கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 29, 2020

கொரோனா பயங்கள் தேவையா?

கொரோனா பயங்கள் தேவையா?


நான் பிறந்ததும் இதே போல் ஒரு சார்வரி வருடத்தில்தான். அந்த வருடத்திலும் இப்படி ஏதாவது பாதிப்பு இருந்ததா? என்று என் பெரிய அக்காவிடம் கேட்டேன்.
என் பெரிய அக்கா என்னைவிட பதினோரு வருடங்கள் மூத்தவர். அதனால்  அவருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பு உண்டே. அவர்," நீ பிறந்த வருடம் இப்படி எதுவும் இல்லை, ஆனால் அதற்கும் முந்தைய சார்வரி வருடத்தில் அதாவது நூற்றி   இருவது  வருடங்களுக்கு முன்பு, காஞ்சி  மடத்தின்   மஹா பெரியவர் பிரும்மசாரியாக பட்டம் ஏற்றுக்  கொண்ட வருடம் இதைப் போல Pandemic  இருந்திருக்கிறது. அப்போது இருந்த கொள்ளை நோய் பெரிய அம்மை எனப்படும் ஸ்மால் பாக்ஸ். அந்தக் காலத்தில் அதற்கு தடுப்பூசியும் கிடையாது, மருந்தும் கிடையாது. மஹா பெரியவரின் குருவும், குருவுக்கு குருவும் அந்த நோய்க்குத்தான் பலியானார்கள்". என்றார்.  இந்த உலகம் சந்திக்காத பேரிடர்கள் இல்லை. அதையெல்லாம் தாண்டிதான் இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது.  என்ன? அப்பொழுது மீடியாவின் தாக்கம்  இல்லை. இந்த நோய்க்கு  இன்றைக்கு  இத்தனை பேர் பலியானார்கள் என்று திரும்ப திரும்ப அவை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. 

இன்று கொரோனா படுத்தும் பாடு ஒரு பக்கம் என்றால், அதைப்  பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா! தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் அவரவர்  தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும், அரைகுறையாக தெரிந்து கொண்டதையும் குறுஞ்செய்திகளாக அனுப்பித் தள்ளுகிறார்கள். எந்தவித ஆதாரமும்  இல்லாமல் தங்கள் குழப்பத்தையும், பயத்தையும் மற்றவர்களுக்கு கடத்துகிறார்கள். கொரோனாவை விட மோசம் இது. தங்கள் கையில் இருக்கும்  ஆயுதத்தின் பலம் தெரியாமல் விளையாடுகிறார்கள். கொளுத்தும் வெயிலையும், கொட்டும் மழையையும் கூட நல்ல மழை, நல்ல வெய்யில் என்று கூறுவதுதான் நம் மரபு. எந்த காலத்திலும் அவச்சொல் பேசக்கூடாது என்றுதான் நம் முன்னோர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க, நம்பிக்கை இழக்கும் படியாக பேசுவது தவறு என்றால் எழுதுவது மஹா தவறு. 

இதற்கு ஒரு மாற்றாக அமைந்தது ஞாயிறு அன்று திரு.ரங்கராஜ்  பாண்டே அவர்களோடு வீடியோ காண்ஃபிரென்சில் கலந்து கொண்டது. யங் திங்கர்ஸ் ஃபோரம்(young thinkers forum) என்னும் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் என் சகோதரியின் மகன் இந்த வீடியோ கான்ஃபிரென்ஸ் பற்றி தகவல் அனுப்பி அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ரெஜிஸ்டர் செய்து கொள்ள சொன்னார். எனக்குதான் இதெல்லாம் பிடிக்குமே. ரிஜிஸ்ட்டர் செய்து கொண்டு ஆறேகாலுக்கு லாக் ஆன் செய்து காத்திருந்தேன். 

சாதாரணமாக பெரிய கம்பெனிகளின் சி.இ.ஓ.க்கள்தான்  இப்படி வெப் கான்ஃபிரென்சில் பேசுவார்கள். இப்போது நாம் சந்திக்கிறோம். என்று தொடங்கியவர் கொரோனா பற்றி பயமுறுத்தாமல் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார். 

கொரோனாவால் பாதிப்புகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருபவர்கள் சதவிகிதம் அகில இந்திய அளவில் 24% என்றும் தமிழகத்தில் 50% என்றும் கூறினார்.  லாக் அவுட்டை அதிக நாட்கள் நீடிக்க முடியாது, என்னதான் நோய்த்தொற்று பயம் இருந்தாலும், வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் பொழுது நீண்ட நாட்கள் வீட்டில் இருப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இதுவரை கொரோனாவிற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை, தடுப்பூசியும் இல்லை, மக்கள் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்வார்கள் என்றார். 

சைனா அதன் நட்பு நாடுகள் உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை  இழந்து விட்டது. எனவே பல அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.  கல்வித் துறையிலும் நிறைய மாறுதல்கள் வரும். நாம் எல்லோரும் எதிர்ப்பார்க்காத, ஆச்சரியமூட்டும் இலவச அறிவிப்புகள் வருமாம்.  இந்தியாவின் எதிர்காலம் ப்ரகாசமாகவே இருப்பதாக கூறுகிறார். நம்பலாம்.  

வேறு சில காரணங்களாலும் நிலைமை மாறும், சீரடையும் என்றே நானும் நம்புகிறேன். நாடு முழுவதும் பலர் பிரார்த்தனை செய்கிறார்கள். நியாயமான பிரார்த்தனையை கடவுள் ஒரு போதும் மறுதலிக்க மாட்டார். நிச்சயம் நல்லது நடக்கும். வாழிய நலம். 


39 comments:

  1. //சைனா அதன் நட்பு நாடுகள் உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே பல அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,///

    அப்படித்தான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன் ஆனால் இப்போது வெளிவந்த 10 கம்பெனியில் 8 வியட்னாம் பிலிப்பைன்ஸ்க்கு மூவ் ஆகி இருக்கிறார்கள் 2 கம்பெனிகள்தான் இந்தியா பக்கம் வருகிறதாம் இது நான் போனவராம் எங்க நாட்டில் வந்த செய்தி அதை தேடிக் கொண்டிருக்கிறேன் ஆதாரப்பூர்வமாக இங்கே சொல்ல ஆனால் கண்ணில் பட வில்லை

    பல கம்பெனிகள் இப்போது இந்தியாவில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய யோசிக்கின்றன. காரணம் இப்போது இங்கு நிலவி வரும் மதப் பிரச்சனைதான் காரணம் என்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தைத்தான் என் மகனும் கூறினான். நாம் சைனா இல்லையென்றால் இந்தியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வேறு பல நாடுகள் இருக்கின்றன என்பது அவன் வாதம். வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய யோசிப்பதற்கு மதவாதம் மட்டும் காரணமல்ல, அரசியல்வாதிகளின் பேராசை(ஊழல்), ரெட் டேபிஸிம் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

      Delete
    2. மதப் பிரச்னை என்று புதிதாகக் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்...

      இந்திய இறையாண்மையைச் சிதைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைபவர்கள் யாரென்று தெரிந்தும் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள்...

      Delete
    3. எல்லாவற்றையும் மதப் பிரச்சனையாக்குவது வாடிக்கையாகி வருவது வேதனை.

      Delete

  2. கொரோனாவினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவு இது ரைவன் நமக்கு கொடுத்த வரமாகவே கருதுகிறேன்.. இந்த வரத்தை நாம் நங்கு பயன்படுத்தி முன்னேறவேண்டும் என்பதே என் ஆசை ஆனால் ஆட்சியளார்கள் இதை புரிந்து கொண்டு திட்டம் தீட்டி செய்லபடுவார்களா என்பதுதான் சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது இறைவன் நம்ம்கு இது வரை மிகப் பெரிய கால அவகாசத்தை தந்து இருக்கிறான் அதை பயன்படுத்தப் போகிறோமா அல்லது வீணடிக்கப் போகிறோமா என்பதை காலம் நமக்கு உணர்த்தும்

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் எத்தனை திட்டம் திட்டினாலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமே? நன்றி மதுரை தமிழன். உடல் நலம் தேறி விட்டீர்களா? கவனமாக இருக்கவும். 

      Delete
    2. இது ஊடகத்தில் வருவது. பார்க்கப் போனால் டெஸ்ட் செய்யப்படாதவை நிறைய இருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது.

      கீதா

      Delete
  3. //ரைவன்///

    இறைவன் என்று திருத்தி படிக்கவும்

    ReplyDelete
  4. பாண்டே நிகழ்ச்சி பற்றி வேறெங்கோவும் படித்தேன். உங்கள் மூலம் விவரம் தெரிகிறது. நன்றி. நீங்களும் கலந்து கொண்டதற்குப் பாராட்டுகள். சிறப்பான கேள்விகளை முன்வைத்திருப்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //சிறப்பான கேள்விகளை முன்வைத்திருப்பீர்கள்.// இல்லை அதற்கு அவகாசம் இல்லை. அவரே நீண்ட நேரம் பேசினார். கேட்க வேண்டியதை சுருக்கமாக கேளுங்கள் என்று கூறிய மாடரேட்டர் வள வளவென்று கேள்விகள் கேட்டார். 

      Delete
  5. சீக்கிரம் மருந்து கண்டுபிடிக்கப் பட்டால் நல்லதுதான். வரும் ஏகப்பட்ட வாட்ஸாப் தகவல்களில் இதையும் படித்தேன். அதாவது சீனாவின் வூஹானில் கொரோனா இருப்பதாகச் சொல்லப்படும் நோயாளிகள் மருத்துவமனை எல்லாம் செல்வதில்லையாம். தினம் நான்குவேளை நல்ல சூடான இன்ஹலேஷன், நான்கு முறை சூடான தண்ணீர், நான்கு முறை சூடான தேநீர்... நான்காவது நாள் முடிவில் நலமாகி விடுகிறார்களாம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கொரோனாவிலிருந்து மீண்ட ஒரு ஸ்ரீலங்கன் அனுபவம் இல்லையா? நானும் படித்தேன். 

      Delete
    2. கொரோனாவிலிருந்து மீள்வது என்பத் எந்த ஸ்டேஜ் என்பதைப் பொருத்தும் இருக்கு. இம்யூனிட்டி பொருத்தும் இருக்கு. ஒது ஒன்று மற்றொன்று கொரொனா சிம்ப்டம்ஸ் மைல்டாக அல்லது மீஎடியமாக இருந்தால் வெளிநாடுகளில் ஆஸ்பத்திருக்குச் செல்லத் தேவையில்லை. பாஸிட்டிவ் என்று தெரிந்தால் அவர்கள் சாதாரண மருந்து பாராசிட்டமால், அல்லது அன்டிபயாட்டிக் இருமல் கொஞ்சம் சளி இருந்தால், ஸ்ரீராம் சொல்லியிருக்கும் (இங்கும் நாம் அதைச் செய்கிறோமே அதே தான்) அதுவும் ப்ளஸ் அவரவர்க்கான வீட்டு வைத்தியம் என்று வீட்டிலேயே க்வாரண்டை செய்து கொண்டு சரியாகிவிடுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் லண்டனில் மருத்துவத் துறையில் இருப்பவர். சமீபத்தில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்து மைல்ட் சிம்ப்டம்ஸ் என்பதால் வீட்டிலேயே இருந்து குணப்படுத்திக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.

      அதே போன்று மற்றொரு நெருங்கிய உறவினரும் அப்படியே. அவரும் லண்டனில்தான்.

      ஆனால் இங்கு டெஸ்ட் பாசிட்டிவ் என்றாலும் மருத்துவமனையில் தான், ஏனென்றால் மக்கள் வீட்டிற்குள் இருப்பார்களா க்வாரண்டைனில், மற்றவர்களுக்குப் பரப்பாமல் இருப்பார்களா என்பதால் தான். என்று நான் அறிந்த வரையில். எனவே இங்கு நம்மூரில் பயப்படுவது என்னவென்றால் இந்த ஊரடங்கு வீட்டிற்குள் இருத்தல் அவசியம் என்று சொல்லப்படுவது ஏனென்றால் மருத்துவமனை வசதிகள், மருத்துவர்கள் நர்ஸ்கள் மற்ற ஊழியர்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள் எல்லாம் மிக மிக மிக மிகக் குறைவு. இன்ஃபேக்ட் பெரும்பான்மையோர் அவரவர் செலவில்தான் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அணிய வேண்டிய மாஸ்க் என்பது வேறு. அது காஸ்ட்லி. ஆனால் அரசு எல்லோருக்கும் வழங்கவில்லை வழங்கும் அளவு இல்லவும் இல்லை. அது போலவே நோயாளிகளுக்கான இடம், தொற்றின் மூன்றாவது நான்காவது நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கான வென்டிலேட்டர் வசதிகள் எதுவும் வேண்டிய அளவு இல்லை என்பதால் தொற்று கம்யூனிட்டி தொற்றாக மாறினால் அத்தனை பேரையும் மருத்துவமனையில் வைத்திருப்பது என்பது மிக மிக மிகக் கஷ்டம் அதனால் தான் மக்களிடம் அரசு கெஞ்சுகிறது. ஆனால் மக்கள்?

      என்னைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் கவலைப்படுகிறோம். எங்கள் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு வந்தாலும் இருவருமே நம்மூரைப் பொருத்தவரை மருத்துவமனைதான். வீட்டில் அனுமதிப்பதிக்கமாட்டார்கள் அப்படியான சூழலில் என் செல்லத்தைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். இது நான் தில்லியில் நொய்டாவில் நடந்த ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்ததால்.. ஒருவருக்கு தொற்று வந்த போது அவர் மருத்துவமனை செல்ல அவரது செல்லத்தை யார் பார்த்துக் கொள்வார்கள் தான் வரும்வ் அரை அல்லது தான் மறைந்தால் என்று அவர் கெஞ்சியது என் மனதை நொறுங்கடித்துவிட்டது. அனிமல் வெல்ஃபேர் காரர்கள் வந்து எடுத்துக் கொண்டு அதனை டிஸின்ஃபெக்டன்ட் செய்து அப்புறம் அங்கு வைத்துக் கொள்ள முடியவில்லை என்று வேறொரு அனிமல் வெல்ஃபேர் காரர்கள் வந்து எடுத்துக் கொள்வதாகச் சொன்னது வரை அறிந்தது. அதன் பின் என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

      கீதா

      Delete
    3. கவலைப்படாதீர்கள் கீதா. எல்லாம் சரியாகும். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. 

      Delete
  6. இரண்டாவது அதிக ஜனத்தொகை கொண்ட நாடு என்பதால் முதலீடுகள் இங்கு வரும் வாய்ப்புகள் உண்டுதான். பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நம்பிக்கை பலிக்க வேண்டும். 

      Delete
  7. கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனைகளும். ஆனால் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. எப்படியோ அனைத்தும் சரியானால் நல்லது. மெல்ல மெல்ல ஊரடங்கிலிருந்தும் விடுதலை பெறுவோம் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. //மக்களின் ஒத்துழைப்பும் தேவை.// 100% correct. நம்பிக்கை பலிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

      Delete
  8. 60+ குழுவிற்கு உங்களுக்கு நல்வரவு. பிறந்தநாள் ஆகிவிட்டதா? இனி தானா? என் புக்கக உறவினர்கள் சிலருக்கும் இந்த வருடம் 60 வயது! தாமதமான/அல்லது முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இரண்டு மாதங்களுக்கு முன்பே வாழ்த்தி விட்டீர்கள். Anyway wishes are always welcome. Thank you. 

      Delete
  9. நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு அதிகம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், நம்பிக்கைதான் விளக்கு. நன்றி வெங்கட். 

      Delete
  10. Replies
    1. நிச்சயம் நடக்கும் டி.டி. நம்பிக்கை பற்றி வள்ளுவர் என்ன கூறியிருக்கிறார்?

      Delete
  11. நிச்சயமாக நல்லது நடக்கும் பானுக்கா. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இப்போது கொஞ்சம் தளர்த்தப் போகிறார்கள் இப்போதுதான் மக்கள் ரொம்பவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜெர்மனி, டென்மார்க் எல்லாம் மக்கள் அரசு சொல்வதை மிகவும் கவனமுடன் கேட்டு அதைப் பின்பற்றுகிறார்கள் என்று மகன் சொன்னான். அமெரிக்காவில் அப்படிக் கிடையாது என்றும் சொன்னான்.

    நாம் கொஞ்சம் நம் நலத்தைப் பார்த்துக் கொண்டுவிட்டால் விரைவில் சரியாகிவிடும். மகன் சொல்லுவது மருந்து வந்தால்தான் எப்படி அம்மை காலரா ஒழிக்கப்பட்டதோ அப்ப்டி இதுவும்.

    விரைவில் நல்லது நடக்கும் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக நாம் இதை விட்டு வெளியே வருவோம். வெற்றி நடை போடுவோம் பானுக்கா..

    பாராட்டுகள் உங்களுக்கு. உங்களுக்கு கேள்வி கேட்க சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கலந்து கொள்ள முடிந்ததே அதுவே பெரிய விஷயம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் ஒத்துழைத்தால்தான் சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். 

      Delete
  12. இதுவும் கடந்து போகும். கண்டிப்பாக நல்லது நடக்கும். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை. என்ன ஒன்று இந்தக் கடினமான காலகட்டத்தை நாம் பொறுமையுடன், நம்பிக்கையுடன் கடந்துவிட வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு மெத்தனமாக இல்லாமல் நம்பிக்கையுடன் அதுதான் இப்போது மிக மிக அவசியம். கண்டிப்பாக நல்லபடியாகக் கடந்துவிடுவோம். அந்த நம்பிக்கை உள்ளது.

    வாழ்த்துகள் சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
  13. இந்தக் கால கட்டத்தை பொறுமையுடனும்
    இறை நம்பிக்கையுடனும் கடப்பதற்கு முயற்சிப்போம்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அதுதான். புரியாதவர்களுக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுத்து புரிய வைக்கட்டும்,பிரார்த்திப்போம். நன்றி. 

      Delete
  14. பாண்டே பேச்சு எப்பொழுதும் அறிவு சார்ந்ததாக இருக்கும்.

    நாம் பயப்படாவிட்டாலும் செய்திச் சானல்களும்
    யூ டியூபும் ஏகத்துக்கு மிரட்டுகிறார்கள்.

    நம் நாடு எல்லாவற்றிலும் தப்பிப் பிழைக்கும்.
    இங்கூ ஞாயிறன்று ஒரு ஃப்யுனரலுக்கு 2500 பேர் வந்து களையபரம் ஆனது.
    கேட்டால் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூச்சல்.
    நாம் நம்பிக்கையுடன் இருந்து வெளியில் வருவோம். நன்றி பானு மா.

    ReplyDelete
  15. வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் இடங்களிலேயே இந்த நிலை. கடவுள்தான் எல்லோருக்கும் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். நன்றி. 

    ReplyDelete
  16. விடியோ கான்பரன்ஸ் சந்திப்பு கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. 'எனக்குத் தான் இதெல்லாம் பிடிக்குமே!' -- நாலே வார்த்தைகளில் என்ன கொண்டாட்டம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடித்து விட்டீர்களே? நன்றி. 

      Delete
  17. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  18. வாங்க மாதேவி. எல்லோரும் விரும்புவது அதைத்தான். நன்றி. 

    ReplyDelete
  19. //நாடு முழுவதும் பலர் பிரார்த்தனை செய்கிறார்கள். நியாயமான பிரார்த்தனையை கடவுள் ஒரு போதும் மறுதலிக்க மாட்டார். நிச்சயம் நல்லது நடக்கும். வாழிய நலம். //

    கடவுள் எல்லோர் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வார் விரைவில் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete