கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 28, 2020

அண்ணாமலையானுக்கு அரோஹரா!

அண்ணாமலையானுக்கு அரோஹரா!



கார்த்திகை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை! பஞ்சபூத தலங்களில் நெருப்பிற்கு உரிய தலமாகும்.  இந்த மலையோடு சம்பந்தப்பட்ட பண்டிகை திருக்கார்த்திகை ஆகும். 

கைலாயத்தில் ஒரு முறை உமா தேவியார் சிவ பெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தி விட, அந்த ஒரு நொடியில் அண்ட சராசரமும் இருண்டு விடுகிறது. இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், உமா தேவியை பூமிக்குச் சென்று  தவம் புரிய ஆணையிடுகிறார். சிவனின் ஆணைப்படி திருவண்ணாமலையில் இருந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்து, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சிவ பெருமானின் உடலில் பாதியைப் பெறுகிறாள். அதனால்தான் கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வர கோலத்தில்தான் அண்ணாமலையார் எழுந்தருளுவார். 

ஸ்ரீரங்கம், அடுத்து உயரமான(217 அடி) கோபுரத்தை கொண்டது. 2668 அடி உயரமான மலையின் மீது ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப் படுகிறது.  ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை எரிய வைக்க 3000கிலோ பசு நெய் தேவைப்படும். திரிக்கு 1000 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகின்றன.  எரிந்த பஸ்மம் திருவாதிரை அன்றுதான் பிரஸாதமாக வழங்கப்படும்.  

மலை வடிவில் இருப்பது சிவ லிங்கமே என்பதால் இதை வலம் வருவது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி அன்று இந்த மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு கிழமையில் கிரி வலம் செய்வதும் ஒரு சிறப்பான பலனைத்தரும். 

ஞாயிறன்று கிரி வலம் செய்தால் நோய்கள் நீங்கி, உலகில் அரசனைப் போல் வாழலாம் 

திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்ய பாவங்கள் நீங்கி, போகங்களை அனுபவிக்க முடியும்.

செவ்வாய் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வர கடன்கள் தீரும், தரித்திரம் அகலும்.

புதன் கிழமைகளில் கிரிவலம் செய்தால் எல்லா கலைகளிலும் நிபுணத்துவம் பெறலாம். சாத்திர ஞானம் வாய்க்கும். 

வியாழக் கிழமைகளில் கிரிவலம் செய்ய தேவ முனிவர்களுக்கு தலைவனாகும் யோகம் வாய்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வர லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவின் திருவடிகளை அடையலாம். 

சனிக்கிழமைகளில் கிரி வலம் செய்யும் பொழுது நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பாதிப்புகளும் அகலும். 

முடிந்தபொழுது திருவண்ணாமலை சென்று வணங்கி வரலாமே. இயலாதவர்கள் இருந்து இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை மனதார வணங்கலாம். அண்ணாமலையனுக்கு அரோஹரா!



20 comments:

  1. அருணாசல சிவம்...
    அருணாசல சிவம்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணாமலையானுக்கு அரோஹரா!

      Delete
  2. கிழமை வாரியாக கிரிவல மகிமை - இப்போதுதான் அறிகிறேன்.

    கார்த்திகை தீப வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமை... திருவண்ணாமலையில் என் +2 தேர்வு முடிந்த பிறகு வெகேஷனின்போது இருந்தேன். ரமணமஹரிஷி ஆஸ்ரமம், அருணாசலேஸ்வரர் கோவில், மற்ற இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையை முழுவதும் பிரதட்சணம் செய்த நினைவு இல்லை. ஒரு பகுதியை பிரதட்சணம் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஒரு சித்தரை என் அப்பா சேவிக்கச் சொன்னது நினைவில் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதுதானே, சுலபமாக செய்திருக்கலாம். பக்கத்தில் இருக்கும் திருக்கோவிலூருக்குச் சென்று உலகளந்த பெருமாளை சேவித்தீர்களா?

      Delete
  4. கிழமைவாரியாக கிரிவலம் குறித்த தகவல்கள் வாட்சப்பில் இப்போது உலவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தான் அனுப்பினீர்களோ? மற்றபடி அறிந்த தகவல்கள். தொகுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாட்ஸாப்பில் நான் பகிரவில்லை.ஆடியோ க்ளிப்பிங் ஒருவர் கேட்டிருந்தார். அதற்காக திரட்டிய தகவல்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டேன். நன்றி.

      Delete
  5. Replies
    1. நாள் வாரியாக மலை வலம வருவதன் பலன்கள் என்பவை பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கிளப்பி விடப்பட்டவை..

      Delete
    2. அப்படி இருக்காது ஐயா. எந்தெந்த மாதங்களில், எந்தெந்த திதிகளில் கிரிவலம் செய்தால் என்னென்ன பலன் என்ற குறிப்பு பழைய புத்தகத்தில் பார்த்தேன். இவையெல்லாம் மக்களை கிரிவலம் செய்ய வைப்பதற்கான ஏற்பாடுகளாக இருக்கலாம். கருத்துக்கு நன்றி.

      Delete
  6. குடும்பத்தினருடன் இரண்டு முறை மலை வலம் செய்திருக்கிறேன்... ஒவ்வொரு முறையும் அற்புதம் கண்டோம்..

    அண்ணா மலை.. அண்ணா மலை...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இப்படி எழுதியிருப்பதை, படித்து விட்டு யாராவது எனக்கு எந்த அற்புதமும் நிகழவில்லையே,என்று கேட்கும் அபாயம் உண்டு.

      Delete
  7. அண்ணாமலைக்கு அரோகரா... எனக்கு மிகவும் பிடித்த திருக்கோவில். இரண்டு முறை கிரிவலம் சென்றிருக்கிறேன் - ஒரு முறை அலுவலக ஜீப்பில்! மற்றொரு முறை சைக்கிளில்! :) நடந்து செல்ல இன்னும் இயலவில்லை. திட்டமிட்டு ஒரு முறை பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாகனங்களில் கிரிவலம் வரக்கூடாது என்பது விதி. ஒரு முறையாவது கால்நடையாக கிரி வலம் செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும் வலம் வர வேண்டும் என்று தோன்றும். நன்றி.

      Delete
  8. எனக்கு மிகவும் பிடித்த கோயில் பானுக்கா. ஒரே ஒரு முறை போயிருக்கிறேன் ஆனாலும் இன்னும் முழுமையாகப் பார்த்தது இல்லை. கூட்டம் இல்லாத நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிரேன். கிரிவலமும் செல்ல வேண்டும் என்ற அவா உண்டு.

    அறியாத தகவல்கள் பானுக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோ கீதா!..
      மனதில் பக்தி துலங்க மலையைச் சுற்றி வலம் வரும் போது கண்டிப்பாக நம்ப இயலாத ஒன்று நடக்கும்...

      இப்படி நடந்த ஒன்றை எனது தளத்தில் தருகிறேன்..

      Delete
    2. பெரும்பான்மையான நாட்கள் சுலபமாக தரிசனம் செய்யக் கூடியதாகத்தான் இருக்கும். கிரிவலம் போகலாம். அங்கு தங்குவதற்கு இடம், சாப்பிட நல்ல மெஸ் எல்லாம் தெரியும். Let us plan.

      Delete
  9. நினைக்க முக்தி தரும் தலத்தைப் பற்றிய அருமையான பதிவு. ஒருமுறை திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளோம். மறக்க முடியாத அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete