கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 6, 2021

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் 

வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட்,

தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, குல்லா எப்படி

எல்லோருக்கும் நினைவுக்கு வருமோ? அப்படி உன்னைத்

தெரிந்தவர்களுக்கு பானு என்றால் புத்தகங்கள்தானே நினைவுக்கு

வரும்? நீண்ட வருடங்களுக்குப் பிறகு உன்னை சந்திக்கும் உன்

உறவினர்களும், நண்பர்களும்,”சிறு வயதில் பானு எப்போதும்

புத்தகமும்,கையுமாகத்தானே இருப்பாள்?” என்றுதானே உன்னை

நினைவு கூர்வார்கள்? புஸ்தகம் ஹஸ்த பூஷணம் என்பதற்கு

இணங்க எப்போதும் கையில் என்னோடுதானே காட்சி

அளிப்பாய்?


உன் புக்ககத்து மனிதர்கள், “பொருள்காட்சிகளில் பானுவை

காணும் என்றால் தேடுவது ரொம்ப சுலபம், ஏதாவது புத்தக

ஸ்டாலில்தான் இருப்பாள்” என்பார்கள். அப்படி ஒரு புத்தக

பைத்தியம்.


ஏன் ஒரு முறை நீ புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி

குவித்ததை பார்த்த உன் மகன், ”பாரதி படத்தில் பாரதியாருக்கு

அரண்மனையில் வேலை கிடைத்ததும் வீட்டிற்கு தேவையான

சாமாங்களை அவர் வாங்கி வரப் போகிறார் என்று அவர்

மனைவி நினைத்திருக்க அவர் வண்டி நிறைய புத்தகங்களை

வாங்கிக் கொண்டு வருவார். நீ கூட அப்படித்தான்” என்றானே

ஞாபகம் இருக்கிறதா?

 

அதற்கு இப்பொதென்ன? என்கிறாயா? இந்த வருடமும்

நீ புத்தக கண்காட்சிக்குச் சென்றாய், சுற்றிப் பார்த்தாய், சாருநிவேதிதாவோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாய், ஆனால்எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்? ரெண்டே ரெண்டு, கேட்டால் எனக்குப் பிறகு உன்னை யார் பராமரிப்பார்கள்? என்கிறாய். 


இந்த ஆண்ட்ராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது, நீ என்னை எங்கே மதிக்கிறாய்? 
இப்போதுதான் எல்லாமே ஆன்லைனில் கிடைக்கிறதே?எல்லாவற்றையும் அதிலேயே படித்து விடுகிறாய். போதும் போதாதற்கு இந்த மத்யமர் வந்தாலும் வந்தது, என்னைத் தீண்ட உனக்கெங்கே நேரம்? புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொது என்னை எங்கே சீண்டுகிறாய்? ஒரு புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டாய், அப்படிபட்டவள் இப்போதெல்லாம் புத்தகங்களை பிரித்து, கொஞ்சம் படிக்கிறாய், புக் மார்க் வைத்துவிட்டு சென்றால்.. எப்போது தொடர்வாய் என்பது நிச்சயமில்லை. புக் மார்க்கால் என் பக்கங்கள் புண்ணானதுதான் மிச்சம்.  

என்னை உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாமல்  இணைபிரியா பந்தத்தோடு நாம் இருந்தோம். ஹூம் அதெல்லாம்ஒரு காலம்..!

 

27 comments:

  1. ஆஹா..   நல்ல புலம்பல்!  ஏதோ ஒரு காரணம்.. எல்லோருக்கும் இப்போது வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் குறைந்துதான் போயிருக்கிறது என்று நானும் என்னை ஆறுதல் படுத்திக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் வாசிக்க முடியாமல் போவது வருத்தம்தான். மத்யமரில் உங்கள் வீட்டில் உள்ள பொருள்கள் பேசினால்? என்று ஒரு டாபிக் கொடுத்தார்கள். அதற்காக எழுதியது. நம் எ.பி.வாசகர்களை விட முடியுமா? வருகைக்கு நன்றி.

      Delete
  2. முகநூலில் "மத்யமரில்"????? படிச்ச நினைவு. எல்லோருக்கும் இப்போது புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனாலும் எனக்கு ஆசை விடவில்லை. பழைய புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசிக்கிறேன். அதோடு நான் மத்யமரில் எல்லாம் மூழ்கி முத்தெடுக்கவில்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்ப்பதோடு சரி. அவ்வளவாக ஈர்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. யூ ஆர் ரைட்! மத்யமருக்காக எழுதியதுதான்.எ.பி.வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாதே.. அதனால்தான் இங்கேயும்..ஹி ஹி!

      Delete
  3. அக்கா ரொம்ப அழகா உங்கள் ஆதங்கத்தைச் சொல்லிருக்கீங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தடங்கல் வந்துவிடுகிறது.

    பானுக்கா நான் புத்தகங்களை அதிகம் தொடும் வாய்ப்பு இல்லை என்றாலும் வாசிக்கும் ஆர்வம், ஆவல் நிறைய உண்டு. வீட்டிற்குப் பொட்டலம் கட்டி வரும் பேப்பரைக் கூட விட்டதில்லை. வாசித்துவிடுவேன் சிலதை சேமித்தும்விடுவேன். வாங்கவும் முடியாது..எனவே ரயில் பயணம் பேருந்துப் பயணம் என்றால் இதழ்கள் கண்டிப்பா ஒன்றோ இரண்டோ வாங்கி வாசித்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டும் வந்துவிடுவேன் ஹிஹிஹி....புத்தகக் கண்காட்சி செல்வதுண்டு கையால் வருடிப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு ஆன்லைன் வரப்பிரசாதம். அதில்தான் இறக்கி வைத்துக் கொண்டோ அல்லது ஆன்லைனிலோ வாசிக்க முடிந்த போது வாசிக்கிறேன். இப்படி இப்போது என் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம்...

    கணினியில் வாசிப்பது சிரமம் என்றாலும் வேறு வழி?

    மாமனாரின் தொகுப்பில் இருக்கும் கதைகளையும் வாசித்து வருகிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஏன் கேட்கிறீர்கள்? புத்தகம் படிக்கும் மும்முரத்தில் பாலை பொங்க விட்டிருக்கிறேன், நெய்யை கருக விட்டிருக்கிறேன். சிறு வயதில் பொட்டலம் கட்டி வரும் சாமான்களை பிரித்து சம்பவங்களில் கொட்டி வைக்கும் வேலையை மட்டும் எனக்கு தர மாட்டார்கள். காரணம், ஒரு பொட்டலத்தை பிரித்து கொட்டியவள் அந்த பேப்பரை படிக்க ஆரம்பித்து விடுவேன். வேலை எப்போது முடியும்? ஹாஹா!

      Delete
    2. எனக்கு இந்தப் பால் பொங்குவதும், நெய் கருகுவதும் தான் புரியாத புதிர் பானுமதி. பாலை அடுப்பில் வைத்தால் (எரிவாயு அடுப்பு) பொங்கும் வரை கிட்டத்தானே இருப்போம்? அந்தப் பத்து நிமிஷத்தில் புத்தகம் படிக்கப் போவோமா என்ன? அதே போல் நெய்யும்! அடுப்பில் வைத்தால் கிட்டேயே இருப்பேன் நான். கடைசியில் நெய்யை வடிகட்டிப் பாத்திரத்தில் மாத்தினதும் தான் அடுத்த வேலை. அதுவரை தொலைபேசி அழைப்பு என்றால் கூட அவரைப் பேசச் சொல்லிடுவேன்.

      Delete
    3. முகநூலில் பால் பொங்குவது பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பால் பொங்கி வழிந்து ஓடுகிறது. அதுவரையிலும் என்ன செய்வார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கு. இன்டக்‌ஷன் ஸ்டவ் எனில் மில்க் என உள்ளதைத் தேர்வு செய்து பாலை வைத்துவிட்டு வேறு வேலையைக் கவனிக்கச் சென்றாலும் பால் பொங்குகிற நிலை வந்ததும் அடுப்புத் தானே அணையுமே! எரிவாயு அடுப்பு எனில் பால் பொங்கும் வாசனை வந்துடும். என் பெண் ஒரு தரம் ஏதோ படித்துக் கொண்டிருந்தவள் இந்த வாசனையை வைத்துப் பால் பொங்குகிறது எனச் சொல்லி அவள் பாட்டியை எச்சரித்தாள். (நான் ஆஸ்த்மா அதிகம் ஆகி நெபுலைசர் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டு விட்டேன்.) எங்க வீட்டில் இப்போவும் சொல்லுவார்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்டு பிடித்துவிட்டாளே என்று! :)))))

