கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 2, 2020

சொல்லாமல் விட்டவை ....

சொல்லாமல் விட்டவை ....


பெங்களூரை பெண்களூர் என்று குறிப்பிடுவதைக்க குறித்து கீதா அக்கா எழுதியிருந்தார். எனக்குத் தெரிந்து பத்திரிகையாசிரியர் சாவி ஒரு முறை பெங்களூர் சிறப்பிதழ் என்று சாவி பத்திரிகையில் வெளியிட்டார். அதில் ஒருவர் (ரவிச்சந்திரன் என்று நினைவு) பெண்களூர் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார். 

பத்தினித்தனத்தைக் காட்ட 
பஸ்ஸைத் தேர்ந்தெடுக்கும் *மதராஸ்தனம் 
இங்கில்லை .....
......
ஜெயநகர் பெரிய இடத்துப் பெண்கள் 
புஷ்பவதி ஆனதுமே 
புருஷன் கிடைத்து போய் விடுகிறார்கள்
........
எத்தனை அழகான யாரோ மனைவிகள்?
அடுத்தவன் பெண்டாட்டியை ரசிப்பதிதில் 
அலாதி சுகம் என்று சொன்ன 
தி.ஜானகிராமன் ஞானி !



என்றெல்லாம் வரும். அதை வைத்துதான் அவர் பெண்களூர் என்று எழுதுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

* அப்போது சென்னை ஆகவில்லை மதராஸ்தான் 
*********************************************************************************

மேகத்துக்கு பெயர் உண்டா என்று ஏன்ஜெல் கேட்டிருந்தார். ஒவ்வொரு விதமான மேகத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. போன்விடா க்விஸ் கான்டெஸ்ட்டில் கூட இதை கேட்டிருக்கிறார்கள். 

அதே கேள்வியை கூகுள் ஆண்டியிடம் கேட்டதில் படத்தோடு விளக்கினார். அதே போல காற்றிற்கு கூட வெவ்வேறு பெயர்கள் இருப்பதாக முக நூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். உதாரணமாக தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல், வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை, இப்படி. இதைப் பற்றி துரை செல்வராஜூ சாருக்குத் தெரிந்திருக்கலாம். 
*********************************************************************************

யூ டியூப்பில் ராதா ரவியின் நேர்காணல் பார்த்தேன். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக முதல் பரிசு அவருக்கு கிடைத்ததாம். பரிசு வழங்கியது எம்.ஜி.ஆர். மாணவர்கள் எல்லோரும் "இது யார் என்று தெரிகிறதா?" என்று கூச்சலிட, இவர் எம்.ஜி.ஆரிடம் "நான் ராதா ரவி, எம்.ஆர்.ராதாவின் மகன்" என்றதும் அவர் இவரை தட்டிக் கொடுத்தாராம். வேறு ஒரு விழாவில் ராதா ரவிக்கு எம்.ஜி.ஆர். மோதிரம் அணிவித்து அவர் கையை பத்து நிமிடங்கள் பிடித்துக்  கொண்டிருந்தாராம். "இன்னும் பத்து நிமிடங்கள் அவர் என் கையை பிடித்துக் கொண்டிருந்தால் நான் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பேன். நான் அப்போது தி.மு.க.வில் இருந்தேன், எம்.ஜி.ஆரை சுட்டவன் மகன் என்ற விஷயங்கள் இருந்தன, இருந்தாலும் என்னுடைய அந்த உணர்வை மறுக்க முடியாது"  சிலபேருக்கு இந்த மாதிரி வசீகரமும்,ஆளுமையும் இருக்கும். எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இருந்த அந்த கரிஷ்மா அயோத்தி ராமனுக்கும் இருந்து, அங்கதனை தன் தகப்பனை கொன்றவனுக்கு சேவை புரிய வைத்ததோ? (இது ஜி.எம்.பி. ஐயாவின் 'அங்கதன்' என்னும் படைப்பில் 
அப்பாத்துரையின் கேள்விக்கானது. 

*********************************************************************************

"புராண உபன்யாசங்கள் புரிகிறவர்கள் பணத்தில் கறாராக இருப்பதை  சிலர் விமரிசிக்கிறார்களே?" என்ற என் கேள்விக்கு, பணத்தின்  நிலையாமையை  பற்றி உபதேசம் செய்கிறவர்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது கேள்வி எழும்புவதை தவிர்க்க முடியாது என்று பதிலளித்திருந்தனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை  புராண பிரவசனங்களை செய்கிறவர்கள் பணத்தில் குறியாக இருப்பதில் 
தவறு இல்லை. ஏனென்றால் அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. 
நாம் படிக்காத விஷயங்களை நமக்காக படித்து நமக்கு எடுத்துச் சொல்பவர்கள் வறுமையில் வாட வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? உண்மையில் அப்படிப்பட்டவர்களை போஷிக்க வேண்டியது நம்முடைய கடமை. நாம் அதை செய்யத் தவறியதால்தான் பல கலைகள் அழிந்து விட்டன. என்னுடைய வாதத்திற்கு வலு சேர்க்க முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் அவர்களின் 'குறையொன்றும் இல்லை' புத்தகத்தில் 
ஒரு சான்று கிடைத்தது. 

ஒரு பெரிய யஜ்ஞம் நடக்கிறது. தக்ஷிணை இல்லாமல் யஜ்ஞம் நடக்கிறது. அப்போது அந்த யஜ்ஞத்துக்குப் பெருமை உண்டா என்று கேட்டால் யஜ்ஞமே கெட்டுப் போய் விடுகிறது என்றார் நாரதர்.  

ஒரு யஜ்ஞம் நடக்கிறது ஒரு கிராமத்திலே என்றால், அந்த கிராமத்திலே போய் வேத வித்துக்களையெல்லாம் பிரார்த்திக்க வேண்டுமாம்."நீங்களெல்லாம் வந்து யஜ்ஞம் நடத்தி வைக்க வேண்டும். ஒரு மண்டலமோ, ஒரு மாதமோ  இருந்து நடத்தி வைக்க வேண்டும்". 
உடனே அந்த வேத வித்துக்கள் என்ன கேட்கிறார்கள்?
"மங்களமான நிறைந்த தக்ஷிணை உண்டா யஜ்ஞத்துக்கு?"
உடனே இவர்களெல்லாம் "தக்ஷிணையா..? யஜ்ஞம் முடிந்த  பிற்பாடு என்ன ? இப்போதே தருகிறோம் கொஞ்சம்"  என்று யஜ்ஞத்துக்கு முன்பாகவே கொஞ்சம் தக்ஷிணையை கொடுத்து விடுவார்களாம். 

உபன்யாசங்களும் ஒரு விதமான யஜ்ஞம்தான் அதில் இரண்டு யஜ்ஞங்கள் இருக்கின்றன. ஒன்று கீர்த்தன யஜ்ஞம்(சொல்வது), மற்றது சிரவண யஜ்ஞம் (கேட்பது) . 

நான் யஜ்ஞம்தான், ஆனால் நான் எப்போது பிரகாசிக்கிறேன் என்றால் தக்ஷணையோடு சேரும்பொழுது பிரகாசிக்கிறேன் என்றான் பரமாத்மா. 

ஆகையினாலே விஷ்ணு இல்லாமல் யஜ்ஞம் கிடையாது. யஜ்ஞம் சிறக்க வேண்டுமானால் தக்ஷிணையுடன் சேர்ந்துதான் பிரகாசிக்கும்.   

*********************************************************************************


35 comments:

  1. Replies
    1. ஹாஹா! அப்படி ஒப்புக் கொண்டிருக்கிறார்களே? புதுக்கவிதை என்று..? நன்றி டி.டி.

      Delete
  2. காற்றைப் பற்றி நாங்கல்லாம் படிச்சப்போப் பாடங்களிலேயே வந்திருக்கு. கிழக்கே கொண்டல், மேற்கே மேல்காற்று, தெற்கே தென்றல், வடக்கே வாடைக்காற்று எனத் தமிழ்ப் பாடங்களில் சின்ன வயசிலேயே படிச்சாச்சு.

    ReplyDelete
    Replies
    1. காற்றின் பெயர்கள் படித்த நினைவு இல்லை. செய்யுள்களில் அந்த வார்த்தைகள் வந்தால் விளக்குவார்கள். நன்றி அக்கா.

      Delete
  3. புராணங்களை பிரவசனம் பண்ணுபவர்கள் மட்டுமில்லை. வைதிகர்களுக்கும் உரிய தக்ஷிணையை நாம் கொடுத்தாக வேண்டும். சிலர் அதையும் விமரிசிக்கின்றனர். அதே போல் கோயில்களிலும் அர்ச்சகர்கள்/பூசாரிகள்/குருக்கள்/பட்டாசாரியார்கள் ஆகியோருக்கு. முக்கியமாய் நலிந்த கோயிலில் சேவை செய்பவர்களுக்கு. எங்க ஊர் மாரியம்மன் கோயில் பூசாரியின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு நாங்க வருஷா வருஷம் குறிப்பிட்ட தொகை அனுப்பிவிடுவோம். அதே போல் பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்குச் சம்பளம் நாங்க தான் கொடுக்கிறோம். இப்போ சமீபத்தில் சம்பளத்தை ஏற்றியும் கொடுத்திருக்கோம். எல்லோருக்கும் உள்ள விலைவாசிகள் தானே அவங்களுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. //எங்க ஊர் மாரியம்மன் கோயில் பூசாரியின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு நாங்க வருஷா வருஷம் குறிப்பிட்ட தொகை அனுப்பிவிடுவோம். அதே போல் பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்குச் சம்பளம் நாங்க தான் கொடுக்கிறோம். இப்போ சமீபத்தில் சம்பளத்தை ஏற்றியும் கொடுத்திருக்கோம். //  
      மிகவும் நல்ல விஷயம். God bless!

      Delete
  4. எனக்கு "பெண்"களூர் பற்றி இப்படி ஒரு கவிதை (!!!!!!!) வந்திருப்பதே தெரியாது. சாவியெல்லாம் எப்போவானும் படிச்சது. வழக்கமாகப் படித்தவற்றில் கல்கி, குமுதம், விகடன் தவிர்த்து துக்ளக், எப்போவானும் மங்கையர் மலர், மங்கை போன்றவை. அவற்றையும் நிறுத்தி 20 வருஷங்கள் ஆகின்றன. கொஞ்ச காலம் சக்தி விகடன், குமுதம் பக்தி வாங்கினோம். அதுவும் நிறுத்தியாச்சு. இந்தப் "பெண்"களூர் அம்பி விளையாட்டாகச் சொல்லி அதை நான் நிரந்தரம் ஆக்கினேன்.

    ReplyDelete
    Replies
    1. சாவி பத்திரிகை நன்றாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் மணியனுக்கு பணம் கொடுத்து இதயம் பேசுகிறது ஆரம்பிக்க வைத்தது போல கலைஞர் சாவிக்கு உதவி செய்து தொடங்கியதுதான் சாவி பத்திரிகை என்றார்கள். இருந்தாலுமக,இ.பே.யை விட சாவி far better.

      Delete
  5. ஏதோ எனக்குத் தெரிந்ததை நினைவுக்கு எட்டும் தொலைவிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்....

    மூன்று மாதங்கள் ஆகின்றன - பழைய நண்பர்களுடன் நேருக்கு நேர் உரையாடி...

    இங்கே தங்குமிடத்திலும் வேலையிடத்திலும் முழுக்க பங்களாதேஷிகளும் வட இந்தியரும் தான்...

    தமிழன் என்றால்
    வேறு அர்த்தம் ஆக்கி விட்டார்கள்...

    என்னுடைய பழக்க வழக்கங்களைச் சேர்ந்தவராக ஒருவர் கூட அருகில் இல்லை...

    நெற்றியில் திருநீறு இருந்தால் பதில் சொல்லியாக வேண்டும்.. குங்குமம் இருந்தால் பயந்தே விடுகிறார்கள்....

    ஏதோ தாங்களும் கீதாக்கா அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் பழைய நாட்களை விஷயங்களை நினைவு கூரும்போது என்னையே மறந்து விடுகிறேன்...

    அன்றைக்கு எபியில் வெற்றிலை பற்றி வந்தும் வீட்டுத் திண்ணையில் இருந்து அரட்டை அடித்த மாதிரி சந்தோஷமாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜு ஸார்.

      Delete
    2. நன்றி துரை. எங்களுக்கும் இப்படிப் பேசுவது தான் மனதிற்கு மகிழ்வும் ஆறுதலும் தருகின்றன.

      Delete
    3. உங்களோடு ப்ளாக் மூலம் தொடர்பு கொள்வது எங்களுக்கும் மகிழ்ச்சிதான். நன்றி துரை சார். 

      Delete
  6. ஏதோ எனக்குத் தெரிந்ததை நினைவுக்கு எட்டும் தொலைவிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்....

    மூன்று மாதங்கள் ஆகின்றன - பழைய நண்பர்களுடன் நேருக்கு நேர் உரையாடி...

    இங்கே தங்குமிடத்திலும் வேலையிடத்திலும் முழுக்க பங்களாதேஷிகளும் வட இந்தியரும் தான்...

    தமிழன் என்றால்
    வேறு அர்த்தம் ஆக்கி விட்டார்கள்...

    என்னுடைய பழக்க வழக்கங்களைச் சேர்ந்தவராக ஒருவர் கூட அருகில் இல்லை...

    நெற்றியில் திருநீறு இருந்தால் பதில் சொல்லியாக வேண்டும்.. குங்குமம் இருந்தால் பயந்தே விடுகிறார்கள்....

    ஏதோ தாங்களும் கீதாக்கா அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் பழைய நாட்களை விஷயங்களை நினைவு கூரும்போது என்னையே மறந்து விடுகிறேன்...

    அன்றைக்கு எபியில் வெற்றிலை பற்றி வந்தும் வீட்டுத் திண்ணையில் இருந்து அரட்டை அடித்த மாதிரி சந்தோஷமாக இருந்தது...

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான கதம்பம். பெண்களூர் கவிதை படித்ததில்லை. தக்குடு, கீதா அக்கா எல்லோரும் உபயோகித்துப் பார்த்ததே முதல்.

    ReplyDelete
    Replies
    1. தக்குடுவை வலைப்பக்கம் ஆரம்பிக்கும் முன்னரே அம்பி மூலம் தெரியும். பார்க்கவும் பார்த்திருக்கேன். ஆனால் அம்பியின் நகைச்சுவை உணர்வு என்னைக் கவர்ந்தாப்போல் தக்குடுவின் நகைச்சுவை கவரவில்லை. என்னதான் அம்பியின் சொந்ததம்பினாலும் அம்பிக்கு ஈடு அம்பி தான்! ஒப்பிட முடியாது! :))))))) தக்குடு திரும்பத் திரும்ப மாமிகள், ஜிமிக்கி, கம்மல் என்றே எழுதுவார். அம்பி எல்லாவிஷயங்களையும் தொடுவதோடு அவற்றிற்குள் ஊறுகாய் மாதிரி இல்லாமல் பொருந்தும்படியாக இம்மாதிரிக் கேலி, கிண்டல்களை இயல்பாகச் சேர்ப்பார். குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம்.

      Delete
    2. தக்குடு அண்ணன் என்று நினைவில் இருந்தது. பெயர் சட்டென நினைவுக்கு வராததால் விட்டு விட்டேன்!

      Delete
    3. நன்றி ஸ்ரீராம். தக்குடு, அம்பி இவர்கள் எழுத்தை படித்ததில்லை. 

      Delete
    4. அம்பி எழுதறதை நிறுத்தியே பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. தக்குடு ஐந்தாறு வருஷம் முன் வரை எழுதின நினைவு. ஆனால் நான் அதிகம் போனதில்லை. திரும்பத் திரும்பக் கல்லிடைக்குறிச்சி மாமிகளையும் ஜிமிக்கி, கம்மலையுமே எத்தனை முறை படிக்கிறது! அதனால் விட்டுட்டேன். ஆனால் ஆன்மிகம் தெரிந்தவர்கள் இருவருமே. அம்பிக்கு நரசிம்ம உபாசனை உண்டு. தக்குடு தேவி உபாசகர். அதெல்லாம் எழுதினால் படித்துக் கொண்டே இருக்கலாம். தக்குடு என்னை அம்பாள் பற்றி எழுதும்போது கவனம் வேண்டும், ஆழ்ந்து போயிடாதீங்கனு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பார். அதெல்லாம் ஒரு காலம். முழுக்க முழுக்க சத்சங்கமாகவே இருந்த நாட்கள்.

      Delete
    5. அம்பி அம்பேரிக்காவில் அட்லான்டாவிலும், தக்குடு தோஹாவிலும் இருக்கிறார்கள்.

      Delete
  8. தட்சணை டிமாண்டாக கேட்கக் கூடாது என்றும் சொல்வார்கள். வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கும் குடும்பம், செலவு இருக்கிறதே என்றால், உண்மை, அதைக் கொடுப்பவர்கள் நினைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க புரோகிதரிடம் கேட்டுவிடுவோம். எப்போவுமே அப்படித் தான். பெரிய விசேஷங்களுக்கு சாமான்கள் உள்பட எனில் கொஞ்சம் அதிகமாகக் கேட்பார்கள். நாம் சாமான்கள் வாங்கிவிட்டால் தக்ஷிணை மட்டும்.

      Delete
    2. நாங்களும் அப்பட்டியே..

      Delete
  9. ராதாரவி பற்றிய சம்பவம் கேள்விப்பட்டதாய் இருக்கிறது.

    ReplyDelete
  10. பெண்களூர் , அம்பி காயின் பண்ணின ஃப்ரேஸ்.
    அப்போது அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இப்போது பசங்கள் பெரியவர்கள் ஆகி இருக்கலாம்.

    இந்தக் கவிதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பிரஹஸ்பதி சம்பாவனை நல்ல விதத்தில் மாறி இருக்கிறது.
    இன்னும் பரிமளிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அம்பிக்கு ஒரே பையர் தான் வல்லி. பூணூல் போட்டாச்சு. அழைத்திருந்தார். போகமுடியலை. வழக்கம்போல் நான் அம்பேரிக்காவில்! :)))) மனைவி, பையரோடு இங்கே ஒரு முறை வந்துவிட்டுப் போனார். தக்குடுவுக்குத் தான் முதலில் பெண், பின்னர் ஒரு பையர். பையருக்கு 2,3 வயது ஆகி இருக்கும்.

      Delete
    2. நன்றி வல்லி அக்கா.

      Delete
  11. தட்சணை நாங்களும் முன்பே கேட்டு வைத்து கொடுத்து விடுவோம்.அவர்கள் வாழ்க்கை அதனுள்தான் அடக்கம்.

    ReplyDelete
  12. எங்கள் உறவினர் வட்டாரத்தில் நாங்கள் அதிகம் தக்ஷணை கொடுக்கிறோம் என்று ஒரு கருத்து உண்டு. ஏனென்றால் என் கணவர் சாஸ்திரிகளிடம் ஒரு தக்ஷணை பேசுவார், அதை விட அதிகம் கொடுப்பார். நன்றி மாதேவி. 

    ReplyDelete
  13. //எத்தனை அழகான யாரோ மனைவிகள்?
    அடுத்தவன் பெண்டாட்டியை ரசிப்பதிதில்
    அலாதி சுகம் என்று சொன்ன.. //

    என்ன அநியாயம் தி.ஜா. இப்படிச் சொன்னாரா?..

    நான் அறிந்ததில்லை.

    ReplyDelete
  14. யக்ஞமா? யஜ்ஞமா?..

    தஷிணை பற்றியெல்லாம் கூட விவாதமா?.. ஏதோ யாசகம் மாதிரி ஆகிவிட்டதே?
    இதை எல்லாம் பற்றி எடுத்து எழுதுவதைக் கூட தவிர்க்கலாமே?..

    ReplyDelete
  15. //பத்தினித்தனத்தைக் காட்ட
    பஸ்ஸைத் தேர்ந்தெடுக்கும் *மதராஸ்தனம்
    இங்கில்லை .....
    ......
    ஜெயநகர் பெரிய இடத்துப் பெண்கள்
    புஷ்பவதி ஆனதுமே
    புருஷன் கிடைத்து போய் விடுகிறார்கள்//

    எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறார் பெண்களை..

    ReplyDelete
  16. //ஆகையினாலே விஷ்ணு இல்லாமல் யஜ்ஞம் கிடையாது. யஜ்ஞம் சிறக்க வேண்டுமானால் தக்ஷிணையுடன் சேர்ந்துதான் பிரகாசிக்கும். //
    தஷிணை- தெட்சணை.. புரிகிறது, மற்றச் சொல் புரியவில்லை..யஜ்ஞம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி.

      யஜ்ஞ்ம் என்றால் இறைவனை வேண்டி யாகங்கள் செய்வது என்று பொருள் வரும். ஹோமம் வளர்ப்பது என்றும் கூறலாமோ .! சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பெண்களூர் விளக்கம் அருமை. ஆனால் நமக்கு பெங்களூர் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது. புதுக்கவிதைகளை ரசிப்போர் உண்டு.

    மேகத்துக்கு, காற்றுக்கு என பெயர் உள்ளது என்ற விவரங்கள் சுவாரஷ்யம். காற்றுக்கு அந்தந்த காலத்தைப் பொறுத்து பெயர்கள் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருக்கிறோம். நினைவூட்டியமைக்கு நன்றிகள்.

    ராதாரவி பற்றி பகிர்ந்தது அறியாதது. அந்த இடத்தில் ஒவ்வொருவர் மனநிலை உணர்வது சற்று சிரமம்தான்.

    தட்சணை கொடுப்பது பற்றிய விளக்கங்கள் அருமை. வேதம் கற்றவர்களுக்கு அவர்கள் மனம் குளிரும்படி கொடுப்பதுதானே முறை. ஒரு கலை கற்பிப்பவர்களுக்கும் முறையான தட்சணையை தந்தால்தானே அக்கலை நம்மிடத்தில் பரிபூரணமாக தங்கும் என நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லி நாம் வளர்ந்திருக்கிறோம். கதம்பம் மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete