கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 29, 2021

நயாகரா

நயாகரா


கனடா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நயாகரா நீர்வீழ்ச்சி. கடந்த வெள்ளியன்று அங்கு ஒளியலங்காரங்கள் தொடங்க இருப்பதால் வெள்ளியன்று மதியம் அங்கு சென்றால் சூரிய வெளிச்சத்திலும் நயாகராவை பார்த்து பிரமிக்கலாம், இருட்டிய பிறகு ஒளியலங்காரங்களையும் ரசிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் வெள்ளியன்று என் அக்கா பேத்திக்கு ஜலதோஷம், லேசான ஜுரம் என்பதால் செல்ல முடியவில்லை, சனிக்கிழமைதான்(27.11.21) செல்ல முடிந்தது. 

நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ், அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெய்ல் ஃபால்ஸ் என்னும் மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது. நீர் வரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் ஒரு வினாடிக்கு 225,000 க்யூபிக் ஃபீட் நீர் விழுமாம். சராசரியாக 85000 கியூபிக் ஃபீட்.  இந்த நீர்நவீழ்ச்சியின் பெரும் பகுதி கனடாவிலும், சிறு பகுதி அமெரிக்காவிலும் இருக்கிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ பிரிட்ஜ் என்னும் ஒரு பாலம் இணைக்கிறது.  இங்கிருக்கும் நீர்மின் நிலையம் கனடாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

அதுவும் சனியன்று நயாகரா செல்லலாம் என்று காலை பதினோரு மணிக்குத்தான் முடிவெடுத்தோம். எனவே நினைத்தது போல் சீக்கிரம் கிளம்ப முடியவில்லை. நயாகராவை அடைந்த பொழுதே மாலை ஐந்து மணி ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் மாலை நாலரைக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஐந்து மணிக்கு நல்ல இருட்டாகி அங்கு விளக்கு அலங்காரங்கள் ஒளிரத் தொடங்கி விட்டன. அருவிக்கு அருகில் வாண வேடிக்கைகளும் தொடங்கி விட்டன.

அருவியை அருகில் சென்று பார்த்தோம். வழியெங்கும் விளக்கு அலங்காரங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்ள ஸ்டாண்டுகள். 

 






















சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அவர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்கள், கேசினோ எனப்படும் சூதாட்ட கேளிக்கை விளையாட்டுகள் நிறைய இருப்பதால் அந்த வீதியே ஜொலிக்கிறது. என்னதான் செயற்கை வெளிச்சத்தில் குளித்தாலும் பகல் வேளையில் பாக்கும் பொழுதுதான் அதன் பிரும்மாண்டத்தை உணர முடியும் என்பது என் மகளின் கருத்து. உணர்ந்தால் உங்களோடு பகிர்வேன். 


18 comments:

  1. அழகிய காட்சி பகலில் சென்று வந்தும் புகைப்படங்கள் போடவும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக. நன்றி சகோ!

      Delete
  2. ஆஹா பானுக்கா நயாகரா !!! அருமையான நீர் வீழ்ச்சி. (எல்லாம் படம் தான் ஹாஹாஹா) பகல் காட்சிகள் பிடிச்சுப் போடுங்க பானுக்கா.

    ஓளிவெள்ளப் படங்கள் நன்றாக இருக்கின்றன. அக்கா, எந்த நீர்வீழ்ச்சியானாலும் இரவில் பார்ப்பது கடினம் தான். பகல் தான் செமையா இருக்கும். கண்டிப்பாக அருவியை நீங்கள் எஞ்சாய் மாடி தான். ஆனால் ஓன்றே ஒன்று நம்மூர் போல "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடிக் குளிக்க முடியாது!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த பிரும்மாண்டத்தை செல் ஃபோனில் சிறை படுத்த முடியாது. நன்றி கீதா.

      Delete
  3. உங்களிடமிருந்து தினம் தினம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். படங்களும் விபரங்களும் அருமை. இந்த விளக்கு அலங்காரம் ஹூஸ்டனிலும் கிட்டத்தட்ட இப்படித்தான். மைல்கணக்காக வைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் செயற்கை அருவியை ஏற்படுத்திவிட்டு அலங்கரித்து வைத்திருந்தார்கள்.

    ReplyDelete
  4. பகலிலும் போய்ப் பார்த்துவிட்டு வந்து உங்கள் அனுபவங்களைப் பகிரவும். கோடைகாலம் துவக்கம் வரை இருந்தால் அருவி நீர் விழும்போதும் போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. உங்க கார போளியை இங்க கொண்டு வந்துவிட்டேன். அருவி லைட்டிங்க எல்லாம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று அங்க வீட்டிற்குப் போய்க் கருத்து போடுகிறேன்!!!!!! குளிருக்கு ஏற்ற உணவு! ஆனால் சூடாகச் சாப்பிட ஒரு ஓவனும் கொடுத்துடுங்க!

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி படங்கள் இரவின் ஒளி வெள்ளத்தில் அருமையாக உள்ளது. அதன் விபரங்களையும் உங்கள் பதிவின் மூலம் படித்து தெரிந்து கொண்டேன். இறுதி படம் கலர்புல்லாக கண்களை கவர்கிறது. மேலும் பகல் நேரத்திலும் முடியும் போது ஒரு தடவை சென்று நீர்வீழ்ச்சியை இயற்கை ஒளியில் படமெடுத்து பதிவு போடுங்கள். நீங்களும்,உங்கள் பேத்தியும் இருக்கும் படங்களும் அழகாக உள்ளது. வாழ்த்துகள். அனைத்துப் படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் செல்ஃபோனில் zoom செய்து எடுத்ததால் clarity குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது.

      Delete
  7. படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  8. படங்கள் எல்லாம் அருமை.
    பகலில் நயாகரா பார்க்க நன்றாக இருக்கும்.
    எங்களை மகன் காலை, மாலை இரண்டு வேளையும் பார்க்க வைத்தான்.
    படகில் பயணம் செய்தோம்.
    பேத்தியும், நீங்களும் உள்ள படங்கள் அருமை.
    அங்கு குளிர் அதிகம் இப்போது இல்லையா?

    ReplyDelete