      Delete
    4. இது எப்போதோ சின்ன வயதில் நடந்தது. மற்றபடி நானும் பாலை பொங்க விட மாட்டேன்.இதற்காக என் நாத்தனாரும் அவருடைய மாமியாரும் என்னை பாராட்டுவார்கள். இப்போது கூட வருடத்தில் ஒரு நாள், அடுப்பில் பாலை வைத்து விட்ட பெரிய கோலம் போடப் போகும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு சென்றாலும் பால் பொங்கலாம். தவறே செய்யாமல் யாரும் இருக்க முடியாது. மேலும் எழுதும் பொழுது அதில் சுவை கூட்ட சில விஷயங்களை மிகைப் படுத்தினால் தான் நன்றாக இருக்கும். படிப்பதில் எனக்கு உள்ள ஆர்வத்தை தெரிவிக்க எழுதியதை அப்படியேவா எடுத்துக் கொள்வீர்கள்?

      Delete
    5. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஆமாம், அப்படியே தான் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் முகநூலில் பலரும் பாலைப் பொங்கவிட்டு வழியும்போது/அடுப்பெல்லாம் பாலாபிஷேஹத்துடன் காட்சி தருவது போன்ற படங்களைப் போடுவதால் உண்மை என்றே எடுத்துக்கொள்ளும்படி தோன்றியது! மற்றபடி உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எல்லாம் இல்லை. நானும் சமைக்கும்போதெல்லாம்/சாப்பிடும்போதும் புத்தகம் படித்துக் கொண்டே சமைத்திருக்கிறேன். (பாடப் புத்தகங்கள்) அப்பாவுக்குக் கோபம் வரும்! கிழித்து அடுப்பில் போட்டுடுவேன் என்பார்! அதையும் மீறிப் படிப்பேன். இந்த சாமான்கள் கட்டி வரும் தாளைச் சேகரித்து வைத்து நீவி மடித்து சாவகாசமாய் உட்கார்ந்து படித்திருக்கிறேன். சமைத்துக் கொண்டே குழந்தைகள் பாடங்களைக் கவனித்துச் சொல்லிக் கொடுத்திருக்கேன். இதெல்லாம் அநேகமாக எல்லாப் பெண்களும் செய்வது தான்!

      Delete
    6. எங்க வீட்டில் பாலை வைத்ததும் வேறு வேலையைக் கவனிக்கச் சென்றால் ஒரு நீளக் கரண்டியைப் பால் பாத்திரத்தின் குறுக்கே போட்டுவிட்டு மேலே ஒரு தட்டைப் போட்டு மூடிவிட்டுப் போய் மற்ற வேலைகளைப் பார்க்கச் சொல்வார்கள். இப்போவும் கல்சட்டியில் பருப்பு வேக வைக்கும்போது இப்படித் தான் செய்து கொண்டிருக்கிறேன்.

      Delete
    7. உங்களுக்கு என்னிடம் வருத்தம் என்பது மட்டும் உள்ளுணர்வு சொன்னது. இப்போத் தான் காரணம் புரிந்தது! :))))))) கண்டுக்காதீங்க! :))))))))

      Delete
    8. பொதுவெளிக்கு வந்த பிறகு கமெண்டுகளுக்கு புண்பட முடியுமா? it's all in the game. Thank you 😊💕

      Delete
  4. வணக்கம் சகோதரி

    புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைப்பது ஒரு கொடுப்பினைதான். நேரம் மட்டும் தானாக கிடைத்தாலும் போதாது. படிக்கும் ஆர்வம்தான் அந்த நேரத்தையே உருவாக்கித் தரும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் உங்கள் வேலைகளுக்கு நடுவில் இவ்வளவு புத்தகங்களை வாசித்து, அதை நீங்கள் பதிவுகளில் ஒவ்வொரு இடத்திலும் நினைவு கூர்வதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

    உங்களுக்கும், புத்தகங்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் சுவாரஸ்யமாக உள்ளது. உங்கள் புத்தகங்களின் மன ஆதங்கம் புரிகிறது. நீங்களும் அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். "தற்சமய வேலைகளை இனிதாக முடித்தபடி உன்னிடமும் இனி அடிக்கடி வருகிறேன். " என அவற்றிற்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுங்கள். ஏனெனில் நானும் இப்போதெல்லாம் அப்படித்தான் என்னிடமுள்ள சில புத்தகங்களிடம் கூறுகிறேன். மீண்டும் நீங்கள் பல புத்தகங்களை கைகளால் தொட்டெடுத்து அது மனமுவந்து போகுமளவிற்கு படிக்க என் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

      Delete
  5. இன்றைய சூழலில் சிரமம் தான்...

    ReplyDelete
  6. பானுக்கா சல்வார் கமீஸில் ஆசம்!!!! இந்த உடை உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு அக்கா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அட?????????????????????????? நீங்க சொன்னதும் வந்து கவனிச்சேன். இஃகி, இஃகி!

      Delete
    2. கீதா உங்கள் பாராட்டில் மகிழலாம் என்றால் கீதா அக்கா இஃகி இஃகி என்கிறாரே..??:((

      Delete
    3. இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  7. நூல் வாசிப்பு இன்றைக்கு மாறி கிண்டில் வழியும், அலைபேசி வழியும் என்றாகிவிட்டது. தில்லி சென்று சி(ப)ல வருடங்கள் வரை நூல்கள் மட்டுமே எனக்கு தோழன்(ழி)! ஒவ்வொரு இரவும் நானும் நண்பரும் போட்டி போட்டு படித்திருக்கிறோம். பொன்னான நாட்கள் அவை. இன்றைக்கு தினம் கொஞ்சம் பக்கமாவது கிண்டில் வழி படித்து விடுகிறேன். அச்சு நூல்களை படிப்பது குறைந்து விட்டது.

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  8. நூல்கள் நூலகம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்தவரை சரி. அம்மாவுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. ஆனால் தமிழ் புத்தகங்கள் பக்கத்து வீட்டிலிருந்தும், நூலகத்திலிருந்தும் பக்கத்துவீட்டு ஆண்டி கொண்டுதருவார்.அம்மாவுக்கும் வாசிக்கும் ஆர்வம் உண்டு மொழிப்பிரச்சினை. எனவே நான் தான் வாசித்துக் காட்டுவேன். அப்படியும் வாசித்ததுண்டு. நான் அந்த வயதில் வாசித்துக்காட்டும் படியான புத்தகங்கள்தான் ஆண்டி கொண்டு தருவார். கேரளம் வந்து செட்டில் ஆகி வாழ்க்கை மாறியதும் வாசிப்பும் இல்லை. ஆனால் வாசிப்பு, ஆங்கில இலக்கியம் கற்பித்தல் என்பதால் அதில் திரும்விவிட்டது.

    பதிவில் உங்கள் வருத்தத்தை புத்தகங்கள் வாயிலாக நன்றாகச் சொல்லி உள்ளீர்கள். வயதும் பொறுப்புகளும் கவனத்தை திருப்பும்.

    துளசிதரன்

    ReplyDelete
  9. சரியான புரிதலோடு விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  10. கதை புத்தகங்கள் , நூலகம், வீட்டில் சேகரித்த தொகுப்பு, அக்கம்பக்கத்தில் வீடுகளில் நூலகத்தில் வாங்கி வருவது மற்றும் வீட்டில் வாங்கும் கதை புத்தகங்கள் என்று படித்த காலங்கள் மனதில் வருகிறது.

    புத்தகங்கள் பேசுவது போல் சொன்னது அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    அருமையாக

    ReplyDelete
  11. அடுத்த தலைமுறையில் எல்லாமே மின் நூல்களாகி விடுமோ என்று தோன்றுகிறது. படிக்கும் பழக்கம் அற்றுப் போகாமல் இருந்தால் சரி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete