மசாலா சாட் - 17
லாக் அவுட் தொடங்கிய முதல் வாரம்:
காசுக்கு கேடா ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டிருக்கிறோம். என்னவோ வீட்டைப் பெருக்கி, மெழுகினேன் என்று பேர் பண்ணிவிட்டு செல்கிறாள். இப்போது நாமே செய்து கொள்ளும் பொழுது, வீடு பளிச்சென்று இருக்கிறது. பாத்திரங்கள் மின்னுகின்றன.
லாக் அவுட் தொடங்கிய இரண்டாம் வாரம்:
நேற்றுதான் வீட்டை மெழுகினோம். நாளை மெழுகிக் கொள்ளலாம்.
லாக் அவுட் தொடங்கிய மூன்றாவது வாரம்:
ஐயோ! சிங்கில் இவ்வளவு பாத்திரம் கிடக்கிறதே? வீட்டை செவ்வாய், வெள்ளி மெழுகினால் போதும்.
தற்சமயம்:
லாக் அவுட் பீரியட்டில் பலரும் அவர்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். நான் யூ டியூபை சரணைடைந்தேன். குறும்படங்கள், உபன்யாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று பார்க்கிறேன்.
யூ ட்யூபில் பல பழைய தமிழ்ப் படங்கள் காணக் கிடைக்கின்றன. தனிகுடித்னம் சினிமா கொஞ்சம் பார்த்தேன். நாடகத்தை ரசிக்க முடிந்தது போல் திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை. காமு என்னும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த கே.ஆர். விஜயா மடிசார் கட்டிக்கொண்டு காபியை தூக்கி குடிக்காமல் எச்சில் பண்ணி குடிக்கும் காட்சியை பார்த்த பிறகு தொடர்ந்து பார்க்க பிடிக்காமல் நிறுத்தி விட்டேன்.
சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் சித்ராலயா கோபு கதை வசனத்தில் லட்சுமி,ஜெய்சங்கர், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்,
வி.கே. ராமசாமி முதலியவர்கள் நடித்திருந்த 'வீட்டுக்கு வீடு' படம் பார்த்தேன்.
பாடல்களை ஓட்டி விட்டால் படம் ரசிக்கும்படி இருந்தது. எனக்குத் தெரிந்து ஜெய்சங்கர் நடித்திருந்த படங்கள் இரண்டுதான். ஒன்று வீட்டுக்கு வீடு, மற்றது தளபதி.
இந்தக் கதையை அப்படியே ராம்கி,விவேக் போன்றவர்கள் நடித்து ஒரு படம் வந்தது. ஏன் கமலஹாசனின் 'காதலா காதலா' கூட இதே கதைதான்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களும் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் கே. பாலச்சந்தரின் 'ஜன்னல்' சீரியல்கள் எனக்கு மிகவும் பிடித்தன. அதிலும் லட்சுமியும், எஸ்.பி.பி.யும் நடித்திருந்த 'அடுத்த வீட்டு கவிதை' என்னும் சீரியல் மிகவும் பிடித்தது. எஸ்.பி.பி. சற்று மிகை நடிப்பை கொடுத்திருந்தாலும், லட்சுமியின் நடிப்பு பிரமாதம்! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி எந்த வித ஆபாசமும் இல்லாமல் கன்வின்சாக எடுத்திருக்கும் பாலச்சந்தர் ஜித்தன்தான். சேத்தன் பகத் எழுதியிருந்த 'ஒன் இந்தியன் கேர்ள்' நாவலை படித்த பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஒரு பெண், மூன்று ஆண்கள் என்னும் கருவை எழுபதுகளிலேயே படமாக எடுத்திருக்கிறாரே பாலச்சந்தர் என்று வியந்தேன்.
சரி இப்போது ஒரு பழைய பாடல்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteமசாலா சாட் அருமை. வேலையாட்களின் மகத்துவத்தை மாத இறுதியில் உணர வைத்து விட்டீர்கள். நான் முன்பிலிருந்தே நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நானேதான் எல்லா வேலைகளையும் செய்து வந்தேன். எப்போதும் வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொண்டே இல்லை. எங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் பிறந்தவுடன் (அவர்களையும் கவனிக்க வேண்டியிருப்பதால்) தினமும் பெருக்கித் துடைக்க மட்டும் வேலையாள் வைத்திருந்தேன். பாத்திரங்கள் தேய்ப்பது சமையல் எப்போதும் நான்தான். இப்போது இரண்டு மாதமாக வீடு பெருக்குவதும் சேர்ந்துள்ளது.
ஏற்கனவே கொஞ்சம் கூட வாஞ்சையுடன் திரும்பி பார்க்காமல் போகும் நேரம் இப்போது சொல்லிக் கொள்ளாமலே பறக்கிறது.
ஒரு வேலையை அதுவும் தினமும் செய்வதை விட்டு விட்டால் அந்த வேலைக்கு நம் உடம்பு பின் ஒத்துழைப்பு தருவதை நிறுத்தி வேடிக்கை மட்டும் பார்ப்பது இயற்கைதானே.!
டி. வி இப்போதெல்லாம் நான் பார்ப்பதில்லை. பழைய படங்கள் எப்போதுமே நன்றாக இருக்குமென்று என்னுடைய எண்ணம். தாங்கள் பார்த்த வீட்டுக்கு வீடு நானும் அப்போது பார்த்துள்ளேன். ராம்கி விவேக் நடித்த விஸ்வநாதன் ராமமூர்த்தி படமும், காதலா காதலா படத்தின் கதையும் நீங்கள் கூறுவது போல் ஒத்துப் போகும். இரட்டை ஜோடிகள், நகைச்சுவை என்ற பெயரில் நிறைய சிக்கல்கள் என்று ஒரே கதையம்சம் கொண்ட படங்கள்.
எல்லாமே அப்போது தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன். அப்போதிருந்த நேரம் கூட இப்போது இல்லை என்பது என்க்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பாலசந்தரின் ஜன்னல், கையளவு மனசு கூட பாரத்துள்ளேன். இப்போதைய தொடர்கள் எதுவும் ரசிக்கவில்லை.
பழைய இனிக்கும் பாடல் அருமை. ஏ.எம்.ராஜா. பி. சுசீலா அவர்களும் இனிமையான தேன் குரலில் பாடிய இந்தப் பாடலை எத்தனை தடவை வேண்டுமானலும் கேட்கலாம். உன்னிகிருஷ்ணன் இனிமையான குரலுடன் அவர் மகளும் சேர்ந்து பாடிய பாடலை இப்போதும் ரசித்துக் கேட்டேன். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் மிக நல்ல ரசிகை மற்றும் விமர்சகி கமலா. படித்ததில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக மட்டுமல்ல பாஸிட்டிவாகவும் விமர்சிப்பீர்கள். மிக்க நன்றி.
Deleteஉங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. நானும் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் சகோதரி.
Deleteஇந்த கொரோன எங்கள் இல்லத்து தினசரி வாழ்வுமுறையை கூட மாற்றி விட்டது. முன்பெல்லாம் வேலையில் இருந்து மாலா ஐந்துக்கு வீட்டிற்கு திரும்பிய பின்..
ReplyDelete"இனிமேல் எங்க உடற்பயிற்சி மற்றும் தின நடை போகவேண்டுமா என்ற தயக்கம் வரும்."
தற்போது..இல்லத்தில் இருந்தே பணி புரிவதால்..
"எப்படா.. அஞ்சி மணி ஆகும்ன்னு காத்திருந்து அடிச்சி பிடிச்சி ஒன்னரை மணி நேரம் நடை."
//"எப்படா.. அஞ்சி மணி ஆகும்ன்னு காத்திருந்து அடிச்சி பிடிச்சி ஒன்னரை மணி நேரம் நடை."// நல்ல விஷயம்தானே? இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகும் இந்த நடை பயிற்சியை விட்டு விடாதீர்கள். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஎங்க வீட்டு வேலையை இங்கே நாங்கதான் செய்தாகணும் :) அதனால் அதில் வித்தியாசமில்லை .FRONTLINE ஒர்க்கர் என்பதால் வேலைக்கு போகவேண்டிய சூழல். நானும் ஓய்வில் ஒன்றிரண்டு மூவீஸ் பார்த்தேன் சிலது ஓகே சிலது ஏண்டா பார்த்தோம் ரகம் ஜன்னல் தொடர் மொத்த லிஸ்ட்டும் என்கிட்டே இருக்கு :) அதில் மிகவும் பிடிச்சது நீங்க சொன்ன பாலுசார் லட்சுமி அவர்களின் கதை :)வாவ் !! புலிக்குப்பிறந்தது பூனையாகுமா ..உத்தரா சூப்பர்ப் வாய்ஸ் .இசையை சுவாசிக்கும் குடும்பம் .
ReplyDeleteவாங்க ஏன்ஜெல். இந்தியாவின் வரங்களில் ஒன்று வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது. ஜன்னல் சீரியல்களில் ஒன்றான 'அம்மாவுக்கு ரெண்டுல ராகு' இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உத்ராவுக்கு நாள் குரல் வளம்+பயிற்சி. வாழ்க வளமுடன்! நன்றி.
Deleteகாலை வணக்கம். வேலைக்காரி மேட்டரை செமையா டீல் பண்ணி இருக்கீங்க... நிறைய இடங்களில் நிலைமை அப்படிதான்!
ReplyDeleteவீட்டுக்கு வீடு படத்தில் இரண்டு பாடல் எனக்குப் பிடிக்கும். அங்கம் புதுவித அழகினில், அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ.... இந்த இரண்டாவது பாடலைப் பாடியவர் சாய்பாபா! இவர் பாலையாவின் புதல்வர் என்று ஞாபகம்.
ReplyDelete//இந்த இரண்டாவது பாடலைப் பாடியவர் சாய்பாபா! இவர் பாலையாவின் புதல்வர் என்று ஞாபகம்.// உங்கள் ஞாபகம் சரிதான். அவர் மிமிக்ரி கலைஞர் என்று நினைக்கிறேன். 'மகராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி ..' என்ற பாடலில் பொம்மைக்காக குரல் கொடுத்திருப்பார்.
Deleteவேலைக்காரி விஷயத்தில் நான் இப்போத் தான் ஒரு வருஷமாக (அம்பேரிக்கா போகும்முன்னர்) வைத்துக் கொண்டதால் இப்போ இல்லாதது எனக்கு எதுவும் பெரிய விஷயமாகத் தெரியலை. அதோடு அம்பேரிக்காவில் எல்லாம் நாம் தானே செய்துக்கணும். ஆகவே அங்கிருந்து வந்தவுடன் வேலைக்கு ஆள் இல்லை என்பது பெரிய குறையாகவோ வித்தியாசமாகவோ தெரியலை. மற்றபடி இந்த ஊரடங்கினால் எனக்குப் புதுசா எதுவும் நேரம் கிடைக்கலை. அதே மாதிரிதான். திரைப்படங்களோ, தொலைக்காட்சித் தொடர்களோ பார்க்கவே இல்லை. தினம் நினைச்சுப்பேன், இன்னிக்கானும் ஏதானும் திரைப்படம் யூ ட்யூப் வழி பார்க்கலாம்னு ஆனால் மத்தியானம் பார்க்கத் தோன்றாது. அதோடு அதில் சுமார் இரண்டு மணி நேரம் உட்கார வேண்டுமே!
ReplyDeleteலக்ஷ்மி, எஸ்.பி.பி. நடிச்ச "ஜன்னல்" தொடர் ரொம்பப் பிடிச்சது. சமயங்களில் பாலசந்தரும் தன்னையும் அறியாமல் நல்லதொரு கருவில் படமோ, தொடரோ கொடுத்திருக்கார். அவர் எழுபதுகளில் சொன்ன ஒரு பெண், மூன்று ஆண்கள் தொலைக்காட்சித் தொடரா? என்ன பெயர்? கையளவு மனசு நானும் பார்த்திருக்கேன். குழந்தையை தத்து எடுப்பதை மூலக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். கிட்டத்தட்ட அதே கருவில் சுஜாதாவின் ஒரு நாவல் கூட ஆனந்தவிகடனில்(?) வந்த நினைவு.
ReplyDelete//அவர் எழுபதுகளில் சொன்ன ஒரு பெண், மூன்று ஆண்கள் தொலைக்காட்சித் தொடரா? என்ன பெயர்?// தொலைக்காட்சி தொடர் இல்லை, 'அவர்கள்' என்னும் திரைப்படம். முன்னாள் காதலன் ரவிக்குமார், விவாகரத்து செய்த கணவன் ரஜினிகாந்த், அலுவலகத் தோழன் கமலஹாசன் என்ற மூன்று ஆண்கள் அவர்களோடு சுஜாதா. எனக்கென்னவோ அந்தப் படத்தை இப்போது எடுத்தால் நன்றாக ஓடும் என்று தோன்றும்.
Deleteநீங்கள் சொல்லும் படம் மலையாளத்தில் பார்த்திருக்கேன். ventriloquist ஒருத்தர் வருவார். பல்லாண்டுகளுக்கு முன் பார்த்ததால் ஸ்ரீவித்யா தான் கதாநாயகியோ? சரியாக நினைவில் வரலை.
Deleteஅ.மருதகாசி அவர்களின் பாடல் பிறந்த விளக்கம் மிகவும் ரசித்தேன்... அழகான அருமையான பாடல்...
ReplyDeleteகுறளுக்கேற்ப பல பாடல்கள் இவரிடம் உண்டு... நினைவுக்கு வருவதும் தேடல் துவங்குவதும் இவரிடத்தில் தான் முதலில்...
சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் தினசரி ஒரு பாடல் பற்றி கூறி வருகிறார். மருதகாசி அவர்களின் பாடல்களில் பல மிகவும் இனிமையனவை. நன்றி டி.டி.
Deleteநீங்கள் எழுதிவிட்டீர்கள்..நாங்கள் எழுதவில்லை...இங்கும் செய்யவேண்டிய வேலைகள் ஊரடங்கு சரியானதும் வேலைக்காரியை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே...
ReplyDeleteசில குடியிருப்புகளில் பணியாட்களை அனுமதிக்கிறார்கள். எங்கள் குடியிருப்பில் இன்று முதல் செய்தித்தாள் வர ஆரம்பித்திருக்கிறது. பணியாட்கள் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை.
Deleteவேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை! நானும் சரி வீட்டிலும் சரி. அதனால் எந்த மாற்றமும் இல்லை.
ReplyDeleteசினிமா, சீரியல் பார்ப்பதே இல்லை - தேடித் தேடிப் பார்ப்பது சில குறும்படங்களும், விளம்பரங்களும். இன்றைக்குக் கூட ஒரு குறும்படம் - ஹிந்தி குறும்படம் பார்த்தேன்.
பாடல் பிறந்த கதையும், பாடலும் ரொம்பவே சிறப்பு. மிகவும் ரசித்தேன்.
சுவையான மசாலா சாட். நன்றி.
நான் ஆரம்பத்தில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல் இருந்தேன். சமீபத்தில் கூட ஒரு குறும்படம் பகிர்ந்திருந்தீர்கள் . அதை இன்னும் பார்க்கவில்லை. இனிமேல்தான் பார்க்க வேண்டும். நன்றி வெங்கட்.
Deleteவேலைக்காரர் விவகாரம் அருமை...
ReplyDeleteமற்றபடி பழைய திரைப்படங்களைக் குறிப்பிட்டு
பதிவு கலகலப்பாகி விட்டது...
பாராட்டுக்கு நன்றி.
Deleteபழைய படங்கள் தொலைக்காட்சியில் வைத்தால் பார்ப்பேன்.
ReplyDeleteநாடகங்கள் பார்ப்பதே இல்லை.
பழைய பாடல் பகிர்வு நன்றாக இருந்தது.
தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒரே படத்தை போடுகிறார்கள். ஊட்டி வரை உறவு படம் வெவேறு சானல்களில் அடுத்தடுத்த நாள்கள் போடப்பட்டது. என்னதான் நல்ல காமெடி படம் என்றாலும் அடுத்தடுத்து பார்ப்பது கடினம்தானே? பாடல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைத்தேன். சுபஸ்ரீ தணிகாசலம் தினம் ஒரு பாடலைப்பற்றி கூறுகிறார். கருத்துக்கு நன்றி. Quarantine from reality -Rare gems of Tamil Film Music endra linkil ketka mudiyum.
Deleteஇதோட 3 தரம் வந்து பார்த்தும் உங்கள் பழைய பாடல் எனக்குத்திறக்கலை. முகத்தைத் தூக்கி வைச்சுண்டு உட்கார்ந்திருக்கு! :))))) yoou tube server's IP address could not be found. என்றே சொல்கிறது. இணையம் மறுபடி படுத்தலை ஆரம்பிச்சிருக்குப் போல! :))))
ReplyDeleteYou tube il Subasri Thanikachalam Quarantine from reality - Rare gems of Tamil Music endru podungal, you can listen othe songs also.
Deleteஆமாம், தினமும் முகநூல் நண்பர் பாலாஜி வாசு பகிர்ந்து வருகிறார்.
Deleteஅன்பு பானுமா,
ReplyDeleteமிக ரசமான பதிவு. என் நாட்களும் யூடியூபில் ஆரம்பித்து
முடிகின்றன. மனௌளைச்சலை தவிர்க்க வேறு வழி தெரியவில்லை. ஹொலைக்காட்சி சானல்கள் பயமுறுத்தியே கொல்கின்றன.
நான் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு விடுகிறேன்.
இங்கு எப்போதையும் விட ஓயாமல் வேலை.
நடு நடுவில் இணையம் வருவதால் மன்சுக்கு அமைதி.
உங்கள் மருத காசி இணைப்பு அருமை. அருமையான கவிஞர்.
உத்தராவும், உன்னி கிருஷ்ணன் மகனும் ஜொலிக்கப் போகிறார்கள்.
ஆறுதலான பதிவுக்கு மிக நன்றி மா.
கவலைப்படாதீர்கள் அக்கா எல்லாம் சரியாகி விடும். என் பதிவு உங்கள் மனசுக்கு சந்தோஷம் தந்திருக்கிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
Deleteஎனோ பாலச்சந்தர் அலர்ஜி
ReplyDeleteyessu!
Deleteஅப்படியா? எனக்கு பின்னாட்களில் கொஞ்சம் எரிச்சல் வந்தது.
Deleteவேலைக்காரர்கள் மூலம் அபார்ட்மெண்டில் ஒரு வீட்டுக்கு வந்தாலும் பிரச்சனையே.
ReplyDeleteஆமாம், அதனால்தான் தயங்குகிறார்கள். நன்றி.
Deleteவேலைக்காரர் பற்றி கூறியது ரசனை. எங்கள் வீட்டில் நாங்கள்தான் செய்கிறோம். பெரும்பாலும் அடுக்களைவேலை என் கையில்.
ReplyDeleteஇனிய பாடல்.
நன்றி மாதேவி.
Deleteமசாலா சாட் அருமை! அடுத்த வீட்டு கவிதையை சில நாட்களுக்கு முன் தான் முழுவதுமாக ரசித்து பார்த்து முடித்தேன். அருமையாக இருந்தது. வேலைக்காரி விஷயம் பல நேரங்களில் அப்படி தோன்றுவது தான்!
ReplyDeleteநன்றி மனோஜி.
ReplyDelete