidding! That is all. No video!

      Delete
    3. //செல்லங்களுக்கு, குறிப்பாக நாய்க்கு இனிப்பு, உப்புச் சேர்த்தவை கொடுக்கக் கூடாது என்பார்கள்.// அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஈதற்கு அவர்கள் வீடு டிரைவரை விட்டு சிக்கன் வாங்கி வரச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், ஆனால் அது அதை சாப்பிடவில்லையாம். எனவே பருப்பு சாதம், தயிர் சாதம் கொடுக்கிறார்கள். முட்டை மட்டும் சாப்பிடும் சைவம் இந்தச் செல்லம்.  

      Delete
  19. வணக்கம் சகோதரி

    இப்படி ஒரு சமையல் முறையை நான் இப்போதுதான் அறிகிறேன். மற்றபடி குக்கரில் நேரடியாக (அதற்குள் தண்ணீர் விட்டு பாத்திரங்கள் மூலமாக இறக்காமல்) சாதம், பருப்பு சாம்பார் என வைக்கலாம் என கேள்விபட்டும் அதையும் இதுவரை செய்ததில்லை.

    பூண்டு தோல் அகற்றுவது கடினந்தான். ஆனால் இப்போது ஊறுகாய்களில் தோலுடனே சேர்த்து விடுகிறார்கள்.அதன் தோலை சாப்பிட்டால் வயிறு வலி வருமென்பது அந்தக்கால பெரியவர்கள் சொன்னார்கள். அதன் முனைகளை கத்தியால் முதலில் அகற்றிக்கொண்டால் உரிக்க ஒரளவு எளிதாகிறது. இருப்பினும் பூண்டுப்பால் விரல்களில் பிசுபிசுப்பை உண்டாக்குவதால் போகப்போக கஸ்டந்தான்.

    உங்கள் அக்கா வீட்டு செல்லத்தின் பிறந்த நாள் விழா அருமை. நல்ல ஆரோக்கியமாக இருக்க நானும் வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  20. //இப்படி ஒரு சமையல் முறையை நான் இப்போதுதான் அறிகிறேன். // யூ டியூபிற்குச் சென்று பாருங்கள்,ராமகிருஷ்ணன் என்பவருக்கு ஒரு ஆர்மியே இருக்கிறது. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கமலா. 

    ReplyDelete
  21. ஓபோஸ் முறையில் மருமகள் எல்லாம் செய்வாள் இப்போது ஒரு வாரம் முன்பு பூண்டு, இஞ்சி பேஸ்ட் செய்தேன் என்றாள்.

    செல்லத்தின் பிறந்த நாள் படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete