சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்
டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.
நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள்.
வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன்.
இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது.
அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம். மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும், அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.
அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ?
சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.
ஹுமாயூன் கல்லறை |
கல்லறையின் மேல் விதானம் |
ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம்.
இந்தியா கேட் அருகே அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர் |
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தில்லியில் சுந்தர் நர்சரி படங்கள், மற்றும் சென்றவிடத்து அனைத்துப் படங்களும் அழகாக உள்ளன. அங்குள்ள கோபுரங்களின் அழகை தெளிவுற கண்டு ரசிப்பதற்கு,அதற்கு ஏதும் இடையூறு இல்லாதிருக்குபடி மக்கள் நடந்து கொள்வதை நீங்கள் சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.
பூங்காவில் நம்மை வரைந்து கொடுக்க தயாராக இருக்கும் ஓவியர்களை பாராட்டலாம். எல்லாவிடங்களையும் அழகாக படம் எடுத்துள்ளீர்கள்.அதன் விளக்கங்களும் உங்களுடன் சுற்றி வந்த உணர்வை தந்தது. இனி நான் எப்போதாவது தில்லி சென்றால், தங்கள் பதிவு உபயோகமாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான விமர்சனத்திற்கு நன்றி கமலா.
Deleteஆஆவ் !!! அதே அதே பெஞ்சுகள் அங்கும் இருக்கா !!! அதில் பித்தளை தகட்டில் பெயர் பதிச்சிருக்காங்க .இங்குள்ளோர் வருஷ வருஷம் அவங்க நினைவு தினத்துக்கு வந்து பூங்கொத்து வைப்பாங்க .பெஞ்சை துடைச்சு சுத்தம் செய்வங்க சுந்தர் நர்சரி அழகா இருக்கு அநேகமா மலர்கள் எல்லாமே வெளிநாட்டு ஹைபிரிட்ன்னு நினைக்கிறன் அந்த வெள்ளை மலர்கள் ஆப்பிரிக்க டெய்சி .மரத்தடி ரீயூனியன் இங்கே எப்பவும் பார்ப்பது நம்மூர் இந்தியன் தாத்தா க்கள் :) in 1950 போன்ற வசனங்கள் அவர்களை கடந்து செல்லும்போது காதில் விழும் .பாவம் இப்போ ஒரு வருஷமா எங்கும் பார்க்கவோ கேட்கவோ முடியலை தாத்தாக்களின் யூனியனை .இந்த ப்ரெக்நன்சி போட்டோ ஷூட் பற்றி போன வாரம் நினைத்துக்கொண்டிருந்தேன் :) சில பிரபலங்களின் போட்டோக்களை பார்த்தப்போ 8 வது மாதத்தில் ஒரேயொரு போட்டோ எடுத்து அம்மாவுக்கு அனுப்பினதுக்கே கன்னாபின்னான்னு திட்டு .ஹ்ம்ம் இப்போ காலம் மாறிப்போச்சு :) .
ReplyDeleteமற்றுமொரு விரிவான விமர்சனம். நன்றி ஏன்ஜல்.
Deleteஏனோ அந்த முதியோர்களைப் பார்த்த பொழுது பாவமாக இருந்தது
This comment has been removed by the author.
ReplyDeleteஹுமாயுன் கல்லறை உட்பட்ட எல்லா படங்களுமே சுவாரஸ்யம். நீர்நிலை அழுக்க்காக இருப்பது... முதுகில் இருக்கும் அழுக்கு போல!
ReplyDeleteஅழகிய நர்சரி என்று தெரிகிறது. அங்கு சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அமைதியும் தரும். அங்கு வரும் மக்களை பார்க்கப்பார்க்க அனுபவமும் தரும்.
ReplyDeleteஅழகான பூங்கா. சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த பூங்கா மீட்டெடுக்கப்பட்டு பராமரிக்கப் படுவது குறித்து வெங்கட் தன் பதிவில் தெளிவாக எழுதியிருந்தாரே.
Deleteஇம்முறை டெல்லி வந்து பதினைந்து நாட்கள் இருந்தும் செல்லும் சூழல் அமையவில்லை..அடுத்தமுறை அவசியம் பார்க்கவேண்டும் எனும் ஆவலைத் தூண்டிப் போகிறது தங்கள் பதிவும் தலைநகரப் பதிவரின் பதிவும்...படங்களுடன் பதிந்த விதம் அருமை..வாழ்த்துகளுடன்..
ReplyDeleteமிகுந்ந மகிழ்ச்சியோடு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteமிக அழகான படங்கள்.
ReplyDeleteகூடவே அழகான சிரிப்புடன் நீங்கள்.
அன்பு பானுமா,
தில்லி சுத்த்மாக இருக்கும் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது போல அசுத்தங்களும் உண்டு போல.
சுந்தர் நர்சரி வெகு அருமையாகப் பசுமையாக இனிமையாக இருக்கிறது.
அந்தப் பெரியவர்கள் கூடியதைப் போல
நம் பதிவர்களும் ஒரு மீட்டிங் போடலாமா.
பெரியோர்களின் நினைவில் பெஞ்சா.
எவ்வளவு நல்ல காரியம்.!!
மஸ்கட் செல்லும்போது மகனும் மருமகளும்
ஸ்கூபா டைவிங்க் சென்றார்கள்.
நமக்கு எப்போதும் உணவு நினைவுதான்:)))))
பொதுவாக டில்லி அழகாகத்தான் இருக்கிறது. தீருஷ்டிப் பரிகாரமாக இப்படியும் சில,இடங்கள்.
Deleteஇப்போதுள்ள தில்லி கொஞ்சம் அழுக்காகவே இருக்கிறது. முன்னைப் போல் சுத்தம் இல்லை. குறைந்து கொண்டு வருகிறது.
Deleteபதிவும் படங்களும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
முன்பு இந்த இடங்களுக்கு போய் வந்த படங்கள் ஆல்பத்தில் இருப்பது நினைவுகளில் வந்து போனது.
மிக்க நன்றி கோமதி அக்கா.
Deleteஹுமாயூன் கல்லறை... ஜென்ம சாபல்யம். எனக்கும் வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களைக் கீணவேணும் என்ற ஆவல் உண்டு
ReplyDeleteவாங்க நெல்லை, உண்மையாகச் சொன்னால் ஹீமாயூன் டோம்ப் எங்களை பெரிதாக கவரவில்லை. கட்டப்பட்டிருந்த விதம் பிடித்திருந்தது. எனக்கும் சரித்திர சிறப்பு வாய்ந்த இடங்கள் பிடிக்கும்.பொன்னியின் செல்வன் படித்து விட்டு தஞ்சை சென்ற நான்,ஆ! என்ன தஞ்சாவூரில் ஆட்டோ ஓடுகிறது?" என்று திகைத்தேன். ஹாஹா!
Deleteசெங்கோட்டை போகலையா? அதுவும் முகலாயர்களால் கட்டப்பட்டது அல்ல. அதே போல் குதுப் மினாரின் கதையும்.
Deleteபடங்கள் அழகு. எனது பதிவில் பார்த்து நீங்களும் அங்கே சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி. இப்போதெல்லாம் ஃபோட்டோ ஷூட்கள் அதிகமாகி விட்டன - அனைத்து நிகழ்வுகளையும் படம் எடுத்து வைத்துக் கொள்ளும் ஆசை பெருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ReplyDeleteநீர்நிலை - நீங்கள் சொன்ன நீர் நிலை Boat Club-இன் ஒரு பகுதி. அடிக்கடி சுத்தம் செய்தாலும் நம் மக்கள் அதனை சுத்தமாக இருக்க விடுவதில்லை! தற்போது இந்தப் பகுதி முழுவதும் Under Renovation - ராஷ்ட்ரபதி பவனிலிருந்து இந்தியா கேட் வரை உள்ள பகுதிகளை செம்மைப்படுத்தும் பணி துவங்கியிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு இன்னும் அழகாக உருமாறிவிடும் - தொடர்ந்து அதனை பராமரிப்பது அரசின் கையில் மட்டுமல்ல - மக்களின் கையிலும் இருக்கிறது!
Humayun Tomb - அங்கே எடுத்த படங்கள் பகிர்ந்து கொண்ட நினைவு - தேடிப்பார்த்து சுட்டி பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களால் சில இடங்களுக்கு தில்லியில் சென்று வர முடிந்தது என்பதறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் உலா.
உங்கள் கட்டுரை எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றால், சென்ற"வெள்ளியன்று TOIயில் சுந்தர் நர்ஸரி பற்றி வெளியான கட்டுரை என் மகனுக்கு இன்ஸ்பிரேஷன். மேல் தகவல்களுக்கும் நன்றி.
Deleteஅழகான படங்கள் தெளிவாகவும் இருக்கிறது.
ReplyDeleteசொல்லிச் சென்ற விதம் ரசனையாக இருந்தது.
நன்றி சகோ!
Deleteபடங்களும் விளக்கங்களும் அருமை...
ReplyDeleteநன்றி டி.டி.
Deleteநாங்க யாத்திரையின்போது, தாஜ்மஹால் பார்க்க, காலைலதான் நேரம் தருவாங்க. போயிட்டு வந்து, குளித்துவிட்டுப் பிறகுதான் மத்தவங்களோட சாப்பிட உட்காரணும். தாஜ்மஹால்ல போட்டோ எடுக்கும்போது குளிக்காத நிலையிலா? அதனால் நான் காலையிலேயே குளித்துவிட்டு (மேக்கப்போட) அங்க போய், எல்லாம் பார்த்துட்டு பிறகு வந்து திரும்பவும் குளித்துவிடுவேன்.
ReplyDelete//அங்க போய், எல்லாம் பார்த்துட்டு பிறகு வந்து திரும்பவும் குளித்துவிடுவேன்.// சென்ற இடம் கல்லறை என்பதாலா?
Deleteபடங்களும் பகிர்வும் அருமை. கோபுரங்கள் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மை.
ReplyDeleteமிக்க நன்றி ராமலட்சுமி. உங்கள் படங்களோடு ஒப்பிட்டால் என்னுடையவை மிகவும் சாதாரணம்.
ReplyDeleteமிக அழகான படங்கள். ஹூமாயுன் டோம்ப் போயிருக்கோம். ஆனால் சுந்தர் நர்சரி பற்றி உங்கள் மூலமும், வெங்கட் மூலமுமே அறிந்தேன். சமீப காலங்களில் அடிக்கடி தில்லிக்குப் போனாலும் சுற்றிப் பார்க்கவெல்லாம் போகவில்லை. உடலும், மனமும் இடம் கொடுக்கவில்லை. மற்றபடி கட்டடக் கலை மொகலாயர் காலத்ததா? :)))))
ReplyDeleteநாங்க ஆக்ராவுக்கு 2,3 தரம் போனாலும் ஒரே முறை தான் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை எல்லாம் போனோம். மற்ற நேரங்களில் நாங்க வெளியே உட்கார்ந்து கொண்டு கூட வந்தவர்களை அனுப்பி விட்டோம். தாஜ்மஹல் முதல் பார்வையிலேயே என்னைக் கவரவில்லை.
ReplyDelete