கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 17, 2020

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னை விஜயம். கடந்த மார்ச்சில் சென்னை, அங்கிருந்து மதுரையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூர் திரும்பினேன். அப்போதே கொரோனாவும் தொடங்கி விட்டது. கூ்டவே லாக் டவுன், எங்கும் செல்ல முடியவில்லை. 

கட்டுப்பாடுகளை தளர்திய பிறகு ஒரு முறை சென்னைக்கு வரச்சொல்லி சகோதரிகள் அழைத்துக் கொண்டிருந்தனர். தீபாவளி அன்று மாலை சகோதரிகள் வீடுகளுள் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று் சேர்ந்து பட்டாசுகள் வெடிப்பது பழக்கம். 

தீபாவளியன்று காலை பெங்களூர் எங்கள் வீட்டில் எண்ணெய்,தேய்த்து குளித்து, சிம்பிளாக தீபாவளி கொண்டாடி விட்டு, எட்டே முக்காலுக்கு கிளம்பினோம். மதியம் ஒண்ணே முக்காலுக்கு சென்னையை அடைந்து விட்டோம். மதிய உணவறுந்தி விட்டு, சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டு மாலையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினோம். பட்டாசுகளை கண்டால் எனக்குள் இருக்கும் குழந்தை குதித்து வெளியே ஓடி வந்து விடுவாள்.

ஒரு வினோத கனவு:

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. நான் கல்லூரி மாணவியாக இருக்கிறேன். எகனாமிக்ஸ் வகுப்பு. அதில் வகுப்பெடுக்கும் ஒரு பேராசிரியர்," இதில் ABCD என்பதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறி, விளக்குகிறார். அவர் சென்றதும் நான் அருகில் இருக்கும் மாணவியிடம்,"ABCD என்பதன் விரிவாக்கம் கூறினாரே, அது என்ன?" என்று கேட்கிறேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை. முழித்துக் கொண்டு விட்டேன். 

காரில் பயணித்த பொழுது, நியூ ஜெர்ஸியில் நடந்த கல்யாண மாலை பட்டிமன்ற நிகழ்ச்சியை (பழையது) கேட்டோம். குடும்ப வாழ்க்கை இனிப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா? என்பதுதான் தலைப்பு. இந்தியாவில்தான் என்று பேசிய ஒருவர், "இங்கிருப்-பவர்களில் ABCD என்று ஒரு பிரிவு உண்டு, America Born Confused Desi" என்றார். என் கனவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விளக்கம் காரில் கிடைத்தது.

வழியில் சாய் சங்கீத்தில் காபிக்காக நிறுத்தினோம். அங்கு கண்ணை கவர்ந்தவற்றை க்ளிக்கினேன்.

யாராவது வாங்கி ஊறுகாய் போடுவாரக்கள் என்று காத்திருக்கும் ஜாடிகள்

                    கருங்கல் காளான்கள்

கோமதி அக்காவை நினைவூட்டின

இது யாரை நினைவூட்டியது என்று சொல்ல வேண்டுமா?
அழகான டெரகோட்டா சொப்பு

Trilogy:

ஒரே கருத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் மூன்று கதைகள் ட்ரிலாஜி  எனப்படும். நான் திருமணம் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டாம் தாரம், தீமெடிக் கல்யாண வைபோகமே,  திருமணத் திருத்தங்கள் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். இவற்றில் முதல் கதையும்,மூன்றாாவது கதையும் என் தளத்தில் வெளியாயின. இரண்டாவது கதை எங்கள் ப்ளாகில் வெளியாயின.


27 comments:

  1. எங்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்...

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் அழகு...

    ஜாடிகள் ஊறுகாய்க்காக காத்து இருக்கின்றனவோ..உப்பிற்காகக் காத்து இருக்கின்றனவோ!..

    யாரறியக்கூடும்!..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது தோன்றியது. சிலது உப்பிற்கு, சிலது ஊறுகாய்க்கு.

      Delete
  3. என் நண்பர் / உறவினர் சுகுமார் சொல்வார்...   அவருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போது சில புத்தகங்ளை தெய்வத்தின் குரல் மற்றும் வேறு அதே போன்ற சில புத்தகங்களை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தைப்  பிரிப்பாராம்.  அதில் கிட்டத்தட்ட கேள்விக்கான விடை இருக்குமாம்.

    ReplyDelete
    Replies
    1. கீதா அக்கா கூட இந்த முறையை பின்பற்றுவதாக கூறியிருக்கிறார்.

      Delete
  4. சென்னை வந்து சென்றது குறித்து மகிழ்ச்சி.  மகிழ்ச்சியான தீபாவளி.  

    ReplyDelete
    Replies
    1. சென்னை வந்து சென்று விட்டேன் என்று நான் சொல்லவேயில்லையே..:)))

      Delete
  5. மியாவ் படம் யாரை நினைவு படுத்துகிறது என்று எனக்குத் தெரியவில்லையே....!!!  நிஜமாகத்தான் சொல்றேன்!

    ReplyDelete
    Replies
    1. அல்லிராணிக்கு தெரிந்து விடப் போகிறது..

      Delete
  6. இந்த ஜாடிகள் படம் ஏற்கெனவே யாருடைய பதிவிலோ பார்த்திருக்கேன். எங்கள் ப்ளாக் ஞாயிறு பதிவு? அல்லது துளசி தளம்? நினைவில் இல்லை! ஆனால் அவர்களும் சென்னை/பெண்களூர் வழியில் பார்த்ததாகத் தான் சொல்லி இருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாக் ஞாயிறு பதிவு.

      Delete
  7. தீபாவளியை சகோதரிகளுடன் கொண்டாடியதுக்கு வாழ்த்துகள். எத்தனை வயசானாலும் நம்முள் ஒளிந்திருக்கும் குழந்தைத் தனம் போகாது. ஏபிசிடி அம்பேரிக்காவில் ரொம்பவே பிரபலமாச்சே! கல்யாணம் ஆகிக்குடித்தனம் நடத்துவது/பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது எல்லாமே இந்தியாவில் தான் சாத்தியம். இதை எங்கள் குழந்தைகளும் சொல்லுவார்கள். சென்னையில்/ராஜஸ்தானில் கொண்டாடிய தீபாவளிகள் அவர்களுக்கு மகிழ்ச்சியானவை.

    ReplyDelete
    Replies
    1. பண்டிகை என்றால் உறவுகளோடு சேர்ந்து கொண்டாடினால்தான் மகிழ்ச்சி

      Delete
  8. பானுக்கா எபிசிடி ரொம்ப ஃபேமஸ் அதான் நீங்க சொல்லியிருப்பது...அட நீங்களும் எக்கனாமிக்ஸா!!! ஹைஃபைவ்!

    சாய் சங்கீத் இங்கதான் நாங்களும் இறங்கினோமோ என்று தோன்றுகிறது. அப்போதும் நிறைய இப்படியானவை வைத்திருந்தாங்க ஸ்ரீரங்கம்ல ஒரு கல்யாணத்துக்குப் போறப்ப இங்குதான் காலை உணவு சாப்பிட ப்ளான் செஞ்சுருந்தாங்க குழுவினர். மர ஸ்பூன் கரண்டிகள் கூட இருந்தன.

    ட்ரையாலஜி யெஸ் பானுக்கா! வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அட நீங்களும் எக்கனாமிக்ஸா!!! ஹைஃபைவ்!// நான் காமர்ஸ். அதில் எகனாமிக்ஸீம் படிக்க வேண்டும்.

      Delete
  9. உங்க அக்கா எல்லாருடனும் தீபாவளி இனிமையாகக் கொண்டாடியது சந்தோஷம்..நல்ல விஷயம்.

    மியாவ் படம் ஹா ஹா ஹா ஹா....அவங்க இப்ப அல்லிராணியாக வலம் வந்து கொண்டிருக்காங்க...ஆனால் மியாவ் சத்தம் அப்பப்பதான் கேட்கும் போல! (நான் மட்டும் என்னவாம் ஹிஹிஹிஹி அப்பப்பதான் வர முடியுது..)

    கீதா

    ReplyDelete
  10. எனக்கு ஜாடி/பீங்கான், கண்ணாடி, மரம், கல் சட்டி பாத்திரங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும்,ஆனால் நாம் வாங்கும் காலங்கள் மலையேறி விட்ன.

      Delete
    2. என்னிடம் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சப்போக் கொடுத்த மூன்று ஜாடிகளில் 2 இருக்கின்றன. அதோடு போதும்னு வேறே வாங்கவே இல்லை. பெண் செட்டாக 2004 ஆம் வருடம் வாங்கிக் கொடுத்தாள். சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் கிளம்பறச்சே தானம் பண்ணிட்டு வந்துட்டோம்.

      Delete
    3. ஜாடிகளை தானம் செய்தீர்களா? மனம் வந்ததா?

      Delete
    4. சின்ன வயசில் இருந்தே பழக்கம் ஆகி விட்டது. ஒவ்வொரு மாநிலம் மாற்றல் ஆகும்போதும், இப்போது 2012 ஆம் ஆண்டில் சென்னையை விட்டு ஸ்ரீரங்கம் வந்தப்போவும் கொடுத்த தானங்கள் கணக்கிலே வராதவை. கொலு பொம்மைகளிலிருந்து எல்லாமும் கொடுத்தோம்.

      Delete
  11. ABCD என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    நல்ல மகிழ்ச்சியான பயணம். தீபாவளியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள். சில செயல்கள் நம்மால் விட முடியாதபடி தொடரும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதிதான்.

    கனவுக்கு பதில் ஸ்வாரஸ்யமாக இருந்தது. அறிந்தும் கொண்டேன். ஜாடிகளும், பறவைகளும் அழகு கொஞ்சுகிறது. கண்களை கவர்ந்தவைகள் என் கண்களையும் கவர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. என் கண்ணையும்,கருத்தையும் கவர்ந்தவை,உங்களையும் கவர்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. //இங்கிருப்-பவர்களில் ABCD என்று ஒரு பிரிவு உண்டு, America Born Confused Desi" என்றார். என் கனவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விளக்கம் காரில் கிடைத்தது.//

    உங்களுக்கு கனவுக்கு பதில் கிடைத்து விட்டது.

    நான் நினைத்தேன் ஏதாவது படிக்க போகிறீர்கள் என்று.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. என் நினைப்பை தந்த படமும் அழகு.

    ReplyDelete